24 சந்தேகம்

906 57 4
                                    

24 சந்தேகம்

"சக்தி நம்ம ருத்ரனை அவளோட புருஷனா ஏத்துக்கிட்டானு என்னால நம்பவே முடியல" என்றார் பாட்டி உணர்ச்சிவசப்பட்டு.

"ஆமாம் அத்தை. அவ ருத்ரன ராட்சசன்னு சொன்னப்ப, நான் ரொம்ப கலங்கி போயிட்டேன். ஆனா நல்ல வேலை, அந்த பொண்ணு கடவுள் அருளால நம்ம ருத்ரனை புரிஞ்சுகிட்டா. இதை கடவுள் அருள்னு சொல்லாமல் வேற என்ன சொல்ல முடியும்?" என்றார் அபிராமி.

"ஆமாம் பாட்டி, அவங்களை நான் ஃபார்ம் ஹவுஸ் கிட்ட பார்க்கும் போது, ரொம்ப கோவமா இருந்தாங்க. அவங்க ரொம்ப கனிவான இதயம் படைச்சவங்களா இருக்கணும். அதனால தான், நம்ம ருத்ரனுடைய கடந்த காலம் அவங்களை அசைச்சிடுச்சு" என்றாள் துர்கா.

"சக்தி ஃபோன்ல உன்கிட்ட என்ன பேசினா?" என்றார் பாட்டி.

"அவங்க நல்லா இருக்காங்களாம். ருத்ரனுக்கு பிடிச்ச சாப்பாடு என்னன்னு கேட்டாங்க"

"கடவுள் அந்த குழந்தையை எந்த குறையும் இல்லாம வைக்கட்டும்" என்றார் பாட்டி.

"அப்படின்னா, அவ நம்ம ருத்ரனுக்காக ரவா இட்லியும், தேங்காய் சட்னியும் சமைக்கப் போறா..." என்றார் அபிராமி சந்தோஷமாய்.

"அவங்களை நம்ம சீக்கிரமே இங்க கூட்டிகிட்டு வந்துடணும்" என்றார் பாட்டி.

ஆம் என்று தலையசைத்தாள் துர்கா.

"அவங்க கல்யாணம் எப்படி நடந்ததுன்னு நீ சக்தி கிட்ட கேட்டியா?" வினவினார் பாட்டி.

"ருத்ரன் அவங்களை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டானாம்"

"அப்படின்னா வெறுமனே தாலி மட்டும் கட்டி இருப்பான்"

ஆம் என்று தலையசைத்தாள் துர்கா தன் உதட்டை அழுத்தி. சட்டென்று அவளது முகம் பிரகாசம் அடைந்தது.

"பாட்டி, நம்ம அவங்களுக்கு முறைப்படி கல்யாணம் பண்ணி வச்சா என்ன?"

"நானும் அதைத்தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்"

" இதுக்கு நம்ம ருத்ரா ஒத்துக்கணுமே" என்றார் அபிராமி.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now