43 மீண்டும் சென்னைக்கு

926 60 7
                                    

43 மீண்டும் சென்னைக்கு

மறுநாள் சென்னைக்கு கிளம்பி செல்வது என்று முடிவெடுத்தான் ருத்ரன். என்ன செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானித்துக் கொண்டான். அப்போது அவனது முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது. சக்தி, சுயநினைவுடன் அவனுடன் பயணிக்க போவது இது தான் முதல் முறை. இதற்கு முன் அவள் சுயநினைவின்றி தான் இருந்திருக்கிறாள்... இல்லை இல்லை... அவளை சுயநினைவிழக்கச் செய்து, இவன் தான் அவளை சேலத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து ஓசூருக்கும் கொண்டு வந்தான்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த காலகட்டத்தில், மாயாவின் வார்த்தைகளை ருத்ரன் அடிக்கடி நினைவு கூர்ந்து கொண்டே இருந்தான். அவன் எப்படி அவளது வார்த்தைகளை நம்பினான் என்று அவனுக்கே புரியவில்லை. மாயாவால் அனுப்பப்பட்ட பெண்ணை, ஒரு நாள் நிச்சயம் சந்திப்போம் என்று நம்பினான் அவன். அவளை சந்திப்பதற்காகவே மருத்துவமனையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று நினைத்தான். ஆனால், அந்த பெண் எப்படி இருப்பாள் என்று அவனுக்கு தெரியாது. சக்தியை சேலத்தில் சந்தித்த போது, அவனது வாழ்க்கையை புரட்டி போட்ட  அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது. சக்தி அவனை முழுமனதாய் ஏற்றுக்கொண்டு காதலிக்க தொடங்கி விடுவாள் என்பது, அவன் சிறிதும் எதிர்பாராதாது. அவன் மீது அவள் பொழிந்த அன்பு, அவனை பேராசை காரனாக மாற்றியது. நல்ல வேலை அவன் சக்தியை இழக்கவில்லை. மகேஷின் துப்பாக்கி குண்டு அவளை துளைத்திருந்தால், நிச்சயம் மகேஷ் இந்நேரம் தன் உயிரை விட்டிருப்பான். ருத்ரன் அவனை அப்போதே அடித்துக் கொன்றிருப்பான். நாளை சென்னைக்கு திரும்பி செல்வது என்று ஒருமனதாய் முடிவெடுத்து விட்டான் ருத்ரன். அந்த முடிவு, முழுக்க முழுக்க சக்திக்காக மட்டும் தான்.

சக்தி அவனது தலையை மெல்ல வருடி கொடுக்க, கண்களைத் திறந்து அவளைப் பார்த்து புன்னகை புரிந்தான் ருத்ரன்.

"எதைப் பத்தி யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க?"

"உன்னை தவிர வேற எதை பத்தி நான் யோசிக்க போறேன்?" அவள் கையைப் பிடித்து, தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டான்.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now