😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)

Por creativeAfsha

69.3K 2.7K 969

#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும். Más

அவனும் அவளும்
புரியாத புதிர்
யதார்த்தம்
நினைவு
நலமறிதல்
அலைபாயுதல்
மருத்துவமனை
மீண்டும் மீண்டும்
வெறுப்பும் கவலையும்
தோழன்
விரக்தி
அதிர்ச்சி
புதுமுகங்கள்
பதவியேற்பு
இயலாமை
சந்திப்பு
சங்கடம்
கௌரவம்
பிரிவு
எண்ணங்கள் பயணம்
பாசம்
முயற்சி
தேடல்
ஆராய்ச்சி
பகுதி 25
பகுதி 26
part - 27
பகுதி - 28
பகுதி 29
பகுதி-30
பகுதி - 31
பகுதி -32
பகுதி 33
பகுதி -34
பகுதி -35
பகுதி -36
பகுதி-37
பகுதி -38
பகுதி 39
பகுதி 40
பகுதி -41
பகுதி-42
பகுதி -43
பகுதி 44
பகுதி -46

பகுதி -45

399 11 14
Por creativeAfsha

குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவு அமைதி நிலவியது அந்த வரவேற்பறையில். அந்த நிசப்தத்தை கலைத்தது மதுவின் தந்தையின் குரல்,"ஆனந்த் இப்ப உனக்கு உன்னோட தப்பு புரியுதா?"

"இதுல என்னோட தப்பு என்ன இருக்கு மாமா. எனக்கு மதுவோட நிலை தெரியாது அதனால தான் உரிமையில நான் அப்படி அவளை கூப்பிட்டேன்.மது எனக்கு விஷயத்தை அங்கேயே சொல்லிருக்கலாமே."

"ஆனந்த் ஒரு பொண்ணு ஏற்கனவே நல்லா தெரிஞ்ச ஒருத்தரை தெரியலை னு சொல்றாங்க னா அதுக்கு சில காரணங்கள் இருக்கலாம்.முதல்ல அதை புரிஞ்சுக்க."

"சரி மாமா நான் கிளம்புறேன்."என்று கூறி கோபத்துடன் வெளியேறினான்.

"என்னங்க ஆனந்த் கோபமா போறான்,"மதுவின் தாயுடைய  வருத்தமான குரலை கேட்டவர் ஒரு பெருமூச்சுடன்,"என்னமா செய்யுறது. அவன் புரிஞ்சுக்க மாட்டான்.இப்ப நேரா எங்க அம்மாகிட்ட போய் நின்னு அவங்களையும் கூட்டிட்டு வருவான் பாரு.அடுத்து என்ன பிரச்சினை காத்திருக்கோ?"என்று புலம்பியவாறே எழுந்து தன் அறை நோக்கி சென்றார்.

வரவேற்பறையில் நடந்த சம்பவம் அனைத்தையும் மாடியின் வளைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மது அமைதியாக தனது அறையில் புகுந்து மெத்தையில் விழுந்தாள்.மனதில் தனக்கு உதவிய  அந்த பெயர் தெரியாத நபரை குறித்த எண்ணங்கள் மேலோங்கி இருந்தது.
அவரை இதற்கு முன் எங்கோ பார்த்த நினைவு இருந்ததே தவிர எங்கே என்று நினைவு வரவில்லை.அவரை குறித்து தந்தையிடம் கூறலாமா வேண்டாமா என சிறு பட்டிமன்றம் அவளுக்குள்ளே நடக்க இறுதியில் வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டது அவள் அறியாமல் அவன் மேல் சாய்ந்த அவளது மனம்.கலைப்பு மிகுதியாலும் அதிகமாக யோசித்ததாலும் மது அப்படியே உறங்கிப்போனாள்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மதுவின் தலையை மென்மையாக ஒரு கரம் வருட அதன் இதத்தில் அவளது உதடுகள் தானாக மென்னகை கொண்டது.சிரிக்கும் அவள் உதட்டை வருடிய விரல்கள் பின் மீண்டும் கலைந்த அவள் சிகையை சரி செய்து காதோரம் அவளது முடியை ஒதுக்கி விட்டது.நெற்றியின் புருவத்திற்கு இடையில் ஏற்ப்பட்ட முடிச்சை விரலால் வருட அவள் முகம் மலர்ந்தது. அவளுக்கு வலிக்குமோ என்ற பயத்துடன் மிகவும் மென்மையாக அவளது நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்த அந்த உருவம் பின் அவளது இடையில் தன் கைகளை நுழைத்து அவளுக்கருகில் மிகவும் நெருக்கமாக அவளை அனைத்தவாறு படுத்துக் கொண்டான்.சிறிது நொடிகளில் தன்னை நோக்கி திரும்பி படுத்தவளை தன் நெஞ்சோடு அனைத்துக்கொண்டு தன் கைவளை வில் அவளை பாதுகாத்துக்கொண்டு உறங்கிப்போனான் அவன்.

கடிகார முள் அதன் வேலையை செவ்வனே செய்ய கடிகாரம் காலை மணி‌ ஆறு  என்று சுட்டி காட்டியது நேரத்தை மதுவிற்கு உணர்த்தும் விதமாக மதுவின் செல்பேசி அலாரமும் தனது கடமையை செய்ய படுக்கையிலிருந்து மெல்ல கண்களை திறந்தாள் மது.பின் நினைவு வந்தவளாய்  வேகமாக எழுந்து அறை முழுவதும் அவனை தேட அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை. சோர்வாக வந்தமர்ந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக தூக்கத்தை துடைத்து யோசிக்க  புரிந்தது தான் கண்டது கனவென்று. இதயம் தாறுமாறாக துடிக்க கனவில் பார்த்த அவனது முகத்தை கண்முன் கொண்டுவர முயன்றாள்.பலன் தான் கிடைக்கவில்லை.

தனக்கு எதற்கு இப்படி ஒரு கனவு வந்தது என்று புரியாமல் தவித்த மதுவிற்கு ஒரு வேளை தான் வீட்டிற்கு தெரியாமல் யாரையேனும் காதலித்தோமா அதனால் அந்த காதலனின் நினைவுகள் கனவாக வருகின்றதோ என்றெல்லாம் பலவாறாக தன்னை குழப்பிக் கொண்டவள் நேரமாவது புரிய நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு  அவசரமாக எழுந்து  நர்ஸரிக்குகிளம்ப துவங்கினாள்.அங்ஙே அவளுக்கும் காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி புரியாமல்.

முதல் நாள் ஏற்பட்ட சோர்வு நீங்க நன்கு குளித்தவள் ஆலிவ் பச்சை நிறத்தில் சுடிதார் அணிந்து  கண்ணுக்கு மை தீட்டி மெலிதாக ஒப்பனை செய்தாள். கூந்தலை மொத்தமாக அள்ளி ஒரு கிளிப் இல் அடைக்கியவள் தன் தோல் பையை எடுத்துக்கொண்டு நிலாவை பார்க்கும் ஆவல் கண்களில் தென்பட சந்தோஷமாக ஏதோ ஒரு பாடலின் ராகம் பாடிக்கொண்டு உணவு உண்ண கீழே இறங்கி வந்தாள்.

மேலிருந்து வானத்து தேவதை இறங்கி வருவதை போன்றிருந்த அந்த அழகான காட்சியை இரு ஜோடி கண்கள் விரிந்து பார்தது‌. முதல் ஜோடி கண்கள் அவளை பெருமையுடன் நோக்க அடுத்த ஜோடி கண்களோ காதலும் காமமும் கலந்து நோக்கியது.

உற்சாகத்துடன் படியிறங்க ஆரம்பித்த மது படியின் முடிவில் உற்சாகம் வடிந்தவளாக காணப்பட்டாள்.வரவேற்பறையில் அமர்ந்திருந்த இருவர்களில் ஒருவன் நேற்று தன்னை நோகடித்தவன் என்பதை புரிந்து கொண்டவள் அவனருகே அமர்ந்திருந்த அந்த வயதான பெண்மணியை அறியாத பார்வை பார்த்தாள்.இருப்பினும் வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்பது நம் பண்பு என்பதற்காக உதட்டில் ஒரு செயற்கை புன்னகையை வரவழைத்துக்கொண்டு ,"வாங்க..." என்று பொதுவாக கேட்டுவிட்டு உள்ளே இருந்த  தன் தாயிடம் விரைந்தாள்.

"வா மது, உனக்காக நான் அவங்க காத்திருக்காங்க."

"அம்மா....."என்று அழைத்த மது ஏதோ சொல்ல தயங்க ,"என்ன மது எதுக்கு தயங்கும்?"

"அது வந்து அம்மா...அவங்க ?"

"அவங்க?"

"அவங்க அதான் அந்த வயசானவங்க ,அவங்க  யாரு மா?"என்று தயக்கத்தை விடுத்து மது வினவ இம்முறை அமைதியாக நிற்பது அவளின் அம்மாவின் முறையானது.

"அவங்க உங்க பாட்டிமா.உங்க அப்பாவோட அம்மா.அவங்களுக்கு இரண்டு பசங்க ஒன்னு உங்க அப்பா இன்னொன்னு அவரோட தங்கச்சி சாரதா. உங்க அப்பாவுக்கு இரண்டு பொண்ணு சாரதாவுக்கு ஒரே பையன்.அவந்தான் ஆனந்த் நேத்து உன்னை மாமல்லபுரத்தில பார்த்தானே அவன்."

தன் தாயின் விளக்கத்தை கேட்டவள்,"அம்மா நான் அவங்ககிட்ட பேசிட்டு வரேன் நீங்களும் கூட வாங்க மா."மகளின் தயக்கத்தை புரிந்து கொண்டவர் மதுவுடன் வரவேற்பறை நோக்கி சென்றார்.

"வாங்க பாட்டி .எப்படி இருக்கீங்க?"என்று கூறியவாறே தன் தந்தையின் அருகே அமர்ந்து கொண்டாள் மது.

முன்பென்றால் மிகவும் உரிமையுடன் தன் அருகே வந்து கழுத்தை கட்டிக்கொண்டு கண்ணத்தில் முத்தமிடும் தன் பேத்திக்கு பதில் யாரோ ஒருவரை வரவேற்க்கும் இந்த மது அவருக்கு புதிதாக தெரிந்தாள்.

"நல்லா இருக்கியாமா??"நா தழுதழுப்பை அடக்கியவாறு கேட்ட அந்த முதியவர் வயதில் மட்டுமே முதுமை அடைந்திருந்தார் தோற்றத்தில்  கம்பீரம் குறையாமல் வீற்றிருந்தார்.

"நல்லா இருக்கேன். சரி நீங்க அம்மாகிட்ட பேசிட்டு இருங்க நான் க்ளாஸ் க்கு கிளம்புறேன்,"என்று கூறியவாறு அவள் எழ ,"எந்த க்ளாஸ் போகனும் மது .நீ ஈவ்னிங் காலேஜ் ல தானே படிக்குற?"

"ஆமா பாட்டி இப்போ யோகா க்ளாஸ் போகனும் பாட்டி."

"அது அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லையேமா இன்னைக்கு நாங்களாம் வந்திருக்கோம் னு ஒரு நாள் போகாம இருக்கலாமே."

"அது வந்து இல்லை பாட்டி நான் நேத்தும் போகலை.."என்று கூறிய மதுவை இடையில் தடுத்த அவளது தாய்,"அதனால் என்ன மது இரண்டு நாள் க்ளாஸ்க்கு போகாம இருந்தா ஒன்னும் பிரச்சினை இல்லை நீ ஃபோன்‌ பண்ணி சொல்லிட்டு."என்றார் உத்தரவிடும் குரலில்.

மதுவிற்கு மனது கேட்கவில்லை நேற்றும் நிலாவை பார்கவில்லை இன்றும் பார்க்காவிட்டால் அவளுக்கு மனம் ஒரு நிலை படும் என்று தோன்றவில்லை அதனால்,"அம்மா ப்ளீஸ் நான் இன்னைக்கு காலேஜ்க்கு வேணும்னா லீவ் போடறேன்.ஆனால் க்ளாஸ் க்கு மட்டும் போயிட்டு சீக்கிரமா வந்துடறேன்மா."எங்கே வேண்டாமென்று சொல்லிவிடுவாரோ என்று கூறியவுடன் வேகமாக எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.

"ஏன்பா அப்படி என்ன அவ்வளவு முக்கியமான யோகா க்ளாஸ் ,என்னைவிட க்ளாஸ் முக்கியமா?"ஆதங்கத்திலும் வருத்தத்திலும் கூறிய தன் மாமியாரை பார்த்த மதுவின் தாய்,"அப்படியில்லை அத்தை அந்த ஆக்ஸிடென்டுக்கு அப்பறம் மது ரொம்ப மாறிட்டா யாருகூடயும். பேசாம எப்பவுமே ஒரு கூட்டுக்குள்ள தன்னை அடைச்சிக்கிட்டு இருந்தா .இந்த க்ளாஸ்க்கு போனதுக்கு அப்பறமா தான் கொஞ்சம் சந்தோஷமாகவே இருக்கா. தன்னுடைய வட்டத்தை விட்டு வெளிய வந்து எல்லாருகூடயும் சகஜமா பழகுறா அதனால அந்த க்ளாஸ்க்கு போக வேணாம் னு என்னால அதிகமா சொல்ல முடியலை."மன்னிப்பு வேண்டி நின்ற மருமகளை புரிதலுடன் பார்த்த அந்த முதியவர் ,"புரியுதுமா இருந்தாலும் ஒரு ஆதங்கம் தான்.சரி மா நான் கொஞ்ச நேரம் படுக்கறேன்,"என்றவாறு எழுந்தவரை அவருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அறைவரை சென்று அவருக்கு தேவையானவற்றை பார்த்துவிட்டு தன் மருமகனிடம் வந்தார் மதுவின் தாயார் சரஸ்வதி.

"தம்பி ஆனந்த் ஏன் இப்படி என்னமோ போல் இருக்கீங்க?"

"இல்லை அத்தை மது எப்பவும் என்னை அன்பா நடத்த மாட்டா.ஆனால் உதாசீனப் படுத்தவும் மாட்டா.ஆனால் அவளோட பார்வையில இப்ப ஒரு ஒதுக்கம் தெரியுது.அதான் ஒரு மாதிரி இருக்கு."

"வருத்தப்படாதா ஆனந்த் .மதுவுக்கு இப்ப நீ ஒரு அந்நியன். அப்படி இருக்கும்போது அவ பார்வையில ஒரு ஒதுக்கம் தெரியத்தான் செய்யும். நீ அவகிட்ட நெருங்கனும் னா அன்பால நெருங்கு, அவசரமாக,"

"ம்....சரி அத்தை.நான் மாமாவோட ஆஃபிஸ்வரை போயிட்டு வந்துடறேன்."என்று கூறி வெளியே சென்றுவிட்டான்.

சரஸ்வதி தன் மாமியாருடன் உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில் மதுமிதா தன் இரு சக்கர வாகனத்தில் நர்ஸரியை நோக்கி தன் பயணத்தை தொடங்கினாள்.

வழக்கத்தைவிட சீக்கிரமாகவே நர்ஸரியை அடைந்த மது நிலாவை காணப்போகும் உற்சாகத்துடன் காத்திருந்தாள்.

நேரம் ஆமை வேகத்தில் நகர  நிலா வழக்கமாக வரும் நேரமானது.நேரம் கடந்து போனதே தவிர நிலா வரவில்லை குழப்பத்துடன் அமர்ந்திருந்த மதுவிடம் வந்த உதவியாளர்,"மது மேடம் உங்களை மேடம் கூப்பிடுவாங்க,"என்று கூற குழம்பிய நிலையிலேயே பொறுப்பாளரை காணச் சென்றாள்.

"குட் மார்னிங் மேடம்."

"வாங்க வாங்க மது."

"வரசொன்னீங்களாமே..."

"ஆமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்."என்று கூறியவர் மேலும் கூறிய செய்தியை கேட்டு உறைந்து போனாள் மது.

************

இரவு முழுவதும் சரியாக உறங்காமல் அழுதுகொண்டே இருந்த நிலா உறங்கும்போது நேரம் நள்ளிரவை தாண்டி  இருந்தது.அதற்கு மேல் உறங்கம் வராமல் பல வித சிந்தனைகளும் வேதனைகளும் மனதில் வந்துபோக ஆதித்யன் கண்மூடி உறங்காமலே அந்த இரவை கழித்தான். வழக்கமான நேரத்திற்கு மெத்தையை விட்டு எழுந்தவன் அன்றாட வேலைகளை கவனிக்கலானான்.

பரபரப்பான வேலைகளை தொடங்கும் நேரம் அவன் செல்பேசி அவனை அழைக்க இவ்வளவு காலையில் யாராக இருக்கும் என்ற சிந்தனையுடனே கைபேசியை எடுக்க அது அவனது தந்தை அழைப்பதாக காட்டியது.

"ஹலோ அப்பா.....எப்படி இருக்கீங்க அம்மா எப்படி இருக்காங்க?"

"நாங்க ஏதோ இருக்கோம்பா .நீ நிலா லாம் எப்படி இருக்கீங்க."

"ம் நிலா நல்லா இருக்காபா.இவ்வளவு காலையில கூப்பிட்டிருக்கீங்க?"

""ஒன்னும் இல்லைபா மனசு ஏதோ மாதிரி இருந்துச்சு அதான் உங்கிட்ட பேசலாம் னு போட்டேன்."

"என்னாச்சு பா?"கேட்ட ஆதியின் குரலில் சிறு நடுக்கம் இருந்தது.

"உங்க அம்மாவுக்கு ரொம்ப படபடப்பு இருக்குதுன்னு நேத்து ஹாஸ்பிடல் போனோம்."

"என்னப்பா சொல்றீங்க இதை ஏன் முதல்லயே சொல்லலை?இப்ப அம்மா எப்படி இருக்காங்க?"
"டாக்டர்ஸ் எல்லாம் ஏதேதோ டெஸ்ட் எடுத்தாங்க இன்னும் எதுவும் சொல்லலை பெரிய டாக்டர் இன்னைக்கு பத்து மணிக்கு வந்து தான் சொல்வாரு னு சொன்னாங்க அதான் உங்கிட்ட பேசலாம் என போட்டேன்."

தன் தந்தை தன்னிடம் கூற தயங்கும் விஷயத்தை நொடியில் புரிந்து கொண்டவன்,"சரிபா நான் உடனே கிளம்பி வரேன் நீங்க தைரியமா இருங்க,"என்று கூறிவிட்டு
கால் ஐ கட் செய்தவன் துரிதமாக செயல்பட துவங்கினான். நிலாவின் நர்ஸரிக்கு கால் செய்து சில சொந்த காரணங்களினால் நிலாவினால் தற்பொழுது வர முடியாது என்று கூறி காலவரையற்று விடுப்பை பெற்றுக்கொண்டவன் தன் அலுவலகத்தில் பத்து நாள் விடுமுறை எடுத்துக்கொண்டான்.இதுவரை அவன் விடுமுறை எடுக்காததாலும் ஏதேனும் அவசரம் இருந்தால் அவன் அதை வீட்டிலேயே முடித்து கொடுப்பதாக வாக்கு கொடுத்ததாலும் அவனுக்கு அவன் கேட்ட விடுப்பு வழங்கப்பட்டது.

அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அனைத்தையும் முடித்தவன் நிலாவுடன் கோயம்புத்தூர் நோக்கி தனது பயணத்தை வான் ஊர்த்தியில் தொடங்கினான்.














Seguir leyendo

También te gustarán

69.3K 2.7K 46
#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.
10.2K 600 14
ஹாய் நட்புகளே!!!!! என்னுடைய இரண்டாவது கதையோடு சந்திக்க வந்துவிட்டேன் செல்லம்ஸ்!!!!! முதலாவது கதைக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் கொடுப்பீர்கள் என்ற...
40.8K 1.7K 22
கணவன் மனைவி என்பது ஒரு அழகான உறவு .... அதில் ஒரு ஆழ்ந்த உணர்வுகளும் உள்ளது 😍😍 இந்த கதையில் அந்த உறவின் உணர்வுகளை பார்க்கலாம்...
17.2K 1.3K 40
சும்மா படிச்சி பாருங்க... கதைய ஆரம்பத்துலயே சொன்னா நல்லா இருக்காது.