🔱பூமியின் பூங்குழலி🔱

By Sakthriyan

8.6K 1.4K 1.1K

இயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕 More

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8
பாகம் 9
பாகம் 10
பாகம் 11
பாகம் 12
பாகம் 13
பாகம் 14
பாகம் 15
பாகம் 16
பாகம் 17
பாகம் 18
பாகம் 19
பாகம் 20
பாகம் 21
பாகம் 22
பாகம் 23
பாகம் 24
பாகம் 25
பாகம் 26
பாகம் 27
பாகம் 28
பாகம் 29
பாகம் 30
பாகம் 31
பாகம் 32
பாகம் 33
பாகம் 34
பாகம் 35
பாகம் 36
பாகம் 37
பாகம் 38
பாகம் 39
பாகம் 40
பாகம் 41
பாகம் 42
பாகம் 43
பாகம் 45
P❤️R❤️O♥️M❤️O
பாகம் 46
பாகம் 47
பாகம் 48
பாகம் 49
பாகம் 50

பாகம் 44

110 27 15
By Sakthriyan

🔱பூமியின் பூங்குழலி🔱

🔱பாகம் 4️⃣4️⃣

பூங்குழலி - பூமி என்ன இது விளையாட்டு.... முதல்ல வெளிய போங்க

பூமி - நான் எங்க விளையாடினேன்... நான் உனக்கு சோப்பு போட்டு விடவான்னு தானே கேட்டேன்

பூங்குழலி - அதெல்லாம் நைட்டு போடலாம்... இப்போ ஏற்கவனே மணி ஆச்சு... கார்த்திக் அண்ணன் function kku போகணும் இல்ல போங்க போய் கிளம்புங்க

பூமி - போகணுமா

பூங்குழலி - ம்

பூமி - அப்போ இன்னைக்கு நைட்டு நீ மறுபடியும் குளிக்கிறியா

பூங்குழலி - என்ன நீங்க இப்படி ஆகிட்டீங்க

பூமி - எல்லாம் உன்னால தான்

பூங்குழலி - நான் என்ன பண்ணேன்

பூமி - நீ தான் என்னை உன் மேல கிறுக்கா ஆக்கிட்ட

பூங்குழலி - பூமி மணி ஆகுது

பூமி - ம் சரி நான் போறேன் நீ சீக்கிரம் வா

பூங்குழலி - ம்

பூமி - போகவா..

பூங்குழலி - போங்க பூமி

பூமி - மனசே வரலையே

பூங்குழலி - ஐயோ... போங்க நீங்க

பூங்குழலி பூமியை விடாப்பிட்டியாக வெளியே தள்ளி கதவை சாத்த... பூமி சிரித்து கொண்டே வெளிய வந்தவன்... கார்த்திக்கின் get to gether kku கிளம்பிக்கொண்டு இருக்க.... பூங்குழலி சற்று நிமிடத்தில்... பூமி வாங்கி தந்த கருப்பு நிற salwaril இவன் கண் முன் தேவதையை போல தோன்றியவளின் அழகில் பூமி சிலையென நின்றவன் அருகில் வந்த பூங்குழலி

என்ன பூமி அப்படி பாக்குறீங்க..... நான் இந்த dress ல எப்படி இருக்கேன்....

தேவதையை கருப்பு நிற உடையில் பார்த்தது மாதிரி இருக்கு

பாரு டா... ம்... சரி போகலாமா..

வெயிட் வெயிட் நானும் ப்ளாக் dress போட்டுக்குறேன்

ஏன் அப்படி

அப்போ தான் நீயும் நானும் matchaga இருப்போம்

நம்ம ஒற்றுமை ஒரே நிற ஆடையில் இல்லை பூமி... நம்ம காதல்ல இருக்கு

காதலா.. இது எப்பொழுதில் இருந்து

இப்போ தான் கொஞ்ச நாளா

கொஞ்ச நாளானா ஓ அப்போ முன்னாடி எல்லாம் இல்லையா

ஹ்ம் ஹ்ம் நான் உங்களை என் அப்பா மாமா சொன்னனால தான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்... ஆனா போக போக நான் உங்கள அளவுக்கு அதிகமா விரும்ப ஆரம்பிச்சிட்டேன் பூமி

பாருடா ஹ்ம் அப்போ குழலி இந்த அம்மாஞ்சியை காதலிக்கிறீங்க அப்படி தானே

நீங்க ஒன்னும் அம்மாஞ்சி இல்ல... நீங்க இந்த பூங்குழலியின் பூமி நாதன்...

என்று சொன்ன பூங்குழலி தன்னவனை உரிமையோடு கட்டி அணைத்து அவன் கன்னத்தில் தன் இதழ் பதிக்க

பரவயில்ல குழலி நீ ரொம்ப மாறிட்ட

அப்படியா.. but மாற்றம் நல்லது தானே

ம் அதுக்குன்னு இப்படி ஒரே அடியா மாறினா நாங்கெல்லாம் பாவம் இல்ல...

நாங்க என்னா யாரு

நாங்க என்னா என்னோட கன்னம் என்னோட வாய் இதெல்லாம் தான்

எப்பா ரொம்ப வாய் தான் உங்களுக்கு சரி கிளம்பலாமா

ம் வா போகலாம்

என்று சொன்ன பூமி தன் காதல் மனைவி பூங்குழலியுடன் அவன் அறையில் இருந்து வெளியே வர...... இவர்கள் இருவரின் பொருத்தத்தை பார்த்து ராஜனின் கண்கள் இயல்புக்கு மாறாக மகிழ்ச்சியில் மிளிர...

சந்திரன் - என்னடா பேய் அரைந்தது போல நிக்குற

ராஜன் - அங்க பாரு டா உன் மருமகளையும் என் மருமகனையும்...இவுங்க ஜோடி பொருத்தத்தை பார்த்தா என் கண்ணே பட்டுடும் போல டா

சந்திரன் - என் மருமக அழகுக்கு முன்னாடி உன் மருமகன் டம்மி பிஸ் டா

ராஜன் - போதும் நிறுத்து...

பூமி - என்ன அப்பா நண்பர்கள் இரண்டு பேரும் எதை பற்றி discuss பண்றீங்க

சந்திரன் - எல்லாம் உங்க ஜோடி பொருத்தத்தை பற்றி தான்

பூங்குழலி - ஏன் மாமா எங்க பொருத்தம் நல்லா இல்லையா

சந்திரன் - யாருமா சொன்னது... நீங்க ரெண்டு பேரும் இந்திரன் சந்திரன் போல இருக்கீங்க

பூமி - ஏன் அப்பா இப்படி அக்கப்போர் பண்றீங்க

சந்திரன் - ஓ tongue slip ஆகிட்டு... சரி சரி நீங்க ரெண்டு பேரும் தமிழும் அமுதும் போல இருக்கீங்க....

பூமி - அப்பா அப்பா போதும்.... சரி நாங்க கிளம்புறோம்...

சந்திரன் - கார்ல தானே போறீங்க

பூமி - ம் ஆமா பா...

பூங்குழலி - அப்பா நாங்க போயிட்டு வரோம்.... மாமா வரோம் மாமா

சந்திரன் - Ok Ok be carefull

என்று சந்திரன் சொல்ல... பூமியும் பூங்குழலியும் காரில் கார்த்திக் get to gether function நடக்கும் resturant kku கிளம்ப..... பூமி விரட்டிய கார் சில மணி துளிகள் கடந்து resturant வாசலை சென்று அடைய..... பூமியும் பூங்குழலியும் ஜோடியாக காரை விட்டு இறங்கியவர்கள் resturant kkul சென்றதும்.... இவர்களை வாசலில் வந்து கரங்கள் நீட்டி கார்த்திக் வரவேற்க...

பூமி - hai டா

கார்த்தி - welcome டா.

பூங்குழலி - hai அண்ணா

கார்த்தி - வாங்க sister... Hru

பூங்குழலி - Fine அண்ணா

கார்த்தி - pls come inside... வா டா.... உள்ள வா... நம்ம frnds எல்லாம் வந்து இருக்காங்க பாரு....

என்று சொன்ன கார்த்தி பூமி பூங்குழலியை அழைத்து சென்று அனைவர் இடத்திலும் அறிகமுக படுத்தியவன்

கார்த்தி - பூமி நீ sister கூட இங்க உக்காரு... நான் இதோ வரேன்

பூமி - எங்க டா போற

கார்த்தி - SJ வரேன் சொன்னான் டா... அவனை போய் recive பண்ணிட்டு வரேன்

பூமி - ஓ.. spr... சரி போ

என்று பூமி சொன்னவன்.... பூங்குழலியிடம் இயல்பாக பேசிக்கொண்டு இருக்க... பூங்குழலியின் முகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவ

பூமி - என்ன குழலி are u ok

பூங்குழலி - ஆங்..

பூமி - ஏய் அங்க பாரு குழலி SJ

என்று பூமி கை காட்டியதும் பூங்குழலி சங்கடமாய் அவன் முகத்தை பார்க்க.... SJ முகத்தில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இவர்களை நெருங்கி வந்தவன் பூமியின் முன் தன் கரங்களை நீட்டி

SJ - hai பூமி hru man..??

பூமி - fine டா... how abt you

SJ - இருக்கேன்.... hello mrs. பூமி வணக்கம்

பூங்குழலி - என்ன இது புதுசா mrs. பூமின்னு சொல்றிங்க... நீங்க எப்போவும் போல என்னை சித்ரான்னு கூப்பிடுங்க

பூமி - ஓ really.. SJ உன்னை சித்ரா ன்னு தான் கூப்பிடுவாரா

பூங்குழலி - ம் ஆமா..

பூமி - wow சூப்பர்... சரி உக்காரு SJ

SJ - its ok பூமி... நீ உன் MRS கூட உக்காரு... நான் வேற இடத்துல உக்காந்துக்குறேன்

பூமி - அட வா பா... இதோ இங்க ஒரு chair இருக்கு இல்ல வா வந்து உக்காரு

SJ - உன் Mrs. kku எதாவது டிஸ்டர்ப் ஆக போகுது பா

பூங்குழலி - No No நீங்க உக்காருங்க..

கார்த்தி - என்ன SJ நீ பூமி கூட இருக்கியா

பூமி - நீயும் வாடா வந்து உக்காரு

கார்த்தி - ம்

SJ - then பூமி உன் அண்ணன் ஆனந்த் இப்போ ok வா

பூமி - station மேட்டர் ல அப்பா ரொம்ப tencsion ஆகிட்டாரு... அவரே நேரா போய் ஆனந்த் அண்ணனை இனி எங்க complex விஷயத்துல தலை விட வேணா சொல்லிட்டாரு... ஆனந்த் அண்ணன் என் மேல கோவமா இருப்பாரு போல நான் போன் பண்ணா கூட அவர் எடுக்கல.

கார்த்தி - ஏய் பூமி உன் அண்ணன் ஆனந்த் இப்போ என் கூட தான் டா இருக்காரு

பூமி - என்னடா சொல்ற

கார்த்தி - ஆமா பூமி... உங்க அப்பா அவரை complex விஷயத்துல interfiere ஆக வேணா சொல்லிட்டாரு... இப்போ என்னால ஊர் பக்கம் போக முடியாது எனக்கு எதாவது வேலை வாங்கி தான்னு கேட்டாரு.... சரி நான் தான் ஊருக்கு போக போறேனே என்னோட room பூட்டி தான் இருக்கும் so அவரை நான் அங்கேயே தங்க சொல்லிட்டேன்... நாளைக்கு அவருக்கு ஒரு இடத்துல வேலைக்கு சொல்லி இருக்கேன்... அவரு அங்க joint பண்ணுவாரு ன்னு நினைக்கிறேன்

பூமி - அப்படியா ரொம்ப சந்தோஷம் டா...

கார்த்தி - actually அவர் இன்னைக்கு இந்த function kku வருவதாக தான் பிளான் but நீ வர ன்னு சொன்னதால தான் அவர் வரல

பூமி - நான் என்ன டா பண்ண முடியும்... அவர் பண்ணது தப்பு தானே.... ஆயிரம் தான் சொந்தமா இருந்தாலும் தப்பு பண்ணா அப்பா கேப்பாரு தானே

SJ - இப்போ எல்லாம் சொந்தம் தான் நமக்கு முதல்ல ஆப்பு வைக்கிறதே...

பூமி - சரி டா நான் அண்ணனை கேட்டதா சொல்லு..

கார்த்தி - டேய் பூமி அங்க பாரு நம்ம english lecture ரேஷ்மா

பூமி - இவுங்க எப்படி டா இங்க

கார்த்தி - நீ வா நம்ம போய் அவுங்கள recive பண்ணலாம்

பூமி - குழலி நீ SJ கிட்ட பேசிகிட்டு இரு நான் இதோ வரேன்

என்று சொன்ன பூமி கார்த்திக் உடன் அங்கிருந்து நகர்ந்து விட.... SJ மற்றும் பூங்குழலி அமர்ந்து இருக்கும் இருக்கையை சுற்றி அமைதி நிலவ...

SJ சூர்யா - அப்புறம் Mrs பூமி எப்படி போகுது உங்க life

பூங்குழலி - ம் iam happy....நீங்க......சூர்யா

SJ - ஏய் stop it...சூர்யா என்ற பெயரை சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்ல...இன்னும் கேட்டா உன் முகத்துல கூட விழிக்க கூடாது ன்னு தான் நானும் நினைச்சேன்... but பூமி என் frnd... அவன் முகத்துக்காக தான் நீ பண்ண எல்லா துரோகத்தையும் நான் கண்டுக்காம இருக்கேன்.... ஏன் தாத்தா பாட்டியை போய் பார்த்தா எங்க உன்னை பற்றி பேச வேண்டியது வருமே என்ற ஒரே காரணத்தால தான் நான் அவுங்கள கூட பாக்குறதை தவிர்த்து விட்டேன்

பூங்குழலி - ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க

SJ - ம் போதும்.... நீ என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாத

பூங்குழலி - எனக்கு சத்தியமா புரியல அப்படி என்ன உங்களுக்கு என் மேல கோவம்

SJ - இந்த வார்த்தையை கேக்க உனக்கு நாக்கு கூசல

பூங்குழலி - இங்க பாருங்க

SJ - ம் போதும்.... உன்னை கல்யாண கோலத்துல பார்த்த அந்த தருணம் என் வாழ்க்கையே திசை மாறி போச்சு

பூங்குழலி - நான் என்ன பண்ணேன்....

SJ - அதானே உன் அப்பா ஆட்டி வைக்கிற ஆட்டத்துக்கு நீ ஆடுற.. இப்போ தாத்தா பாட்டியும் உன் பக்கம் தான்.... எனக்கு யாரு இருக்க... சொல்லு சூர்யாக்கு யாரு இருக்கா... உங்கள பொறுத்தவர நீங்க நல்லா இருந்தா போதும் இல்ல...

பூங்குழலி - சரி என் தரப்பு நியாயத்தை நான் சொன்னாலும் நீங்க எல்லாம் புரிந்து கொள்ளும் நிலைமையில இல்ல.... அத விடுங்க.... நீங்க என்னமோ உங்க மாமன் மகளை காதலிக்கிறிங்கன்னு பூமி சொன்னாரு என்ன கதை அது...

என்று பூங்குழலி SJ வை கேட்ட சமயம்.... பூமி அந்த இடத்திற்கு வந்தவன்

பூமி - என்ன ரொம்ப கார சாரமா விவாதம் நடக்குற மாதிரி இருக்கு

SJ - ஆங் உங்க Mrs. என் காதலியை பற்றி கேக்குறாங்க....but நான் பதில் சொல்றதுக்குள்ள நீ வந்துட்ட

பூமி - ஏன் டா என்னாச்சு உங்க காதல் கதை

SJ - ஒரு கல்யாணத்தால என் காதல் காணாமல் போச்சு டா...

பூமி - யாரு கல்யாணத்தால..

SJ - ம் அது எல்லாம் இப்போ ஏன் விடு.... சரி பூமி எனக்கு நேரம் ஆகுது நான் கிளம்புறேன்... நாளைக்கு நான் டெல்லி போகணும்

பூமி - ஆங் சூர்யா எனக்கு உன்னால ஒரு help வேணும்

SJ - ஏய் என்ன நீ help அது இதுனு சொல்ற... உரிமையா கேளு என்ன...

பூமி - நான் complex கட்ட போறேன் இல்ல.. அதுக்கு இன்ஜினிர் யாராவது எனக்கு recomand பண்ணுடா

SJ - ok நான் aftr 2days ல உனக்கு call பன்றேன்

பூமி - thanks டா...

SJ - ok bye பூமி...... வரேன் Mrs. பூமி...

பூங்குழலி - ம்

SJ சூர்யா இவர்கள் அனைவரிடத்தில் இருந்தும் விடை பெற்ற சில மணி துளிகளில் பூமியும் பூங்குழலியும் அவர்கள் வீட்டிற்கு கிளம்ப...பூங்குழலி காரில் அமர்ந்து இருந்தவள் ஏதோ யோசனையில் வந்தவளை பார்த்து பூமி

என்ன குழலி என்னாச்சு.... ஏன் ஒரு மாதிரி இருக்க...

பூங்குழலி -

பூமி - குழலி உன்னை தான்

பூங்குழலி - ஆங் என்ன பூமி.... என்ன கேட்டீங்க

பூமி - என்னாச்சு

பூங்குழலி - ஒண்ணுமில்ல சும்மா தான்

பூமி - என்னாச்சு ஏதோ பலத்த யோசனையில இருக்குற மாதிரி தெரியுது

பூங்குழலி - இல்ல சூர்யா

பூமி - யாரு SJ வா...

பூங்குழலி - ஆங் என்ன..

பூமி - இல்ல சூர்யான்னே சொன்னியே... அதான் SJ வான்னு கேட்டேன்

பூங்குழலி - ஆங் ம் ஆமா... SJ தான்

பூமி - அவனுக்கு என்ன..

பூங்குழலி - இல்ல அவரோட காதல் விவாகரத்தை பற்றி யோசிச்சேன்

பூமி - நம்ம யோசிச்சு என்ன ஆகப்போகுது

பூங்குழலி - ம்

பூமி - நான் நினைக்கிறேன் இவன் அந்த பெண்ணை love பண்ணது அந்த பெண்ணுக்கே தெரியாதேன்னு

பூங்குழலி - ம் நானும் அதே தான் நினைச்சேன்

பூமி - சரி அவுங்க கதை நமக்கு ஏன்.... இன்னைக்கு நமக்கு ஆக வேண்டிய கதையை பற்றி நம்ம யோசிப்போம்.

பூங்குழலி - என்ன கதை நம்ம கதை

பூமி - என்ன நீ எப்படி கேட்டுட்ட... இன்னைக்கு நமக்கு first night நடக்கும்ன்னு நீ தானே சொன்ன

பூங்குழலி - நான் எப்போ சொன்னேன்

பூமி - குழலி வேணா...

பூங்குழலி - சரி சரி tencsion ஆகாதீங்க வண்டியை வீட்டுக்கு விடுங்க... நேரம் ஆகுது பாருங்க.

பூமி - ம் அது நல்ல பிள்ளைக்கு அழகு...

என்று சொன்ன பூமி அவன் காரை வேகமாக தன் வீட்டை நோக்கி விரட்டியவன் அடுத்த சில மணி துளிகளில் அவன் வீட்டை
சென்றடைய..

சந்திரன் - வாங்க மா... என்ன function எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா....

பூங்குழலி - ம் முடிஞ்சுது மாமா...

ராஜன் - எங்க மா மாப்பிள்ள

பூங்குழலி - அவரு கடைக்கு போய் இருக்காரு

சந்திரன் - என்ன கடைக்கு ஏன்

பூங்குழலி - sweet வாங்கவும் பூ வாங்கவும் போய் இருக்காரு

ராஜன் - ஏன் பூ இனிப்பு எல்லாம்

சந்திரன் - டேய் என்னடா பைத்தியம் போல கேக்குற.... சரி மா நீ dress மாத்திட்டு வா நம்ம சாப்பிடலாம்

பூங்குழலி - மாமா எனக்கு சாப்பாடு வேணா மாமா... நான் function ல சாப்பிட்டதே fulla இருக்கு.

ராஜன் - சரி சந்திரா நீ வா நம்ம சாப்பிடலாம்

சந்திரன் - ம் வாடா...

பூங்குழலி - மாமா நான் சாப்பாடு எடுத்து வைக்கவா

சந்திரன் - இல்ல மா நீ போய் dress மாத்து...நாங்க சாப்பிட்டுக்கிறோம்...

என்று சந்திரன் சொல்ல..... பூங்குழலி அவள் அறைக்குள் சென்றவள் ஏதோ யோசனையில் இருந்தப்படி குளியல் அறைக்கு செல்ல....சற்று நிமிடத்தில் பூமி இவர்கள் அறைக்குள் வந்தவன் தன் அறையின் கதவை தாளிட்டபடி குளியல் அறை கதவை தட்ட...பூங்குழலி சோகமாக கதவை திறக்க....

பூமி - என்ன நீ நான் வரதுக்குள்ள யாரு உன்னை குளிக்க சொன்னாங்க....

பூங்குழலி - இல்ல அது... வந்து

பூமி - என்னாச்சு..

பூங்குழலி - அது வந்து..

பூமி - என்னாச்சு கேக்கிறேன் இல்ல..

பூங்குழலி - அது வந்து நான்

பூமி - சரி என்ன நீ இந்த நேரத்துல தலைக்கு குளிச்சு இருக்க

பூங்குழலி - அதான் சொல்ல வந்தேன்....

பூமி - என்னாச்சு

பூங்குழலி - தலை முழுகள் வந்துட்டு பூமி....

பூமி - அப்படினா

பூங்குழலி - வீட்டுக்கு தூரம் ஆகிட்டேன்

பூமி - ஓ...

பூங்குழலி - sorry பூமி

பூமி - ஏய் என்ன நீ இதெல்லாம் natural causes தானே... இதுக்கு ஏன் sorry எல்லாம்...

பூமி - சரி நீ ஈர தலையோட ரொம்ப நேரம் இருக்காத தலைக்கு ஹிட்டர் போடு

பூங்குழலி - பூமி உங்களுக்கு ஏதும் வருத்தம் இல்லையே

பூமி - நீ என்ன பைத்தியமா இதுக்கெல்லாம் யாராவது வருத்தப்படுவாங்களா நீ இரு நான் வெளியே அப்பாவை போய் பாத்துட்டு வரேன்

என்று சொன்ன பூமி கையில் இருந்த பூவையும் இனிப்பையும் எடுத்துக்கொண்டு ஹால்ளுக்கு போக

சந்திரன் - என்னடா சாப்பிடுறியா

பூமி - இல்லப்பா பசிக்கல... இந்தாங்க ராஜன் அப்பா ஸ்வீட் எடுத்துக்கோங்க

சந்திரன் - டேய் ஸ்வீட் உன் பொண்டாட்டிக்கு வாங்கிட்டு வந்திருக்கேன்னு பார்த்தா என்னடா இவன்னுக்கு கொடுக்கிற

பூமி - குழலிக்கு வாங்கி வந்தா நீங்கள் எல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு இருக்கா என்ன...இந்தாங்க சாப்பிடுங்கப்பா

என்று சொன்ன பூமி தன் கையில் இருந்த பூச்சரத்தை தன் அம்மா மற்றும் பூங்குழலியின் அம்மாவின் புகைப்படத்திற்கு அணிவிக்க சந்திரன் குழம்பியவர்

சந்திரன் - என்னடா உனக்கும் மருமகளுக்கும் ஏதாவது பிரச்சனையா

பூமி - ஏம்பா என்ன இப்படி கேக்குறீங்க

சந்திரன் - இல்லடா நீ என்னமோ இனிப்பு பூன்னு சொன்னதும் நான் வேற மாதிரி நெனச்சி சந்தோச பட்டேன்

பூங்குழலி - மாமா

சந்திரன் - என்னம்மா என்ன ஆச்சு

பூங்குழலி - ஒன்னும் இல்ல மாமா நான் அஞ்சு நாளைக்கு பூ வச்சுக்க கூடாது

சந்திரன் - ஓ சரி சரி மா நாளைக்கு நீ வேலைக்கு எல்லாம் போவேனா வீட்ல rest எடுத்திக்கோ

பூங்குழலி - இருக்கட்டும் மாமா நான் இந்த மாதிரி நேரத்துல வேலைக்கு போய் பழக்கம் தான்

சந்திரன் - அட வேற ஒரு நாட்டுல எல்லாம் இந்த மாதிரி நேரத்துல மாசத்துல மூணு நாள் பெண்களுக்கு லீவு கொடுக்கிறாங்க but இந்த ஊரு தான் அநியாயம் பண்ணுறாங்க...உன்னால முடியலைன்னா வேலையாவது ஏதாவது தூக்கி போட்டுட்டு வீட்ல இரு டா...

பூங்குழலி - இல்ல மாமா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல நான் பாத்துக்குறேன்

சந்திரன் - சரி ரெண்டு பேரும் நேரத்தோட போயி படுங்க

என்று சந்திரன் சொல்ல பூமியும் அவன் மனைவியும் அவர்கள் அறைக்குள் செல்ல....பூங்குழலி தரையில் ஒரு துணியை விரித்ததை பார்த்த பூமி

எதுக்கு தரையில துணி விரிக்கிற

இல்ல பூமி நான் கீழ படுத்துகிறேன்

ஏய் எந்த காலத்தில் இருக்க நீ வா மேல படு

ஐயோ இது காலத்தை வைத்து கணக்கெல்லாம் சொல்லல புரிஞ்சுக்கோங்க நான் கீழேயே படுத்துக்கிறேன்

ஐயோ தரை குளிருது குழலி

அதெல்லாம் இல்ல நான் ரெண்டு பெட்ஷீட் போட்டு இருக்கிறேன்...நான் கீழே படுத்துகிறேன்

என்று பூங்குழலி சொன்னதும் பூமியும் தரையில் துணியை விரிக்க...

என்ன பூமி இது நீங்க ஏன் இங்க படுக்குறீங்க

ம் என் ஆசை மனைவி நீ கீழே படுத்திருக்கும் போது நான் மட்டும் எப்படி மேலே படுக்க முடியும்

விளையாடாதீங்க பூமி நீங்க கட்டில்ல படுங்க

அதெல்லாம் முடியாது நானும் உன் பக்கத்துல தரையில தான் படுப்பேன்

ஏன் பூமி இப்படி பண்றீங்க

ஹலோ நான் என்ன பண்ணேன்...நீ இயற்கை உபாதை என்று சொல்லும்போது எவ்வளவு அமைதியா நல்ல புள்ளையா உன் பக்கத்துல படுத்து இருக்கேன்.. என்னை போய் இப்படி சொல்ற

ஹ்ம் நீங்க இருக்கீங்க பாருங்க

இருக்கேன்...இருப்பேன் எப்பயும் உன் கூடவே இருப்பேன் சரி படுத்துக்கோ....வயிறு ஏதாவது வலிக்குதா

இல்ல பூமி அதெல்லாம் இல்ல

நம்ப வேணா பல்லாங்குலி விளையாடலாமா

பூமி அது எல்லாம் எதுவும் வேண்டாம் நீங்க படுங்க

ம் குழலி நாளைக்கு நான் கார்த்திக்கு call பண்ணிட்டு ஆனந்த் அண்ணனை போய் பார்க்கலாம்னு இருக்கேன்

ம் சரி பூமி ஆனா

என்ன

ஆனா மாமாகிட்ட சொல்லிட்டு போங்க

ம் சரி நாளைக்கு பேசிப்போம் நீ நிம்மதியா படு

என்று பூமி சொல்ல பூங்குழலி தன் சூழ்நிலையை புரிந்து கொண்டு தனக்கு ஒரு தாயை போல தன்னிடம் நடந்து கொள்ளும் பூமியை நினைத்து பெருமிதம் கொண்டவள் நிம்மதியாக கண்ணுறங்க.... மறு நாள் காலை பொழுது நலமுடன் விடிந்ததது....

பூமி - அப்பா

சந்திரன் - சொல்லு டா

பூமி - நான் இன்னைக்கு கார்த்தி வீடு வர போயிட்டு வரேன்

சந்திரன் - ம் போயிட்டு வா

பூங்குழலி - இந்தாங்க பூமி காபி

பூமி - thanks குழலி

ராஜன் - அம்மாடி நீ இன்னைக்கு நைட் டூட்டியா

பூங்குழலி - ம் ஆமா பா

சந்திரன் - சரி டா ராஜன் வா நம்ம market போகலாம்

பூமி - அப்பா

சந்திரன் - ம்

பூமி - ஆனந்த் அண்ணன் கார்த்தி வீட்ல தான் இருக்காரு...

சந்திரன் - என்னடா சொல்ற

பூமி - ஆமா பா... அவரால ஊருக்கு போக முடியாது... இங்கேயே எனக்கு எதாவது வேலை பார்த்து தாங்கன்னு சொல்லி இருக்காரு போல அதான் இவன் வேலை வாங்கி தந்து அவன் ரூமை இவனுக்கு தங்க தந்து இருக்கான்

சந்திரன் - என்னடா புது புது கதை எல்லாம் சொல்ற

பூங்குழலி - ஆமா மாமா நேத்து நாங்க போன function ல தான் கார்த்தி அண்ணன் சொன்னாரு

பூமி - அதான் பா நான் போய் ஆனந்த் அண்ணனை பார்த்துட்டு வரேன்

சந்திரன் - நீ ஏன் அவனை பார்க்க போற

பூமி - இல்ல பா

சந்திரன் - வேணா பூமி... அவன் நம்மகிட்ட இருந்து போனவன் போனவனாகவே இருக்கட்டும்

பூமி - இல்ல பா

சந்திரன் - நீ அவனை பார்க்க போறது எனக்கு பிடிக்கல.... என்னை மீறி நீ போறதா இருந்தா thats ur wish...ok வா.. ராஜன் நீ வா...நம்ம market போய் vegetables வாங்கிட்டு வரலாம்

என்று சொன்ன சந்திரன்... ராஜனை அழைத்து கொண்டு வெளியே செல்ல...

பூங்குழலி - என்ன பூமி என்ன யோசனை

பூமி - அப்பாவை மீறி நான் எப்படி அண்ணனை போய் பாப்பேன்

பூங்குழலி - மாமா தான் சொல்லறாரு இல்ல விடுங்க....நீங்க போக வேணா. வேணும்னா உங்க அண்ணனுக்கு போன் பண்ணி பேசுங்க

பூமி - இல்ல குழலி வேணா... அப்பா சொன்னா எதாவது அர்த்தம் இருக்கும்.... சரி நான் போய் மெயில் பாக்குறேன்... நீ எதாவது work இருந்தா பாரு

என்று பூமி சொல்ல.... சந்திரன் அவர்களின் வார்த்தைக்கு மரியாதை தந்த பூமி ஆனந்தை பார்ப்பதை தவிர்க்க.... இப்படியாக இரண்டு நாட்கள் கடந்த நிலையில் அன்றைய தினம் பூமியின் கைபேசிக்கு SJ விடம் இருந்து அழைப்பு வர...

பூமி - hai டா

SJ - பூமி நான் உனக்கு ஒரு அட்ரஸ் தரேன்... நீ அவுங்கள போய் பார்க்க முடியுமா

பூமி - யாரு டா

SJ - உன் complex க்கு இன்ஜினியர் கேட்டியே.... இவுங்க construction wrk எல்லாம் சூப்பரா இருக்கும்... போய் பாரு உனக்கு ok னா நீ proceed பண்ணு

பூமி - ஓ thanks சூர்யா... நான் அப்பாகிட்ட சொல்லிட்டு... அவரையும் அழைச்சிட்டு போய் பாக்கறேன்...

SJ - ம் jst few mins ல உனக்கு நான் அட்ரஸ் send பண்றேன்..

பூமி - really thanks டா....

SJ - ம் take care

பூமி - நீ ஊருல இருந்து வந்துட்டியா

SJ - ம் on the way டா

பூமி - ok டா பாத்து வா... நான் அவுங்கள போய் பார்த்துட்டு உனக்கு call பண்றேன்

என்று சொன்ன பூமி..... SJ சூர்யா அனுப்பிய முகவரியில் இருக்கும் நபரை தன் தந்தையுடன் சென்று பார்த்தவன்... அவர்களின் தொழில் நேர்மை பிடித்ததால்.... தன் complex கட்டும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்தவர்கள்..... மேற்கொண்டு தேவையான எல்லா formalities களையும் அடுத்த இரண்டு நாட்களில் SJ மூலியமாக செய்து முடிக்க.....
அன்றைய தினம் பூங்குழலி நைட் டூட்டி kku கிளம்பி கொண்டு இருக்க...

பூமி - என்ன குழலி கிளம்பிட்டியா

பூங்குழலி - ம் ready பூமி

பூமி - தண்ணி எடுத்துகிட்டியா

பூங்குழலி - ஆங் எடுத்துக்கிட்டேன்...

சந்திரன் - என்னமா ready ஆகிட்டியா

பூங்குழலி - ம் ரெடி மாமா

ராஜன் - பார்த்து போயிட்டு வா மா

பூங்குழலி - ம் ok பா

பூமி - சரி நான் காருல வெயிட் பண்றேன்.. நீ போன் எடுத்துக்கிட்டு வா......

பூங்குழலி - பூமி ஒரு நிமிஷம்

பூமி - என்ன குழலி

பூங்குழலி - building wrk எப்போ ஆரம்பிக்க போறோம்

பூமி - next வீக்

பூங்குழலி - ம் அப்போ நான் one வீக் leave போடுறேன் நம்ம எங்கேயாவது outing போகலாமா

ராஜன் - என்ன திடிர்னு

பூங்குழலி - தெரில ரொம்ப wrk பிஸியா போற மாதிரி இருக்கு... உங்க கூட எல்லாம் time spend பண்ணாத போல ஒரு feel

சந்திரன் - எங்ககூடவா இல்ல உங்க husband கூடவா மா

பூங்குழலி - அச்சோ இல்ல மாமா உங்க எல்லோர் கூடவும் தான்

சந்திரன் - டேய் பூமி பேசாம நீயும் என் மருமகளும் one வீக் honey moon போயிட்டு வாங்க டா...

பூங்குழலி - ஐயோ வேணா மாமா... நம்ம எல்லோரும் outing போகலாம்

சந்திரன் - அது இன்னொரு நாள் போகலாம்.... டேய் பூமி இப்போ நீ என் மருமகளை கொண்டு போய் ஹாஸ்பிடல்ல விட்டுட்டு வீட்டுக்கு வந்து முதல் வேலையா one வீக் honey moon trip புக் பண்ணி ஜாலியா ஊர் சுத்தி பாத்துட்டு வாங்க ok வா

பூமி - என்ன குழலி ரெண்டு பேர் மட்டும் போகலாமா

பூங்குழலி - இல்ல பூமி நம்ம சும்மா பக்கம் எங்கேயாவது outing போகலாம்...

பூமி - சரி நீ வா நான் உன்னை wrk ல விட்டுட்டு இன்னைக்கு நைட் எல்லாம் தேடி கண்டு பிடித்து ஒரு இடம் செலக்ட் பன்றேன்..

என்று பூமி சொல்ல.... பூங்குழலி மலர்ந்த முகத்துடன் வேலைக்கு செல்ல.....மறுநாள் நாள் காலை பூங்குழலி மருத்துவமனையில் இருந்து பூமிக்கு call செய்ய.... பூமியின் கைபேசி இணைப்பு தொடர்புக்கு அப்பால் இருப்பதாக செய்தி வந்ததும்.. பூங்குழலி ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தவளை பார்த்த ராஜன்

என்ன மா ஏன் ஆட்டோ ல வர..மாப்பிள்ளை எங்க

என்று அவர் கேட்டதும் சந்திரன் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தவர்

என்ன ஆட்டோல வந்தியா...ஏன்.... உன் புருஷன் வரல.....

என்று சந்திரன் கேக்க.... பூங்குழலி இயல்பாக

இல்லையே மாமா... நான் நேத்து நைட்டு break ல ரெண்டு மணிக்கு அவருக்கு call பண்ணி பேசினேன்... அதோட இப்போ காலையில அவருக்கு call பண்றேன் not reachable ன்னு வருது..

என்று பூங்குழலி சொல்லிக்கொண்டு இருந்த சமயம்...... வாசலில்  கார் சத்தம் கேட்டு சந்திரன் வெளியே வந்து பார்க்க .....காரில் இருந்து தேவி பாட்டி இறங்க

சந்திரன் - அம்மா... வாங்க அம்மா... என்ன இது என்கிட்ட சொல்லி இருந்தா நான் வந்து அழைச்சிட்டு வந்து இருப்பேனே.... அப்பா எங்க

தேவி - அதோ அவரு உள்ள தான் இருக்காரு

என்று தேவி சொல்ல.... சந்திரன் தேவராஜை அழைத்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தவரை பார்த்த பூங்குழலி ஆசையோடு ஓடிவந்தவள்.

பூங்குழலி - பாட்டி வாங்க..எப்படி இருக்கீங்க... என்ன சொல்லாம வந்து இன்ப அதிர்ச்சி தரிங்க...

தேவி - சொல்லாம வந்தோமா...?? என்ன சித்ரா நீ... உன் புருஷன் தான் என்னை உடனே கிளம்பி வாங்கன்னு சொல்லி taxi அனுப்புனாரு...நீ என்னடானா உனக்கு தெரியாதுன்னு சொல்ற

பூங்குழலி - என்ன பாட்டி சொல்றிங்க... பூமியா

தேவி - ஆமா மா

சந்திரன் - என்கிட்ட சொல்லாம இவன் என்ன பண்ணுறான்

போதும்..... இது வரை உங்ககிட்ட சொல்லி...நீங்க உண்மையை எல்லாம் மறைத்து..... நல்லவனை முட்டாளாக மாற்றியது எல்லாம் போதும்..... இனி உங்க கூட்டு களவாணி தனம் எல்லாம் இங்கே செல்லாது.....

என்று சொன்னப்படி ஆனந்த் இந்த வீட்டிற்குள் நுழைய..... அவனை தொடர்ந்து கண்கள் சிவந்து தலை முடி கலைந்து பிரேம்னை பிடித்தது போல பூமி உள்ளே நுழைந்தவன்... பூங்குழலி முன் வந்து நிற்க்க... பூங்குழலி குழப்பத்தில் அவனை பார்க்க

பூமி - குழலி தேவி பாட்டி உன்னோட சொந்த பாட்டியா

பூங்குழலி - பூமி

பூமி - நான் கேட்டதுக்கு ஆமா இல்லைன்னு ஒரே ஒரு பதிலை மட்டும் சொல்லு..... இவுங்க உன் சொந்த பாட்டியா

பூங்குழலி -

பூமி - கேக்குறேன் இல்ல சொல்லு

பூங்குழலி - ஆமா பூமி.... ஆனா

பூமி - போதும் நிறுத்து... ஏன் அப்பா என்னை நீங்க விளையாட்டா தான் அம்மாஞ்சின்னு கூப்பிடுறிங்கன்னு இதுநாள் வர நினைச்சேன்.... ஆனா உண்மையாவே நீங்க என்னை அம்மாஞ்சியா ஆக்கிட்டீங்க இல்ல.....

சந்திரன் - டேய் பூமி இல்ல டா.... நான் சொல்றத கேளு

பூமி - வேணா... யாரும் எந்த விளக்கமும் சொல்ல வேணா....

ராஜன் - மாப்பிள்ள

பூமி - இனி என்னை அப்படி கூப்பிடாதீங்க

தேவராஜ் - தம்பி

பூமி - வேணா யாரும் எதுவும் பேசாதீங்க

பூங்குழலி - பூமி

பூமி - அவுங்க எல்லோரையும் விடு....ஒன்றை மறைக்க ஒரு பொய் அதை மறைக்க வேற பொய்ன்னு இத்தனை பொய் சொல்லிட்டு என்கூட ஒரே ரூம்ல எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாம வாழ எப்படி உனக்கு மனசு வந்துச்சு....ச்சீ உன்னை போய் நான் என் உயிரா நினைத்தேனே... ஆனா நீ எனக்கு எவ்வளவு பெரிய பாவத்தை பண்ணிட்ட... இல்ல இனி ஒரு நொடி நான் இங்க இருந்தா கூட நான் கொலை காரனாக மாறிடுவேன்...உன்னால என் நண்பன் சூர்யாவுக்கு நான் துரோகியாகிட்டேனே..

என்று பூமி கோவமாக சொன்னவன்....கண் இமைக்கும் நேரத்தில் அந்த வீட்டை விட்டு வெளியேறினான்...





Continue Reading

You'll Also Like

22.7K 806 9
காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, ந...
20.6K 827 23
தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???
189K 12.2K 57
A simple, light hearted love story of our Ashaangi...💜💜 Peep into the story to know more...😉 First part ah matum read panitu author ah thittitu b...
44.1K 5.3K 46
New Story of KM...😍 Hope you all like it..