பாகம் 31

140 27 23
                                    

பூமி - ஹலோ யார் பேசுறது

X - யார் பேசுறதுன்றது முக்கியம் இல்ல.... என்ன பேசறதுன்றது தான் முக்கியம்...

பூமி - என்ன சொல்றிங்க புரியல..

X - அதுவா.....இன்னும் ரெண்டு நாள்ல இன்னைக்கு உனக்கு சொந்தமா இருக்கிற ஒன்னு எனக்கு சொந்தமாக போகுது என்ற நல்ல செய்தியை சொல்ல தான் உனக்கு நான் போன் பண்ணேன்

பூமி - ஹலோ யாரு பேசுறீங்க ஹலோ ஹலோ...

பூங்குழலி - பூமி என்னாச்சு ஏன் இவ்வளவு சத்தமா பேசுறீங்க

பூமி - அது ......அது யாரோ போன் பண்ணாங்க...யாருன்னு கேட்டா என்னென்னமோ பேசுறாங்க

பூங்குழலி - என்ன பேசுனாங்க

பூமி - அது ...இல்ல ஒண்ணுமில்ல நீ தூங்கு

பூங்குழலி - நான் எப்படி தூங்கினேன்

பூமி அவள் அருகில் அமர்ந்தவன் சிரித்துக்கொண்டே

பூமி - கண்ணை மூடி தான்

பூங்குழலி - ம் நல்ல ஜோக்

பூமி - really

பூங்குழலி - சரி நீங்க எதோ விளையாட்டு எடுக்க போனீங்க ஏன் இவ்வளவு நேரம்

பூமி - என் friend போன் பண்ணான் அவன்கிட்ட பேசிட்டு வரதுக்குள்ள நீ தூங்கிட்ட..

பூங்குழலி - ம் ஆமா பூமி..மாத்திரை போட்டேன் இல்ல..அதான் தூங்கிட்டேன் போல..

பூமி - சரி நீ தூங்கு

பூங்குழலி - இல்ல தூக்கம் போச்சு

பூமி - அப்போ விளையாடலாமா

பூங்குழலி - ம் விளையாடலாம்

பூமி பல்லாங்குழலியை எடுத்து கட்டில் மேல் வைத்தவன்..

பூமி - குழலி நீ இந்த விளையாட்டு விளையாடி இருக்கியா.

பூங்குழலி - ஹ்ம் ஹ்ம் இல்ல பூமி...ஆனா பார்த்து இருக்கேன்  

பூமி - ம் எங்க அம்மா மாசம் மாசம் மூணு நாள் இந்த விளையாட்டை என்கூட விளையடுவாங்க...அதோ அங்க நம்ம தோட்டம் இருக்கு இல்ல அங்க தான் உக்காந்து விளையாடுவோம்..

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now