பாகம் 50

269 33 21
                                    

🔱பூமியின் பூங்குழலி 🔱

🔱பாகம் 5️⃣0️⃣

இடம் சாந்தி ஆசிரமம் .....பூங்குழலி அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்த சமயம் அங்கே இருக்கும் சில குழந்தைகள் பூங்குழலியை கட்டி அணைத்து கொள்ள.....

பாப்பா - சித்ரா அக்கா வாங்க...என்ன அக்கா எப்பயும் மாசத்துக்கு ஒரு தடவை வருவீங்க....இப்போ என்ன சொல்லாம கொள்ளாம வந்து இருக்கீங்க... எப்படி இருக்கீங்க

பூங்குழலி - நல்லா இருக்கேன் பாப்பா ... சரி அம்மா எங்க..

என்று பூங்குழலி கேட்க... கையில் புத்தகத்தோடு ஒரு அறையில் இருந்து மாரியம்மாள் வெளியே வந்தவர்

பூங்குழலியை பார்த்து புன்னகை மலர்ந்த முகத்துடன்...

மாரியம்மாள் - வா மா சித்ரா எப்படி இருக்க... ஏன் ஒரு மாதிரி இருக்க.. நீ இன்னிக்கி வருவேன்னு எனக்கு ஒரு போன் பண்ணி இருக்கலாம் இல்ல.. உனக்கு பிடிச்ச சாப்பாடு அம்மா பண்ணி வச்சிருப்பேனே

பூங்குழலி - எனக்கு சாப்பாடு எல்லாம் வேண்டாம்... நான் உங்க மடியில படுத்து அழனும்னு தான் ஓடி வந்தேன்

மாரியம்மாள் - என்னம்மா என்ன ஆச்சு

பூங்குழலி - என்னை எதுக்காக எல்லார்கிட்ட இருந்தும் காப்பாத்துனீங்க..நான் அப்பவே செத்து இருந்திருக்கலாமே

மாரியம்மாள் - என்னடா என்ன ஆச்சுன்னு கேக்குறேன் இல்ல

என்று மாரியம்மா கேட்க....மாரியம்மாள் இறந்த மனோகரன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.....மூன்று வருட கால சிறை தண்டனைக்குப் பிறகு மாரியம்மாள் இன்று வரை சாந்தி ஆசிரமத்தில் ஒரு அங்கமாக திகழும் பெண்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது...இன்று வரை சாந்தி ஆசிரமத்தை நிர்வாகிப்பது SJ மற்றும் சூரியா... மற்றும் நம் கதாநாயகி பூங்குழலி ஆகியோர் ஆவர்கள் ......

தன் தந்தைக்கு தெரியாமல் தன்னை காப்பாற்றிய தன் அத்தை சாந்தியின் பெயரில் இந்த ஆஸ்ரமம் நடப்பாத்தால் மாதத்துக்கு ஒரு முறை தன்னாலான உதவிகளை அந்த குழந்தைகளுக்கு செய்வது பூங்குழலியின் கடமை..

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now