🔱பூமியின் பூங்குழலி🔱

By Sakthriyan

8.6K 1.4K 1.1K

இயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕 More

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8
பாகம் 9
பாகம் 10
பாகம் 11
பாகம் 12
பாகம் 13
பாகம் 14
பாகம் 15
பாகம் 16
பாகம் 17
பாகம் 18
பாகம் 19
பாகம் 20
பாகம் 21
பாகம் 22
பாகம் 23
பாகம் 24
பாகம் 25
பாகம் 26
பாகம் 27
பாகம் 28
பாகம் 29
பாகம் 30
பாகம் 31
பாகம் 32
பாகம் 33
பாகம் 35
பாகம் 36
பாகம் 37
பாகம் 38
பாகம் 39
பாகம் 40
பாகம் 41
பாகம் 42
பாகம் 43
பாகம் 44
பாகம் 45
P❤️R❤️O♥️M❤️O
பாகம் 46
பாகம் 47
பாகம் 48
பாகம் 49
பாகம் 50

பாகம் 34

123 22 10
By Sakthriyan

சந்திரன் - இப்ப எதுக்குடா உன் தலையில இடி விழுந்த மாதிரி ஓடி வர

ராஜன் - டேய் இங்க வாடா யாரு நகை கடைக்கு வராங்கன்னு பாரு யாரு

சந்திரன் - என்ன சினேகா வராங்களா

ராஜன் - அடேய் புன்னகை அரசி சினேகா வரல டா....எழுத்தின் எழிலரசி உன் இந்து வரா

சந்திரன் - என்னடா சொல்ற இந்திராவா

ராஜன் - ஆமாடா சீக்கிரம் வா

என்று ராஜன் சந்திரனை அழைத்துச் செல்ல....நகைக்கடைக்குள் சந்திரனின் கல்லூரி தோழி இந்திரா அவர்கள் உள்ளே வருவதை பார்த்ததும் சந்திரனின் முகம் மலர்ந்தபடி இந்திரா அவர்களை காண...

இந்திரா - நீ....நீ நீங்க சந்திரன் தானே

சந்திரன் - யா யா.....ஹவ் ஆர் யூ இந்திரா

இந்திரா -  வாவ் சந்திரன்...... what a ப்ளசன்ட் surprise.......எப்படி இருக்கிறீங்க உங்கள பாத்து எத்தனை வருஷம் ஆச்சு அப்புறம் வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு

சந்திரன் - நீயே சொல்லு நான் எப்படி இருக்கேன்

இந்திரா - ம் உங்களுக்கு என்ன அப்போ பார்த்த மாதிரியே இப்பவும் ராஜா போல கம்பீரமா இருக்கீங்க

சந்திரன் - ரியலி

இந்திரா - யா யா யா... hai ராஜன்

ராஜன் - எப்படி இந்து இருக்கீங்க

இந்திரா - நான் நல்லா இருக்கேன் ராஜன்... அன்னைக்கு கடையில பார்த்து உன்னுடைய ஃபோன் நம்பர் அட்ரஸ் வாங்குறதுக்குள்ள நீ களம்பிட்ட

ராஜன் - அது என்னுடைய மகளுக்கு நிச்சியம் வச்சிருந்தேன் அந்த டென்ஷன்ல உன்கிட்ட அட்ரஸும் போன் நம்பரும் கொடுக்க மறந்துட்டேன்

இந்தரா - உங்க மகளுக்கு கல்யாணம் எல்லாம் ஆயிடுச்சா?.....ஆமா நம்ம எல்லாருக்கும் பெரிய பெரிய பிள்ளைங்க இருக்கும் இல்ல..... சந்திரன் உனக்கு கல்யாணம் ஆகி குழந்தை எல்லாம் இருக்குமே......

ராஜன் - என்ன நீ நமக்கெல்லாம் 60 வயசு ஆகிடுது... கல்யாணம் ஆச்சா குழந்தை இருக்கான்னு கேக்குற

சந்திரன் - இப்ப என் வயசு எல்லாம் உன்னை யாராவது இங்கே ரெஜிஸ்டர் பண்ண சொன்னாங்களா...

இந்திரா - ஏன் ராஜன் சொல்றதுல்ல என்ன தப்பு இருக்கு உனக்கும் கண்டிப்பா கல்யாணம் ஆகி பேரன் பேத்தியே பிறந்திருக்குமே

சந்திரன் - இல்ல எனக்கு கல்யாணம் எல்லாம் ஆகல நான் இன்னமும் என்னுடைய காதலியுடைய நினைப்பிலேயே தான் இருக்கிறேன்

ராஜன் - அடப்பாவி முழு பூசணிக்காவ சோத்துல அமுக்குவாங்க... நீ என்னடா ஒரு சோத்துல ஒரு பூசணிக்காவ அமுக்குற

சந்திரன் - இப்போ உன் வாய்ல எதாவது அமுக்க போறேன் பாரு....கொஞ்ச நேரம் நீ அமைதியா இருக்கியா

இந்திரா - ஹேய் சந்திரா...சும்மா எல்லாம் சொல்லாதீங்க... எனக்கு தெரியும் உங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான்னு கேள்விப்பட்டேன்

சந்திரன் - உன்கிட்ட யாரோ பொய் சொல்லி இருக்காங்க இந்து darling....எனக்கு கல்யாணம் எல்லாம் ஆகல....என்ன பாத்தா கல்யாணமான அங்கிள் மாதிரியா இருக்கு

இந்திரா - oho..... but பார்த்தா அப்படி தெரியல

ராஜன் - ஆமா இவன் கொள்ளு பேரனே எடுத்த மாதிரி இருக்கிறான் அப்படித்தானே இந்து சொல்ற

இந்திரா - No No நான் அப்படியெல்லாம் சொல்ல வரல...சந்திரு இன்னுமும் பார்க்க இளைய திலகம் சிவாஜி கணேசனுடைய மகன் பிரபு மாதிரி தான் இருக்காரு

சந்திரன் - பாத்தியாடா ஆயிரம் பேர் இருந்தாலும்...நம்ம காதலிச்ச ஒரு பொண்ணு வாயால நம்மள புகழ்ந்து பேசுற வார்த்தையை கேட்கிறதே ஒரு தனி கிக் தாண்டா

ராஜன் - டேய் பொறுமையா பேசு அவங்க காதுல விழுந்தது...உன்னை தொலைச்சிடுவாங்க

சந்திரன் - அவ தொலைச்சு நான் தொலைந்து மறுபடியும் அவகிட்ட கிடைக்கிறதுல தானடா காதல் இருக்கு

ராஜன் - அய்யய்யோ நீ சரி வர மாட்ட அங்க பாரு உன் பையன் வரான்

சந்திரன் - இவன் எதுக்குடா இங்க வரான் அம்மாஞ்சி பையன்...

பூமி - அப்பா பில் பே பண்ணிட்டேன் இந்தாங்க....உங்க மருமகள் உடைய... செயின்...உங்க கையாலேயே குடுங்க

இந்திரன் - என்ன சந்திரன் இந்த பையன்.... இவருதான் உங்க மகனா

சந்திரன் - NO NO...இவன் என்னோட தம்பி

பூமி - என்னப்பா உளர்றீங்க நான் உங்களுக்கு தம்பியா

சந்திரன் - ஆமா தம்பி நீங்க உங்க பொஞ்சாதிய அழைச்சுக்கிட்டு போய் கார்ல உட்காருங்க நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுறேன்

பூமிநாதன் - அப்பா விளையாடாதீங்க... யாரு யாருக்கு தம்பி... ஆமா யாரு இவங்க

ராஜன் - மாப்பிள்ளை இவங்கதான் இந்திரா from சிங்கப்பூர்

பூமி - ஓ....இந்திரா  அம்மா வா...வணக்கமா எப்படி இருக்கீங்க

இந்திரா - நல்லா இருக்கிறேன் பா... நீ எப்படி இருக்க... சந்திரனுடைய மகன் தானே நீ

பூமி - ஆமாமா..... குழலி இங்க வா....

பூங்குழலி - ம் சொல்லுங்க பூமி

பூமி - இவங்கதான் இந்திரா அம்மா நம்ப அப்பாவோட.....

பூங்குழலி - ஓ....புரியுது புரியுது...வணக்கம் அம்மா எப்படி இருக்கீங்க

இந்திரா - நல்லா இருக்கேன் dear.....என்ன சந்திரா மகன் மருமகள் எல்லாரும் ஷாப்பிங் வந்திங்களா

சந்திரன் - ஆமா...என் மருமகளுக்கு தாலி பிரிச்சு கோக்குறதுக்காக சங்கிலி வாங்குறதுக்கு வந்தோம்

இந்திரா - சந்தோஷம்.....ராஜன் உடைய மகளை தான் உங்க மகனுக்கு கட்ட போறீங்கன்னு ராஜன் சொன்னாரு....ரொம்ப சந்தோஷம் சந்திரன்.....இப்படி சம்பந்தம் வச்சிருக்கும் பொழுது நட்பும் அந்த இடத்துல அழியாமல் வளர்ந்துகிட்டு இருக்கு இல்ல...

சந்திரன் - பொண்ணு குடுத்து மாப்பிள்ள எடுத்தா தான் நட்பு வளரனும் எல்லாம் இல்ல....நட்பு வளரனும்னு நினைச்சா இப்பதான் facebook instagram ட்விட்டர் whatsapp எவ்வளவு இருக்கே அப்படியும் வளர்த்துக்கலாம்

பூங்குழலி - என்ன பூமி மாமா ஏன் சம்பந்தம் இல்லாம பேசுறாரு

பூமி - அவரு சம்பந்தப்படுத்திக்கிறதுக்கு தான் பேசுறாரு

பூங்குழலி - புரியலையே

பூமி - இந்திரா அம்மா கிட்ட whatsapp நம்பரை நாசுக்கா கேட்கிறார்

பூங்குழலி - ஓ இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா

ராஜன் - அம்மாடி உன் மாமனாரே லேசு பட்டவன்னு நினைக்காத...வெண்ணையே இல்லாம தண்ணியில நெய் எடுப்பான்....

இந்திரா - என்ன எல்லாரும் ஏதோ உங்களுக்குள்ள பேசிக்கிறீங்க

சந்திரன் - அது ஒன்னும் இல்ல இந்து....எல்லாம் பொறாமையில பொங்கி எழுகிறார்கள்.... அப்புறம் இந்திரா நீ எப்படி இருக்க....எப்ப நீ சிங்கப்பூர்ல இருந்து வந்த

இந்திரா - நான் வந்து ஒன் மந்த் ஆகப்போகுது....நெக்ஸ்ட் மன்த் ஊருக்கு கிளம்புறேன்... and நெக்ஸ்ட் வீக் ஆறுப்படை வீடு டூர் போறேன்...நம்மளுடைய காலேஜ் பிரண்ட்ஸ் ரெண்டு பேர் கூட வராங்க...ஏன்  ராஜன் வைட் டோன்ட் வி கோ ஆல் டு கெதர்

ராஜன் - என்ன என்ன சொல்ற

சந்திரன் - இவன் ஒரு மூணாம் கிளாஸ்... டேய் இந்திரா நம்ம எல்லாம் ஒன்னா சேர்ந்து டூருக்கு போனா நல்லா இருக்குமேன்னு சொல்றா

இந்திரா - yes yes அதேதான் உங்களுக்கு டைம் இருந்தா சொல்லுங்க நம்ம எல்லாரும் ஒன்னாவே போயிட்டு வரலாம்

சந்திரன் - டைம் எல்லாம் இல்லாம இல்ல கண்டிப்பா போலாம் நீ டேட்ட மட்டும் சொல்லு

இந்திரா - அது டேட் வந்து.....

சந்திரன் -இல்ல இல்ல நீ எனக்கு whatsapp-ல மெசேஜ் பண்ணிடு

இந்திரா - உன் நம்பர் என்கிட்ட இல்ல

சந்திரன் - இந்தா இது தான் என்னோட கார்டு சீக்கிரமா மெசேஜ் பண்ணனும்னு அவசரம் இல்ல.... நைட்டுக்குள்ள இன்பார்ம் பண்ணா போதும்

பூமி - பார்த்தியா குழலி அப்பா என்ன நேக்கா அவருடைய போன் நம்பரை இந்திரா அம்மாகிட்ட கொடுத்துட்டாருன்னு

இந்திரா - ஓகே சந்திரன்...உன்னை இங்க பார்த்ததில்லை எனக்கு ரொம்ப ரொம்ப ஹேப்பி....

சந்திரன் - எங்களுக்கும் தான்....

இந்திரா - ராஜன் சந்திரன் இரண்டு பேரும் என் கூட நம்ப பிரெண்ட்ஸ் டூர் வரீங்க நம்ம பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து நல்லா என்ஜாய் பண்றோம் போட்டோஸ் எல்லாம் எடுத்து பேஸ்புக்ல போட்டு ட்விட்டரில் போட்டு பயங்கர ட்ரெண்ட் ஆகுறோம் ஓகேவா

சந்திரன் - யூ டோன்ட் worry இந்திரா... நான் பாத்துக்குறேன்

இந்திரா - ரொம்ப சந்தோஷம்...

சந்திரன் - ஒரு நாள் வீட்டுக்கு வா இந்திரா.. அந்த CARD ல நம்ம வீட்டு ADRESS இருக்கு பாரு

இந்திரா - SURE.....தம்பி உங்க ரெண்டு பேருடைய ஜோடி பொருத்தம் பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு

பூமி - THANKS மா....குழலி அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ வா...அம்மா எங்களை BLESS பண்ணுங்க

இந்திரா - நல்லா இருங்கப்பா நல்லா இருங்க தமிழும் அமுதம் போல இணைந்து இருங்க

பூங்குழலி - நன்றி மா பூமி அம்மா... மாமா சொன்னது போல நீங்க ஒரு முறை நம்ம வீட்டுக்கு வரணும்

சந்திரன் - நான் இட்டுட்டு வரேன் மருமகளே கவலைப்படாத

பூமி - அப்பா என்ன நீங்க... குழலி அவங்களை வர சொன்னா

சந்திரன் - அததாண்டா நானும் சொல்றேன் இந்திராவை ஒரு நாளு நான் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வரேன்னு சொன்னேன்

இந்திரா - நான் எங்க இருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்

சந்திரன் - நீ என் மனசுல தான இருக்கிற இந்திரா...அதை தான் சொன்னேன்

இந்திரா - 🥰🥰

ராஜன் - டேய் டேய் போதும்டா ஏண்டா இவ்வளவு அலக்கு அலக்குற

சந்திரன் - சரி சரி உன் காது ரெண்டு பக்கத்துல இருந்து புகை வருது நீ கொஞ்சம் ஓரமா நில்லு இந்திரா நைட்டுக்குள்ள மெசேஜ் பண்ணி நம்ம எப்போ ஊருக்கு போகணும்ன்னு எல்லா டீடைல்ஸும் எனக்கு தெரியப்படுத்து,

இந்திரா - SURE சந்திரன் ஓகே ராஜன் அப்போ சீக்கிரம் பார்க்கலாம் பாய் சந்திரன்... இது பசங்களா நான் கிளம்புறேன்..

பூமி - ம் சரி மா....அப்பா நம்பளும் கிளம்பலாமா

சந்திரன் - கிளம்பணுமா

பூமி - அப்பா மானத்தை வாங்காதீங்க பா வாங்க ரொம்ப வழியுது

சந்திரன் - அப்படியா அவ்வளவு வெளியே தெரியிற மாதிரி என்னுடைய பெர்ஃபார்மன்ஸ் இருக்கு

பூங்குழலி - மாமா கொஞ்சம் அதிகமா இருக்குற மாதிரி தான் தெரியுது

சந்திரன் - ஓகே ஓகே சரி சரி கிளம்பலாம்.... நைட் போன் பண்ணு ஓகே இந்திரா

இந்திரா - பசங்கள பார்த்து அழச்சிட்டு போங்க...உங்க மருமக வேற கையில கட்டு கட்டிருக்க மாதிரி இருக்கே....

சந்திரன் - அது ஒரு சின்ன ஆக்சிடென்ட் தான்....நீ எதுக்கும் கவலைப்பட்டுக்காதே நான் பாத்துக்குறேன்...ஆனா நைட் போன் பண்ண மறந்துடாத...

என்று சந்திரன் சொன்னவர் தன் முன்னாள் காதலியை பார்த்த சந்தோஷத்தில் அகம் மகிழ்ந்து தன் பிள்ளை மருமகளை அழைத்துக் கொண்டு தன் நண்பனுடன்.. இவர்களது வீட்டிற்கு செல்ல...வழி எல்லாம் சந்திரனின் முகப்பொலிவை பார்த்து பூமியும் பூங்குழலையும் தனக்குள் சிரித்தபடி சந்திரனை ஒரண்டை இழுத்துக் கொண்டே வர

ராஜன் - டேய் நீ எப்படிடா பார்த்து பேசிய கொஞ்ச நேரத்துல உன்னுடைய போன் நம்பரை கொடுத்து...இந்திரா கூட டூர் போற அளவுக்கு பேசி வச்சுட்ட

சந்திரன் - பின்ன வெறும் வாயில வடை சுடுறதுக்கு நான் என்ன் நிலால ஒக்காந்துக்குற ஆயாவா.... சந்திரன்டா....சந்திரன் நான் நெனச்சா என்ன வேணா பண்ணுவான்

பூமி - அப்பா போதும்பா வண்டிய ரோட்ட பார்த்து ஓட்டுறீங்களா.... குழலி வேற tired ஆக இருக்கா சீக்கிரம் வீட்டுக்கு போங்க

சந்திரன் - உனக்கு பொறாமை டா பார்த்த பத்து நிமிஷத்துல என் ஆளுகிட்ட என் போன் நம்பரை கொடுத்துட்டேன்னு உனக்கு பொறாம

பூமி - எனது உங்க ஆளா... ஏன் பா இப்படி இருக்கீங்க ஏதோ காலேஜ் டைம்ல லவ் பண்ணிங்க அதுக்காக இப்பவும் அவங்க உங்க ஆளா

சந்திரன் - டேய் காலேஜ் டைமா இருக்கட்டும், ஸ்கூல் டைமா இருக்கட்டும் லவ்வு லவ்வு தான்...அதெல்லாம் உனக்கு எங்க தெரிய போகுது...முதல்ல நீ யாரையாவது லவ் பண்ணி இருக்கியா டா அம்மாஞ்சி பயலே

பூமி - அப்பா அந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க நானா பண்ண மாட்டேன்னு சொன்னேன்... என்னை யாரும் பண்ணல

சந்திரன் - சரி அப்பதான் பண்ணல... இப்போதான் கல்யாணம் பண்ணி இருக்கியே... இப்போ உன் பொண்டாட்டி உன்னை லவ் பண்றாளான்னு கேளு

பூமி - குழலி அப்பா என்னை ரொம்ப இன்சல்ட் படுத்தறாரு... நீ சொல்லு குழலி நீ என்னை லவ் பண்ற தானே

சந்திரன் - அதெல்லாம் இல்ல...நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் என் மருமக உன்ன கல்யாணம் பண்ணி இருக்கா

ராஜன் - டேய் என்னடா உளறுற..என் மகளுக்கு பூமி மாப்பிள்ளையை பிடிச்சதால தான் கல்யாணம் பண்ணா

சந்திரன் - அதெல்லாம் செல்லாது செல்லாது என் மருமகளுக்கு என்ன பிடிக்கும் அதனாலதான் அப்பா ஸ்தானத்துல என் மாமனார் சொல்லிட்டாருன்னு இந்த அம்மாஞ்ச்சி பயலே என் மருமக கட்டிக்கிட்டா...என் மருமகள் உடைய அழகுக்கும் அறிவுக்கும் திறமைக்கும் இவன் கொஞ்சம் கம்மிதான்

பூமி - அப்பா நீங்க என்ன ரொம்ப மொக்கை பண்றீங்க பாத்துக்கோங்க சொல்லிட்டேன்

சந்திரன் - டேய் அப்போ ஒத்துக்கடா நான் தான் இந்த கதையோட ஹீரோன்னு ஒத்துக்கோ

பூமி - அதெல்லாம் முடியாது குழலி நீ சொல்லு நீ என்னை காதலிக்கிறாயா இல்லையா

பூங்குழலி - பூமி என்ன இது உங்க ரெண்டு பேருடைய வாதத்துக்கு நான் தான் கிடைச்சனா போங்க அதெல்லாம் சொல்ல முடியாது

பூமி - என்ன குழலி நீ...இங்க நம்ப ரெண்டு அப்பாவும் நானும் தானே இருக்கோம்...சொல்லு நீ என்னை காதலிக்கிறாயா இல்லையா

சந்திரன் - டேய் அதான் நான் சொல்றேன்னே..அதெல்லாம் இல்ல என் மருமக நான் சொன்னதுனால தான் உன்னை கட்டிக்கிட்டா... நீ இப்போ வாய மூடிக்கிட்டு கம்முனு வரியா

என்று சந்திரன் சொல்ல...பூங்குழலி பூமியை பார்த்து சிரிக்க..பூமி பொய் கோவத்துடன் பூங்குழலி இடம் முகத்தை திருப்பிக் கொண்டு ரோட்டை பார்த்தபடி அமர்ந்திருக்க...சில நிமிடங்கள் கடந்த நிலையில் சந்திரன் விரட்டிய கார் பூமிநாதனின் வீட்டு வாசலை சென்றடைந்ததும்...

சந்திரன் - சரி சரி நகையை எடுத்துட்டு போயிட்டு சாமி மாடத்துல வச்சுட்டு...நீங்க போயிட்டு டிரஸ் எல்லாம் மாத்திட்டு வாங்க நானே நைட் டிபன் ரெடி பண்றேன்

பூங்குழலி - மாமா இன்னைக்கு நைட்டு நானே டிபன் ரெடி பண்றேன்

சந்திரன் - இல்லமா மாவு இருக்கு இட்லீ ஊத்தி வச்சா போதும் நான் பாத்துக்குறேன் நீ போய் டிரஸ் மாத்திட்டு வா

என்று சந்திரன் சொன்னதும் பூங்குழலி அவள் ரூமுக்கு செல்ல...அவளைத் தொடர்ந்து பூமிநாதனும் உள்ளே சென்றவன் கட்டிலில் அமர....பூங்குழலி கதவை தாழிட்டபடி உள்ளே வந்தவள் நைட்டியை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் சென்ற அடுத்த சில நொடிகளில் வெளியே வர....பூமி அதே கோவத்துடன் அமர்ந்திருக்க

பூங்குழலி - என்ன பூமி டிரஸ் மாத்தலையா

பூமி -

பூங்குழலி - பூமி உங்ககிட்ட தான் பேசுறேன்... டிரஸ் மாத்தல..

பூமி - நீ ஒன்னும் என்கிட்ட பேசத் தேவையில்ல

பூங்குழலி - என்னாச்சு ஏன் இவ்வளவு கோபம்

பூமி - பின்ன என்ன... கார்ல அப்பா நீ என்னை காதலிக்கிறியான்னு கேட்டாரு.. நீ வாய திறக்காமல் இருக்க...அப்ப நீ என்ன லவ் பண்ணலையா

பூங்குழலி - ஓ இதுதான் துரைக்கு கோபமோ...

பூமி - பின்ன.. நீ எப்படி அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இருக்கலாம்

பூங்குழலி - என்ன பதில் வேணும்

பூமி - நீ என்ன லவ் பண்றியா இல்லையா

பூங்குழலி - லவ் னா என்ன பூமி

பூமி - லவ்வனா காதல்

பூங்குழலி - காதல்னா

பூமி - காதல்னா அன்பு பாசம்

பூங்குழலி - அன்பு பாசம் இது எல்லாமே எல்லாருக்கும் எல்லார் மேலயும் இருக்குதானே ஆனா காதல்னா அதில்ல காதல்னா வேற பூமி

பூமி - வேற என்ன

பூங்குழலி - அது ஒரு விதமான உணர்வு..அது ஒரு விதமான பாதுகாப்பு.. இவங்கள நம்ப காதலிச்சு கல்யாணம் பண்ணா நம்மளுக்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் முதல் ஆளா இவங்க நமக்காக இருப்பாங்க... காலமெல்லாம் நம்மை கண்கலங்காம வச்சுப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை...அது தானே காதல்

பூமி - ம் இருக்கலாம்...ஏன் உனக்கு என் மேல அந்த அபிப்பிராயம் எல்லாம் இல்லையா

பூங்குழலி - உண்மைய சொல்லனும்னா

பூமி - சொல்லு

பூங்குழலி - முன்னாடி எல்லாம் இல்ல தான்... ஆனா இப்போ இப்போ எனக்கே தெரியாம இந்த பூமிநாதனுடைய அன்புக்கு என்னை நான் தொலைச்சிகிட்டு வருவது உண்மைதான்

பூமி - என்ன சொன்ன மறுபடியும் சொல்லு

பூங்குழலி - போங்க பூமி நான் வெளிய போயிட்டு மாமாக்கு சாப்பாடு செய்ய ஹெல்ப் பண்றேன்

பூமி - ஏய் நில்லு நில்லு இப்ப என்னமோ சொன்னியே

பூமி சட்டென்று பூங்குழலியின் கரங்களைப் பற்ற...வெட்கத்தில் சினிங்கியவள்

பூங்குழலி - பூமி கைய விடுங்க..என்ன இது வெளிய மாமா அப்பா எல்லாம் இருக்காங்க

பூமி - இப்ப நான் என்ன மேடம் பண்ண...நீங்க ஏதோ சொன்னிங்க..அது என்னன்னு கேட்க கை பிடிச்சேன்..ஏன் நான் உன் கை பிடிக்க கூடாதா

பூங்குழலி - யார் சொன்னது... நீங்க பிடிக்கலாம்..

பூமி - அப்ப ஏன் கையை விட சொல்ற

பூங்குழலி - ஆனா வெளியே அப்பா எல்லாம் இருக்காங்க இல்ல

பூமி - அவங்க வெளிய தான இருக்காங்க... சரி இப்ப எதோ சொன்னியே மறுபடியும் சொல்லு

பூங்குழலி - என்ன சொல்லுறது

பூமி - என்ன பத்தி என்னமோ சொன்னியே

பூங்குழலி - உங்கள பத்தி சொல்ல என்ன இருக்கு....

பூமி - என்னை காதலிக்கிறத பத்தி என்னமோ சொன்னியே

பூங்குழலி - இப்போ உங்களுக்கு என்ன வேணும்...

பூமி - அப்பா என்னை கார்ல வரும்போது நான் ஒரு அமாஞ்சி பையன் யாரையும் காதலிச்சது இல்லைன்னு எவ்வளவு டீஸ் பண்ணாரு.. நீயேன் அவர் கிட்ட என்னை நீ காதலிக்கிறேனு சொல்லல

பூங்குழலி - நான் எப்படி மாமா கிட்ட அதெல்லாம் சொல்ல முடியும்

பூமி - சரி அப்பா கிட்ட சொல்ல வேணாம் இப்போ என்கிட்ட சொல்லு

பூங்குழலி - என்ன சொல்லணும்

பூமி - நீ என்னை காதலிக்கிறேனு சொல்லு... இல்லையா காதலிக்கலைன்னு சொல்லு... ரெண்டுல ஏதாவது ஒன்னு சொல்லு..

பூங்குழலி - அதெல்லாம் சொல்ல முடியாது

பூமி - இப்ப நீ சொல்லல... நீ இந்த ரூம்ல இருந்து நீ வெளியே போக முடியாது

பூங்குழலி - பூமி கலாட்டா பண்ணாதீங்க..என்னை விடுங்க pls

பூமி - ஹ்ம் ஹ்ம் உன் கைய விடுங்க மாட்டேன்

பூங்குழலி - வேணாம் பூமி எனக்கு கோபம் வரும் கைய விடுங்க

பூமி - ஓ உனக்கு நான் கை பிடிச்சா கோவம் வருமா சரி கோபப்படு பார்ப்போம்

பூங்குழலி - இப்ப என்ன வேணும் உங்களுக்கு

பூமி - அதான் சொன்னேனே என்னை காதலிக்கிறேன் என்று சொல்லு கைய விடுறேன்

பூங்குழலி - என்ன பூமி இது கல்யாணமான பிறகு இதெல்லாம் கேட்டா என்னை வம்பு பண்ணுவீங்க..

பூமி - குழலி கல்யாணத்துக்கும் காதலுக்கும் சம்பந்தமில்லை... கல்யாணம் எல்லாம் கட்டாயத்தின் பேரில் கூட நடக்க வாய்ப்பு இருக்கு...ஆனா காதல் கட்டாயப்படுத்தி வரக்கூடாது இல்ல... அதுக்கு தான் கேட்டேன்..

பூங்குழலி - சரி இப்ப நான் உங்களை காதலிக்கல என்று சொன்னால் என்ன பண்ணுவீங்க...

பூமி பூங்குழலியின் கரங்களை தன் கரத்தோடு இணைத்து பிடித்து வைத்திருந்தவன் அவள் கைகளை விடுவிக்க....பூங்குழலி குழப்பத்துடன் பூமியை பார்த்தபடி நின்று இருக்க

பூமி - ஒருவேளை நீ என்னை காதலிக்காமல்... அதாவது நேசிக்காமல்.. என்னை பிடிக்காமல் கல்யாணம் பண்ணி இருக்கேன்னு தெரிஞ்சா...அடுத்த நொடி உன் கண்ணெதிரில் நான் இருக்கவே மாட்டேன் குழலி...

பூங்குழலி - பூமி என்ன நீங்க நான் விளையாட்டா தானே கேட்டேன் அதுக்கு ஏன் சட்டென்று ஓவர் flow ஆகிட்டீங்க

பூமி - இல்ல குழலி நான் இயல்பா தான் சொல்றேன்...விருப்பம் இல்லாத பெண்ணை கல்யாணம் பண்றது எல்லாம் எனக்கு ஒத்து வராது.... ஏன் நம்ம முதல் இரவு கூட அன்னைக்கு நடக்கலைனு நான் கவலை படவே இல்ல... ஏன் தெரியுமா

பூங்குழலி -

பூமி - முதல் இரவு என்பது ஒரு கட்டாயத்தின் பேரில் நடக்க வேண்டும் என்று இவர்கள் சொல்வதை என்னால் ஒத்துக் கொள்ளவே முடியாது..... என்னை பொறுத்தவரை திருமணமே முடிந்தாலும் இரண்டு உள்ளமும் இரண்டு உடலும் ஒன்றாக சேர்வது இயல்பாக நடக்க வேண்டிய விஷயம்..

பூங்குழலி -

பூமி - உனக்கு என்னை முழுசா பிடிக்கும் பட்சத்தில் தான் நமக்குள்ள எல்லாமே நடக்கும்

பூங்குழலி - சரி சரி இப்ப எதுக்கு அந்த கதை எல்லாம்...நீங்க போயி dress மாத்திட்டு வாங்க சாப்பிடலாம்....

பூமி - ம்.... ஆங் அப்புறம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு நினைச்சேன்

பூங்குழலி - என்ன பூமி

பூமி - அப்பாவை எப்படியாவது நம்ப இந்திரா அம்மா கூட டூருக்கு அனுப்பி வைக்கணும்

பூங்குழலி - என்ன பூமி சொல்றீங்க

பூமி - ஆமா அப்பாவுக்கு இந்திரா மா கூட பேசி பழகணும்னு ரொம்ப வருஷ ஆச... இந்த முறை தவறவிட்டால் அடுத்து இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது..அதனால ராஜன் அப்பாவையும் என்னோட அப்பாவையும் நம்ப இந்திரா அம்மா கூட வெளியூருக்கு அனுப்பி வைக்கலாம்

பூமி - கண்டிப்பா....நம்ப மாமாவோட சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்...சரி எப்படியாவது அவங்கள நம்ப வெளியூருக்கு அனுப்பனும்....

பூங்குழலி - விடுங்க என்கிட்ட சொல்லிட்டீங்க இல்ல...நான் பாத்துக்குறேன்..நீங்க போயி பிரெஷ் ஆகிட்டு வாங்க

பூமி - ஓகே with in two மினிட்ஸ்

என்று சொன்ன பூமிநாதன் குளியல் அறைக்குள் செல்ல அதே சமயம் பூமிநாதனின் செல்போன்மணி ஒலிக்க

பூமிநாதன் - குழலி போன் அடிக்குது பார் யாருன்னு பாரு

பூங்குழலி - உங்க போன்ல நான் எப்படி

பூமி - யாருன்னு கேளு மா....ஏதாவது முக்கியமான காலா இருக்க போகுது

என்று பூமி சொன்னதும்..பூங்குழலி அவன் செல்போனை பார்க்க...அதில் லேண்ட்லைன் நம்பர் தெரிய...பூங்குழலி அந்த அழைப்பிற்கு உயர்தர

பூங்குழலி - ஹலோ யார் பேசுறது.... ஹலோ யார் பேசுறீங்க....

என்று பூங்குழலி கேட்டதும்.... மறுமுனையில்
இருந்து ஒரு ஆணின் குரல்

பூமிநாதன் இல்லையா....

என்ற  குரல் கேட்க.....

பூங்குழலி - அவர் ஃப்ரெஷ் ஆகிட்டு இருக்காரு ...ஒரு 10 மினிட்ஸ் கழிச்சு போன் பண்றீங்களா

என்று அவள் சொன்னதும்...மறுமுனையில் இருப்பவர் தயங்கியபடி

நீங்க யாரு பேசுறது...

என்று அவர் கேட்ட அடுத்த நொடி பூங்குழலி உரிமையோடு..

பூங்குழலி - நான் மிஸஸ் பூமிநாதன் பேசுறேன்...

என்று அவள் சொன்னதும் மறுமுனையில் இருந்து அமைதி மட்டுமே இவளுக்கு பதிலாக கிடைக்க...

பூங்குழலி - ஆமா நீங்க யாரு பேசுறீங்க

என்று இவள் கேள்வியை தொடுக்க... மறுமுனையில் இருந்து வந்த அழைப்பிற்குச் சொந்தக்காரனானவன்

ஓ... குரல் கூட மறந்துட்டீங்களா...நான் SJ பேசுறேன்....

என்று சொன்ன தருணம்... பூமிநாதன் குளியல் அறைக்குள் இருந்து வெளியே வந்தவன்

பூமிநாதன் - என்ன குழலி யார் போன்ல....

பூங்குழலி -🙄

பூமி - குழலி உன்ன தான்... யாரு போன்ல

பூங்குழலி - அது அது வந்து.. SJசூர்யா தான்

பூமிநாதன் - ஓ.... குடு..குடு போன

என்று பூமி அவசரத்தோடு செல்போனை வாங்கியவன் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றவன் எஸ் ஜே சூர்யாவிடம் பத்து நிமிட பேச்சுவார்த்தையை முடித்த படி மீண்டும் அறைக்குள் நுழைய..

பூங்குழலி - என்ன பூமி ஏதாவது பிரச்சனையா

என்று பூங்குழலி கேட்டதும் தன் செல்போனை சார்ஜில் போட்டபடி பூமிநாதன் சிரித்துக்கொண்டே அவள் தோள்களை பற்றியவன்

பூமி - பிரச்சனையா... ஒரு பிரச்சனையும் இல்ல குழலி...நம்ப இடம் விஷயமா.. கட்டப்பஞ்சாயத்து பண்ண ஆட்களை கூப்பிட்டு பேச வேண்டிய விதத்துல SJ இந்த விவகாரத்தை சுமூகமா முடிச்சுட்டானாம்....அதை சொல்லுறதுக்கு தான் போன் பண்ணான்....நல்ல வேலை நம்ப சரியான நேரத்துல இவன் கிட்ட இந்த கேஸ ஒப்படைச்சோம்.....இல்லன்னா பெரிய பிரச்சனை ஆகியிருக்கும் குழலி....

பூங்குழலி - 🥰

பூமி - குழலி ஒருநாள் நம்ம ரெண்டு பேரும் போயி அவனை நேரில் பார்த்து நன்றி சொல்லணும்....

பூங்குழலி - நம்ப ரெண்டு பேரா.....நேரிலேயே....வேணாம்

பூமி - என்ன குழலி இது உனக்கும் ஒருமுறை ஹாஸ்பிடல்ல நடந்த பிரச்சனையில அவன் ஹெல்ப் பண்ணி இருக்கான் தான அதனால கண்டிப்பா நம்ம ரெண்டு பேரும் நேர்ல போயி அவன பார்த்துட்டு... complex பூமி பூஜை போட அவன இன்வைட் பண்ணலாம் ஓகேவா

பூங்குழலி - சரி அத அப்ப பார்க்கலாம் நீங்க போய் சாப்பிடுங்க

பூமி - ஏய் நீயும் வா சாப்பிடலாம்...

பூங்குழலி - பூமி நானே கேட்கணும்னு நினைச்சேன்...நீங்க காலையில எஸ்.ஜே வை போயி பார்த்தீங்களே அப்போ அவரு எதுவும் சொல்லலையா

பூமி - என்ன எதைப் பத்தி சொல்லலையான்னு கேக்குற

பூங்குழலி - நான் தான் உங்களை கல்யாணம் பண்ணி இருக்கேன்னு அவருக்கு தெரியுமா

பூமி - அதை ஏன் கேக்குற அவன் இந்த கேஸ எடுக்கும் பொழுதே அவன் நம்மை அவன் குடும்பமா நினைச்சு தான் பேசினான்..அதுவும் இல்லாம உன் மேல அவனுக்கு ஒரு தனி மரியாதை இருக்கு குழலி..... அவன் ரொம்ப நல்ல கேரக்டர்....நான் கூட இந்த கேஸ் ரொம்ப தலைவலியை உண்டாக்கும் நினைச்சேன்... இப்போ பார் காலையில தான் சொல்லிட்டு வந்தேன்...நைட்டுக்குள்ள எந்த ஒரு பிரச்சனையும் இல்லைன்னு தீர்ப்பு சொல்ற விதத்துல சொல்லிட்டான்...இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு

பூங்குழலி - ஏன் பூமி உங்களுக்கு SJ எப்படி பழக்கம்

பூமி - நாங்க ரெண்டு பேரு ஸ்கூல் ஒண்ணா படிச்சிருக்கோம்... உன்கிட்ட கூட ஒரு தடவை சொன்னேனே...எனக்கும் ஒரு பிரெண்டு சூர்யா என்று தெரியும் என்று...

பூங்குழலி -

பூமி - ஏய் குழலி....அன்னைக்கு கூட உனக்கு சூரியான்ற பேரில் ஒரு போன் வந்ததுச்சே அது இவன் தானே

பூங்குழலி - என்னைக்கு

பூமி - உனக்கு நினைவில் போல சரி சரி வா சாப்பிட போலாம்

பூங்குழலி - பூமி ஒரு நிமிஷம்

பூமி - என்ன குழலி

பூங்குழலி - வேற எதுவும் அவர் உங்க கிட்ட சொல்லலையா

பூமி - வேற என்ன

பூங்குழலி - அவரோட ஃபேமிலிய பத்தி

பூமி - இல்லையே அதெல்லாம் சொல்லல...ஆனா ஒரு தடவை நாங்க ரெண்டு பேரும் கோவில்ல மீட் பண்ணினோம்

பூங்குழலி - கோவில்ல்லையா மீட் பண்ணீங்களா எப்போ

பூமி - உனக்கு நினைவில்ல...நம்ம ரெண்டு பேரும் உங்க வீட்டுல சாப்பிடும்போது உன் மேல ரசம் ஊத்தி நான் துடைக்க வந்து நீ என்னை hurt பண்ற மாதிரி பேசிட்டேன்னு உன்கிட்ட நான் கோச்சுக்கிட்டு சக்கர விநாயகர் கோயிலுக்கு போயிருந்தேன் பாரு அப்போ எஸ் ஜே சூர்யாவும் அவனுடைய காதலிக்காக அந்த கோவிலுக்கு வந்திருந்தான்

பூங்குழலி - என்ன பூமி சொல்றீங்க காதலா எஸ் ஜே சூர்யா காதலிக்கிறாரா

பூமி - என்னம்மா காதலிக்கிறது அவ்ளோ பெரிய கொலை குத்தமா...கண்ணு இரண்டையும் உருட்டிக்கிட்டு கேள்வி கேக்குற...ஏன் காதலிக்க கூடாதா...

பூங்குழலி - இல்ல இல்ல எனக்கு தெரியலையேன்னு கேட்டேன்

பூமி - நமக்கு தெரியலன்னா அந்த விஷயம் இல்லன்னு ஆயிடுமா....SJ சூர்யா தீவிர காதல் ரசிகன்.....

பூங்குழலி - அவரு யார காதலிக்கிறார்ன்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமா

பூமி - அவனுடைய மாமன் மகளை தான் அவன் சின்ன வயசுல இருந்து காதலிக்கிறானா...

என்று பூமிநாதன் சொன்னதும் பூங்குழலியின் விழிகள் அகலமாக விரிய

பூங்குழலி - என்ன என்ன சொல்றீங்க பூமி... அவங்க மாமா மகளையா...

பூமி - ஆமா அவன் அப்படித்தான் சொன்னான்.... அவனுடைய மாமா மகளை விவரம் தெரிஞ்சதுல இருந்து காதலிக்கிறானா....என்ன ஒன்னு மடையன் இன்ன வரைக்கும் அவன் காதல அந்த பொண்ணு கிட்ட சொல்லவே இல்லையா....இன்னைக்கு மதியம் கூட கேட்டேன் ஏன்டா உன் காதலை சொல்லிவிட்டாயான்னு... அதுக்கு அவன் இதுக்கு மேல சொல்ல வாய்ப்பு கிடைக்காது போல அதனால நான் என் காதலை சொல்ற நிலைமையில் இல்லைன்னு சொன்னான்... அதுக்கு நான் தான் அப்படி எல்லாம் மனச விட்டுறாத...உனக்குன்னு எழுதி வச்ச உயிர் உன்னையே வந்து சேரும் என்று ஆறுதல் சொனனேன்....

என பூமிநாதன் சொல்ல.... பூங்குழலியின் முகம் முழுதும் வினாக்கள் மட்டுமே நிறைந்திருக்க காரணம் என்ன..??

Continue Reading

You'll Also Like

28.2K 921 45
hi guys idhu enoda new story.... jaya paraksh than namma hero... awana JP nu solwam friends and awanoda amma elarum apdi than koopduwanga awan amm...
6.3K 472 30
ÜÑÇÕÑDÏTĪØÑÁL LØVÊ STØRY 😍
62.2K 2.7K 21
5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன...