🔱பூமியின் பூங்குழலி🔱

Da Sakthriyan

8.6K 1.4K 1.1K

இயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕 Altro

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8
பாகம் 9
பாகம் 10
பாகம் 11
பாகம் 12
பாகம் 13
பாகம் 14
பாகம் 15
பாகம் 16
பாகம் 17
பாகம் 18
பாகம் 19
பாகம் 20
பாகம் 21
பாகம் 22
பாகம் 23
பாகம் 24
பாகம் 25
பாகம் 26
பாகம் 28
பாகம் 29
பாகம் 30
பாகம் 31
பாகம் 32
பாகம் 33
பாகம் 34
பாகம் 35
பாகம் 36
பாகம் 37
பாகம் 38
பாகம் 39
பாகம் 40
பாகம் 41
பாகம் 42
பாகம் 43
பாகம் 44
பாகம் 45
P❤️R❤️O♥️M❤️O
பாகம் 46
பாகம் 47
பாகம் 48
பாகம் 49
பாகம் 50

பாகம் 27

178 31 11
Da Sakthriyan

❤️பூமியின்🔱பூங்குழலி❤️

❤️பாகம் 2️⃣7️⃣

பூங்குழலி - அட வாங்க பூமி இரண்டு பேரும் சேர்ந்தே போகலாம்

என்று சொன்னபடி பூமியும் பூங்குழலியும் காரை நோக்கி செல்லும் தருணத்தில் வேகமாக வந்த ஒரு பைக் பூமிநாதனை இடிக்க..........பூமிநாதன் பத்தடி தள்ளி போய் அம்மா என்று கத்தியபடி கீழே விழுந்த அதே தருணம்.....மீண்டும் இதே குரலில் பூங்குழலியும் அப்பா என்று கத்தியபடி கீழே  விழுந்த சமயம் அருகில் இருந்த இன்னொருவரின் இரு சக்கர வாகனம் பூங்குழலியின் வலது காலில் ஏறியப்படி முன் சென்றதை பார்த்ததும் பூமிநாதன் மேலும் பதற....பூங்குழலி அதே இடத்தில் வலி தாங்க முடியாமல் துடிதுடித்து இருவரும் ஒரே சமயத்தில் கீழே விழுந்த காட்சியை பார்த்த வாசலில் நின்றிருந்த ஆட்டோக்காரர் ஜோதிமணி வேகமாக இவர்கள் அருகில் வர..

ஜோதிமணி - ஐயோ தம்பி என்னப்பா... அட படுபாவிங்களா பைக்காரன் கண்ணு மண்ணு தெரியாம வண்டிய ஓட்டுறானே ஐயோ தம்பி எழுந்திருப்பா உனக்கு என்ன ஆச்சு

பூமி - குழலி...

பூங்குழலி - பூமி உங்களுக்கு ஒன்னும் ஆகலையே

பூமி - எனக்கு ஒன்னுமில்ல குழலி... ஐயோ ரத்தம்....

பூங்குழலி - ஆ....வலிக்குது... கால் வலி உயிர் போகுது..... ஐயோ பூமி கால் பயங்கரமா வலிக்குது...என்னால அசைக்க முடியல

பூமி - குழலி..... அண்ணா அண்ணா கொஞ்சம் கைப்பிடிங்க

என்று பூமி பதற...... சுற்றி இருக்கும் அனைவரும் இவர்களை கை தாங்கலாக தரையில் இருந்து மேலே தூக்க....

பூமி -  இரு குழலி.. நான் கார் எடுக்குறேன் ... உடனே ஹாஸ்பிடலுக்கு போகலாம்.....

ஜோதி - தம்பி தம்பி நீ கார் எல்லாம் எடுக்க வேண்டாம்.... இருப்பா நம்ப ஆட்டோல போயிடலாம்.

பூங்குழலி - பூமி என்னால சுத்தமாக முடியல கால நகர்த்தவே முடியல

ஜோதி - இருமா இருமா நான் ஆட்டோவை இங்கே எடுத்துக்கிட்டு வரேன்

என்று ஆட்டோக்காரர் ஜோதிமணி சொன்னவர் ஆட்டோவை இவர்கள் அருகில் எடுத்து வர.....பூமியும் பூங்குழலியும் ஆட்டோக்காரரே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல....பூங்குழலி வழியெல்லாம் வலியால் துடித்தபடி இருந்தவளை பார்த்தவன்

பூமிநாதன் - குழலி கவலை படாத...
இதோ doctor கிட்ட போயிடலாம்

பூங்குழலி - பூமி உங்களுக்கு பெருசா அடி ஏதும் இல்லையே

பூமி - இல்ல குழலி....நீ அழாத...எனக்கு கஷ்டமா இருக்கு...

என்று சொன்ன பூமி கவலைப்பட்ட நிலையில் தன் தந்தையிடம் கைபேசி வாயிலாக இங்கே நடந்த சம்பவத்தை தெரிவிக்க...

சந்திரன் - ஹலோ என்னடா சொல்ற...என் மருமகளுக்கு ஒன்னும் ஆகலையே...

பூமி - அப்பா... அப்பா..

சந்திரன் - டேய் தெளிவா சொல்லுடா....என்னடா ஆச்சு....

பூமி - அப்பா.. பூங்குழியும் நானும் கோவிலில் இருந்து வெளியே வரும் பொழுது எங்கிருந்தோ ஒரு பைக் வந்து எங்களை இடிச்சிடுச்சு பா....என்னை இடிச்ச வேகத்துல அவன் ரிவர்ஸ் எடுக்கும்போது பூங்குழலி கீழே விழுந்து.... இன்னொரு பைக் அவ கால்ல ஏறி எடுத்துப்பா...

சந்திரன் - இப்போ என் மருமக எங்கடா

பூமி - இப்போ நாங்க ஹாஸ்பிடலுக்கு போறோம் பா.....நீங்க ராஜன் அப்பா கிட்ட எந்த விஷயத்தையும் சொல்லாம நேரா ஹாஸ்பிடலுக்கு வாங்க

சந்திரன் - டேய் எந்த ஹாஸ்பிடல் டா

பூமி - அப்பா நான் போனதும் லொகேஷன் ஷேர் பண்றேன்..

என்று சொன்ன பூமி கைபேசி அழைப்பை துண்டிக்க...சந்திரன் பதட்டமான நிலையில் தன் நண்பன் ராஜனின் தலையில் அடிபட்டதால் அவருக்கு எந்த விஷயமும் தெரியக்கூடாது என்று நினைத்தவர் வேகமாக வெளியே வந்த சில நிமிடங்களில் பூமிநாதன் தாங்கள் சென்ற மருத்துவமனையின் முகவரியை whatsapp மூலம் ஷேர் செய்ய அடுத்த சில நிமிடங்களில் சந்திரன் இவர்கள் இருக்கும் மருத்துவமனையை சென்றடைய, தலையில் சிறு காயத்திற்கு பேண்டேஜ் போட்ட நிலையில்... சிகிச்சை அறைக்கு வெளியே அமர்ந்திருந்தவனை பார்த்து பதறியபடி சந்திரன் அருகில் சென்றவர்...

சந்திரன் - டேய் என்னடா என் மருமகளுக்கு என்ன ஆச்சு...என்ன பூமி இது உன் தலையில.... ஐயோ என்னடா இதெல்லாம்

பூமி - அப்பா எனக்கும் ஒன்னும் புரியல அப்பா.. அந்த பைக் எங்க இருந்து வந்ததுன்னே தெரியலப்பா..ஆனா அந்த பைக்காரன் என்னை தான் இடிச்சான்... பூங்குழலி பின்னாடி இருந்தத அவன் பாக்கல..... வண்டி ரிவர்ஸ் எடுக்கும்போது குழலி கீழே விழுந்துட்டா....அது தெரியாம அந்த கோவிலுக்கு வந்த ஒருத்தவரு அவர் வண்டிய ரிவர்ஸ்ல எடுத்து குழலி உடைய காலில் வண்டி ஏறிடுதுப்பா.....அவ வலியால துடிதுடிச்சிட்டாப்பா...

பூங்குழலி - டேய் என்னடா யாரு இதெல்லாம் செஞ்சாங்க...எவன்டா அவன் என் மருமக மேல வண்டி எத்தனது...

பூமி - தெரியலப்பா அதெல்லாம் எனக்கு எதையும் யோசிக்க தோணல...பூங்குழலி ரொம்ப வலியால துடிச்சிட்டா அப்பா..

சந்திரன் - இப்ப என் மருமக எங்கடா

பூமி - ஏதோ காலில் தசை திரும்பி இருக்கு அது இதுன்னு சொல்றாங்க.. கால்ல லைட்டா ரத்தம் வேற வந்துச்சு பா.. எனக்கு பயமா இருக்கு அவளுக்கு ஒன்னும் ஆகாது இல்ல

சந்திரன் - பதறாதடா என் மருமகளுக்கு ஒன்னும் ஆகாது......

பூமி - 😔

சந்திரன் - என்னடா இது ஒன்னு போனா ஒன்னு நடந்துகிட்டு இருக்கு

ஜோதிமணி - ஐயா பயப்படாதீங்க தலைக்கு வருவது தலைப்பாகையோடு போயிடுதுன்னு நினைச்சுக்கோங்க

சந்திரன் - பூமி இவரு

பூமி - இவர்தான் ஜோதிமணி.....ஆட்டோக்காரர் அண்ணா...அன்னைக்கு பூங்குழலி வீட்டுல எனக்கும் அவளுக்கும் ஒரு சின்ன மனசு தாபம் வந்துச்சுல்ல அப்ப நான் கூட சர்க்கரை விநாயகர் கோவிலுக்கு போனேனே அங்க பழக்கம்..இவர்தான் எங்களை ஆக்சிடென்ட் ஆனதும் ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு வந்தாரு

சந்திரன் இரு கரங்களைக் கூப்பியபடி ஆட்டோக்காரருக்கு நன்றி தெரிவித்தவர்

சந்திரன் - உனக்கு ரொம்ப நன்றிப்பா....சரியான நேரத்தில் என் மகனையும் மருமகளையும் ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு வந்துட்ட

ஜோதிமணி - ஐயோ என்ன சார் நீங்க... பெரியவங்க நீங்க.... நீங்க போய் நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு இதுல என்ன சார் இருக்கு எங்கள மாதிரி ஆட்டோகாரங்களும் ஒரு வகையில ஆம்புலன்ஸ் மாதிரி தான் சார்.. கண்டிப்பா வழியில விபத்து நடந்தா நாங்களும் உதவி செய்வோம்

சந்திரன் - ரொம்ப நன்றிப்பா இந்த உதவியை நாங்க மறக்கவே மாட்டோம்...

ஜோதி - சரி சார் தம்பி ரொம்ப பதட்டமா இருக்காரு.....நான் போய் தம்பிக்கு குடிக்க ஏதாவது வாங்கிட்டு வந்துடறேன்

என்று சொன்ன ஜோதிமணி அந்த இடத்தை விட்டு நகர...

சந்திரன் - டேய் என் மருமகளுக்கு பயப்பட ஒன்றும் இல்லல்ல

பூமி - ஒன்னும் தெரியல பா..... சரி நீங்க இங்க வந்தது ராஜன அப்பாவுக்கு தெரியாது இல்ல...

சந்திரன் - இல்லடா தெரியாது அவனுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் அவன் தலையில் ஏற்கனவே அடிபட்டு இருக்கு சும்மாவே அவன் பேய் ஆட்டம் ஆடுவான் அதனால தான் சொல்லல

பூமி - நல்லதா போச்சு

நர்ஸ் - மிஸ்டர் பூமிநாதன் உங்கள டாக்டர் கூப்பிடுறாரு

பூமி - அப்பா வாங்க

என்று சொன்ன பூமிநாதன்... தன் தந்தை சந்திரனை அழைத்துக் கொண்டு மருத்துவரின் அறைக்கு செல்ல...

பூமி - டாக்டர் என் குழலிக்கு இப்போ எப்படி இருக்கு

DR - பயப்பட ஒன்னும் இல்ல....கால் தசை திரும்பி இருக்கு...  பிராக்சர் ஆகியிருக்கு....ஒரு வாரத்துக்கு காலை அசைக்காம பாத்துக்கோங்க...அப்புறம் கைலயும் அடிபட்டு இருக்கு...நான் கட்டு போட்டு இருக்கேன்....கூடிய சீக்கிரம் சரியாயிடும்

சந்திரன் - டாக்டர் மத்தபடி என் மருமகளுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே

DR - இல்ல இல்ல ஒரு வாரத்தில் சரியாகிவிடும் அவங்க கொஞ்சம் பயந்துருக்காங்க கேர் எடுத்து பாத்துக்கோங்க.. நர்ஸ் அவர்களுடைய பிரஸ்க்ரிப்ஷனும் இதோ இவருடைய பிரிஸ்கிரிப்ஷனும் இவங்க கிட்ட கொடுத்துடுங்க.... ஒன் வீக் கழித்து வந்து ஒரு செக்கப் பண்ணிக்கோங்க.. நம்ம கட்ட change பண்ணிப்போம்

என்று சொன்னபடி டாக்டர் வெளியே செல்ல

நர்ஸ் - நீங்க உங்க வைஃப் கூட அந்த ரூம்ல இருங்க....நான் பிரஸ்கிரிப்ஷன் ரெடி பண்ணிட்டு எடுத்துட்டு வரேன்

என்று நர்ஸ் சொன்னதும் சந்திரனும் பூமிநாதனும் பூங்குழலியை பார்ப்பதற்காக வேகமாக செல்ல...பூங்குழலி வலது கால் வலது கையில் கட்டு போட்டபடி சிகிச்சை அறையில் படுத்து இருக்க..அவளை அந்த நிலைமையில் கண்டதும் சந்திரனின் கண்கள் தானாக கலங்கியபடி

சந்திரன் - அம்மாடி பூங்குழலி என்னமா என்னடா இது

பூங்குழலி - மாமா மாமா....பூமியை யாரோ..... யாரோ bike ல....எனக்கு ஒன்னும் புரியல மாமா....

சந்திரன் - சரி சரி பதட்டப்படாத மா

பூமி - ஒன்னும் இல்ல குழலி... பயப்படாத குழலி...டாக்டர் ஒன்னும் பிரச்சனை இல்லன்னு சொல்லிட்டாங்க...ப்ளீஸ் பயப்படாதே...

பூங்குழலி - இல்ல பூமி எனக்கு பயமா இருக்கு.....யார் அது எதுக்காக அந்த மாதிரி பண்ணாங்க...

பூமி - தெரியல குழலி... முதல்ல நீ அழாத......

ஜோதிமணி - உள்ள வரலாங்களா....

பூமி - வாங்க அண்ண...உள்ள வாங்க

ஜோதி - இந்தாப்பா தண்ணி... தங்கச்சி மா இப்போ வலி எப்படிப்பா இருக்கு

பூங்குழலி - இல்ல கொஞ்சம் வலி இருக்குது......

சந்திரன் - ஏம்பா தம்பி அந்த பைக் காரனை நீங்க பாத்தீங்களா... யாருப்பா அது

பூங்குழலி - 🙄

ஜோதி - சார் அவன் தலையில ஹெல்மெட் போட்டிருந்தான் சார்.... எனக்கு தெரிஞ்சு இந்த செயின் எல்லாம் அறுக்குறானுங்களே அந்த கூட்டத்தை சேர்ந்தவனுங்கன்னு நினைக்கிறேன்.....தங்கச்சிமா வேற புதுசா கல்யாணம் ஆனவங்க..... இவங்க கழுத்துல நகை போட்டு இருக்காங்க இல்ல..அதை பறிக்க வந்த எவனாவது ஒருத்தன் தான் இருக்கும்...

சந்திரன் - என்னப்பா இது இவ்வளவு அநியாயம் பண்றாங்களே ஒரு அஞ்சு ஆறு பவுன் நகைக்காக உயிரோட விளையாடுவாங்களா

பூமி - ஏன் அப்பா நம்ப தேவி பாட்டி உடைய கழுத்துல இருக்குற செயினை பறிக்க போய் கூட இந்த மாதிரி தான் பா நடந்துச்சு....யாருதான் இதெல்லாம் செய்றாங்க..

ஜோதி - தெரியல தம்பி

பூமி - அப்போ கண்டிப்பா இது நகைக்காக நடந்த சம்பவமா தான் இருக்கும்...அப்பா எதுக்கும் நம்ப போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் பா..

சந்திரன் - என்னடா சொல்ற போலீஸ் கம்ப்ளைன்டா

பூமி - ஆமாப்பா எனக்கு தெரிஞ்ச என் பிரண்டு வக்கீல் தான்... நான் அவனை வச்சு கண்டிப்பா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்க போறேன்... இந்த மாதிரி ஆளுங்களெல்லாம் சும்மா விடக்கூடாது....ஏதோ நாங்களா கண்டு சரியா போச்சு...இதே வயித்துல பிள்ளை இருக்கிறவங்க வயசானவங்கன்னு இவனுங்க யாரையும் விட்டு வைக்கிறது இல்ல... இந்த நகை பறிப்பு கூட்டத்தை நம்ம சும்மாவே விடக்கூடாது...கண்டிப்பா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தே ஆகணும்

என்று பூமிநாதன் கோபத்துடன் பேச....பூங்குழலி மனதில் மட்டும் ஏதோ ஒரு நெருடல் ஏற்பட்ட நிலையில் அவள் பேயறைந்தது போல் இருந்தவளை பார்த்து சந்திரனும் கலங்கி நிற்க... சில நிமிடங்களில் செவிலியர் மருத்துவ சீட்டுடன் உள்ளே வந்தவர்

நர்ஸ் - இந்தாங்க இதுல மாத்திரை மருந்து எல்லாம் எழுதி இருக்கு வாங்கிக்கோங்க... கவுண்டர்ல கேஷ் பே பண்ணிட்டு கிளம்புங்க

பூமி - அப்பா நீங்க எதுல வந்தீங்க

சந்திரன் - நான் என்னுடைய டூவீலர் தான் டா வந்தேன்.....

பூமி - சரிப்பா அப்போ நான் ஜோதிமணி அண்ணன் கூடவே போயி கோவில்ல இறங்கி கார் எடுத்துக்கிட்டு வந்துடறேன்.... நீங்க குழலியை பாத்துக்கோங்க

சந்திரன் - டேய் இல்லடா காரு கோவில் வாசலில் நிற்கட்டும்.... தம்பி என் மகனையும் மருமகளையும் நீயே உன் ஆட்டோல எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துருப்பா.... நான் டூவீலர்ல உங்க பின்னாடி வரேன்

பூமி - அப்போ ககார்

ஜோதிமணி - தம்பி நானே உங்க ரெண்டு பேரையும் உங்க வீட்ல விட்டுட்டு... உங்க அப்பாவ மறுபடியும் அழைச்சிட்டு போய் கோயில் ஆண்ட  விட்டுறான்பா...உங்க அப்பா கோவில்ல இருந்து கார் எடுத்துகிட்டு வரட்டும்...

என்று ஜோதிமணி சொன்னவர்... பூமியையும் பூங்குழலியையும் அவரின் ஆட்டோவில் பூமிநாதனின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல.....இவர்களை சந்திரன் அவர்களும் பின் தொடர... பூமியின் தலையில் கட்டையும் பூங்குழலியின் கைகளிலும் கால்களிலும் கட்டுடன் வருவதை பார்த்த தேவி மற்றும் ராஜனும் பதறிய நிலையில்

ராஜன் - என்ன ஆச்சு..... அம்மாடி பூங்குழலி என்னடா ஆச்சு

தேவி - அய்யய்யோ என்ன சித்ரா இது.......சந்திரா எங்கப்பா சொல்லாம கொள்ளாம போன....இப்ப என்னப்பா பிள்ளைகளுக்கு தலையில் கட்டு கைல கட்டோட அழச்சிட்டு வர...என்னப்பா பிரச்சனை

சந்திரன் - அம்மா அம்மா இருங்க பதறாதீங்க

பூமி - பாட்டி இருங்க பாட்டி உணர்ச்சிவச படாதீங்க.....

பூங்குழலி - பாட்டி கோவிலில்ல....கோவிலில்ல

சந்திரன் - அம்மாடி பூங்குழலி... நீ பதட்டப்படாதமா...பூமி உன் பொஞ்சாதிய ரூமுக்கு அழைச்சிட்டு போ

ராஜன் - டேய் என் மகளுக்கும் மருமகனுக்கும் என்னடா ஆச்சு..

சந்திரன் - இருடா சொல்றேன்...வாசல்லயே நிக்க வச்சு வாழைத்தோப்பு கதை எல்லாம் பேசிக்கிட்டு இருப்பியா....ஆட்டோக்கார தம்பி நீயும் வாப்பா உள்ள...வந்து உட்காரு

ஜோதி - இல்ல சார் நான் வாசல்ல நிக்கிறேன்

சந்திரன் - அட உள்ளே வாப்பா

சந்திரன் ஆட்டோகாரையும் உள்ளே அழைக்க.....கோவிலில் நடந்த விஷயங்களை அனைத்தும் ஆட்டோக்காரர் ஜோதிமணி சொன்னதும் ராஜன் பதற்றத்துடன் நின்று இருக்க

தேவி - இந்த படுபாவி பசங்க ஏன் தான் இப்படி நகைக்கு ஆசைப்பட்டு உயிரோடு விளையாடுறாங்கன்னு தெரியல.....அன்னைக்கு என்னையும் இப்படித்தான் கோவில் வாசல்ல நிக்க வச்சு என் செயின்னை அறுக்க பார்த்தானுங்க.....அப்பதான் பூமி தம்பி என்னை காப்பாத்துச்சு... இதுக்கெல்லாம் என்ன முடிவென்னே தெரியல... அம்மாடி சித்ரா ரொம்ப வலிக்குதாமா....

பூங்குழலி - ஆமாம் பாட்டி காலு ரொம்ப வலிக்குது.... கையும் வலிக்குது....ஆனா இது எல்லாத்தையும் மீறி எனக்கு ரொம்ப படபடன்னு வருது...அந்த பைக்ல இருக்கிறவன் முறைச்ச மாதிரி பூமியை இடிச்சி...... இவர... இவர...

தேவி - என்னமா என்ன சொல்ற புரியல

பூங்குழலி - இல்ல பாட்டி அந்த பைக்ல இருக்கிறவன் நகைக்காக எல்லாம் ஆசைப்பட்டு இந்த மாதிரி செஞ்ச மாதிரி எனக்கு தோணல...வேணும்னே பூமி மேல பைக்கை ஏத்துன மாதிரி தான் இருந்துச்சு

ராஜன் - என்ன... என்ன சொல்ற நீ.. மாப்பிள்ளையை யாரு அந்த மாதிரி பண்றது..... மாப்பிளை உங்களுக்கு அடி ஏதும் படல இல்ல...

சந்திரன் - டேய் அவனுக்கு என்னடா அவன் நல்லாதான் இருக்கான்.... என் மருமகளை பாரு...கையிலயும் கால்லையும் எவ்வளவு பெரிய கட்டுன்னு..... இங்க பாருமா பூங்குழலி சும்மா தேவையில்லாதது எல்லாம் யோசிச்சுக்கிட்டு இருக்காத.. அதான் ஆட்டோக்காரரும் சொல்றாரு இல்ல...யாரோ நகைக்கு ஆசைப்பட்டவங்கதான் இந்த மாதிரி பண்ணி இருப்பாங்க... நீ எதையும் மனச போட்டு குழப்பிக்காமல் முதல்ல ரூம்ல போய் ரெஸ்ட் எடு.......டேய் பூமி உன் பொஞ்சாதி உள்ள அழிச்சிட்டு போ

ஜோதிமணி - சரி தங்கச்சி மா உடம்ப பாத்துக்கோ...தம்பி நானும் கிளம்புறேன்....

பூமி - ரொம்ப நன்றி அண்ணா....

ஜோதி மணி - இருக்கட்டும் பா..

சந்திரன் - பூமி நான் இவர் ஆட்டோலே போய் இறங்கிட்டு உன்னுடைய காரை எடுத்துட்டு வந்துடறேன் கார் சாவியை கொடு

என்று சந்திரன் சொல்ல.... பூமியின் கையில் இருந்து கார் சாவியை வாங்கிய படி ஆட்டோ டிரைவர் ஜோதி மணியுடன் சந்திரன் கிளம்ப....பூமி மற்றும் பூங்குழலியின்  நிலையைப் பார்த்து தேவியும் ராஜனும் வருத்தத்துடன் இருக்க....இங்கே நடந்த எந்த விஷயங்களும் தெரியாதபடி சந்திரனின் அறையில் பூங்குழலியின் தாத்தா தேவராஜ் உறங்கிக் கொண்டிருக்க.....பூமிநாதன் பூங்குழலியை அழைத்துக்கொண்டு அவன் அறைக்கு சென்றவன்...... அவன் அறை முழுவதும் பூக்களால் ஜோடிக்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு முதல் இரவு ஏற்பாடு அலங்காரம் செய்திருப்பதை பார்த்தவன் ஒரு நிமிடம் சிலை என நின்று இருக்க....பூங்குழலி தர்மசங்கடத்துடன் பூமியை பார்த்ததும்

பூமிநாதன் - குழலி நீ இதெல்லாம் எதுவும் பெருசா எடுத்துக்காத... நீ வா வந்து இப்படி சேர்ல உட்காரு...நான் அதுக்குள்ள கட்டில் எல்லாம் சரி செய்கிறேன்

என்று சொன்ன பூமிநாதன் போர்வை மேல் இருந்த அழகிய இருதய வடிவில் கொண்ட ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூக்களை அனைத்தையும் ஓரமாகத் தள்ளியவன் அந்த போர்வையை எடுத்த படி மீண்டும் வேறொரு புதிய போர்வையை போர்த்தியவன் பூங்குழலியை கை தாங்கலாக அழைத்து வந்து அந்த கட்டிலில் அமர வைக்க.... பூங்குழலி குழப்பமான மனநிலையில் இருப்பதை பார்த்தவன்

பூமி - என்ன குழலி கால் ரொம்ப வலிக்குதா

பூங்குழலி - இல்ல பூமி அவங்க எனக்கு ஊசி போட்டு இருக்காங்க...அந்தப் பவர் இருக்கிற வரைக்கும் வலி அவளவும் தெரியாது...

பூமி - சரி நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு நான் இதோ வரேன்

பூங்குழலி - பூமி ஒரு நிமிஷம்

பூமி - என்ன குழலி

பூங்குழலி - ப்ளஸ் என் பக்கத்திலேயே இருங்க....

பூமி - நான் இங்கதான் இருப்பேன்...

பூங்குழலி - இல்ல நீங்க இங்க.. இப்படி என் பக்கத்துல உக்காருங்க...

பூமி - என்னாச்சு குழலி ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க..

பூங்குழலி - இல்ல பூமி அந்த பைக்காரன் என்னுடைய நகைக்கெல்லாம் ஆசைப்பட்டு இதெல்லாம் பண்ணல

பூமி - வேற என்னவா இருக்கும்

பூங்குழலி - தெரியல அந்த பைக்கரன் வேணும்னே உங்க மேல வண்டியை ஏத்த வந்த மாதிரி தான் எனக்கு தோணுச்சு

பூமி - நீ நர்ஸ் தானே எப்ப போலீஸ் ஆபீஸரா மாறின

பூங்குழலி - விளையாடாதீங்க பூமி... உண்மையா தான் சொல்றேன்..எனக்கு பயமா இருக்கு

பூமி - ஏய் என்ன... நீ சொல்றத பார்த்தா நான் பெரிய ஹீரோ மாதிரியும்.. யாரோ ஒரு வில்லன் என்னை வந்து சாகடித்துட்டு உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க பாக்குற மாதிரியும் இல்ல சொல்ற...

பூங்குழலி - பூமி என்ன நீங்க பைத்தியம் மாதிரி பேசுறீங்க...தயவுசெய்து இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க..எனக்கு அழுகையா வருது

பூமி - ஏய் நான் சும்மாதான் சொன்னேன் நீ என்ன இவ்வளவு சின்ன புள்ளத்தனமா இருக்க அவன் உன் கழுத்துல இருக்குற தங்க சங்கிலியை பறிப்பதற்காக தான் வந்திருக்கான்... ஏதோ தடுமாற்றத்துல அவன் பைக்கை என் மேல ஏத்தி அதுக்கப்புறம் உன் மேல ஏத்தி ஒரு விபத்து நடந்துருச்சு சரி விடு ஆட்டோக்கார அண்ணா சொன்ன மாதிரி தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிடுதுன்னு நெனச்சுப்போம்.... ப்ளீஸ் நீ கவலைப்படாத உன்ன இந்த நிலைமையில் பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு

பூங்குழலி - பூமி உங்களுக்கு வேற எங்கேயாவது அடிபட்டு இருக்கா

பூமி - இல்ல குழலி கைல மட்டும் தான் அடிபட்டிச்சு ஆனா உனக்கு தான் ரொம்ப பெரிய அடி இல்ல

பூங்குழலி - பரவால்ல உங்களுக்கு ஒன்னும் ஆகல இல்ல எனக்கு அதுவே போதும்

பூமி - சரி நீ சும்மா தேவையில்லாததை எல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காமல் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு... நல்லா சாஞ்சி படுத்துக்கோ... இரு இன்னொரு தலகாணி போடவா

பூங்குழலி - இல்ல எனக்கு இதுவே போதும்....

பூமி - ம் நீ படு குழலி நான் போய் உனக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்

பூங்குழலி - ஐயோ இல்ல எனக்கு எதுவும் வேண்டாம் நீங்க என் பக்கத்திலேயே இருங்க அது போதும்

பூமி - நான் இங்கதான் இருக்கேன் நீ படு

என்று சொன்ன பூமி... பூங்குழலியை கட்டில் மேல் படுக்க வைத்தவன்...அவள் அருகிலேயே அமர்ந்திருக்க... மறுப்பக்கம் ஆட்டோக்காரர் ஜோதி மணியுடன் ஆட்டோவில் சென்று கோவில் வாசலில் இறங்கிய சந்திரன் தன் மகன் பூமிநாதனின் காரின் அருகில் சென்றவர் அந்த கோவிலை சுற்றி தன் பார்வையை உலாவ விட்டபடி

சந்திரன் - ஏன் தம்பி நீங்க இந்த கோவில் ஸ்டாண்ட்ல தான் ஆட்டோ ஓட்டுறீங்களா

ஜோதி - இல்ல சார் நான் எந்த ஸ்டாண்ட்லயும் பர்மனென்ட் ஆளா இருக்க மாட்டேன்...எந்த கோவில்ல என்னைக்கு அதிக கூட்டம் வரும்னு தெரிஞ்சுக்கிட்டு அன்னைக்கு அந்த கோவில் வாசல்ல நிப்பேன்...

சந்திரன் - இதுக்கு முன்னாடி இந்த கோவில்ல இந்த மாதிரி விஷயம் எல்லாம் நடந்திருக்கா

ஜோதி - இல்ல சார் இந்த கோவில்ல இந்த மாதிரி நடந்ததே இல்ல இதான் முதல் தடவை ஆனா எனக்கு என்னவோ அந்த பைக்காரன் நகைக்கெல்லாம் ஆசைப்பட்டு வந்த மாதிரி தெரியல அவன் நேரா வண்டி எடுத்துக்கிட்டு உங்க பையனை தான் இடிக்க வந்தான்

சந்திரன் - என்னப்பா சொல்ற இதையேதான் என் மருமகளும் சொன்னா

ஜோதி - ஆமா சார் நகைக்கு ஆசைப்படுறவங்க எப்பயும் ரெண்டு பேரா வருவானுங்க ஆனா இந்த பைக்ல ஒருத்தவன் தான் இருந்தான் அதுவும் இல்லாம உங்க பையனுக்கு பின்னாடி தான் உங்க மருமக இருந்தாங்க உங்க மருமகளை தாண்டி போய் தான் உங்க மகனை பைக்க்காரர் இடிச்சான் அவன் இடிச்ச வேகத்துல முதல்ல உங்க புள்ள கீழ விழுந்தத பாத்துட்டு அவன் பைக்க பின்னாடி எடுக்கும்பொழுது தான் உங்க மருமகள் கீழ விழுந்தாங்க உங்க மருமகள் கீழே விழுந்ததும் அந்த பைக்காரன் சிலை மாதிரி பைக்லே உக்காந்துகிட்டு இருந்தான் ஆனா உங்க மரு கீழே இருப்பது தெரியாம கோவிலுக்கு வந்த ஒரு ஆளு தான் வண்டிய பின்னாடி எடுத்து அந்த வண்டி உங்க மருமக கால்ல ஏறிடுது

சந்திரன் - அப்போ என் மருமக போட்டிருந்த நகைக்கு ஆசைப்பட்டு இந்த விபத்து நடக்கலன்னு சொல்றியா

ஜோதி - ஆமா சார் அதுதான் உண்மை... ஏன் சார் உங்க மகனுக்கு யாராவது விரோதிங்

சந்திரன் - இல்லப்பா என்னுடைய கணிப்பு சரியா இருந்தா கண்டிப்பாக இது அவன் வேலையா தான் இருக்கும்

ஜோதி - என்ன சார் சொல்றீங்க யார சொல்றீங்க

சந்திரன் - அது உனக்கு சொன்னா புரியாதுப்பா..இது வேற விஷயம்..

ஜோதி - 🙄

சந்திரன் - இந்தா தம்பி என் மகனையும் மருமகளையும் ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போயிட்டு வீட்டுக்கு எல்லாம் விட்டுட்டு வந்து இருக்க இத வச்சுக்கோ

ஜோதி - ஐயோ என்ன சார் நீங்க பணம் கொடுத்து என்னை வேற மனுஷனா ஆக்குறிங்க உங்க மகனை பார்த்ததுமே எனக்கு ஒரு தம்பி பீலிங் வந்துருச்சு சார் எனக்கு பணம் எல்லாம் வேணாம்

சந்திரன் - இங்க பாருப்பா என் மகனை நீ உன் உடன்பிறப்பாக நினைத்துக்கோ ஆனா இந்த பணம் உன்னுடைய உழைப்புக்கு கொடுத்தது... உன்னுடைய பாசத்துக்கு நான் விலை கொடுக்கல புரியுதா..வச்சுக்கோ

ஜோதி - சார் இது என்னுடைய போன் நம்பர் உங்களுக்கு எந்த நேரத்தில எந்த உதவி வேணும்னாலும் சொல்லுங்க... என் தம்பிக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்

சந்திரன் - ரொம்ப நன்றிப்பா..இது என் பையனுடைய விசிட்டிங் கார்டு...நேரம் இருக்கும் பொழுது நீயும் போன் பண்ணு

ஜோதி - கண்டிப்பா சார்...தம்பியையும் தங்கச்சியையும் பார்த்துக்கோங்க

என்று சொன்னபடி ஆட்டோக்காரர் ஜோதிமணி அந்த இடத்திலிருந்து கிளம்ப...சந்திரன் அவர்கள் கார் சாவியை எடுத்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்தவர்... கோவில் நிர்வாகி இருக்கும் அலுவலகத்திற்குள் சென்று இன்றைய சிசிடிவியில் பதிந்த காட்சிகளுக்கு உண்டான சிடியை கேட்க...காவல்துறையினரின் அனுமதி இல்லாமல் சிசிடிவியின் காட்சிகளை தர முடியாது என்று அந்த நிர்வாகி சந்திரனிடம் வாதம் செய்து கொண்டிருந்த சமயம்

சந்திரன் - சார் என்ன சார்...உங்க கோவில் வாசப்படில்ல என்னுடைய மகனுக்கும் மருமகளுக்கும் ஒரு விபத்து நடந்திருக்கு.. வந்தவங்க என் மருமகளுடைய தங்கச் சங்கிலியை பறிப்பதற்காக வந்திருக்காங்கன்னு எனக்கு சந்தேகமா இருக்கு...வந்தவங்க யாருன்னு தெரிஞ்சுக்கறதுக்காக நான் சிசிடிவி வீடியோ ஆதாரத்தை கேட்கிறேன்...இப்போ உங்களுக்கு அதை காட்டுவதில் என்ன பிரச்சனை

நிர்வாகி - இங்க பாருங்க..வர்றவங்க போறவங்க ஆயிரம் விஷயம் கேட்டு என்கிட்ட வீடியோ ஆதாரம் கேப்பிங்க அதெல்லாம் உங்களுக்கு காட்டணும் என்ற அவசியம் எனக்கு இல்லை நீங்க போய் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுங்க அவங்க வந்து கேட்கட்டும் நாங்க சிசிடிவி ஆதாரத்தை கொடுக்கிறோம்

என்று நிர்வாகி சொன்னதும் சந்திரன் கோபத்துடன் கோவில்லை விட்டு வெளியே வந்தவர் பூமிநாதனின் காரை எடுத்துக் கொண்டு அவரின் வீட்டிற்கு செல்ல...தன் பேத்திக்கு நடந்த சம்பவத்தை அறிந்த தேவராஜ் கலக்கத்தில் அமர்ந்திருக்க....சந்திரனைப் பார்த்ததும் ராஜன் அவர் அருகில் ஓடி வந்தவர்

ராஜன் - டேய் என்னடா நடக்குது இங்க என் மகளுக்கு கல்யாணம் நடந்தா எல்லா பிரச்சனையும் சரியாயிடும் நினைச்சேன் இது என்னடா புது பிரச்சனை

சந்திரன் - நீ தான்டா எனக்கு பெரிய பிரச்சனையே..உன்னை மீறி ஒரு பிரச்சனை எல்லாம் வராது..கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கியா

தேவி - என்ன சந்திரா என்னப்பா நடக்குது இங்க..

சந்திரன் - அய்யோ அம்மா ஒன்னும் இல்லம்மா நகைக்கு ஆசைப்பட்டு தான் யாரோ இந்த வேலையை பண்ணி இருக்காங்க மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்ல

தேவராஜ் - நம்ம பேசாம போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா...

தேவி - நான் வேணா சூர்யா கிட்ட பேசி பார்க்கட்டா

ராஜன் - ஐயோ கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா..போலீஸ் கேஸ் இதெல்லாம் வேண்டாம்.... சூர்யா கிட்ட இங்க நடக்குற விஷயத்தை பத்தி நீங்க மூச்சே விடக்கூடாது...டேய் சந்திரா நகைக்கு ஆசைப்பட்டு தானே இந்த விபத்து நடந்திருக்கு.... இத இதோட விட்ருவோம்டா...மறுபடியும் இந்த போலீசு இந்த வக்கீலு சூர்யா இதெல்லாம் வேணாம்டா உன்னை தயவு செய்து கேட்கிறேன்

சந்திரன் - டேய் வீணத்தவனே போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கணும்னு நினைச்சா நானே போய் கொடுத்துட்டு வந்து இருக்க மாட்டேனா.. நீ கண்டிப்பா அதுக்கு எல்லாம் ஒத்துக்க மாட்டேன்னு எனக்கு தெரியும்

ராஜன் - ஆமா வேண்டாமா இவங்க ரெண்டு பேருக்கு இன்னைக்கு காலையில தான் கல்யாணம் நடந்திருக்கு கல்யாணம் முடிஞ்ச கையோட போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் வேண்டாம்....

சந்திரன் - சரி சரி கவலைப்படாதே, இனி  எல்லாமே நல்லதா நடக்கும்னு நம்புவோம்

ராஜன் - ஐயோ என் மகளை எந்த நேரத்துல நான் பெத்தேனோ அவளுக்கு நிம்மதியே இல்லாம இருக்கு

சந்திரன் - டேய் மறுபடியும் நேரம் காலம்னு ஆரம்பிக்காத கொஞ்ச நேரம் நீ சும்மா இரு

தேவராஜ் - சந்திரா மத்தபடி வேற ஒன்னும் பிரச்சனை இல்லையே

சந்திரன் - இல்லப்பா நீங்க வயசான காலத்துல இதெல்லாம் நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருக்காதீங்க

தேவி - என்னப்பா இது ரெண்டு பேருக்கும் இன்னைக்கு முதலிரவு அதுவுமா இப்படி நடந்துருச்சு

பூமி - பாட்டி இதுல என்ன இருக்கு பூங்குழலிக்கு ஏதும் விபரீதமா ஆகாமல் இந்த மட்டுக்கு அவ நல்லா இருக்கிறதே எனக்கு போதும்

என்று சொன்னபடி பூமிநாதன் அந்த அறையில் இருந்து வெளியே வர

சந்திரன் - என் மருமக எங்கடா

பூமி - அவ தூங்கிக்கொண்டு இருக்காப்பா ஆனா ரொம்ப பயந்து இருக்கா என்ன என்னமோ பேசுறா அந்த பைக்ல வந்தவன் என்னை தான் ஏத்த வந்தான்...அது இதுன்னு பேசுறா .

சந்திரன் - அது ஒன்னும் இல்லடா அவ ஏதோ பயந்து இருக்கா நான் போய் கோவில்ல நல்லா விசாரிச்சுட்டேன் அந்த கோவிலில் அடிக்கடி இந்த மாதிரி நகைக்கு ஆசைப்பட்டு பைக் காரணங்கள் வரப்போற பெண்களை இப்படித்தான் பண்ணுவார்களாம்

பூமி - அப்ப நம்ம போயி போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வரலாம் இல்ல

ராஜன் - இல்ல மாப்ள கல்யாணம் ஆன முதல் நாளே போலீஸ் ஸ்டேஷன் ஹாஸ்பிடல் இதெல்லாம் வேண்டாம்பா.

சந்திரன் - ஆமாடா ராஜன் சொல்றதுதான் சரி போலீஸ் ஸ்டேஷன்ல எல்லாம் இப்போ போய் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டாம் சரி நீ போ போய் மருமக பக்கத்தில் இரு அவ ரொம்ப பயந்து இருக்கா

என்று சந்திரன் சொன்னதும் பூமிநாதன் அவன் அறைக்குள் நுழைய... பூங்குழலி மயக்கம் கலந்த உறக்கத்தில் இருந்தவள் அருகில் பூமிநாதன் அமர்ந்தவன் பூங்குழலியின் நெற்றியில் கை வைத்த படி அவளின் கூந்தலை வருடிவிட்டவன் அவள் அருகிலேயே படுத்து இவனும் சற்று கண் அசர...சில மணித்துளிகள் கடந்த நிலையில் தேவி அவர்கள் பூமிநாதனும் பூங்குழலியும் இருக்கும் அறையின் கதவை தட்டியதும் பூங்குழலி தூக்கத்திலிருந்து கண் விழித்தவள் அருகில் தன் மீது கை வைத்தபடி பூமிநாதன் படுத்து இருந்தவனை பார்த்த பூங்குழலி முகம் சுழித்தபடி கட்டிலில் இருந்து கீழே இறங்க போனவள் கால் தடுமாறி மீண்டும் கீழே விழும் சத்தம் கேட்டு பூமிநாதன் தூக்கத்திலிருந்து எழுந்த அதே தருணம் கதவைத் திறந்து கொண்டு தேவியும் உள்ளே நுழைய....கீழே விழுந்த பூங்குழலியை பூமிநாதன் பதறிய வண்ணம் அவளை தூக்கச் சென்றவனின் கரங்களை ஒரு கைகளால் பிடித்து பூங்குழலி

பூங்குழலி - என்னை தொடாதீங்க

என்று சொன்ன வார்த்தையை கேட்டு பூமி நாதனும் தேவியும் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் நின்றிருந்தனர்....

Continua a leggere

Ti piacerà anche

7.6K 1.3K 33
சண்டை + சண்டை +சண்டை=💞 KM💞
6.3K 472 30
ÜÑÇÕÑDÏTĪØÑÁL LØVÊ STØRY 😍
135K 8.8K 61
இரு வேறு துருவங்கள் சங்கமிக்கும் புள்ளி காதல் ..another km story ,
134K 13.7K 100
Well anything I say will just spoil the surprise Naan surprise nenaichu ezhuthum pothe correct ah guess panniduveenga🤪🤪 OK I will say this.. it al...