🔱பூமியின் பூங்குழலி🔱

By Sakthriyan

8.6K 1.4K 1.1K

இயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕 More

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8
பாகம் 9
பாகம் 10
பாகம் 11
பாகம் 12
பாகம் 13
பாகம் 14
பாகம் 15
பாகம் 16
பாகம் 17
பாகம் 18
பாகம் 19
பாகம் 20
பாகம் 21
பாகம் 22
பாகம் 23
பாகம் 24
பாகம் 25
பாகம் 27
பாகம் 28
பாகம் 29
பாகம் 30
பாகம் 31
பாகம் 32
பாகம் 33
பாகம் 34
பாகம் 35
பாகம் 36
பாகம் 37
பாகம் 38
பாகம் 39
பாகம் 40
பாகம் 41
பாகம் 42
பாகம் 43
பாகம் 44
பாகம் 45
P❤️R❤️O♥️M❤️O
பாகம் 46
பாகம் 47
பாகம் 48
பாகம் 49
பாகம் 50

பாகம் 26

150 31 46
By Sakthriyan

❤️பூமியின்🔱பூங்குழலி❤️

❤️பாகம் 2️⃣6️⃣

ஐயர் - புள்ளையாண்டா தாலி எடுத்து பொண்ணு கழுத்துல கட்டுங்க.....கெட்டி மேளம் கெட்டி மேளம்

என்று அவர் உச்சரித்த அடுத்த நொடி...

ராஜன் - ஒரு நிமிஷம் இருங்க...

சந்திரன் - டேய் என்னடா என்னாச்சு..??

ராஜன் - ஐயரே அந்த மாங்கல்யதை அப்பா அம்மா கையில தாங்க... அவுங்க கையாள எடுத்து தந்து பூமி மாப்பிளை என் மக கழுத்துல தாலி கட்டட்டும்

சந்திரன் - டேய் ராஜா...???

பூமி - அப்பா.... ராஜன் அப்பா ஆசை படியே முன்னோர்கள் ஆசீர்வதிக்க பெரியவுங்க இவங்க ரெண்டு பேருமே தாலி எடுத்து தரட்டும் பா

என்று பூமி சொல்ல....ராஜனின் இந்த செயலை சற்றும் எதிர்பாராத அவரின் அம்மாவும் அப்பாவும் மன நிறைவோடு மாங்கல்யதை பூமியின் கரங்களில் எடுத்து தர ......பூங்குழலி கண்களில் ஆனந்த கண்ணீர் பெறுக........ சந்திரன் மற்றும் ராஜனின் இதயம் மகிழ்ச்சியில் இணைந்து இருக்க.......பூமி நாதன் அவன் சித்ர பூங்குழலியின் கழுத்தில் மாங்கல்யதை அணிவிக்க..... தன் தந்தையின் கனவு தலை தூக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவள்...தலை குனிந்து பூமியின் கரங்களால் மாங்கல்யத்தை பெற்று கொள்ள..... கூடி இருக்கும் அனைவரும் தூவிய மங்கள அரிசி மணமக்களின் தலையில் அட்சதையாக விழ.....

💕பூமியின் பூங்குழலியாக💕மங்கை இவள் மாறிய தருணம் அவள் கண்கள் கலங்குவதை கண்ட பூமி அவளை உற்று பார்த்தவன்...

என்ன குழலி என்னாச்சு... ஏன் அழுவுற.... கண்ணுல அரிசி பட்டுடுச்சா

என்று அக்கறையாக கேட்டப்படி அவள் தலை மேல் இருந்த அட்சதையை தட்டி விட...

டேய் டேய் என்னடா பண்ற..... அதெல்லாம் இருக்கட்டும்... நீங்க ரெண்டு பேரும் முதல்ல ஐயர் சொல்றதை கேளுங்க

என்று சந்திரன் சொன்னதும் பூமி அசடு வழிந்தப்படி ஐயர் சொன்ன சம்பர்த்தாயத்தை செய்து முடிக்க

ஐயர் - பொன்னாண்டாவும் பிள்ளையாண்டாவும் தகப்பனார் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க

என்று ஐயர் சொல்ல..... மணமக்கள் இருவரும் சந்திரன் காலில் விழ போக

சந்திரன் - டேய் டேய் முதல்ல ராஜன் கால்ல விழுங்க.. இந்த கல்யாணம் இவ்வளவு சீக்கிரம் நடக்க காரணமே ராஜன் தான்

என்று சந்திரன் சொன்னதும் பூமியும் பூங்குழலியும் ராஜனின் காலில் விழ போக.....

ராஜன் - இருங்கப்பா இருமா முதல்ல வயசுல பெரியவங்க அம்மா அப்பா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க

என்று ராஜன் சொன்னதும் பூமியும் பூங்குழலியும் ராஜனின் அப்பா அம்மா தேவி மற்றும் தேவராஜின் பாதங்களை தொட்டு வணங்க
தேவியின் கண்களில் பெருகிய ஆனந்த கண்ணீரும் இவர்களுக்கு அட்சதையாக அந்த இடத்தில் மாறிய தருணம் தேவராஜ் தான் கையில் இருந்த தங்க சங்கிலியை பூமிநாதனின் கழுத்தில் அணிவிக்க...
தேவி தான் எடுத்து வந்த தங்க வளைவியை பூங்குழலியின் கையில் அணிவிக்க...

பூமி - பாட்டி என்ன இதெல்லாம் உங்களுடைய ஆசிர்வாதம் மட்டும் எங்களுக்கு போதும் இந்த பரிசு எல்லாம் எங்களுக்கு வேண்டாம் இந்தாங்க தாத்தா இத நீங்களே வச்சுக்கோங்க pls கோச்சுக்காதீங்க
குழலி அதை தாத்தா கிட்டயே கொடுத்துடு

தேவி - இருப்பா இருப்பா அந்த மாதிரி எல்லாம் பண்ணக்கூடாது.. அன்ப வெளிப்படுத்துற விதமா தான் அன்பளிப்பு கொடுக்கிறோமே தவிர நம்மளுடைய தகுதியை காட்டிக்கிறதுக்காக எல்லாம் இல்லை..

பூமி - ஐயோ பாட்டி நான் அப்படி சொல்ல வரல..

தேவராஜ் - இருப்பா... முன்பு எல்லாம் என் பேரன் மாதிரி தான் உன்னை நான் நினைச்சேன்...ஆனா இப்போ நீ என் சொந்த பேரனாகவே மாறிட்ட அதனால தான் உனக்கும் சித்ராவுக்கும் எங்களால முடிஞ்ச ஒரு சின்ன அன்பளிப்பு.....எங்க ஞாபகமா இதை நீங்க போட்டுக்கணும்

பூமி - பாட்டி இதெல்லாம் போட்டுக்கிட்டா தான் உங்க ஞாபகம் எங்களுக்கு இருக்குமா என்ன

சந்திரன் - டேய் பவுனு விக்கிற விலையில அவங்க செயினும் வளையலும் கொடுக்கிறதே பெருசு..ரெண்டு பேரும் வாங்கி போட்டுப்பீங்களா... இப்ப எதுக்குடா அவங்க கிட்ட வாதம் பண்ணிக்கிட்டு இருக்க...

பூமி - அப்பா என்ன நீங்க........பவுனுக்கு ஆசைப்படுபவறா நீங்க..??

தேவி - சந்திரன் சும்மா சொல்றாருப்பா

ராஜன் -  ஆமா மாப்பிள்ள... இவன் விளையாட்டா பேசுறான்... இங்க பாருங்க இந்த கல்யாணத்துக்கு கூட அஞ்சு காசு நான் செலவு பண்ணலையே என் நண்பன் என் மகனை கட்டின புடவையோடு அனுப்புன்னு கூட சொல்லல அந்த புடவையை கூட அவன் தான் வாங்கி கொடுத்திருக்கான்.

சந்திரன் - டேய் இப்போ எதுக்குடா இந்த விளக்கம் எல்லாம்

ராஜன் - இல்லடா உண்மைய சொல்லனும்னா எனக்கு வாழ்க்கையில இப்படி ஒரு நல்ல நண்பன் கிடைச்சது தான் நான் வாங்கி வந்த வரம்

சந்திரன் - அது எனக்கு சாபம்.... சரி சரி வா.... என் மருமக என் மகன் கை பிடிச்ச நேரம் எல்லாமே நல்லதாகவே நடக்கட்டும்

பூமி - 😍

சந்திரன் - பூமி இங்கிருந்து நம்ம நேரா ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு போயிட்டு அங்க உங்களுடைய கல்யாணத்தை பதிவு செய்த பிறகு எல்லாரும் ஒரு ஹோட்டலில் போய் சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம்

பூமி - ok பா

கார்த்திக் -  கங்கிராஜுலேஷன் பூமி.... சிஸ்டர் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

பூமி - தேங்க்ஸ் கார்த்திக்

பூங்குழலி - தேங்க்ஸ்ங்க

பூமி - டேய் நீயும் ரெஜிஸ்டர் ஆபீஸ் வாடா

கார்த்தி - ok டா.. நீங்க எல்லாம் கார்ல போங்க நான் பின்னாடியே வரேன்

என்று கார்த்திக் சொன்னவன் தன் கைபேசி மூலம் SJ சூர்யாவை அழைக்க... SJ சூர்யாவின் கைபேசியில் இருந்து எந்த பதிலும் கிடைக்காததால் ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு கார்த்திக் பூமிநாதன் பூங்குழலி குடும்பத்தினருடன் சேர்ந்து கோவிலில் இருந்து வெளியே கிளம்பும் காட்சியை இரண்டு கண்கள் தூரத்தில் காரில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டு இருந்ததை அறியாத சித்திரப் பூங்குழலி புன்னகை மலர்ந்த முகத்துடன் பூமியின் கரங்களைப் பற்றிக் கொண்டு கோவிலில் இருந்து வெளியே வந்தவள் காருக்குள் ஏறி ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு செல்ல... அவர்கள் செல்லும் காரை ராஜன் மற்றும் சந்திரன் பின் தொடர..இவர்கள் அனைவரும் ரிஜிஸ்டர் ஆபீஸில் பூங்குழலி பூமிநாதனின் திருமண நிகழ்வை சட்டப்படி பதிந்தவர்கள் மீண்டும் ரிஜிஸ்டர் ஆபிஸில் இருந்து ஹோட்டளை நோக்கி செல்ல....ஹோட்டலில் திருமண விருந்து நடைபெறும் தருணம்

ராஜன் - டேய் சந்திரா போட்டோ கிராபர் எங்கடா

பூமி - போயிட்டாரு அப்பா

சந்திரன் - ஆமா கிளம்பிட்டாரு

ராஜன் - ஏண்டா.. பொண்ணு மாப்பிள்ளையயை சாப்பிடும் போது போட்டோ எடுக்க வச்சு இருக்கலாம் இல்ல

சந்திரன் - என்னை என்னடா பண்ண சொல்ற..கோவிலில் மட்டும் தான் அவன் போட்டோ எடுத்தான்.. ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கூட இதோ நம்ம போன்ல தானே எடுத்திருக்கோம்...சரி விடு இதே போன்லயே நம்ம ஹோட்டல்லையும் போட்டோ எடுத்துக்கலாம் தம்பி கார்த்தி இந்தாப்பா இந்த போன்ல எங்க எல்லாரையும் சேர்த்து போட்டோ எடு..

என்று சந்திரன் பூமியின் நண்பன் கார்த்திக் இடம் கைபேசியை தர.. கார்த்திக்.. பூமி மற்றும் பூங்குழலியையும் சுற்றி இருக்கும் அனைவரும் சாப்பிடுவதையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க

சந்திரன் - டேய் என் மருமகளுக்கு சாப்பாடு ஊட்டி விடுடா

பூமி - ஏம்பா உங்க மருமகளுக்கு சாப்பிட தெரியாதா

சந்திரன் - டேய் நடிக்காதடா சாப்பாட்டு ஊட்டி விடுடா..

பூமி - நான் ஏன் ஊட்டி விடனும் எனக்கு பசிக்குது நான் சாப்பிட போறேன்

சந்திரன் - அடப் பக்கிப் பயலே அம்மாடி மருமகளே இவனுக்கு நீ சாப்பாடு ஊட்டி விடுமா..

பூங்குழலி - மாமா..

சந்திரன் - அட என்னம்மா இது..மாறி மாறி இப்படி வெட்கப்பட்டுக்கிட்டு இருக்கீங்க.. டேய் புது மாப்பிள நீயாவது சாப்பாடு ஊட்டி விடு டா........

சந்திரன் கோபப்பட்டு சொன்னதும் பூமி சிரித்துக்கொண்டே அவன் தன் கரங்களால் பூங்குழலிக்கு சாப்பாடு ஊட்டி விட....பூங்குழலியும் பதிலுக்கு பூமிநாதனுக்கு உணவை ஊட்டி விட கூடியிருக்கும் அனைவரும் திருமண விருந்தை மகிழ்ச்சியாக முடித்த நிலையில் பூமியின் நண்பன் மீண்டும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தபடி அங்கிருந்து விடை பெற......இவர்கள் அனைவரும் பூமிநாதனின் வீட்டிற்கு செல்ல.. தேவி அவர்கள் ஆரத்தி எடுத்து மணமக்களான பூமிநாதன் மற்றும் பூங்குழலியை வீட்டிற்குள் வரவழைக்க...

ராஜன் - பூங்குழலி உன் அத்தை புகைப்படத்திற்கு முன்னாடி நின்னு விளக்கேத்தி அவங்கள கும்பிட்டுக்கோ டா

தேவி - ஆமாம்மா இந்த வீட்ல அவங்களுக்கு அடுத்த பொறுப்பு உனக்கு தான் இருக்கு அனுசரிச்சு நடந்துக்கணும் புரியுதா

சந்திரன் - என் மருமகளுக்கு இருக்கிற பொறுமை மாதிரி அவங்க மாமியாருக்கு கூட இருந்தது இல்ல

பூமி - 😡

பூங்குழலி - 😊

சந்திரன் - சரிம்மா போ போய் விளக்கேத்து டேய் நீயும் போடா

என்று சந்திரன் சொல்ல பூமியும் பூங்குழலியும் சந்திரனின் மனைவியின் புகைப்படத்திற்கு எதிரே நின்றவர்கள் விளக்கேற்றி கண்கள் மூடி மன நிறைவோடு அவர்களை வேண்டிக்கொள்ள..சந்திரனின் கண்களிலும் பூமிநாதன் கண்களிலும் கண்ணீர் சிந்திய காட்சியை பார்த்த ராஜனின் கண்களும் கலங்க

பூமி - குழலி..மறக்காம நீ உங்க வீட்ல இருக்கிற அத்தை உடைய போட்டோவையும் எடுத்துட்டு வந்து இங்கே வச்சுடு

சந்திரன் - டேய்...அப்போ ராஜன் என்னடா பண்ணுவான்?

பூமி - அப்பா.. இனிமே ராஜன் அப்பா நம்ம வீட்டிலேயே இருக்கட்டும்.. இவர் ஏன் அங்க இருந்து தனியா கஷ்டப்படணும்

ராஜன் - மாப்பிள்ள... எனக்கு ஒரு கஷ்டமும் இல்லப்பா.. நிம்மதியா என் மகள் இங்க வாழறான்னு தெரிஞ்சாலே எனக்கு எந்த கஷ்டமும் இருக்காது

பூமி - ஏன் அப்பா.. குழலிக்கு என்ன குறை வரப்போகுது.. குழலி நல்லா இருப்பா.. நீங்களும் நல்லா இருக்கணும்.. சரி காலையில நீங்க மாத்திரை போட்டிங்களா

சந்திரன் - டேய் ஆமாடா இவன் மாத்திரையே போடல...

தேவி - பூமி... அது எல்லாம் அவங்க பாத்துப்பாங்கப்பா... நீ வந்து இப்படி உட்காரு... சித்ரா நீயும் வந்து உட்காருமா.. ஒரு சில சம்பிரதாயம் எல்லாம் இருக்கு

என்று தேவி சொன்னவர்.. வீட்டுக்கு வந்த மருமகளுக்கு தேவையான அனைத்து சம்பிரதாயங்களையும் தேவியே முன் நின்று செய்து கொண்டிருக்க... சில மணி நேரங்கள் கடந்த நிலையில் மணமக்கள் இருவரும் தேவி அவர்கள் சொன்ன சம்பிரதாயத்தை செய்து முடிக்க....

தேவி - பூமி... நீங்க உங்க அப்பாவோட ரூம்ல போயி கொஞ்ச நேரம் படுத்துக்கோங்க.. அம்மாடி சித்ரா நீயும் கொஞ்ச நேரம் போயி நேத்து நம்ம நைட்டு தூங்கனோமே..அதான் உன் புருஷன் ரூம்..அங்க போயி படுத்துக்கோ

பூமி - நான் ஏன் அப்பா ரூம்ல ரெஸ்ட் எடுக்கணும் பாட்டி.... நான் என் ரூம்லயே ரெஸ்ட் எடுத்துக்கிறேன்..

தேவி - சரிப்பா... அப்போ நீ உன் ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கோ

பூமி - ம் சரிப்பாட்டி..

தேவி - அம்மாடி சித்ரா....நீ உன் மாமா ரூம்ல போயி ரெஸ்ட் எடுத்துக்கோ

பூமி - என்ன.... அப்போ நானும் அப்பா ரூம்லேயே போய் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்

சந்திரன் - அடிங்க.....இப்போதைக்கு நீங்க ரெண்டு பேரும் ஒரே ரூம்ல இருக்கக் கூடாதுன்னு தான் அம்மாவே உங்களை தனித்தனியா பிரிக்கிறாங்க... நீ என்னடா சடுகுடு ஆட்டம் விளையாடிக்கிட்டு இருக்க

பூமி - ஒ சொன்னா தானே எனக்கு புரியும்

சந்திரன் - யாரு உனக்கா.... நேத்து மொட்டை மாடியில படுத்தும் நீ அடங்கல... ஆனா ஒன்னு டா... எல்லாம் தெரியும்ன்னு சொல்றவன நம்பிறலான்டா...எதுவுமே தெரியாதுன்னு சொல்றவனை தாண்டா நம்ப கூடாது கேடி பயலே... போ முதல்ல போய் உன் ரூம்ல கவுந்து அடிச்சுகிட்டு படு கொஞ்ச நேரத்துல நாங்களே வந்து உன்னை எழுப்புகிறோம்

என்று சந்திரன் சொல்ல பூங்குழலி புன்னகை மலர்ந்த முகத்துடன் ஓரக்கண்ணில் பூமியை பார்க்க.. பூமி பெருமூச்சு விட்டபடி அவன் அறைக்குள் செல்ல..ராஜன் சந்திரனின் கரங்களைப் பற்றியவன்

ராஜன் - சந்திரா இதெல்லாம் கனவா நினைவானு கூட தெரியல டா,என் மகளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு டா,நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா...பூங்குழலியை இப்படி  மனக்கோளத்தில் பார்க்கணும்னு எனக்கு எத்தனை நாள் கனவு தெரியுமா..அந்தக் கனவு இன்னைக்கு நினைவானதுக்கு ஒரே காரணம் நீ மட்டும் தான் டா..நான் சாகும் வர உன்னை மறக்கவே மாட்டேன்

சந்திரா - ஏன் மறந்து தான் பாறேன்....நீ மறந்து தான் பாருடா....யார் வேணானது

தேவி - அடடா நீங்க ரெண்டு பேரும் சண்டையை ஆரம்பிச்சுட்டீங்களா..சந்திரா சாயங்காலம் 5:00 மணி போல பூமி நாதனையும் பூங்குழலியையும் பக்கத்துல இருக்குற கோவிலுக்கு அனுப்பி வெச்சிடுங்க..அவங்க திரும்பி வரதுக்குள்ள நம்ம அவங்களுக்கு முதலிரவு அறையை ஏற்பாடு பண்ணிடலாம்...

பூங்குழலி - 🙄🙄🙄

சந்திரன் - சரிமா நானும் அதான் நினைச்சேன்.. பூங்குழலி நீ கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடுமா போ

தேவி - ஆமா மா போ செல்லம்..

என்று தேவி சொல்ல பூங்குழலியும் சந்திரனின் அறைக்குள் சென்றவள் கட்டிலில் சிறிது நேரம் ஏதோ நினைவுகளை சுமந்தபடி அமர்ந்திருந்தவள் அவளை மீறி கண்கள் அசர...... அன்றைய தினம் மாலை ஐந்து மணி அளவில் தேவி பூங்குழலி இருக்கும் அறைக்குள் வர...... பூங்குழலி அசதியில் தூங்கியவளை எழுப்பிய தேவி

அம்மாடி...... சித்ரா உன்னை தான் டா... எழுந்துரு மா....

என்று தேவி எழுப்பியதும்... பூங்குழலி வாரி அடித்து எழுந்தவள்

பூங்குழலி - என்ன பாட்டி என்னாச்சு

தேவி - ஏன் டா பாத்தட்டப்படற..... எழுந்துடு....போய் புடவையை மாத்திகிட்டு நீயும் பூமி தம்பியும் கோவிலுக்கு போயிட்டு வாங்க...

பூங்குழலி - கோவிலுக்கா

தேவி - ஆமாடா

பூங்குழலி - பாட்டி சூர்யா...

தேவி - தெரியல டா.....
இப்போதைக்கு நம்ம சூர்யாவை பற்றி எல்லாம் ஏதும் பேச வேணா நீ போய் கிளம்பு மா...... பூமி தம்பி வேற காத்துகிட்டு இருக்கு

பூங்குழலி - ஐயோ.... சரி சரி நான் இதோ உடனே வரேன்

பூங்குழலி வேறு சீலையை அணிந்து கொண்டு..... புது தாலி... கை நிறைய வளையல்..... நெற்றியில் வட்டமான திலகம்.... உச்சியில் குங்குமம்.... காலில் சலங்கையின் சங்கீதம்... கால் விரலில் மெட்டி யின் ரம்மியாமான ஒலியோடு அந்த அறையில் இருந்து வெளியே வந்தவளை பார்த்து பூமியின் கண்கள் இமைக்க மறக்க .......

சந்திரன் - டேய் டேய்.... ஏன்டா என் மருமகளை விழுங்குற மாதிரி பாக்குற.....

பூமி - 😍😍

சந்திரன் - அடேய் உன்ன தாண்டா

பூமி - 😍😍

சந்திரன் - டேய் மட பய மருமகனே

என்று சந்திரன் விடப்பிடியாக பூமியை அழைக்க...... பூமியோ தன் விழிகளை பூங்குழலி மீது இருந்து அகற்ற மறுக்க... பூங்குழலி.... பூமிநிலத்துக்கு வலிக்காமல் நடந்து வந்தவள் நம் நாயகன் பூமியின் இதயத்தில் பார்வையால் ஈட்டியை ஏய்து கொண்டு இருக்க......

சந்திரன் - டேய் உன்ன தாண்டா மகனே... கிளம்புடா கோயிலுக்கு நேரமாகுது

பூமி - அப்பா ஏன் எங்களை துரத்துறதுலையே குறியா இருக்கிறீங்க

தேவி - ஒன்னும் இல்லப்பா நீங்க ரெண்டு பேரும் கோயிலுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள நாங்க உங்களுக்கு இன்னைக்கு நைட்டு நடக்கப்போற சம்பிரதாயத்துக்கு தேவையான விஷயங்களை எல்லாம் செய்யணும்

பூமி - இன்னைக்கு நைட்டு என்ன நடக்க போகுது?

சந்திரன் - டேய் டேய் ஞானப்பழம் பெற்ற நேந்திரம் பழம்.... உனக்கு ஒண்ணுமே தெரியாது இல்ல

பூமி - அப்பா சும்மா இருங்கப்பா

சந்திரன் - இனி நீ சும்மா எல்லாம் இருக்க முடியாது.... என் மருமகள அழைச்சுக்கிட்டு கோயிலுக்கு போயிட்டு வா... அம்மாடி குழலி கிளம்புமா

பூமி - வெய்ட் வெய்ட் குழலி ஒரு நிமிஷம் இரு...

பூங்குழலி - என்ன பூமி

பூமி - ஏதோ ஒன்னு குறையிற மாதிரி இருக்கே...

சந்திரன் - என்னடா உன் மண்டையில் மூளை குறையா இருக்கா..

பூமி - அப்பா காமெடி ரொம்ப மொக்கையா இருக்கு.. கொஞ்சம் கம்முனு இருக்கீங்களா

ராஜன் - என்ன மாப்ள என்ன பிரச்சனை

பூமி - இல்ல அப்பா பூக்குழலியுடைய முகத்துல ஏதோ ஒரு குறை இருக்கிற மாதிரியே இருக்கு..

ராஜன் - என்ன பூங்குழலி நீ சந்தோஷமா தானே இருக்க..

பூங்குழலி - ஆமாப்பா நான் சந்தோஷமா தான் இருக்கேன்..

பூமி - அதெல்லாம் இல்ல அப்பா...இருங்க என் பூங்குழலி உடைய கூந்தல்ல பூ மட்டும் மிஸ் ஆகுது...பாட்டி ஏன் குழலிக்கு நீங்க பூ கொடுக்கல.

ராஜன் - அது ஒன்னும் இல்ல மாப்ள உங்க கையால பூங்குழலிக்கு பூ வாங்கி கொடுக்கணும்னு சந்திரன் ஐடியா பண்ணி இன்னைக்கு இந்த வீட்டுக்கு பூவே வாங்கல

பூமி - அப்பா பலே ஆளுப்பா நீங்க

சந்திரன் - டேய் உன்னிடத்தில் நான் இருந்திருந்தா இந்நேரம் ஓடிப் போயி பூ கடையையே தூக்கிட்டு வந்து என் ஆளுக்கு கொடுத்து இருப்பேன்.. நீ என்னடா வாயில பூவ கட்டிக்கிட்டு இருக்கிற

பூமி - இப்ப என்னப்பா என்னையும் ஓடிப்போய் பூ கடையை வாங்கிட்டு வர சொல்றீங்களா?

சந்திரன் - நீ ஓடவும் வேணா தேடவும் வேணாம்.. என் மருமகளை அழிச்சுகிட்டு போகும்போது கோயில் வாசப்படியில பூ விக்கும்... அங்க வாங்கி கொடு

பூமி - ம் சரிப்பா குழலி போகலாமா

பூங்குழலி - பாட்டி நான் போயிட்டு வரேன்... தாத்தா நான் போயிட்டு வரேன்..அப்பா போய்ட்டு வரேன்பா...மாமா போயிட்டு வரேன்...

சந்திரன் - ஜாக்கிரதையா போயிட்டு வாம்மா....ஏய் என் மருமகள ஒழுங்கா அழைச்சுக்கிட்டு போ புரியுதா

என்று சந்திரன் சொல்ல இவர்கள் அனைவரிடம் இருந்தும் விடை பெற்று பூமியும் பூங்குழலியும் விநாயகர் கோவிலுக்கு செல்ல

சந்திரன் - அம்மா நான் வாங்கி வச்ச பூ கூட எல்லாம் தூக்கிட்டு வரலாம் வாங்க

ராஜன் - என்னடா இவ்வளவு அநியாயம் பண்ற...பூமி மாப்பிள்ளை குழலியுடைய கூந்தல்ல பூ இல்லன்னு கவலைப்பட்டாரு இல்ல.... நீ இதுல இருந்து ஒரு முழம் கொடுக்கறதுக்கு உனக்கு என்ன குறை வந்துச்சு

சந்திரன் - டேய் பாக்கோடா வாயா....பூக்களை கூடை கூடையா நம்ப வாங்கி கொடுத்தாலும்.. கட்டின புருஷன் ஒரே ஒரு பூவ செடியிலிருந்து பறிச்சு தன்னவளுக்கு தலையில் வைத்து விடுவான் பாரு அதுல இருக்குற கிக்கு இந்த கூடை பூ எல்லாம் இல்லடா... ஹ்ம் உனக்கு என்ன தெரியும் நீ சரியான மாவு பையன்

தேவராஜ் - பரவால்ல சந்திரா...உன் மனைவி ரொம்ப கொடுத்து வச்சிருப்பா...

சந்திரன் - ஆனா பூ எல்லாம் அவளுக்கு அந்த அளவுக்கு தேவைப்படலை அப்பா

தேவராஜ் - ஏம்பா

சந்திரன் - அவளுடைய சிரிப்பிலையும் அவளுடைய பொறுப்புளையும் நிறைய பூ இருக்கு இல்ல....அதனால...

ராஜன் - பூ தேவைப்படலைன்னு இந்த பருப்பு சொல்றாரு..

சந்திரன் - டேய் என்னடா சம்பந்தி என்ற மரியாதையே இல்லாம பேசுற

ராஜன் - சரிங்க சம்பந்தி இப்போ நம்ப போய் வேலையை பார்க்கலாமா

தேவி - நீங்க என்ன வேலை பார்க்க போறீங்க... நீங்க போய் உட்காருங்க முதலிரவு அறைய நான் ஜோடிக்கிறேன்

சந்திரன் - அய்யய்யோ இல்லமா நேத்து நைட்டே நானும் என் நண்பனும் பேசி வெச்சிட்டோம் இன்னைக்கு முதலிரவு அறைய எங்க பிள்ளைகளுக்காக நாங்கதான் ஜோடிப்போம்

என்று சந்திரன் சொல்ல.....ராஜனும் சந்திரனும் மன மகிழ்ச்சியோடு பூமியின் அறையை பூங்குழலிக்கும் பூமிக்கும் முதலிரவு நடக்கும் என்று பேராசை பட்டு இவர்கள் பூக்களால் அந்த அறை முழுவதும் அலங்கரித்துக் கொண்டு இருக்க.... மறுபக்கம் பூமிநாதன் விரட்டியக்கார் விநாயகர் கோவில் வாசலில் நிற்க

பூங்குழலி - பூமி நான் போய் அர்ச்சனை கூடை வாங்குகிறேன்.... நீங்க காரை பார்க் பண்ணிட்டு வாங்க

பூமி - இரு குழலி இரண்டு பேரும் ஒன்னாவே போகலாம்

என்று பூமி சொன்னதும் பூமி காரை கோவில் ஓரத்தில் பார்க் செய்ய.....பூமியும் பூங்குழலியும் காரில் இருந்து இறங்கும் காட்சியை ஹெல்மெட் போட்டு கொண்டு bike இல் அமர்ந்தப்படி தூரத்தில் இருந்து இரண்டு கண்கள் நோட்டமிட்டு கொண்டே இருக்க.....இவர்கள் இருவரும் கோவிலுக்குள் நுழையும் முன் ஆட்டோக்காரர் ஜோதிமணி இவர்களை பார்த்தவர்

ஜோதி - தம்பி...என்னப்பா உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா

பூமி - அண்ணா நீங்க...உங்க பேரு ஜோதிமணி தானே...அண்ணே எப்படி இருக்கீங்க

ஜோதி - நல்லா இருக்கேன் பா நீ எப்படிப்பா இருக்க என்னப்பா உன் பொஞ்சாதியா இவுங்க

பூமி - ஆமா அண்ணே பேரு சித்திரப்பூங்குழலி இன்னைக்கு காலையில தான் கல்யாணம் நடந்துச்சு

ஜோதி - வாழ்த்துக்கள் பா வாழ்த்துக்கள் தங்கச்சிமா

பூங்குழலி - நன்றி அண்ணா

ஜோதி - உங்க ரெண்டு பேரோட ஜோடி பொருத்தம் ஆட்டோவும் பம்பரும் மாதிரி இருக்கு

பூமி - அண்ணா இப்படி ஒரு வார்த்தையில யாராலயும் வாழ்த்த முடியாது.

ஜோதி - ஏதோ இந்த ஆட்டோக்காரனுக்கு தெரிஞ்சது...

பூமி - வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க

ஜோதி - எல்லாரும் நல்லா இருக்காங்கப்பா...சரி சரி நேரத்தோடு நீங்க கோவிலுக்கு போயிட்டு வாங்க

பூமி - என்ன அண்ணா சவாரிக்கு நிக்கிறீங்களா

ஜோதி - ஆமாப்பா அங்கங்க ஆட்டோவை நிப்பாட்டுவேன் யார் சவாரிக்கு வராங்களோ ஏத்துக்கிட்டு போக வேண்டியதுதான்

பூமி - சரி அண்ணா நாங்க கோயிலுக்கு போயிட்டு வரோம்

என்று சொன்ன பூமியும் பூங்குழலையும் கோவிலுக்கு செல்லும் முன் இருவரும் அர்ச்சனை கூடையை வாங்கிக் கொண்டு இருந்த சமயம்

பூமி - குழலி உனக்கு இதுல என்ன பூ புடிக்கும்

பூங்குழலி - இதுல என்ன இருக்கு எல்லா பூவும் பிடிக்கும் தான்

பூமி - சரி பாட்டி இந்தாங்க காசு....என் குழலிக்கி பூ குடுங்க

பூங்குழலி - என்ன பூப்பா வேணும்...

பூமி - அதான் அவங்களே சொல்றாங்களே எல்லா பூவும் பிடிக்கும்னு என் குழலிக்கு எது நல்லா இருக்குமோ நீங்க அதையே குடுங்க

பாட்டி - இந்தாப்பா இது கதம்பம் உன் மனைவிக்கு ரொம்ப அழகா இருக்கும்.

பூமி - கொடுங்க பாட்டி....இந்தா குழலி பூ வச்சுக்கோ

பாட்டி - என்னப்பா...நீ சுத்தம் விவரம் இல்லாத ஆளா இருக்க உன் கையால உன் மனைவிக்கு வச்சு விடு

பூமி - பரவால்ல பாட்டி சினிமாலெல்லாம் வசனம் எழுதி கொடுத்து தான் பேசுறாங்கன்னு நினைச்சேன் உண்மையாவே நீங்க எல்லாம் பெரிய மனசுக்காரங்க தான் போல.. சரி பாட்டி உங்களுக்கு தாத்தா தலையில பூ வச்சி விட்டு இருக்காரா

பாட்டி - மீந்தப் பூவெல்லாம் கொண்டு போயிட்டு நாங்க தான் பா வச்சிக்கிட்டு சுத்துவோம்

பூமி - பாத்தியா குழலி பாட்டியும் தாத்தாவும் டெய்லி ரொமான்ஸ் தான் பாடுவாங்க போல

பூங்குழலி - சும்மா இருங்க பூமி

பூமி - நான் சும்மா இருந்தாலும் தாத்தா சும்மா இருக்க மாட்டாரு போல

பாட்டி - ஏன்பா இப்படி பண்ற இந்தா மனைவிக்கு உன் கையாலேயே பூ வச்சு விடு

என்று பாட்டி சொல்ல.....புன்னகை மலர்ந்த முகத்துடன் பூமிநாதன் தன் மனைவி பூங்குழலியின் கூந்தலில் பூக்களை சூட.......பூவின் மனத்தை விட அதிகமாக பூமிநாதனின் மனதில் உள்ள காதலின் வாசத்தில் நாளெல்லாம் வாசம் செய்ய ஆசைப்படும் பூங்குழலி பூக்களை ஏற்றுக்கொள்ள.... பூங்குழலியின் முகமும் பூக்களை விட அதிகமான பொலிவுடன் இருக்க.....இருவரும் சேர்ந்து கோவிலுக்குள் சென்றவர்கள் அர்ச்சனையை முடித்தபடி கோவில் தெப்பக்குளத்தில் அமர்ந்திருக்க

பூமி - are u ok குழலி

பூங்குழலி - ம் ok தான்.... ஏன் என்னாச்சு

பூமி - ரொம்ப tencsion ல இருக்குற போல

பூங்குழலி - ஹ்ம் ஹ்ம் அப்படி எல்லாம் இல்லையே.. சரி அந்த ஆட்டோ காரர்

பூமி - ம் அவர் இப்போ தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி பழக்கம்

பூங்குழலி - ஒ

பூமி - அன்னைக்கு ரசம் உன் கையில பட்டுடுச்சுனு ஒரு மிஸ் understanding வந்துச்சு இல்ல....

பூங்குழலி - ம்..

பூமி - அப்போ நான் இவர் ஆட்டோல ஏறி தான் சக்கரை விநாயகர் கோவிலுக்கு போய் உக்காந்து இருந்தேன்

பூங்குழலி - பூமி சார் ஏன் அங்க போனீங்க

பூமி - ம்.... ஏன் madame kku தெரியாதா

பூங்குழலி - தெரியாதே... சொன்னா தெரிஞ்சிக்கிறேன்

பூமி - ம்... என் பொஞ்சாதி என்னை வீட்டை விட்டு துரத்திட்டா

பூங்குழலி - ஐயையோ... உங்க பொண்டாட்டி ரொம்ப கெட்டவுங்க போல

பூமி - No No அவுங்க நல்லவுங்க தான்... but நான் தான் ஓவரா react பண்ணிட்டேன்

பூங்குழலி - 😍

பூமி - ஆனா ஒன்னு குழலி.... அன்னைக்கு நடந்த விஷயம் இன்னைக்கும் என் மனசுல ஏதோ ஒரு நெருடலை நிகழ்த்திகிட்டு தான் இருக்கு... இயல்பா உன்கிட்ட பேச முடியுது... but....

பூங்குழலி - வேற என்ன

பூமி - எப்படி சொல்றதுன்னு தெரியல

பூங்குழலி - பூமி.....

பூமி - ம்

பூங்குழலி - இந்த பூமியில் அடுத்த நொடி காத்து இருக்கும் நிகழ்வுகள் நமக்கு மகிழ்ச்சியை தரலாம்..ஒருவேளை சங்கடத்தையும் தரலாம்.. ஆனால் என்னை பொறுத்தவரை எப்போ உங்க கையாள என் கழுத்துல நீங்க மாங்கல்யத்தை அணிவிச்சீங்களோ அந்த நொடியில் இருந்து நான் மரணிக்கும் முடிவு வரை நம்மளுடைய எல்லா இன்பத் துன்பம்.. நல்லது கெட்டது.. சந்தோஷம் தூக்கம் இப்படி எல்லா இரண்டையும் நம்ம இருவரும் சேர்ந்து தான் கடந்து வரணும்..

பூமி - கண்டிப்பா குழலி.....

பூங்குழலி - சரி நேரமாகுது போகலாமா

பூமி - ம்.... போகும் போது நம்ம வீட்ல இருக்கிற எல்லோருக்கும் gift வாங்கிட்டு போகலாம்... தாத்தாவும் பாட்டியும் அவங்க சொந்த பேரனுக்கும் பேத்திக்கும் அன்பளிப்பு தர மாதிரி எவ்வளவு விலை உயர்ந்த பரிசை நமக்கு கொடுத்தாங்க..நம்ப அதற்கு பதிலாக அவர்களுக்கு கண்டிப்பா பெரிய விஷயமா ஏதாவது பண்ணனும்..

பூங்குழலி - ம் சரி....உங்க இஷ்டம்

என்று பூங்குழலியும் பூமியின் வார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தபடி இருவரும் கோவிலில் இருந்து வெளியே வர...

பூமி - இரு நான் கார் எடுத்துட்டு வரேன்

பூங்குழலி - இல்ல வாங்க நானும் உங்க கூடவே வரேன்....

பூமி - இல்ல குழலி அங்க பாரு ஒரே ரெஷா இருக்கு...நீ இங்க இரு நான் கார் எடுத்துகிட்டு இங்க வரேன்

பூங்குழலி - அட வாங்க பூமி இரண்டு பேரும் சேர்ந்தே போகலாம்

என்று சொன்னபடி பூமியும் பூங்குழலியும் காரை நோக்கி செல்லும் தருணத்தில் வேகமாக வந்த ஒரு பைக் பூமிநாதனை இடிக்க..........பூமிநாதன் பத்தடி தள்ளி போய் அம்மா என்று கத்தியபடி கீழே விழுந்த அதே தருணம்.....மீண்டும் இதே குரலில் பூங்குழலியும் அப்பா என்று கத்தியபடி கீழே விழ........

🙏மன்னிக்கவும் இந்த கதையின் கதை நகர்வு இப்படித்தான் நகரும்......கதையின் நகர்வை பொறுத்து அடுத்து வர போவரின் கதாபாத்திரங்களும் மாறி பிரதிபலிக்கும்.......... மீண்டும் விரைவில் சந்திப்போம்... உங்கள் நான் சக்தி 🔱

Continue Reading

You'll Also Like

135K 8.8K 61
இரு வேறு துருவங்கள் சங்கமிக்கும் புள்ளி காதல் ..another km story ,
28.2K 921 45
hi guys idhu enoda new story.... jaya paraksh than namma hero... awana JP nu solwam friends and awanoda amma elarum apdi than koopduwanga awan amm...
4.4K 296 12
cute, sweet, and a little cliché... the perfect combination!
7.6K 1.3K 33
சண்டை + சண்டை +சண்டை=💞 KM💞