🔱பூமியின் பூங்குழலி🔱

By Sakthriyan

8.6K 1.4K 1.1K

இயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕 More

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8
பாகம் 9
பாகம் 10
பாகம் 11
பாகம் 12
பாகம் 13
பாகம் 14
பாகம் 15
பாகம் 16
பாகம் 17
பாகம் 18
பாகம் 19
பாகம் 20
பாகம் 22
பாகம் 23
பாகம் 24
பாகம் 25
பாகம் 26
பாகம் 27
பாகம் 28
பாகம் 29
பாகம் 30
பாகம் 31
பாகம் 32
பாகம் 33
பாகம் 34
பாகம் 35
பாகம் 36
பாகம் 37
பாகம் 38
பாகம் 39
பாகம் 40
பாகம் 41
பாகம் 42
பாகம் 43
பாகம் 44
பாகம் 45
P❤️R❤️O♥️M❤️O
பாகம் 46
பாகம் 47
பாகம் 48
பாகம் 49
பாகம் 50

பாகம் 21

137 27 20
By Sakthriyan


❤️பூமியின்🔱பூங்குழலி❤️

❤️பாகம் 2️⃣1️⃣

பூமி சந்திரன் மற்றும் ராஜன் ஆகிய மூவரும் மாடியில் இருந்து கீழே இறங்க ... படிக்கட்டில் ராஜன் வழுக்கி கீழே விழுந்தவரின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டதும் ராஜன் அதே இடத்தில மயங்கி விழுந்தவரை பார்த்த பூமி "அப்பா" என்று அலற ....

சந்திரன் - டேய் ராஜா என்னடா என்னடா ஆச்சு

பூமி - அப்பா.... ஐயோ ராஜன் அப்பாக்கு தலையில ரத்தம்...

பூங்குழலி - என்ன பூமி என்னாச்சு.....

என்று கேட்டப்படி பூங்குழலி கீழே இறங்கியவள்

மாமா... அப்பாக்கு என்ன ஆச்சு...ஐயோ ரத்தம்...

என்று பூங்குழலியும் பூமியும் மாறி மாறி பதறி போய் ராஜனை பார்க்க.... ராஜனின் பின் தலை முழுதும் ரத்தம் கசிந்ததோடு மயங்கி நிலையில் படிக்கட்டில் விழுந்திருக்க

சந்திரன் - டேய் பூமி... ராஜனை தூக்குடா உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போகலாம்

பூமி - ஐயோ அப்பா இருங்க.....

பூங்குழலி - அப்பா அப்பா என்னை பாருங்க

சந்திரன் - அம்மாடி உன் அப்பாக்கு ஒன்னும் ஆகாது....பதறாத அம்மா

என்று சந்திரன் சொல்ல..... பூங்குழலி பதறியவள் ஒரு துணியை கொண்டு ராஜனின் தலையை இறுக்கி கட்டிவிட..... இவர்கள் மூவரும் ராஜனை பூங்குழலி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல....ராஜனுக்கு அங்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்க... பூங்குழலியும் செவிலியர் என்பதால் ராஜனுக்கு வைத்தியம் பார்க்கும் இடத்தில் அவளும் அவருடன் இருந்த நிலையில்

பூமி - என்னப்பா இது... ராஜன் அப்பாக்கு ஒன்னும் பிரச்சனை இருக்காது இல்ல

சந்திரன் - டேய் இருடா எனக்கும் ஒன்னுமே புரியல.....என்னடா இது....எவ்வளவு ரத்தம்.... அது அவன் வீடு டா....இதுவரைக்கும் எத்தனையோ தடவை அந்த படிக்கட்டுல ஏறி இறங்கி இருப்பான்...கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கணும்....ஐயோ என்ன இது இப்படி ஆச்சு

பூமி - அப்பா அவருக்கு ஒன்னும் ஆகக்கூடாதுப்பா எனக்கு ரொம்ப பயமா இருக்கு

சந்திரன் - இருடா இருடா பயப்படாத அதான் பூங்குழலியும் அவன் கூட இருக்கிறா இல்ல

என்று சந்திரன்.. பூமிக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருந்த சமயம் பூங்குழலி கண்களில் கண்ணீருடன் வெளியே வர அவளுடன் பெரிய மருத்துவர் வெளியே வந்தவர்

டாக்டர் - சீக்கிரம் யோசிச்சு சொல்லுமா

என்று சொன்னபடி பெரிய மருத்துவர் அவரின் அறைக்கு செல்ல

சந்திரன் - என்ன மா ராஜனுக்கு இப்ப எப்படி இருக்கு பயப்பட ஒன்றும் இல்லையே

பூமி - குழலி ராஜன் அப்பாக்கு பயப்பட ஒன்றும் இல்லையே....என்ன என்ன ஆச்சு ஏன் இப்படி தேம்பி தேம்பி அழற

என்று பூமிநாதனும் சந்திரனும் மாறி மாறி இவளை கேள்வி கேட்க...... வார்த்தைகள் தடைப்பட்ட நிலையில் பூங்குழலி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தவள்

பூங்குழலி - மாமா அப்பாக்கு.....அப்பாக்கு ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க...

சந்திரன் - என்னம்மா சொல்ற

பூங்குழலி - ஆமா மாமா அப்பாக்கு விழுந்த வேகத்துல ஸ்கல் ஓபன் ஆயிருக்கு ஆபரேஷன் பண்ணியே தீரனும்..

பூமி - என்ன சொல்ற குழலி ஆபரேஷனா..

பூங்குழலி - ஆமா பூமி வேற வழி இல்ல...

சந்திரன் - அழாதம்மா....

பூமி - குழலி அழாத தைரியமா இரு..

பூங்குழலி - நான் எத்தனையோ பேருக்கு எவ்வளவோ வைத்தியம் பார்த்து இருக்கிறன் .. ஆனா அப்பாவை இந்த நிலைமையில் பார்த்ததும்....

.
.
.

சந்திரன் - அழகாத டா மா ....ராஜனுக்கு ஒன்னும் ஆகாது.... ஆபரேஷன் பண்ணா அவன் நல்லா இருப்பான்னா கண்டிப்பா நம்ம ஆபரேஷன் பண்ணிடலாம்.

பூங்குழலி - இல்ல மாமா அப்பாவுடைய வயசு.. அவருக்கு இருக்குற சுகர்.. இதெல்லாம் வச்சு பார்க்கும்போது 50 க்கு 50 சதவீதம் சான்ஸ் தான் இருக்கு....

என்று பூங்குழலி அழுது கொண்டே சொன்னவளை தேற்றும் விதமாக சந்திரன் அவளை ஆறுதலாக அரவணைக்க..... பூமியும் சந்திரனும் பூங்குழலியும் ராஜனின் நிலையைக் கண்டு பதறியப்படி வாசலில் நின்று இருக்க....நேரம் சில நொடிகள் கடந்த நிலையில் தன் கண்களை துடைத்துக்கொண்ட பூங்குழலி... தீர்க்கமான குரலில்..

பூங்குழலி - மாமா நம்ப அப்பாக்கு ஆபரேஷன் பண்ணிடலாம்..

சந்திரன் - என்னமா சொல்ற

பூங்குழலி - ஆமா மாமா... நம்ம delay பண்ற ஒவ்வொரு நிமிஷமும் கஷ்டம் தான் நம்ம அப்பாக்கு ஆபரேஷன் பண்ணிடலாம்

சந்திரன் - சரிமா நீ சொன்னா சரிதான்

பூமி - செகண்ட் சாய்ஸ் எதுவுமே இல்லையா குழலி..

பூங்குழலி - இல்ல பூமி ...டாக்டர் கொடுத்த டைம் முடிஞ்சிடுச்சு....அப்பாக்கு நம்ம ஆபரேஷன் பண்றது தான் பெஸ்ட்

என்று பூங்குழலி திடமாக சொல்ல...வேறு வழி இல்லாமல் ராஜனுக்கு அன்றைய தினம் மாலை நேரம் ஆபரேஷன் செய்ய முடிவு செய்தவர்கள் அதற்கு தேவையான பணத்தை சந்திரனே மருத்துவமனையில் கட்ட.....சில மணித்துளிகள் கடந்த நிலையில் ராஜனுக்கு தலையில் ஆப்ரேஷன் நல்லபடியாக நடந்து முடிய.....அவருடனே பூங்குழலியும் இருந்த நிலையில் ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து பெரிய டாக்டரும் பூங்குழியையும் வெளியே வர..

சந்திரன் - அம்மாடி....ராஜன்க்கு ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சுதா...பயப்பட எதுவுமில்லையே

பூங்குழலி - இல்ல மாமா பயப்பட வேண்டாம்... அப்பாவுக்கு சரியாயிடும்.. இருங்க டாக்டர் சொல்லட்டும்

டாக்டர் - அதான் நீயே சொல்லிட்டியே சித்ரா... பயப்பட தேவை இல்ல.. உங்க அப்பா காலையில கண்விழிச்சிடுவாரு

என்று சொன்ன டாக்டரை கை எடுத்து சந்திரன் கும்பிட.....பூங்குழலி கவலையாக நின்றிருந்தவள் அருகில் சென்ற பூமி

பூமி - கவலைப்படாத குழலி...ஏதோ பெருசா ஆக வேண்டியது இந்த மட்டுக்கு ஆச்சின்னு நம்ப நிம்மதி அடைஞ்சிக்க வேண்டியதுதான்

பூங்குழலி - இல்ல பூமி அப்பா.... அப்பாக்கு மட்டும் ஏதாவது ஆகி இருந்தா

பூமி - அதான் ஒன்னும் ஆகலையே...ராஜன் அப்பா நல்லா இருப்பார்.. ப்ளீஸ் நீ அழாதே.. நீ இரு நான் போய் உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்...

பூங்குழலி - இல்ல பூமி எதுவும் வேண்டாம் அப்பா கண் விழிக்கிற வரைக்கும் நான் பச்ச தண்ணி கூட குடிக்க மாட்டேன்

பூமி - என்ன குழலி இது...நீயே நர்ஸ் தானே.. உனக்கு தெரியும் இல்ல அவருடைய கண்டிஷன்....அவர் நல்லா இருப்பார்...நீ அழாம இரு நான் போய் தண்ணி வாங்கிட்டு வரேன்..

என்று சொன்ன பூமி கேன்டினுக்கு செல்ல.... பூங்குழலி கண்களில் கண்ணீர் வற்றியப்படி அமர்ந்து இருக்க..

சந்திரன் - அம்மாடி அழாதம்மா அவனுக்கு உன் மேல பாசம் அதிகம்.... அவன் எமன் கிட்ட போராடி கூட என் பொண்ணு உடைய கல்யாணத்தை பார்க்காம நான் வரமாட்டேன்னு சொல்லி திரும்பி வந்துடுவான் புரியுதா அழாதே டா

பூங்குழலி - ஆமா மாமா..
அப்பாவுக்கு நான்..... நான் ஒருத்தி நல்லா இருந்தா போதும்....அவர் அதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவாரு.. ஏன் அவருடைய அப்பா அம்மா தங்கச்சி புள்ளனு எனக்காக அவருடைய குடும்பத்தையே வெறுத்தவர் மாமா அவர்...அவருக்கு நான் எதுவுமே செய்யல..அவர் ஆசைப்பட்டது ஒன்னே ஒன்னு தான்....பூமியை நான் கல்யாணம் பண்ணனும்... நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழறத அவரு கண் குளிர பாக்கணும்.. அந்த ஒரு ஆசை மட்டும் தான் அவருக்கு

சந்திரன் - அழாதம்மா...அவன் ஆசை கண்டிப்பா நிறைவேறும்

பூங்குழலி - இல்ல மாமா....நாளைக்கு எங்களுக்கு நிச்சயதார்த்தம்... இந்த நேரத்துல அப்பாக்கு ஆபரேஷன்

சந்திரன் - விடுமா எல்லாம் நல்லதுகுன்னு நினைத்து போம்.....நாளைக்கு நிச்சயம் நடக்கலைன்னா என்ன...இன்னொரு நாள் வெச்சிக்கிட்டா போச்சு.. நீ முதல் அழாதே கண்ண துடை

என்று சந்திரன் பூங்குழலிக்கு ஆறுதல் சொல்ல....பூமி கையில் தண்ணீர் மற்றும் பிஸ்கட் பாக்கெட் உடன் மேலே வந்தவன்

பூமி - இந்தா குழலி பிஸ்கட் சாப்பிட்டுட்டு தண்ணீர் குடி

பூங்குழலி - இல்ல பூமி எனக்கு வேணாம்

பூமி - சொல்றேன் இல்ல இந்தா பிடி...அப்பா நீங்களும் சாப்பிடுங்க

சந்திரன் - இல்ல டா வேண்டாம்

பூமி - என்னப்பா நீங்க.. சின்ன பிள்ளை மாதிரி...இப்ப ராஜன அப்பாக்கு என்ன ஆச்சு.. நீங்க வேணா பாருங்க காலைல அவர் எந்திரிச்சு நம்ம கிட்ட தெம்பா பேசுவாரு... அவரு பேசும் போது நீங்க தெம்பா இருக்கணும் இல்ல இந்தாங்கப்பா ஆளுக்கு ரெண்டு பிஸ்கட் சாப்பிட்டுட்டு தண்ணி குடிங்க பிடிங்க

என்று பூமி வலுக்கட்டாயமாக அவர்கள் கையில் பிஸ்கட் பாக்கெட்டை திணிக்க.. கடமைக்கு என்று இருவரும் ஒரு பிஸ்கட்டை சாப்பிட்டவர்கள் தண்ணி குடித்தபடி மருத்துவமனை அறையின் வெளியே கவலையுடன் அமர்ந்திருக்க....மறுநாள் காலை டாக்டர் ரவுண்ட்ஸ்க்கு வந்தவர் ராஜனை பார்க்க..ராஜன் இன்னும் மயங்கிய நிலையில் இருக்க

சந்திரன் - டாக்டர் ஏன் இன்னும் ராஜன் கண் விழிக்கல

டாக்டர் - இருங்க...சராசரி ஒரு ஏழு மணி நேரமாவது அவர் மயக்கத்திலே இருப்பாரு

சந்திரன் - ஆனா ஆப்ரேஷன் பண்ணி எட்டு மணி நேரம் ஆயிடுச்சு

டாக்டர் - ஒவ்வொருத்தவங்க உடல் நிலையை பொறுத்து தான் அவங்களுக்கு கண் முழிப்பு வரும்...கொஞ்சம் காத்திருங்க

என்று டாக்டர் சொல்லிக் கொண்டிருந்த நிலையிலேயே ராஜன் தன் கண்களை திறக்க.....அவர் கண் முன் கண்கள் கலங்கிய நிலையில் நின்றிருந்த சித்திரப் பூங்குழலையும் தன் நண்பன் சந்திரன் மற்றும் தன் பெண்ணிற்கு மாப்பிள்ளையாக வரப்போகிறார் என்று அவர் நம்பும் பூமிநாதனும் நின்றிருக்க...

சந்திரன் - இதோ இதோ ராஜன் கண் முழிச்சிட்டான்....ராஜா உனக்கு ஒன்னும் இல்லடா... பயப்படாத

டாக்டர் - இருங்க இருங்க அவர்கிட்ட கொஞ்சம் பொறுமையா பேசுங்க அவரு உணர்ச்சிவசப்படக் கூடாது

பூமி - அப்பா உங்களுக்கு ஒன்னும் ஆகாதுபா உங்களுக்கு ஒன்னும் இல்லப்பா

பூங்குழலி - அப்பா என்னப்பா இது ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க பாத்து இறங்க கூடாதா... உங்களுக்கு எதாவதுனா நான் என்ன பண்றது

என்று பூங்குழலி அழ.....

டாக்டர் - சித்ரா இருங்க ஏன் இப்படி உணர்ச்சிவசப்படுறீங்க... உங்களுக்கு தெரியாதா என்ன..இந்த மாதிரி சூழ்நிலையில அவரு ரொம்ப ஆவேச பட கூடாது... முதல்ல அவர்கிட்ட எல்லாரும் தைரியமா பேசுங்க

சந்திரன் - இல்லை டாக்டர்  இவனை இந்த நிலையில பார்க்கும்போது

டாக்டர் - எனக்கு புரியுது....ஆனா எப்படியும் அவர் இந்த வயசுலயும் இந்த ஆபரேஷனை தாங்கக்கூடிய சத்துல இருக்காருல்ல அதுக்கே நீங்க கடவுளுக்கு நன்றி சொல்லுங்க.. என்ன மிஸ்டர் ராஜன் இப்போ எப்படி இருக்கு

ராஜன் - ம்.

டாக்டர் - சரி சரி ஸ்டைன் பண்ணாதீங்க.. சித்ரா உங்க அப்பாவ நீயே பக்கத்துல இருந்து பாத்துக்கோ...நான் ஈவினிங் வந்து பார்க்கிறேன்

என்று சொன்ன டாக்டர் ராஜனின் சிகிச்சை அறையில் இருந்து வெளியே செல்ல

ராஜன் (பொறுமையாக ) - என்னடா ரொம்ப பயமுறுத்திட்டேனா

சந்திரன் - பின்ன இல்லையா...ஏண்டா இப்படி பண்ற...உன் வீடு தானே....உன் வீட்டு படிகட்டு தானே... யார நினைச்சுகிட்டு கீழே இறங்குன....நீ வெட்டத்தை பார்த்து வடிவேலு மாதிரி கீழே விழுந்து கிடந்ததும் எனக்கு அல்லு விட்டுப் போயிடுச்சு தெரியுமா

பூமிநாதன் - அப்பா சும்மா இருங்க.... ராஜன் அப்பா நீங்க எப்படி இருக்கீங்க

ராஜன் - எனக்கு ஒன்னும் இல்ல மாப்ள நீங்க எல்லாம் இருக்கும்போது எனக்கு என்ன ஆகப்போகுது பின் தலை தான் கொஞ்சம் வலிகுது

பூங்குழலி - அப்பா அப்பா இருங்க ஸ்டைன் பண்ணாதீங்க.. உங்களுக்கு தலையில ஆபரேஷன் பண்ணி இருக்கு..இந்த மாதிரி நேரத்துல நீங்க ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பேசக்கூடாது புரியுதா

என்று பூங்குழலி சொன்னதும் ராஜன் கண்கள் கலங்க.....

சந்திரன் - டேய் என்னடா ஏன்டா கண்ணு கலங்குற.

ராஜன் - இன்னைக்கு என் மகளுக்கும் உன் மகனுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா... என்னுடைய ஆசையை நானே கெடுத்துக்கிட்டேனே

சந்திரன் - இப்ப என்ன இன்னைக்கு நடக்கலனா இன்னொரு நாள் நடக்க போகுது... அதுக்கு நீ கண் கலங்குவியா.. உனக்கு ஒன்னும் ஆகாம நீ இப்போ இவ்வளவு தெம்பா எங்க கிட்ட பேசுறியே இதுவே எங்களுக்கு சந்தோஷம்டா

ராஜன் - இல்லடா...பூமி மாப்பிள்ளைக்கும் பூங்குழலிக்கும் எப்படியாவது இன்னைக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிடனும்ன்னு நான் வேண்டாத கோயில் இல்லை

சந்திரன் - இப்ப என்னடா உனக்கு பிரச்சனை நிச்சயதார்த்தம் தானே கூடிய சீக்கிரம் பண்ணலாம் முதல நீ கண்ணத்
துட....பூங்குழலி,பூமி உங்க ரெண்டு பேரையும் இவன் பார்த்தா இப்படித்தான் புலம்பிக்கொண்டே இருப்பான்.... பூமி நீ பூங்குழலியை கேண்டீன்க்கு அழைத்து கொண்டு போய் ஏதாவது வாங்கி கொடு

பூங்குழலி - இல்ல மாமா நான் அப்பாகிட்டே இருக்கிறேன்... எனக்கு எதுவும் வேண்டாம்.. நீங்களும் பூமியும் வீட்டுக்கு போங்க நேத்துல இருந்து நீங்க இங்கேயே இருக்கீங்க

சந்திரன் - என்னம்மா நீ..என் நண்பனை இப்படி விட்டுட்டு நான் எப்படி வீட்டுக்கு போவேன்..பேசாம நீங்க ரெண்டு பேரும் போங்க...நான் என் நண்பன் கூட இருக்கேன்...டேய் பூமி நீ போயிட்டு வரும்போது எனக்கு ஒரே ஒரு செட் மாத்திக்க டிரஸ் மட்டும் எடுத்துட்டு வா..இதோ இங்க ரெஸ்ட் ரூம் இருக்கு இல்ல நான் இங்கேயே குளிச்சிட்டு ட்ரெஸ் மாத்திக்கிறேன்

பூங்குழலி - மாமா சொன்னா கேளுங்க.. நீங்க போங்க மாமா.. டாக்டர் கூட சொன்னாரு இல்ல நானே அப்பாவை பார்த்துக்கிறேன்

பூமிநாதன் - சரி சரி இப்போ என்ன நீங்க ரெண்டு பேரும் இங்கே இருந்து வரப்போவதில்லை அவ்வளவுதான நானே வீட்டுக்கு போய் என் அப்பாவுக்கு மாத்திக்கிறதுக்கு ட்ரெஸ்ஸும் என் அம்மாவோட ஒரு புடவையை குழலிக்கும் எடுத்துட்டு வரேன் போதுமா

சந்திரன் - இல்ல இல்ல பூமி.... நான் சொன்னா கேளு...அம்மாடி நீ பூமி கூட போ... உன் வீட்டுல போட்டது போட்டபடி இருக்கு எல்லாத்தையும் சரி பண்ணிட்டு குளிச்சிட்டு டிரஸ் மாத்திக்கிட்டு ரெடியா இரு... பூமி நம்ம வீட்டுக்கு போயிட்டு எனக்கு டிரஸ் எடுத்துக்கிட்டு மறுபடியும் வரும்போது உன்னை அழைத்துக்கொண்டு இங்கே வருவான்...

என்று சந்திரன் சொல்ல...அவர் சொல்லுக்கு கட்டுப்பட்ட பூமியும் பூங்குழலியும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்ல

சந்திரன் - டேய் என்னடா என்ன ஆச்சு

ராஜன் - இல்லடா என் பொண்ணு நிச்சயம் நடக்கும் என்று நான் எவ்வளவு நிம்மதியா இருந்தேன் தெரியுமா? நான் ஒரு பாவி டா எந்த ஒரு விஷயத்தையும் எனக்கு நிம்மதியே தராது.. இழக்கக்கூடாத நேரத்தில் என் பொஞ்சாதிய இழந்து நடக்க கூடாத விபரீதம் எல்லாம் என் பொண்ணுக்கு என்னாலையே நடந்து இப்படி என்னால பூங்குழலி வாழ்க்கை எவ்வளவோ கெட்டுப் போயிடுது டா

சந்திரன் - டேய் நீ என்ன பைத்தியமா உன் மக நல்லா இருப்பாடா... இன்னைக்கு சொல்றேன் எந்த சூழ்நிலை வந்தாலும் என் மகன் உன் பொண்ணு கழுத்துல தாலி கட்டுவாண்டா...

ராஜன் - இல்லடா எனக்கு நம்பிக்கை இல்ல...ஏதோ அபசகுனமா இருக்கிற மாதிரி இருக்கு..

சந்திரன் - டேய் தேவையில்லாததெல்லாம் பேசாத.. நீ கொஞ்சம் நேரம் அமைதியா இரு

என்று சந்திரன் ஆறுதல் சொல்ல... மறுபக்கம் பூங்குழலியை பூமிநாதன் அவள் வீட்டில் இறக்கி விட்டவன் மீண்டும் அவன் வீட்டிற்கு போக... அன்றைய தினம் 2 மணி நேரம் கடந்த நிலையில் பூமிநாதன் மீண்டும் பூங்குழலியின் வீட்டிற்கு வந்தவன் வாசலிலேயே நின்றபடி பூங்குழலியை அழைக்க

பூங்குழலி - வாங்க பூமி.... உள்ள வாங்க...ஒரு பத்து நிமிஷம் அப்பாவுக்கும் டீ மட்டும் போட்டு எடுத்துக்கிட்டு வந்துடறேன்

என்று பூங்குழலி சொல்ல...பூமிநாதன் பூங்குழலியின் வீட்டிற்குள் வந்தவன் சோபாவில் அமர்ந்தபடி தன் கைபேசியை பார்த்துக் கொண்டிருந்த சமயம் அங்கே டிப்பாய் மேல் இருந்த பூங்குழலியின் கைபேசி மணி ஒலிக்கும் சத்தத்தை கேட்டவன்

பூமி - குழலி உனக்கு போன் வருது.....

என்று அவன் சொன்னதும் இவள் வேகமாக வந்தவள் பதறியபடி கைபேசியை எடுத்து ஹலோ என்று சொல்ல... மறுப்பக்கம்

என்னம்மா.... இன்னைக்கு உனக்கும் சந்திரன் மகனுக்கும் நிச்சயதார்த்தம் என்று சொன்னீங்க... நானும் பாட்டியும் சந்திரன் வந்து எங்களை அழைத்துக்கொண்டு போவார் என்று காத்துக்கிட்டு இருக்கோம் ஆனா அவன் வரலையே...

என்று பூங்குழலியின் தாத்தா தேவராஜ் கேட்ட சமையம் பூங்குழலி தேம்பித் தேம்பி அழத் தொடங்க

பூமிநாதன் -  ஏய் குழலி என்ன ஆச்சு..யார் போன்ல..ஏன் அழற குழலி போனை குடு

பூங்குழலி - இல்ல அது.....போன்...

பூமி - போனை தா குழலி

என்று சொன்ன பூமிநாதன் பூங்குழலியின் கைபேசியை காதில் வைத்தபடி

ஹலோ யார் பேசறது

என்று பூமி கேட்க... மறுபக்கம் தேவராஜ் அவரின் கைபேசியை தன் மனைவி தேவியிடம் தர.....

பூமி - ஹலோ யாருங்க பேசுறது

தேவி -  நீங்க யார் பேசுறது......

பூமி - நான் பூமிநாதன் பேசுறேன்..... Mr.சந்திரனுடைய மகன்....பூங்குழலியை கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை... நீங்க யாரு பேசுறது

தேவி - தம்பி பூமி...நான் தேவி...தேவி பாட்டி பேசுறேன்பா

பூமி - தேவி பாட்டியா....... ஒ...பாட்டி நீங்க... நீங்களா எப்படி இருக்கீங்க தாத்தா எப்படி இருக்காரு..

தேவி - நாங்க இருக்கறது இருக்கட்டும் பா... என்னப்பா ஆச்சு... உன் நிச்சயத்துக்கு நாங்க கண்டிப்பா வரணும்னு சொல்லி உன் அப்பாவ எல்லாம் அனுப்புறேன்னு சொன்ன... நானும் தாத்தாவும் காத்திருக்கிறோம்...ஆனால் உங்க அப்பா இன்னும் வரலையே...ஏன்

பூமி - இல்ல பாட்டி இன்னைக்கு நிச்சயம் நடக்கல... நின்னுடுது

தேவி - என்னப்பா சொல்ற

பூமி - ஆமா பாட்டி குழலி உடைய அப்பா ராஜன்...

தேவி - என்ன அவனுக்கு என்ன ஆச்சு

பூமி - இல்ல அவரு படிக்கட்டுல இருந்து நேத்து மதியானம் கீழே விழுந்து மண்டை உடைந்து.. அவருக்கு நேத்து சாய்ங்காலம் உடனே ஆபரேஷன் பண்ணிட்டோம் பாட்டி

தேவி - ஐயோ என்னப்பா சொல்ற ஐயோ ராஜனுக்கு ஆபரேஷனா...

பூமி - பாட்டி பாட்டி இருங்க ஏன் பதறுறீங்க.. அவர் இப்ப நல்லா இருக்காரு...நேத்தே ஆபரேஷன் முடிஞ்சிடுச்சு...இன்னைக்கு காலைல அவர் கண் விழித்து எங்ககிட்ட பேசிட்டாரு....

தேவி - என்ன பா இது..... உயிருக்கு எதாவது

பூமி - ஐயோ பாட்டி அவரு நல்லா இருக்க போய் தான் நானும் பூங்குழலையும் அவருக்கு மாற்று துணி எடுக்க வந்திருக்கோம்..

என்று பூமி சொல்ல தேவி கண்களில் கண்ணீர் கசிந்தபடி கையில் கைபேசியுடன் நின்று இருக்க

தேவராஜ் - என்னம்மா என்ன ஆச்சு ஏன் அழற...

தேவி - ஏங்க ராஜன் படிக்கட்டிலிருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு ஆபரேஷன் நடந்திருக்காம்...

தேவராஜ் - ஐயோ என்னம்மா என்னம்மா சொல்ற...

தேவி - இருங்க பதறாதீங்க

என்று தேவி தன் கணவரிடம் தன் மகன் அடிபட்ட விஷயத்தை சொல்ல..தேவராஜ் பதறிய நிலையில் கண்கள் கலங்கி தன் மகனுக்கு என்ன ஆனது என்று கவலையிலிருந்த சமயம்

பூமிநாதன் - ஹலோ பாட்டி லைன்ல இருக்கீங்களா

தேவி - தம்பி அவரை எந்த ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கீங்க

பூமி --இங்க தான் பாட்டி LM மருத்துவமனை.....பாட்டி நீங்க பதறாதீங்க ராஜன் அப்பாக்கு ஒன்னும் ஆகல

தேவி - சரிப்பா உடனே நானும் தாத்தாவும் அங்க வந்து அவரை பார்க்கிறோம்

பூமி - நீங்க எப்படி வருவீங்க...நீங்க அவசரப்படாதீங்க அவருக்கு பயப்பட ஒன்னும் இல்ல

தேவி - இல்லப்பா நாங்க... நாங்க நேர்ல வரோம்

என்று பதறியபடி தேவி போனை கட் செய்ய... பூமிநாதன் பூங்குழலியின் கையில் cell போனை தந்தவன்

பூமி - பரவாயில்ல குழலி.. இந்த உலகத்துல மனிதாபிமானம் இருக்குது தான்

பூங்குழலி - என்ன சொல்றீங்க

பூமி  - இல்ல ஒரே ஒரு நாள் தான் ராஜா அப்பாவை அந்த தாத்தாவும் பாட்டியும் பார்த்தாங்க.. ஆனா அவருக்கு அடிபட்டிருக்குன்னு சொன்னதும் அவங்க உடனே ஹாஸ்பிடலுக்கு வரேன்னு சொல்றாங்க.. அவங்க ரொம்ப கிரேட் இல்ல

பூங்குழலி - ம் ஆமா

பூமி - சரி சரி அவங்க வேற ஹாஸ்பிடலுக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க பாவம் எப்படி அந்த தாத்தாவை அழைச்சுக்கிட்டு வருவாங்க... பேசாம அவங்க வீடு எங்க இருக்குன்னு கேட்டு நம்ப வேணும்னா அவங்கள அழைச்சுக்கிட்டு போகலாமா

பூங்குழலி - இல்ல அது வந்து..

பூமி - இரு குழலி நான் அவங்களுக்கு போன் பண்ணி அவங்க வீடு எங்க இருக்குன்னு கேட்கிறேன்.... நம்மளே அவங்கள அழைச்சுட்டு போலாம்

என்று சொன்ன பூமி அவர்களின் போன் நம்பரை யோசிக்க....சட்டென்று

பூமி - ஆமா உன்னுடைய போன் நம்பர் அவங்களுக்கு எப்படி தெரியும்?

பூங்குழலி - அது அது வந்து

பூமி - ஓ அன்னைக்கு பேசின கொஞ்ச நேரத்துல நீ உன் போன் நம்பர் முதல் கொண்டு எல்லாத்தையும் கொடுத்துட்டியா

பூங்குழலி -🙄

பூமி - ஆமா அந்த பாட்டி பார்க்க ரொம்ப நல்லவங்களா இருக்கிறாங்க...அவங்க கிட்ட பேசும்போது எனக்கே எங்க அம்மா கிட்ட பேசுற மாதிரி தான் இருந்துச்சு... பாரு நம்ம கூப்பிட்ட ஒரு வார்த்தைக்காக நம்ம நிச்சயத்துக்கு வருவதற்கு கிளம்பி இருந்திருக்காங்க...சரி சரி அந்த போனுக்கு நீ மறுபடியும் போன் பண்ணு

என்று பூமிநாதன் சொல்ல...பூங்குழலி சூழ்நிலை கைதியாக தன் பாட்டியை மீண்டும் தன் கைபேசி எண்ணில் இருந்து அழைக்க

தேவி -  ஹலோ.....ஹலோ சொல்லுமா

பூமி - ஹலோ பாட்டி நான் பூமி பேசுறேன்

தேவி - தம்பி சொல்லுப்பா

பூமி - நீங்க கிளம்பி ரெடியா இருங்க இப்போ நானும் பூங்குழலியும் ராஜன் அப்பாவை பார்க்க தான் ஹாஸ்பிடலுக்கு போறோம் நானே வந்து உங்கள அழைச்சிட்டு போறேன் உங்க வீடு எங்க இருக்கு

தேவி - என் வீடு அது

பூங்குழலி - அவங்க வீடு எங்க இருக்குன்னு எனக்கு தெரியும்

பூமி - உனக்கு தெரியுமா..... ஓ பாட்டி உன்கிட்ட அட்ரஸ் சொல்லி இருக்காங்களா

பூங்குழலி - ம் ஆமா என்கிட்ட சொல்லி இருக்காங்க

பூமி - ஓகே பாட்டி அப்ப நீங்களும் தாத்தாவும் கிளம்பிருங்க.. நானும் பூங்குழலியும் வந்து உங்களை அழைச்சிட்டு போகிறோம்

என்று பூமிநாதன் சொன்னவன் பூங்குழலியை அழைத்துக்கொண்டு அவள் சொன்ன முகவரியில் உள்ள ராஜனின் தாய் தந்தை தேவி மற்றும் தேவராஜின் இல்லத்தின் வாசலில் போய் வண்டியை நிறுத்த..

பூமிநாதன் - ஆங் குழலி...இந்த இடத்துல தானே நீ ஒரு தடவை வண்டியை நிறுத்திட்டு பக்கத்துல இருக்குற ஹாஸ்பிட்லக்கு உன் பிரண்டை பாக்குறதுக்கு போன

பூங்குழலி - ம் ஆமா....

பூமி - ok ...இங்க அவங்க வீடு எங்க இருக்கு

பூங்குழலி - அதோ வாசல்ல நிக்கிறாங்க பாருங்க..

என்று பூங்குழலி சொல்ல... பூமி தேவியையும் தேவராஜையும் தன் காரை நோக்கி அழைத்து வர சென்றவன்

பூமி - பாட்டி எப்படி இருக்கீங்க

தேவி - இருக்கேன்பா ராஜனுக்கு ஒன்னும் பிரெச்சனை இல்லையே

தேவராஜ் - ராஜன் எப்படிப்பா இருக்கான்..

பூமி - தாத்தா தாத்தா ராஜன் அப்பா இப்போ நல்லா இருக்காரு.. தயவுசெய்து நீங்க பதறாதீங்க... வாங்க நம்ம ஹாஸ்பிடலுக்கு போகலாம்.

என்று சொன்னவன் தேவராஜையும் தேவி பாட்டியையும் தன் காரை நோக்கி அழைத்து வர..... சித்திரப் பூங்குழலி காரில் இருந்து இறங்கியவள் தன்னை மறந்து தன் பாட்டியை பார்த்து தன் தந்தைக்கு அடிபட்ட வேதனையில் அவர்களை கட்டிப்பிடித்து அழ தொடங்க..தேவியும் சூழ்நிலையை மறந்தவர்

தேவி - அழாதம்மா உன் அப்பாக்கு ஒன்னும் ஆகாது மா.. என் மவன் நல்லா இருப்பான் அவன் 100 வயசுக்கு நல்லா இருப்பாமா

என்று பாட்டி தன்னை மீறி வார்த்தையை விட.. பூமிநாதன் இவர்கள் இருவரின் பாச பிணைப்பை பார்த்துக் கொண்டிருந்தவன் சிலை என நின்று இருக்க.. நிலைமையை உணர்ந்த தேவராஜ்

சரி சரி ஹாஸ்பிடலுக்கு போகலாம் வாங்க...
என்று சொன்னதும் பூங்குழலி தேவி பாட்டியை காரில் ஏற சொல்ல....பூமிநாதன் தேவராஜை காரில் ஏற்ற...இவர்கள் அனைவரும் சில நிமிடங்களில் ராஜனை சேர்த்திருக்கும் மருத்துவமனைக்கு செல்ல

பூமி - குழலி நீ பாட்டியை அழைச்சுக்கிட்டு போ நான் தாத்தாவை அழைச்சிட்டு வரேன்

என்று சொன்னவன் தேவராஜை நான்கு சக்கர இருக்கையில் அமர வைத்தவன் வண்டியை தள்ள போன சமயம் பின் இருந்து ஒருவன்..

🧔 - சார் இது ஆம்புலன்ஸ் நிறுத்துற place... உங்க காரை வேற இடத்துல பார்க் பண்ணுங்க..

பூமி - குழலி நீ தாத்தாவை அழைச்சுக்கிட்டு போ....பாட்டி நீங்க குழலி கூட போங்க நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன்

என்று சொன்ன பூமி தன் காரை எடுக்க செல்ல......

சித்திரப்பூங்குழலி - பாட்டி அப்பாக்கு.... அப்பாக்கு......

தேவராஜ் - என்னம்மா.....உங்க அப்பனுக்கு என்னம்மா ஆச்சு...

பூங்குழலி - அப்பா படிக்கட்டிலிருந்து கீழே விழுந்து தலையில அடிபட்டு நேத்து நைட்டு அப்பாவுக்கு ஆபரேஷன் பண்ண வேண்டியதுதா போச்சு பாட்டி

தேவி - என்னமா இது அவனுக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்குது.....அவன் பாதி டென்ஷனாகி அவன் உடம்பை கெடுத்துக்குறான்......

பூங்குழலி - சரி சரி பாட்டி.. நீங்க வாங்க..பூமி வரதுக்கு முன்னாடி அப்பா கிட்ட நீங்க பேசுங்க வாங்க

என்று சொன்னவள் வேகமாக இவர்களை ராஜன் இருக்கும் அறைக்கு அழைத்துச் செல்ல...ராஜனை அந்த நிலைமையில் பார்த்ததும் தன் கோபத்தை மறந்த தேவி பாட்டி  ராஜனை கட்டி அணைத்தவர்

தேவி - டேய் என்னடா இது... என்னடா தலையில இவ்ளோ பெரிய கட்டு.. பாவி பயலே பார்த்து இருக்கக் கூடாதா.. உனக்கு ஏதாவது ஒன்னுனா நாங்க என்னடா பண்றது

என்று தேவி தன்னை மீறி பாசத்தை பொழிய..... தேவராஜ் கால் நடக்க இயலவில்லை என்றாலும் இருக்கையில் அமர்ந்தபடியே கண்கள் கலங்கியபடி தன் மகனை பார்த்து அழுதவர்

தேவராஜ் - என்னைப்பா ராஜன்.... என்ன இதெல்லாம் இப்போ எப்படி இருக்க

ராஜன் - போதும் நிறுத்துங்க.. உங்களை யார் இங்க வர சொன்னது..ஏய் பூங்குழலி இவங்க எதுக்காக இங்க வந்தாங்க.. ஐயோ மாப்பிள்ளை எங்க...அவர் மட்டும் இவுங்கள பார்த்தா என்ன ஆகுறது

சந்திரன் - டேய் வாய மூடுடா... மனுஷனடா நீ.. உனக்கு என்ன ஆச்சு ஏதாச்சுன்னு உன் அப்பா அம்மா பதறிப் போய் வந்திருக்காங்க இப்ப போய் மாப்பிள்ளை எங்க மண்ணாங்கட்டி எங்கன்னு கேட்டுகிட்டு இருக்க..

ராஜன் - நீ வாய மூடு.. இன்னைக்கு என் பிள்ளை நிச்சயம் நின்னுச்சுன்னா அதுக்கு காரணமே இவங்களுடைய வயித்தெரிச்சல் தான்

தேவி - என்னப்பா சொல்ற..எங்க வயித்தெரிச்சல் உன் பிள்ளையுடைய விஷேஷத்தை நிறுத்துச்சா..

ராஜன் - ஆமா...ஆமா..ஆமா... என் மகளின் நிச்சயம் நின்னதுக்கு நீங்க எல்லாரும் தான் காரணம்....முதல்ல நீங்க வெளியே போங்க...

என்று தன்னை மீறி ஆவேசமாக கத்தியவர் தலையைப் பிடித்துக் கொண்டு வலியால் துடிக்க......அதேசமயம் பூமிநாதன் உள்ளே வந்தவன்

பூமி - அப்பா என்ன ஆச்சு

என்று பதற...ரஜினின் தலையில் ஆபரேஷன் செய்த இடத்தில் இருந்து ரத்தம் கசிந்த நிலையில் ராஜன் மயங்கி சரிய....

பூங்குழலி - அப்பா.... அப்பா

என்று அலறியவள் டாக்டர் அறையை நோக்கி ஓட..... சந்திரன் கண்களில் கண்ணீருடன் ராஜனின் கரங்களை பற்றி கொண்டு அழ.... அதே தருணம் மருத்துவர் இவர்கள் இருக்கும் அறைக்கு விரைந்து வந்தவர் ராஜனை பரிசோதித்தவர்

டாக்டர் - SORRY சித்ரா

என்று சொல்ல காரணம் என்ன..??

Continue Reading

You'll Also Like

44.1K 5.3K 46
New Story of KM...😍 Hope you all like it..
72.2K 2.2K 47
தன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருத...
62.2K 2.7K 21
5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன...