🔱பூமியின் பூங்குழலி🔱

By Sakthriyan

8.6K 1.4K 1.1K

இயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕 More

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8
பாகம் 9
பாகம் 10
பாகம் 11
பாகம் 12
பாகம் 13
பாகம் 14
பாகம் 15
பாகம் 16
பாகம் 17
பாகம் 18
பாகம் 20
பாகம் 21
பாகம் 22
பாகம் 23
பாகம் 24
பாகம் 25
பாகம் 26
பாகம் 27
பாகம் 28
பாகம் 29
பாகம் 30
பாகம் 31
பாகம் 32
பாகம் 33
பாகம் 34
பாகம் 35
பாகம் 36
பாகம் 37
பாகம் 38
பாகம் 39
பாகம் 40
பாகம் 41
பாகம் 42
பாகம் 43
பாகம் 44
பாகம் 45
P❤️R❤️O♥️M❤️O
பாகம் 46
பாகம் 47
பாகம் 48
பாகம் 49
பாகம் 50

பாகம் 19

152 27 34
By Sakthriyan

pp19

பூமி - ஏன் சூர்யா ஒரு வேல உன் ஆளுக்கு உன்னை பிடிக்காம வேற யாரையாவது அவுங்க love பண்றாங்களோ

SJ சூர்யா -

பூமி - ஒரு வேள அப்படி இருந்தா நீ என்ன பண்ணுவ

SJ. சூர்யா -

பூமி - என்ன பா ....சொல்லு.

என்று பூமி.... SJ சூர்யாவை கேட்க..... சில நொடி மொவனத்தை உடைத்தவன்

SJ. சூர்யா - போட்டுடுவேன்....அவ எனக்கு பதிலா யாரை love பண்ணுறாளோ அவன போட்டுட்டு என் மாமன் மகளை நான் எனக்கே என்னக்கானவளாக ஆக்கிப்பேன்

பூமி - என்னப்பா நீ வில்லன் மாதிரி பேசுற.....

SJ. சூர்யா - பின்ன என்ன.... சின்னதுல இருந்து அவளை கண்ணுக்குள்ள வச்சி பாதுகாத்து இருக்கேன்... அவ எனக்காக பிறந்தவ.... அவள் என்னோட தேவதை..... அது எப்படி..நேத்து வந்தவன் கிட்ட என் ஆளை தூக்கி குடுக்க நான் என்ன பைத்தியமா

பூமி - சரி சரி நீ tencsion ஆகாத.... நான் உனக்கு அப்புறமா call பண்றேன்

Sj. சூர்யா - its ok பூமி... you carry on... நானும் டெல்லிக்கு போயிட்டா அடிக்கடி யாருக்கும் call பண்ண முடியாது....So சீக்கிரம் meet பண்ணலாம் ok வா

பூமி - கண்டிப்பா.... two months ல நம்ம கண்டிப்பா meet பண்ணனும்

sj சூர்யா - போன case முடிஞ்சிட்டா one month இல்லைனா one வீக் ல கூட return ஆகிடுவன்

பூமி - ok சூர்யா all the best..... take care bye

Sj சூர்யா - you too நாதா

என்று சொன்ன sj கைபேசி இணைப்பை துண்டிக்க..... பூமுயின் காரின பின் இருக்கையில் பூங்குழலி கலக்கமாக அமர்ந்து இருந்தவளை நோக்கி பூமிநாதன் நடந்தவன்.... தன் முன் இருக்கையில் போய் அமர.....

பூமி - குழலி...

பூங்குழலி - ம்....

பூமி - என் மேல உனக்கு எதாவது வருத்தமா

பூங்குழலி - அச்சோ இல்ல இல்ல..... இன்னைக்கு நான் தான் உங்ககிட்ட ரொம்ப ஓவரா பண்ணிட்டேன் போல... ஆனா நான் வேலைக்கு போற இடத்துலையும் சரி... ஏன் என்கிட்ட பேசி பழகுற எல்லா பெண்கள் கிட்டயும் சரி...நான் சொல்றது ஒரே விஷயம் தான்..யாரும் உங்க கிட்ட பேசும் போது அனாவசியமா உங்களை தொட்டு பேச அனுமதிக்காதீங்கன்னு சொல்லுவேன்...அதனுடைய தாக்கம் தான் உங்ககிட்டயும் நான் வெளிப்படுத்தினேனே தவிர உங்க மேல குறை சொல்றதுக்கோ... இல்ல உங்கள சீப்பா நினைக்கிறதுக்கோ இல்ல.... pls என்னை புரிஞ்சுக்கோங்க

என்று பூங்குழலி கண்கள் கலங்கி சொன்னதும் பூமியின் மனநிலை சற்று அமைதியாக மாற

பூமி - pls அழாத குழலி.....சரி நீ சாப்டியா

பூங்குழலி - இல்ல... நீங்களே சாப்பிடாம வந்ததும் நான் எப்படி சாப்பிடுவேன்...அதுவும் இல்லாம நீங்க வீட்டை விட்டு போனதும் எனக்கு ரொம்ப கஷ்டமா ஆயிடுது..

பூமி - இனிமே இந்த மாதிரி நடக்காது.... ஏதோ அவசரத்துல... கோவத்துல..எப்படி சொல்றதுன்னு தெரியல....அப்பா சொன்ன மாதிரி நான் உன்ன தனியா விட்டுட்டு வந்திருக்கக் கூடாது....

பூங்குழலி - இல்ல பரவாயில்ல.... சரி கிளம்பலாமா....

பூமி - ம்.... வெளிய போய் ஏதாவது சாப்பிட்டு போலாமா...ரொம்ப பசிக்குது

பூங்குழலி -  உங்க இஷ்டம்

பூமி - உனக்கு பசிக்குதான்னு சொல்லு குழலி..... என் இஷ்டம் உனக்கு என்னைக்குமே கஷ்டத்தை தர கூடாது...

பூங்குழலி - எனக்கு யாராலும் கஷ்ட்டம் இல்ல பூமி...... எனக்கு நானே தான் கஷ்டத்தை தேடிகிறேன்

பூமி - புரியல

பூங்குழலி - ஒண்ணுமில்ல சரி வண்டியை எடுங்க... நேரம் ஆகுது

பூமி - இப்போ நமக்குள்ள எல்லா ப்ரோப்லேமும் solve ஆகிடுது இல்ல...

பூங்குழலி - ம்....

பூமி - அப்போ ஏன் madame இன்னும் பின்னாடி உக்காந்து இருக்கீங்க

பூங்குழலி - வேற எங்க உக்காருறது

பூமி - முன்னாடி வந்து உக்காரலாமே

பூங்குழலி - ஏன் இங்க உக்காந்தா என்னவாம்

பூமி - ம் நீ அங்கேயே உக்காந்து இருந்தா நான் எப்படி வண்டி ஓட்ட முடியும்

பூங்குழலி - அப்போ நான் ஓட்டுறேன் சாவி தாங்க

பூமி - சரி frontla வந்து உக்காரு சாவி தரேன்

பூங்குழலி - நான் முன்னாடி வரேன்.... but நீங்களே கார் டிரைவ் பண்ணுங்க

பூமி - உத்தரவு மகாராணி

பூங்குழலி - எப்பா ரொம்ப பவ்யம் தான் நீங்க....

என்று சிர்த்து கொண்டே பூங்குழலி சொன்னதும்... மன நிறைவோடு பூமிநாதன் பூங்குழலியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல......
அங்கே இருவரும் அன்பாக பேசியவர்கள் அளவாக உணவை உண்ட பிறகு பூமிநாதன் பூங்குழலியை வீட்டிற்கு அழைத்து வந்தவன் வாசலில் காரை நிறுத்த.. பூமியின் அருகில் அமர்ந்து இருந்த பூங்குழலி அவனை ஏக்கமாக பார்த்தவள்

பூங்குழலி - உள்ள வாங்க பூமி....கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு போகலாம் இல்ல

பூமி - இல்ல குழலி..இன்னைக்கு எனக்கு சாயங்காலம் ஒரு முக்கியமான நபரை பாக்க வேண்டியது இருக்கு.... நீ வீட்டுக்கு போ நான் நைட்டு போன் பண்றேன்..

பூங்குழலி - உண்மையை தானே சொல்றிங்க

பூமி - குழலி.... தேவைக்கே பொய் சொல்லகூடாதுன்னு நினைப்பவன் நான்....... எனக்கு மனசுல பட்டத நான் சொல்லிடுவேன்.... and நான் தப்பு பண்ணா உன் கால்ல கூட விழுந்து மன்னிப்பு கேட்பேன்... but நான் பண்ணாத தப்புக்கு என்னை பலிகடாவாக ஆக்கினா நான் நானாக இருக்க மாட்டேன்

பூங்குழலி - ம் நான் தான் உங்களோட இன்னொரு முகத்தை பாத்தேனே.... எப்பா என்ன பேச்சி.....

என்று பூங்குழலி பூமியை பார்த்து சொன்னப்படி காரில் இருந்து கீழே இறங்க.......பூமி காரில் அமர்ந்தப்படி சிரித்தவன்..

இதெல்லாம் என் கோவத்தின் ஒரு பங்கு கூட இல்ல குழலி....... எனக்கு கோவம் எல்லாம் அவ்வளவு சீக்கிரம் வரவே வராது..... நான் பாசக்காரன்.....but நான் நேசிச்சவுங்களை நான் வெறுக்க ஆரம்பிச்சா.. என்னை மாதிரி ஒரு வில்லணை நீ எந்த படத்திலும் பாத்து இருக்க மாட்ட..

என்று அலட்டிகொள்ளாமல் பூமி சொன்னதை கேட்டு கொண்டு இருந்தவளின் இதயம் வேகமாக படபடக்க.....

பூங்குழலி - சரி நான் உள்ள போறேன்.....

என்று சொன்ன பூங்குழலியை.... காரை விட்டு இறங்கி கொண்டே பூமி அவள் பெயர் சொல்லி அழைத்தவன்

பூமி - குழலி.......

பூங்குழலி -ம்

பூமி - நீ முன்னாடியே என்கிட்ட சொன்ன.....இருந்தாலும் உன் பேச்சை மீற வேண்டியதா போச்சு... sorry

பூங்குழலி -  என்ன சொல்றீங்க புரியல...

பூமி - இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்த தாத்தா பாட்டிக்கு டிரஸ் எல்லாம் வாங்குனேன் இல்ல....

பூங்குழலி - ம்...

பூமி - அப்போ உனக்கு ஒரு போன் வாங்கினேன்... அது அந்த பையில தான் இருக்கு... உனக்கு விருப்பம் இருந்தா அதை நீ எடுத்து யூஸ் பண்ணு...இல்லன்னா நான் உன்னை கம்பெல் பண்ண மாட்டேன்

பூங்குழலி -😊

பூமி - சரி வரேன்....ராஜன் அப்பாவை கேட்டேன்னு சொல்லு

என்று சொன்ன பூமிநாதன் தன் காரை அவன் வீட்டை நோக்கி விரட்ட..பூங்குழலி மனதளவில் பூமிநாதனை நேசிக்க ஆரம்பித்தாலும் அவனிடம் இவள் கடந்த காலத்தை பற்றி மறைக்கிறோமே என்ற குற்ற உணர்வோடு வீட்டிற்குள் செல்ல.. ராஜன் சந்தோஷத்துடன் இருந்தவர்

ராஜன் - என்னம்மா மாப்பிள கூட வெளிய எல்லாம் போயிட்டு வர போல

பூங்குழலி -ஆமாப்பா

ராஜன் - சந்தோஷம்மா சரி சரி போ போய் டிரஸ் மாத்திக்கோ

என்று சொன்ன ராஜன் தன் மகள்  மனநிலை மாறியதை நினைத்து சந்தோஷப்பட... பூங்குழலி அவளின் அறைக்கு சென்றவள் பூமி தனக்கு வாங்கி தந்த புது cell போனுக்கு சார்ஜ் போட்டவள் அந்த போன் கவரை தன் இதயத்தோடு இணைத்து கொண்டவள் ....

பூங்குழலி - sorry பூமி... உங்க love எனக்கு புரியாம இல்ல... நான் தான் கொஞ்சம் ஓவரா பண்ணிட்டேன்.... iam really sorry.....உங்க gift ட்டை நான் ஏத்துக்கிறேன்... and இந்த புது போன் ல இருந்து முதல் call என்னை நேசிக்கும் இதயம் உங்களுக்கு தான்

என்று தனக்குள் பேசியவள் அந்த போனை chargil போட.......ஒரு மணி நேரம் கடந்த நிலையில் அவள் தன் சிம் cardai புது போனில் போட்ட அதே நேரம் அவளின் செல்போன்க்கு சூர்யாவிடம் இருந்து wats up மூலம் குறுஞ்செய்தி வர...

📲📲📲📲📲📲📲📲📲📲📲📲📲📲📲📲

சூர்யா - ஹாய் சித்ரா உன் போன்க்கு என்னாச்சு.... ஏன் message பண்ணல... நான் call பண்ணாலும் எடுக்கல.... நான் இன்னைக்கு டெல்லி போறேன்... உனக்கு தெரியும் இல்ல.... அப்படி இருந்தும் நீ ஏன் என்னை வந்து பாக்கல... are you all right... என் மேல உனக்கு எதாவது கோவமா

என்று சூர்யா பூங்குழலிக்கு குறுந்செய்தி வாயிலாக செய்தி அனுப்ப.... அந்த செய்தியை வாசித்த பூங்குழலியின் இதழ்கள் தானாக மலர்ந்த தருணம்

பூங்குழலி - என்ன சூர்யா.... நீ என்ன குழந்தையா..... நான் எப்படி உன் மேல கோவப்படுவேன்.... நீ தான் என்னைக்குமே எனக்கு எல்லாமுமா இருக்கன்னு உனக்கு தெரியாதா..... actually என் போன் கீழே விழுந்து உடைந்துடுது..... அப்பா வேற கண்கொத்தி பாம்பாக என்னை பாத்துகிட்டு இருக்காரு.. அதனால தான் என்னால உனக்கு call பண்ண முடியல.... இப்போ கூட அப்பா வெளிய தான் இருக்காரு.... அதான் message பண்றேன்.... சரி நீ பாத்து ஊருக்கு போயிட்டு வா.... நீ வந்ததும் உன்கிட்ட நான் ஒரு good நியூஸ் சொல்லணும்

சூர்யா - really.... என்ன good நியூஸ்

பூங்குழலி - அது...... அது நேர்ல பாத்து தான் சொல்லணும்.... உன்னோட blessing எனக்கு வேணும்

சூர்யா - ஏய் லூசு...நான் வாழுறதே உனக்காக தான்... என் blessing உனக்கு ஏன்

பூங்குழலி - இன்னைக்கு நான் வாழுறதும் உன்னால தானே... நீ எனக்கு அம்மா அப்பா உடன் பிறப்பு friend இப்படி எல்லாமே நீ தான் சூர்யா

சூர்யா - ஒ போதுமா....

பூங்குழலி - என்ன போதுமா

சூர்யா - இவ்வளவு உறவுகள் போதுமா

பூங்குழலி - வேற என்ன வேணும்

சூர்யா - எனக்கு என்ன வேணும் சொல்லு.... உன் சந்தோஷம் தான் எனக்கு வேணும்....நீ சந்தோஷமா இருக்க நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்

பூங்குழலி - தெரியும் சூர்யா நீ எனக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவன்னு எனக்கு தெரியும்.... but

சூர்யா - என்ன

பூங்குழலி - நீ உன் life பற்றியும் யோசிக்கணும் இல்ல

சூர்யா - என் life நீ தானே லூசு

பூங்குழலி - அப்படி இல்ல சூர்யா.... உனக்கும் கல்யாணம் எல்லாம் பண்ணி பாக்கனும்னு தாத்தா பாட்டி ஆசை படுவாங்க இல்ல

சூர்யா - ம்...

பூங்குழலி - எனக்கு தெரிந்து இப்போ உன் கோவம் எல்லாம் ரொம்ப குறைந்து இருக்கு..... கண்டிப்பா அதுக்கு காரணம்
ஒரு காதலா தான் இருக்கும்

சூர்யா - 🤣🤣🤣

பூங்குழலி - என்ன emoji இது...

சூர்யா - நீ இன்னைக்கு மட்டும் கற்கண்டு விநாயகர் கோவிலுக்கு வந்து இருந்தா ஒரு வேள என் காதல் கை கூடி இருக்கும் போல

பூங்குழலி - என்ன சொல்ற கற்கண்டு விநாயகர் கோவிலா

சூர்யா - ம் ஆமா.... ஏன் இவ்வளவு வேகமா message பண்ணி கேக்குற

பூங்குழலி - அங்க ஏன்

சூர்யா - ஏய் லூசு பொண்ணு.... நான் உனக்கு நேத்து நைட்டே இன்னைக்கு நான் டெல்லி போறேன்.... so நாளைக்கு மதியம் நான் உன்னை கற்கண்டு விநாயகர் கோவில்ல meet பண்ணி ஒரு important மேட்டர் சொல்லணும்னு message பண்ணேன்.... but நீ அதை படிக்கவும் இல்ல என் போனை attend பண்ணவும் இல்ல.....

பூங்குழலி - sorry சூர்யா நான் புது போன் இப்போ தான் மாத்துனேன்...

சூர்யா - சரி விடு.... நான் ஊருல இருந்து வந்ததும் பாத்துக்கலாம்

பூங்குழலி - ம்...சரி நீ இப்போ போனா எப்ப வருவ

சூர்யா - one  month..

பூங்குழலி - நீ வந்ததும் நான் உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்றேன்....

சூர்யா - நானும் தான்.... அப்புறம் பாட்டிகிட்ட உனக்கு ஒரு gift வாங்கி தந்து இருக்கேன்.... நீ அவங்கள பாக்கும் போது வாங்கிக்கோ

பூங்குழலி - எதுக்கு ங்க gift

சூர்யா - என் சித்ராவுக்கு நான் காரணம் இருந்தா மட்டும் இல்ல காரணமே இல்லாம எல்லாமே தருவேன் ok வா....

பூங்குழலி - சரி சூர்யா பாத்து போயிட்டு வா.... எனக்கு time இருக்கும் போது மெசேஜ் பண்ணு....

சூர்யா - ம் ok and தாத்தா பாட்டியை போய் அடிக்கடி பாத்துட்டு வா....

பூங்குழலி - ம் கண்டிப்பா அப்பாக்கு தெரியாம போய் பாத்துட்டு வரேன்...
சரி தாத்தா பாட்டி உன்கிட்ட எதாவது சொன்னார்களா

சூர்யா - எத பற்றி...

என்று சூர்யா கேட்ட கேள்விக்கு பூங்குழலி மெசேஜ் மூலம் பதில் சொல்வதற்குள் அவளின் அறையின் வாசலில் நின்றபடி ராஜன் அவள் பெயரை சொல்லி அழைக்க...

பூங்குழலி - சூர்யா அப்பா வராரு நினைக்கிறேன் நான் உனக்கு அப்புறம் மெசேஜ் பண்றேன் take care

சூர்யா - ஓகே மாமாவை பார்த்துக்கோ நீயும் ஜாக்கிரதை

என்று சூர்யா மீண்டும் பூங்குழலிக்கு கைபேசி வாயிலாக குறுஞ்செய்தியை அனுப்ப......ராஜனின் குரலைக் கேட்டு பூங்குழலி அவள் கையில் இருந்த கைபேசியை மறைக்க போன சமயம் ராஜன் அறைக்குள் நுழைய...

என்னமா....என்ன போன் இது... புது போன் மாதிரி இருக்கு......யார் வாங்கி கொடுத்தாங்க

என்று ராஜன் அவளை சந்தேகப்படும்படி கோவமாக கேட்க......

பூங்குழலி - அப்பா இது உங்க மாப்பிள்ளை தான் எனக்காக வாங்கி கொடுத்தாரு

ராஜன் - என்ன பூமி மாப்பிள்ளையா....பூமி மாப்பிள்ளையா உனக்கு போன் வாங்கி கொடுத்தாரு

பூங்குழலி - பின்ன வேற எனக்கு எத்தனை மாமன் மகன் இருக்கான் வாங்கி கொடுக்க.. போங்கப்பா போய் வேலையை பாருங்க சின்ன விஷயத்தை கூட பெருசா எடுத்துப்பீங்க..

என்று பூங்குழலி சொன்னதும் ராஜன் சிரித்துக் கொண்டே அவள் அறையில் இருந்து வெளியே செல்ல...அன்றைய இரவு பூமிநாதன் பூங்குழலியின் கைபேசிக்கு அழைப்பு விடுக்க.... கட்டிலில் ஏதோ நினைவுகளை சுமந்தப்படி பூங்குழலி படுத்து இருந்தவள்.... பூமியின் பெயர் கைபேசியின் திரையில் தெரிந்ததும் புன்முறுவளோடு அவன் அழைப்புக்கு உயிர் தர.....

பூமி - குழலி.....

பூங்குழலி - ம் சொல்லுங்க பூமி..

பூமி - என்ன குழலி சாப்டியா...

என்று அவன் அக்கறையுடன் கேட்டதும்.... இவள் தன் படுக்கையில் இருந்து எழுந்தவள்.... அருகில் இருந்த தலையணையை எடுத்து தன் மடி மீது வைத்து கொண்டு அவன் கேள்விக்கு பதில் தர.......

பூங்குழலி - இல்ல பூமி இனிமே தான்

என்று அவள் சொன்னதும்.... பூமி அவன் அறையில் உள்ள வலது பக்க சுவற்றில் தன் அப்பா அம்மாவுடன் இவனும் இணைந்து இருக்கும் புகைப்படம் அருகில் உள்ள சுவர் கடிகாரத்தில் தெரிந்த நேரத்தை பார்த்தவன்

பூமி - மணி பத்து ஆகுது...ஏன் இவ்வளவு late..... அதுவும் இல்லாம உனக்கு இன்னிக்கி வேலை இருக்கு தானே....ஏன் இன்னும் கிளம்பல.....

என்று பூமி கேட்டதும்.... பூங்குழலி அவள் கட்டிலின் அருகில் உள்ள மேசையில் இரண்டு புறாக்களின் நடுவே தெரிந்த சின்ன கடிகாரத்தில் உள்ள நேரத்தை பார்த்தவள்.....

பூங்குழலி - இல்ல பூமி நான் வேலைக்கு போகல..... அப்பா நிச்சயதார்த்தம் முடியிற வரை வேலைக்கு போக வேணாம்னு சொல்லிட்டாரு

என்று பூங்குழலி சொன்னதும்.... பூமி தன் புருவங்களை சுருக்கியவன்.....

பூமி - ஏன்....அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..

என்று அவளை கேள்வி கேட்க..... பூங்குழலி அவள் உதட்டை சலிப்பாக சிலுத்து கொண்டவள்.... தன் இடது கையில் கைபேசியை ஏந்தியப்படியும்.. வலது கையில் தன் கழுத்தில் உள்ள தங்க சங்கிலியை முறுக்கி கொண்டே......

பூங்குழலி - தெரியல பூமி .... அப்பா சொன்னாரு.....நானும் சரின்னு சொல்லிட்டேன்..

என்று அவள் சலிப்பாக சொல்ல.... பூமி அவன் மூக்கு கண்ணாடியை கழட்டியவன்... பெருமூச்சு விட்டபடி...

பூமி - நீ சரியான அப்பா பிள்ளை போல

என்று அவளை குத்தும் ப்படி வார்த்தையை அவள் மீது வீச..... அவளோ அசராமல் மெல்லிய குரலில்...

பூங்குழலி - ஏன் நீங்க மட்டும் என்னவாம் .. நீங்களும் உங்க அப்பா பிள்ளை தானே..

என்று அவள் சொன்னதும்..... மொட்டு மலர்ந்தது போல புன்னகையை உதிர்ந்தவன்... மீண்டும் தன் கண்ணாடியை அணிந்து கொண்டு...

பூமி - ஆமா.... but எல்லாத்துக்கும் அப்பா பேச்சை கேக்க முடியுமா..

என்று அவன் அவளை கேள்வி கேட்க..... பூங்குழலி தன் ஒரு புருவத்தை உயர்த்தியவள்.....

பூங்குழலி - அன்னைக்கு என்னமோ உங்க அப்பா என்னை வேணான்னு சொன்னா நீங்க என்னை கல்யாணம் பண்ண ok சொல்ல மாட்டிங்கனு சொன்னீங்க.. இப்போ என்னவாம்..

என்று அவள் மீண்டும் அவனை கேட்ட கேள்வியில் பூமி அவள் மனதில் அன்று ஏற்பட்ட தாக்கத்திற்கு பதில் கூறும் வகையில்...

பூமி - அப்படியா சொன்னேன்...

என்று அவன் ஒன்றும் தெரியாத பிள்ளையை போல அவளை கேள்வி கேட்க..... அவளோ அவனை விடாமல் மீண்டும் அந்த கேள்வியை தொடர.....

பூங்குழலி - இல்லையா பின்ன...அன்னைக்கு நீங்க அப்படி தான் சொன்னிங்க...

என்று செல்லமான குரலில் அவனிடம் பேசும் அழகை ரசித்தவன்...

பூமி - ம் மறந்துட்டேன் போல..... எனக்கு மறதி அதிகம் ஆகிடுது.....

என்று அவன் சிரித்து கொண்டே சொன்னதும்...பூங்குழலி கொஞ்சம் அழுத்தமாக....

பூங்குழலி - பார்த்து சார்... என்.. னை... மறந்து... டாதீங்க

என்று அவள் சொன்னதும்.... கட்டிலில் தொப்பென்று விழுந்த பூமி....கைபேசி திரையில் அவளுடன் இவன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பார்த்தவன் புன்னகை மலர்ந்த முகத்துடன்

பூமி - இந்த நொடி வரை எங்க அம்மாவுக்கு அப்புறம் நான் நேசித்த ஒரே பெண் நீ தான்....
உன்ன எப்படி மறக்க முடியும்..

என்று பூமி சொன்னதும்... பூங்குழலி அவள் மடியில் இருந்த தலையணை கட்டிலின் வலது பக்கம் வைத்தவள் அதில் தலை வைத்தப்படி

பூங்குழலி - இந்த நொடி வரைனா.... அப்போ நாளைக்கு வேற பெண்ணை நேசிப்பீங்களோ

என்று கிண்டலாக அவனை கேள்வி கேட்க..... அவனோ மீண்டும் கட்டிலில் இருந்து எழுந்தவன்... சுவற்றில் மாட்டி இருக்கும் தங்களின் குடும்ப புகைப்படத்தின் அருகில் சென்றவன்... தன் அம்மாவின் விழிகளை உள் வாங்கியபடி

பூமி - ம் இந்த நொடி வரை என் அம்மாவும் நீயும் மட்டுமே நான் நேசிக்கும் பெண்கள்.... ஆனா...

என்று பூமி தன் சொற்களை நிறுத்தியவன்... தன் அம்மாவின் புகைப்படத்தின் மேல் கை  வைத்து கண்கள் கலங்க..... அவனின் இந்த வார்த்தையின் இடைவெளிக்கு அர்த்தம் விளங்காத பூங்குழலி கட்டிலில் இருந்து எழுந்தவள்

பூங்குழலி - என்ன பூமி என்னாச்சு...

என்று அவனை மீண்டும் கேள்வி கேட்க.... அவனோ கண்களை துடைத்த ப்படி.... சிறு புன்னகையோடு

பூமி - இந்த நொடி வரை நீங்க இருவர் மட்டுமே.... ஆனா நாளைக்கே நமக்கு கல்யாணம் முடிந்து பெண் பிள்ளை பிறந்தால் நம்ம பெண்ணையும் நான்
நேசிப்பேன் இல்லையா அதை சொன்னேன்..

என்று பூமி சொன்னதும் பூங்குழலி அழகாக புன்னகை புரிந்தவள்...

பூங்குழலி - சரி நீங்க சாப்பிட்டீங்களா.... மாமா எங்க...

பூமி - அப்பா அவர் ரூம்ல இருக்காரு.... நான் வந்ததும் என்கிட்ட ஏனோ சகஜமா எதுவும் பேசல..

பூங்குழலி - ஏன்...

பூமி - உன் மாமனார் எப்போவும் உனக்கு தானே சப்போர்ட்.... கண்டிப்பா உன்கூட பேசி இருப்பாரே

பூங்குழலி - இல்ல பூமி.... மாமா எனக்குமே call பண்ணல..... ஏன் அவரு எதாவது வருத்தமா இருக்காரா

பூமி - கண்டிப்பா அப்பா என் மேல தான் வருத்தமா இருப்பாரு.....

பூங்குழலி - அப்போ நீங்க போய் மாமாகிட்ட பேசுங்க.....

பூமி - ம் நான் பாத்துக்குறேன்...சரி நாளைக்கு காலையில நீ freeya

பூங்குழலி - ம் free தான்..... நாளைய மறுநாள் நமக்கு நிச்சியம் இல்ல... so நான் வீட்ல தான் இருப்பேன்

பூமி - ok.... நான் நாளைக்கு நம்ம வீட்ல வந்து உன்னை பாக்குறேன்

பூங்குழலி - ம் சரி....

பூமி - நான் போன் cut பண்ணவா

பூங்குழலி - பூமி இருங்க இருங்க

பூமி - சொல்லு குழலி

பூங்குழலி - Sorry

பூமி - எதுக்கு Sorry

பூங்குழலி - உங்கள நான் hurt பண்ணதுக்கு..

என்று பூங்குழலி சொன்னதும்.. பூமி சற்று யோசித்தவன்....

பூமி - ம்....சரி thanks...

என்று பதிலுக்கு சொல்ல.... அவளோ விளங்காத கேள்விக்கு விடை அறிந்து கொள்ளும் ஆவளில்

பூங்குழலி - எதுக்கு thanks...

என்று மீண்டும் அவனை கேள்வி கேட்க....

பூமி - நீ என்னை love பண்ணறதுக்கு

என்று அவன் சிரித்துக் கொண்டே பதில் கூற..

பூங்குழலி - நான் எப்போ உங்கள love பண்ணேன்

என்று பூங்குழலி அதே சிரிப்புடன் அவனை மீண்டும் கேள்வி கேட்க

பூமி - அப்போ பண்ணலையா

என்று பூமி கேட்கும் கேள்விக்கு பொய்யான பதிலை கூறும் வகையில்

பூங்குழலி - இ..ல்..ல...

என்று அழுத்த திருத்தமாக பூங்குழலி சொன்னதும்

பூமி - அப்போ ரொம்பவே thanks....

என்று பூமிநாதன் இன்னும் மலர்ந்த முகத்துடன் அவளுக்கு பதில் சொல்ல..

பூங்குழலி - இந்த thanks எதுக்காம்...

என்று பூங்குழலி சற்று கோபமாக அவனை கேள்வி கேட்க..

பூமி - நீ என்னை love பண்ணாமலேயே எங்க அப்பா மேல உரிமை எடுத்துக்குறியே .... அப்போ நம்ம marriage க்கு அப்புறம் நீ என்னை love பண்ண ஆரம்பிச்சிட்டா எவ்வளவு நல்லா எங்க அப்பாவை பாத்துப்ப அதுக்கு தான் thanks...

என்று அவளை வெறுப்பேத்தும் வகையில் இவன் பதில் சொன்னதும் பூங்குழலி திடமான குரலில்..

பூங்குழலி - நமக்கு கல்யாணம் நடக்கலைனாலும் நான் என் சந்திரன் மாமாவை நல்லா தான் பார்த்துப்பேன்..

என்று அவள் தன் தந்தை மீது உள்ள அக்கறையில் சொல்லும் சொல்லை ரசித்தவன்... பொய்யான கோபத்துடன்

பூமி - ம் உங்க ரெண்டு பேர் கூட்டணியை முதல்ல உடைக்கணும் போல

என்று அவன் கூறும் பொய்யை ரசித்துக்கொண்டே..

பூங்குழலி - அதெல்லாம் உங்களால முடியாது.... பேசாம சாப்பிட்டு போய் படுங்க..... அப்புறம் மாமாவையும் சாப்பிட சொல்லுங்க

என்று பூங்குழலி சொன்னதும் குறுநகை மலர்ந்த முகத்துடன்

பூமி - ம் சரி நீயும் சாப்பிட்டுட்டு தூங்கு..good night.. நாளைக்கு meet பண்ணலாம்

என்று சொன்ன பூமி அவன் கைபேசி இணைப்பை துண்டித்தவன்.. சந்திரனின் அறைக்குள் செல்ல.... அங்கே அவர் கட்டிலில் மார்பின் மேல் ஒரு புத்தகத்தை வைத்தப்படி கண்கள் மூடி இருக்க....

அப்பா..... அப்பா வாங்க சாப்பிடலாம்

என்று பூமி சந்திரணை அழைக்க...சந்திரனோ பூமியின் குரலுக்கு செவி சாய்க்காமல் கட்டிலில் படுத்து இருந்தவரின் கையில் இருந்த புத்தகத்தை
எடுத்த பூமி சந்திரன் தோளில் கை வைத்தவன்....

""அப்பா"" என்று அலறினான் .....

Continue Reading

You'll Also Like

883K 86.9K 158
Arjun and shalini tie the knot in an arranged marriage. what surprises does the life has for them . How do they find their love for each other ? or W...
22.7K 806 9
காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, ந...
242K 16K 104
just try New concept for this fiction couple.
62.2K 2.7K 21
5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன...