🔱பூமியின் பூங்குழலி🔱

By Sakthriyan

8.6K 1.4K 1.1K

இயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕 More

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8
பாகம் 9
பாகம் 10
பாகம் 11
பாகம் 12
பாகம் 13
பாகம் 14
பாகம் 15
பாகம் 16
பாகம் 18
பாகம் 19
பாகம் 20
பாகம் 21
பாகம் 22
பாகம் 23
பாகம் 24
பாகம் 25
பாகம் 26
பாகம் 27
பாகம் 28
பாகம் 29
பாகம் 30
பாகம் 31
பாகம் 32
பாகம் 33
பாகம் 34
பாகம் 35
பாகம் 36
பாகம் 37
பாகம் 38
பாகம் 39
பாகம் 40
பாகம் 41
பாகம் 42
பாகம் 43
பாகம் 44
பாகம் 45
P❤️R❤️O♥️M❤️O
பாகம் 46
பாகம் 47
பாகம் 48
பாகம் 49
பாகம் 50

பாகம் 17

162 29 35
By Sakthriyan

ராஜனின் அப்பா தேவராஜ் மற்றும் ராஜனின் அம்மா தேவி ஆகிய இருவரையும் அவர்களின் வீட்டிற்கு சந்திரன் அவர்கள் தன் காரில் தன் நண்பன் ராஜனுடன் அழைத்துச் செல்லும் காட்சி....

சந்திரன் - அப்பா நல்லா உக்காந்துக்கோங்க.. வேணும்னா முன்னாடி உக்காந்துக்குறீங்களா

தேவராஜ் - இல்ல பா நான் இங்கேயே இருக்கேன்

சந்திரன் - அம்மா.. அடி எதாவது பட்டுதா.. நம்ம வேணும்னா ஹாஸ்பிடல் போகலாமா

தேவி - அதான் என் பேத்தி சித்ராவே பாத்துட்டு ஒன்னும் இல்லனு சொல்லிட்டாளே

சந்திரன் - நீங்க ஏன் மா வெளிய தனியா வந்திங்க

தேவி - கோவிலுக்கு போகலாம்ன்னு தான் பா வந்தோம்... வந்த இடத்துல என்னென்னமோ நடந்துடுது

தேவராஜ் - சந்த்ரா உன் மகன் ரொம்ப நல்ல பிள்ளை பா.... நம்ம சித்ராவுக்கு ஏற்ற ஜோடி... ரொம்ப பாசக்காரனா இருக்கான்
கோவமே வராது போல

சந்திரன் - ஐயோ யாருக்கு.. அவனுக்கா... நீங்க வேற அப்பா.... அவனுக்கு இன்னொரு முகம் இருக்கு... அது எனக்கு மட்டும் தான் தெரியும்

தேவராஜ் - என்ன ப்பா சொல்ற

சந்திரன் - ஆமா பா அவனுக்கு அவனை சந்தேகப்பட்டா பிடிக்காது... உண்மையை மறைச்சா பிடிக்காது... இப்படி அவன் கிட்டயும் நிறைய கெட்ட பழக்கம் இருக்கு தான்..

தேவராஜ் - ஒ...

தேவி - நம்ம சூர்யா போலன்னு நினைக்கிறன்... எனக்கு கூட உன் மகனை பார்த்ததும் நம்ம சூர்யா....

என்று தேவி பாட்டி பேச ஆரம்பிக்கும் முன்

ராஜன் - டேய் மூளை இல்லாதவனே வண்டியை ரோட்டை பாத்து ஓட்டுடா

என்று ராஜன் கோவமாக சந்திரனிடம் கத்த...
தேவி ராஜனை முறைக்க...

தேவராஜ் - ஏன் சந்திரா.. சித்ராவுக்கு வர ஞாயிறு நிச்சியமா

சந்திரன் - ம் ஆமா அம்மா... கண்டிப்பா நீங்களும் அப்பாவும் வரணும்

ராஜன் - டேய் அவுங்க வரது இருக்கட்டும்... ஆனா என் மகளுக்கு நிச்சயம் நடக்க போகுதுன்னு எக்காரணத்தை கொண்டும் அந்த சூர்யாவுக்கு தெரியவே கூடாது....
மீறி எதாவது பிரச்சனை வந்துது

சந்திரன் - நீ மனுஷனா இருக்க மாட்டேன்னு சொல்ல போறியா...

தேவி - இப்போ மட்டும் இவன் என்ன மனுஷனாவா இருக்கான்

தேவராஜ் - சும்மா இரு தேவி

ராஜன் - இங்க பாரு சந்திரா.. அவுங்க ரெண்டு பேர்கிட்டயும் சொல்லிடு..என் மக கல்யாணம் நடந்து முடியும் வர எந்த விஷயமும் யாருக்கும் தெரிய கூடாது சொல்லிட்டேன்

தேவராஜ் - இல்ல பா நாங்க சொல்ல மாட்டோம்

ராஜன் - டேய் நீ என்னடா வண்டியை ஓட்ட சொன்னா உருட்டுற சீக்கிரம் ஓட்டு டா

சந்திரன் - இன்னும் சீக்கிரம் போகணும்னா நீ வேணும்னா கீழே இறங்கி தள்ளி விடு

ராஜன் - உனக்கு என்னனு தெரியல.... நானே பூமி மாப்பிளைக்கு இவுங்கள பற்றி எதாவது தெரிந்து இருக்குமான்னு பயந்துக்கிட்டு இருக்கேன்

சந்திரன் - டேய் அப்படியே தெரிந்தா என்னடா.... ஏன் டா இப்படி பயந்து சாகுற.... நீ நினைக்கிற அளவுக்கு எல்லாம் பூமி பிரச்னைனை பண்ணற ஆள் இல்ல டா.. எனக்கு தெரிந்து பூங்குழலியை பற்றியும் இதோ அப்பா அம்மா சூர்யான்னு எல்லோரை பற்றியும் பூமிக்கு தெரிந்தா கூட ஒன்னும் சொல்ல மாட்டான் டா

ராஜன் - நீ கொஞ்சம் சும்மா இருக்கியா... இங்க பாரு டா இந்த கல்யாணம் முடியும் வர நீ எதையும் பேச கூடாது சொல்லிட்டேன்

சந்திரன் - சரி சரி பேசல.. அப்பா வீடு வந்துடுது.. இருங்க நான் வந்து இறக்கி விடுறேன்.. டேய் தடி தாண்டவாரையா போ போய் டிக்கியில் இருக்கும் wheel chairai எடு

தேவி - ஐயோ சந்திரா வேணா பா... அவன் கை கூட என் புருஷன் சம்மந்த பட்ட எந்த பொருள் மேலேயும் பட கூடாது.... இன்னைக்கு இவன் வீட்டுக்கு வந்த பாவமே நான் எத்தனை தடவ தலை முழுகுனா போகும்ன்னு தெரியல

என்று தேவி பாட்டி சொன்னதும் ராஜன் அவரை எரிப்பது போல முறைக்க....

சந்திரன் - அம்மா வீட்ல சூர்யா இல்லையா

தேவி - இல்ல பா இன்னைக்கு நைட்டு டெல்லிக்கு போறதால சூர்யா கொஞ்சம் பிஸி...

தேவராஜ் - வாயேன் சந்திரா... உள்ள வந்து காபி தண்ணி குடிச்சிட்டு போ

சந்திரன் - இல்ல அப்பா.. வீட்ல நிறைய வேலை இருக்கு... இன்னும் நடுவுல ஒரு நாளை வச்சிக்கிட்டு என்ன பண்ண போறோம்னு தெரியல

தேவி - கவல படாத சந்திரா.. உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும்.. சரி நாங்க உள்ள போய்கிறோம் நீ பாத்து கிளம்பு

சந்திரன் - அம்மா நான் ஞாயிறு அன்னிக்கு கண்டிப்பா வருவேன் நீங்களும் அப்பாவும் ரெடியா இருக்கணும்

தேவி - அவசரப்பட்டு வாயை விடாத பா... அப்புறம் உன் நண்பன் அழுதுட போறான்

என்று தேவி தன் மகன் ராஜனை பார்த்து கிண்டலாக சொல்ல.. ராஜனோ நெருப்பு மேல் நின்று இருப்பது போல முகத்தை வைத்து இருக்க

சரி பா நாங்க கிளம்புறோம்... அம்மா வரோம்

என்று சொன்ன சந்திரன் தன் நண்பன் ராஜனை அழைத்து கொண்டு பூங்குழலியின் வீட்டுக்கு கிளம்ப.... மறுபக்கம் பூமி நாதன்..பூங்குழலியின் வீட்டில் இருந்து கோவமாக வெளியே வந்தவன் வேகமாக நடந்து அவள் வீட்டு தெருவின் முனையில் நிற்கும் ஆட்டோவில் ஏற

ஆட்டோ காரர் - என்ன sir எங்க போகணும்னு சொல்லாம நீங்க பாட்டுக்கிட்டு ஏறி உக்காந்துட்டீங்க

பூமி - கோவிலுக்கு போங்க அண்ணா...

ஆட்டோக்காரர் - எந்த கோவிலுக்கு பா

பூமி - அண்ணா இந்த ஊருல இருக்குற எதாவது ஒரு கோவிலுக்கு போங்க....

ஆட்டோக்காரர் - சரி சரி நீ கவலையா இருக்க போல... உன்னை கவலை தீர்க்கும் கற்கண்டு விநாயகர் கிட்ட அழைச்சிட்டு போறேன் வா

என்று சொன்ன ஆட்டோகக்ரர் கோவிலை நோக்கி ஆட்டோவை விரட்ட... பூமி கோவத்தின் உச்சியில் இருந்தவன் தன் மூக்கு கண்ணாடியை கழட்டி பாக்கெட்டில் வைத்தபடி தன் நெற்றியில் படரும் வியர்வை  துளியை துடைக்க

ஆட்டோக்காரர் - நீங்க ஊருக்கு புதுசா

பூமி - இல்ல இல்ல அண்ணா நான் பக்கத்து ஊர் தான் எனக்கு இங்க பெண் பார்த்து இருக்காங்க....

ஆட்டோக்காரர் - ஒ நல்லது பா..

பூமி -

ஆட்டோக்காரர் - தம்பி கோவில் வந்துடுது இறங்கு

பூமி - இந்தாங்க காசு

ஆட்டோக்காகர் - இரு பா balance தரேன்

பூமி - இருக்கட்டும் நீங்களே வச்சிக்கோங்க

ஆட்டோக்காரர் - ஏம்ப்பா.. நான் வேணும்னா உன்னை இங்கேயே இருந்து திரும்ப அழைச்சிட்டு போய் வீட்ல விடவா

பூமி - இல்ல அண்ணா எனக்கு கொஞ்சம் மனசு சரியில்ல..எப்படியும் என் அப்பா எனக்கு call பண்ணுவாரு நான் அவர் கூட போகிறேன்

ஆட்டோக்காரர் - சரி பா.. இந்தா இது என் போன் நம்பர்.. நான் ஸ்டாண்ட்ல எல்லாம் இருக்க மாட்டேன்.. எப்பவும் நான் rounds ல தான் இருப்பேன்...எதாவதுனா எனக்கு call பண்ணு

பூமி - ஒ thanks அண்ணா... but உங்க பெயர்

என் பெயர் ஜோதிமணி பா... ஜோதின்னு சொல்லிவாங்க..சரி நான் வரேன்

என்று சொன்ன ஆட்டோக்காரர் ஜோதி அந்த இடத்தை விட்டு நகர..... பூமி கோவிலுக்குள் சென்றவன் தனக்கு ஏற்றது போல கோவிலில் ஒரு மூலையை தேர்வு செய்து அந்த இடத்தில் சம்மணம் போட்டு அமர்ந்தவன் கண்கள் மூடி சற்று தன் மனநிலயயை அமைதி படுத்த முயன்ற சமயம்....

ஹலோ நாதன்.... என்ன sir கோவிலுக்கு வந்து தூங்க try பண்றீங்க....

என்று ஒருவனின் குரல் கேட்டதும் பூமி தன் விழிகளை துறக்க.... அவன் கண் எதிரில் நின்றது SJ @ சூர்யா....
என்ன பூமி அமைதியா உட்கார்ந்து தியானத்தில் மூழ்கி இருக்கிற மாதிரி தோணுது என்ன ஆச்சு ஏதாவது ப்ராப்ளமா

என்று சூர்யா....பூமியை  கேள்வி கேட்டபடி அவன் அருகில் வந்து அமர........ கடமைக்கு என்று புன்னகை புரிந்த பூமிநாதன் அவனிடம் நட்பு பாராட்டும் விதமாக

பூமி - ஹாய் சூர்யா...எப்படி இருக்க...என்ன கோவிலுக்கு வந்தியா?

SJ .சூர்யா - இல்ல இல்ல நான் சினிமாக்கு வந்தேன்.. ரெண்டு டிக்கெட் வாங்கிட்டேனா... என்னுடைய காதலி வரல ...அதனால பிள்ளையார என் கூட அழைச்சிட்டு போக வந்து இருக்கேன்

என்று SJ.சூர்யா நையாண்டியாக சொல்ல.. அழகாக சிரித்த பூமிநாதன்

பூமி - உன் காதலியா...அவங்க வந்திருக்காங்களா?

SJ .சூர்யா - இல்ல இல்ல நான் ரெண்டு நாளா அவளுக்கு போன் பண்ணி போன் பண்ணி ஏமாந்தது தான் மிச்சம்

பூமி - ஏன் என்ன உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா

சூர்யா - எங்களுக்குள்ள எல்லாம் பிரச்சனை இல்ல..அவங்க வீட்டுல தான் பிரச்சனை

பூமி - என்ன பிரச்சனை

சூர்யா - அது இருக்கட்டும்... நீ என்ன ஏன் இவ்வளவு சோகமா இருக்க ....

பூமி - ஒன்னும் இல்ல

சூர்யா - உனக்கும் எதாவது பிரச்சனையா ...பிரச்சனை இல்லாத மனுஷங்க இந்த உலகத்துல இருக்கவே மாட்டாங்க போல

பூமி - பிரச்சனை இல்லன்னா அவங்க மனுஷங்களே இல்லயே

சூர்யா - அதுவும் உண்மைதான்.. ஆனா நம்ம எல்லாம் பிரச்சனையை பாக்கெட்ல போட்டுக்குனே சுத்துறோம் இல்ல

பூமி - அப்படி தான் போல

சூர்யா - சரி என்ன இந்த நேரத்துல கோவிலுக்கு..

பூமி - ஏன் கோவிலுக்கு வர நேரம் காலம் இருக்கா என்ன

சூர்யா - இல்லப்பா....உன்ன பார்த்தா கோவிலுக்கு சாமி கும்பிட வந்த மாதிரி இல்லையே.. எங்க இருந்தோ தப்பிச்சு வந்து ஒளிஞ்சிகிட்டு இருக்கிற மாதிரி இல்ல இருக்கு..

பூமி - நீ வக்கீல் இல்ல அதான் பார்த்ததும் கண்டுபிடிக்கிற போல

சூர்யா - சரி சொல்லு என்ன பிரச்சனை

பூமி - ஒன்னும் இல்ல.. ஒரு சின்ன நெருடல் அவ்வளவுதான்..கொஞ்ச நேரத்துல சரியாயிடும்..இதோ நான் இப்ப கிளம்பிடுவேன்..இல்லனா அப்பா என்னை தேட ஆரம்பிச்சிடுவாரு

சூர்யா - ஓ..உங்க அப்பா உன்னை தேடுற அளவுக்கு நல்லவரோ

பூமி - ஏன்...உங்க அப்பா அம்மா உன்னை தேட மாட்டாங்களா

சூர்யா - எனக்கு அப்பா அம்மா இல்ல...தாத்தா பாட்டி மட்டும்தான்

பூமி - ஓ sorry

சூர்யா - ஏன் நீ இதுக்கு எல்லாம் சாரி கேக்குற.... எப்படியும் நமக்கு கல்யாணம் நடந்தா ஒரு உறவு கிடைக்கும் தானே..அப்ப எல்லாரையும் உறவு முறை வைத்து கூப்பிட்டுக்கிட்டா போச்சு

பூமி - சரி நீ டெல்லிக்கு போறேன்னு சொன்னியே...

சூர்யா - ஆமா இன்னைக்கு நைட் ஃப்ளைட்ல கிளம்பனும்...அதுக்கு முன்னாடி என் காதலிய பார்த்து அவள் கிட்ட இந்த கிப்ட் கொடுக்கணும்னு நினைச்சேன் ஆனா அந்த அரக்கி போனே எடுக்க மாட்றா

பூமி - என்னப்பா இது இப்படி பேசுற...உன் காதலியை அந்த மாதிரி எல்லாம் பேசக்கூடாது

சூர்யா - ஹலோ அவ என்னுடைய காதலி ஆகுறதுக்கு முன்னாடியே என் மாமா பொண்ணு... அதனால நான் பேச எனக்கு எல்லா உரிமையும் இருக்கு

பூமி - ஓ அது சரி....அப்போ பேசு

சூர்யா - சரி உனக்கு என்ன பிராப்ளம்.. என்னால ஏதாவது உதவி பண்ண முடிஞ்சா கண்டிப்பா பண்றேன்..

பூமி - இல்ல இல்ல..இது என்னுடைய பர்சனல்..ஒன்னும் பிரச்சனை இல்ல.. நானே சரியா ஆயிடுவேன்

சூர்யா - ஆங்....அன்னைக்கு நீ எனக்கு ஒரு போன் நம்பர் குடுத்த இல்ல நான் மிஸ் பண்ணிட்டேன்... ஐ அம் ரியலி சாரி

பூமி - இட்ஸ் ஓகே.. இந்தா இது என்னோட கார்டு...எனக்கு கூட வர ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம்

சூர்யா - ம் சொன்னியே ....and  once  again  ஆல் the பெஸ்ட் மேன்..நம்ம லாஸ்ட் டைம் மீட் பண்ணும் பொழுது நான் வேற tencsion ல இருந்தேன் .. அதனால நம்ம சகஜமா பேசிக்க முடியல

பூமி - இப்பயும் தான் நீ அவசரத்துல இருக்க போல

சூர்யா - ம்..என் ஆளுக்கு போன் பண்ணி அவளை கண்ணார பார்த்துட்டு டெல்லிக்கு கிளம்பலாம் என்று பார்த்தேன்.. கடைசில மேடம் என் மேல கோவமா இருக்காங்களா என்னன்னு தெரியல ரெண்டு நாள் போனை எடுக்கல

பூமி - டெல்லிக்கு எதுக்கு போற

சூர்யா - எல்லா வக்கீலுக்கும் ஒரு மீட்டிங் இருக்கு.. எனக்கு தெரிஞ்சி ஒரு மாசம் இல்ல ரெண்டு மாசம் ஒரு ப்ராஜெக்ட் செய்ய வேண்டியதா இருக்கும்

பூமி - என்ன இது வக்கீலங்களுக்கு கூட ப்ராஜெக்ட் இருக்கா

சூர்யா - இது வேற மாதிரி டீலிங் அது உனக்கு சொன்னா புரியாது

பூமி - ஓ நீ தான் நிறைய சமுதாய விஷயத்தில் எல்லாம் ஈடுபடுறேன்னு கார்த்திக் சொன்னான் அதை நோக்கி போறியா..

சூர்யா - ஹேய் நீ அப்புறம் கார்த்திக்க பார்த்தியா..

பூமி - அன்னைக்கு வழியில் பார்த்தேன் இல்ல அவ்வளவு தான்....  பாவம் அவன் பொஞ்சாதி அவங்க லவ்வர் கூட

சூர்யா - ம் ஆமாமா

பூமி - இந்த மாதிரி பெண்களை எல்லாம் எனக்கு தெரிஞ்சி நல்ல பனிஷ் பண்ணனும்....

சூர்யா - ஏன் man  அப்படி சொல்ற

பூமி - ஆமா.....மாப்பிள்ளையை பிடிக்கலைன்னு முன்னாடியே சொல்லி இருந்தா கார்த்திக் வேற யாரையாவது கல்யாணம் பண்ணி இருப்பான் இல்ல ...இப்போ அவன கல்யாணம் பண்ணிக்கிட்ட கொஞ்ச நாள் பிறகு அவனை பிடிக்கலைன்னு சொல்லிட்டு அந்த பெண் அவங்க வாழ்க்கையை தேடி போயிட்டாங்க... ஆனா கார்த்திக் பாவம் இல்ல

சூர்யா - அதுக்கு என்ன பண்ணுறது...இந்த மடையன் கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணு மனசுல யாராவது இருக்காங்களான்னு கேட்டிருக்கணும்..அப்பா சொன்னாங்க அம்மா சொன்னாங்க தாத்தா பாட்டி சொன்னாங்கன்னு நீட்டின கழுத்துல தாலிய கட்டிட்டு இப்போ ஒக்காந்து அழுதா அது யார் மேல தப்பு...எனக்கு தெரிஞ்சு நான் அந்த பொண்ணுக்கு தான்டா சப்போர்ட் பண்ணுவேன்

பூமி -  ஏய் என்னப்பா நீ கார்த்திக் பாவம் இல்லையா

சூர்யா - இதில் எல்லாம் பாவ பரிதாபம் பார்க்க கூடாது.. நம்ம கட்டிக்க போற பையனோ பெண்ணோ அவங்களுக்கு நம்மளை பிடிச்சிருக்கா என்று ஒன்றுக்கு பத்து தடவை கேட்காமல் ஒரு விஷயத்துல ஈடுபடக்கூடாது..

என்று சூர்யா சொல்ல..பூமிநாதனின் தெளிந்த நீரோடையாக இருந்தவன் இதயத்தில் சூர்யா எரிந்த கல் குட்டையை குழப்பியது போல் தோன்ற

சூர்யா - சரி பூமி..எனக்கு நேரமாகுது நான் ப்ரேகரத்தை சுத்திட்டு வரேன்

பூமி - என்னப்பா உன் ஆள் வரலையா..

சூர்யா - இல்ல போனே எடுக்கல ....என் காதலுக்கு உண்மையான சக்தி இருந்தா நான் ஊருக்கு போறதுக்குள்ள அவளை பார்த்துடுவேன்...இல்லையா தாத்தா பாட்டி கிட்ட சொல்லி இந்த கிப்டை எப்படியாவது அவகிட்ட சேர்க்க ஏற்பாடு பண்ணுவேன்

பூமி - ம் ....பட் நீ இங்க இருந்தா கண்டிப்பா உன்னை என் நிச்சயதார்த்தத்துக்கு அழைத்திருப்பேன்..

சூர்யா - பரவாயில்ல... நிச்சயம் நடந்தா போதுமா...கல்யாணம் நடக்கணும் இல்ல.. நான் இல்லாம உன் கல்யாணம் நடக்காது கவலைப்படாதே.... சரி நீ இங்கே தியானதுல இரு நான் கோவிலை சுத்திட்டு வரேன்

என்று சொன்ன சூர்யா கோவில் ப்ரேகரத்தை சுத்த சென்ற அடுத்த நொடி பூமிநாதனின் கைபேசி சினிங்கியதும் பூமிநாதன் தன் கைபேசியை எடுத்து பார்த்தவன் அதில் குழலியின் பெயர் தெரிந்ததும் அந்த கைபேசியின் அழைப்புக்கு  உயிர் தராமல் அதை அமர்த்தி தன் பாக்கெட்டில் வைத்தவன் மீண்டும் கோவில் படிக்கட்டில் போய் அமர ..மறுபக்கம் ராஜனும் சந்திரனும் காரில் வந்து கொண்டிருந்த சமயம்...

ராஜன் - டேய் இங்கே வண்டியை நிறுத்து..

சந்திரன் - ஏன்டா என்ன ஆச்சு..

ராஜன் - நான் பக்கத்துல பூமி மாப்பிள்ளைக்கு பட்டு வேட்டியும் பட்டு சட்டையும் ரெடி பண்ண சொல்லி இருக்கேன் நான் போய் வாங்கிட்டு வந்துடறேன் நீ வீட்டுக்கு போ...

சந்திரன் -  ஏய் நான் இங்கே வெயிட் பண்றேன் டா...நீ போயிட்டு வா

ராஜன் - அடேய் பக்கத்து தெருவுல தான் ட்ரைலர் வீடு...நான் வந்துக்கிறேன்..நீ போ பூமி மாப்பிள்ளை கிட்ட குழலி ஏதாவது உளறி வைக்கப் போறா

என்று ராஜன் சொன்னதும் சந்திரன் பூங்குழலியின் வீட்டிற்கு சென்றவர் அவள் வாசல் கதவை தட்டிய அடுத்த நொடி கதவை திறந்தவள்...

பூங்குழலி - மாமா மாமா என்னை மன்னிச்சிடுங்க மாமா ...பூமி என் மேல் கோச்சிக்கிட்டு வீட்டை விட்டு போயிட்டாரு மாமா....

என்று அவள் அழுது கொண்டே சொன்னதும் தலைக்கால் புரியாத சந்திரன்

என்னம்மா என்ன ஆச்சு முதல்ல அழறதை நிறுத்து...

என்று சொன்னவர் அவள் கண்ணீரை துடைக்க...

பூங்குழலி - இல்ல மாமா தப்பு என் மேல தான்... நான் தான் தப்பு பண்ணிட்டேன்.. அப்பாக்கு தெரிஞ்சா என்கிட்ட ரொம்ப கோவப்படுவாரு....எனக்கு பயமா இருக்கு மாமா... பூமி கோச்சுக்கிட்டு போயிட்டாரு மாமா..

சந்திரன் - இருமா இருமா முதல்ல ஆஸ்வாச படாத..கொஞ்சம் பொறுமையா இரு என்ன ஆச்சுன்னு பொறுமையா சொல்லுடா

பூங்குழலி - இல்ல மாமா.. எனக்கு பயமா இருக்கு...இந்த நிச்சயம் நடக்காதா..அப்போ அப்பா மறுபடியும் சாகப் போறேன்னு சொல்லி என்கிட்ட கோபப்படுவாரா?

சந்திரன் - ஐயோ இரும்மா.. ஏன் முதல்ல இப்படி பதட்டப்படுற..இந்தா தண்ணி குடி

பூங்குழலி - இல்ல எனக்கு எதுவும் வேணாம்.. பூமி கோவமா வெளியே போய் இருக்காரு..

என்று சொன்னதையே கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொண்டிருந்த பூங்குழலியை சந்திரன் அமைதிப்படுத்த

சந்திரன் - இப்ப சொல்லுமா என்ன ஆச்சு

என்று மீண்டும் பூங்குழலியை அவர் கேள்வி கேட்க..

இல்ல மாமா நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு இருந்தோமா.. அப்ப எனக்கு பூமி ரசம் பரிமாறினாரு அப்போ தெரியாம என் மேல ரசம் ஊத்திடுது..அவர் என்னமோ என் மேல இருக்கிற அக்கறையால் தான் என் மேல் இருந்த கரையை சுத்தம் பண்ணாரு.. ஆனா என்னை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே... ஏதோ ஒரு நெருடல்ல என் மேல கையெல்லாம் வைக்கிற வேலை வச்சுக்காதீங்கன்னு கத்திட்டேன்.,அதுக்கு அவரு கோபப்பட்டு என்னை பாத்தா உனக்கு அவ்வளவு கேவலமா தெரியுதான்னு கேட்டு வீட்டை விட்டு போயிட்டாரு மாமா... எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு....நான் பண்ணது தப்பு தான்...ஆனா என் நிலைமை

சந்திரன் - புரியுதும்மா... சரி சரி இப்ப ஏன் நீ இவ்வளவு பதட்டப்படுற... ஒன்னும் இல்ல அவனை நான் பார்த்துக்கிறேன்..

பூங்குழலி - இல்ல மாமா...அப்பாக்கு தெரிஞ்சா... ஐயோ எனக்கு ரொம்ப பயமா இருக்கு..

சந்திரன் - இரு உன் அப்பன் பக்கத்து தெருவுக்கு தான் போயிருக்கான்..அவன் வந்தா பூமிக்கு வெளியே வேலை இருக்குன்னு கிளம்பிட்டானு சொல்லிடலாம்.... இந்த மாதிரி நடந்ததை எல்லாம் நீ அவன்கிட்ட சொல்ல வேணாம்..

பூங்குழலி - இல்ல மாமா...எனக்கு ரொம்ப பயமா இருக்கு

சந்திரன் - நான் தான் சொல்றேன் இல்ல.. நான் பார்த்துக்கிறேன்.. முதல்ல போய் நீ முகத்தை அலம்பிட்டு மேசை மேல இருக்கிற சாப்பாடு எல்லாம் எடுத்து வை

என்று சந்திரன் சொல்ல..பூங்குழலி வாடிய  முகத்துடன் மேசையை சுத்தம் செய்ய ...சந்திரன் தன் மகன் பூமியை அழைக்க ...கோவில் படிக்கட்டில் அமர்ந்து இருந்த பூமியின் கைபேசி சிணுங்கியதும் பூமி நாதன் தன் தந்தையின் பெயரை பார்த்தவன் கைபேசியுடன் கோவிலில் இருந்து வெளியே வந்தவன் அவர் அழைப்புக்கு உயிர் தர

பூமி - அப்பா

சந்திரன் - துறை எங்க இருக்கீங்க

பூமி - கோவில்ல

சந்திரன் - ஏன் துறைக்கு பசியா.... உண்டை கட்டி வாங்க அங்கே போய் இருக்கீங்க

பூமி - அப்பா..

சந்திரன் - வாயை மூடு பூமி.... இப்போ நீ எந்த கோவில்ல இருக்க ..

பூமி - கற்கண்டு விநாயகர் கோவில்..

சந்திரன் - நீ அங்கேயே இரு...நான் இன்னும் பத்து நிமிஷத்துல அங்கே இருப்பேன்

பூமி - அப்பா..

சந்திரன் - உன்னை அங்கேயே இருக்க சொன்னேன்..

என்று கோவமாக சொன்ன சந்திரன் கைபேசி அணைப்பை துண்டிக்க...

சந்திரன் - அம்மாடி அவன் கோவில்ல தான் இருக்கான்.... இரு நான் போய் அழைச்சிட்டு வரேன்.

பூங்குழலி - நானும் வரேன் மாமா

சந்திரன் - நீ வேணா டா...நான் அவனை இங்கே அழைச்சிட்டு வரேன்

பூங்குழலி - இல்ல மாமா நானும் வரேன் pls...

சந்திரன் - உன் அப்பன் வந்துடுவான் மா..

பூங்குழலி - நீங்க எதாவது சொல்லி சமாளியுங்க மாமா... ப்ளீஸ் நானும் உங்ககூட பூமியை பார்க்க வரேன்

சந்திரன் - சரி வா போகலாம்...நான், நீ, பூமி மூணு பேரும் கோவிலுக்கு போறோம்ன்னு நான் உன் அப்பனுக்கு மெசேஜ் வச்சிடுறேன்...

என்று சொன்ன சந்திரன்.. பூங்குழலியை அழைத்து கொண்டு கற்கண்டு விநாயகர் கோவிலுக்கு அவரின் காரில் செல்ல... கோவில் வாசலில் பூமிநாதன் தன் தந்தையின் வருகைக்காக காத்து இருக்க ...கோவிலுக்குள் தன் காதலியின் வருகைக்காக SJ  சூர்யா வேண்டி இருக்க ..

கல் யாருக்கு......??
கற்கண்டு யாருக்கு...??
என்று அந்த விநாயகரே முடிவு செய்யட்டும்....
அடுத்த பகுதியில் சந்திப்போம்...

Continue Reading

You'll Also Like

134K 13.7K 100
Well anything I say will just spoil the surprise Naan surprise nenaichu ezhuthum pothe correct ah guess panniduveenga🤪🤪 OK I will say this.. it al...
20.6K 827 23
தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???
28.2K 921 45
hi guys idhu enoda new story.... jaya paraksh than namma hero... awana JP nu solwam friends and awanoda amma elarum apdi than koopduwanga awan amm...
11.2K 486 8
ஞாபகங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாதவை. வருடங்கள் பல கடந்து போனாலும் பசுமரத்தில் அடித்த ஆணி போல நம் நினைவில் நிற்கக்கூடியவை. ஏதோ ஒரு சந்தர்பத்...