🔱பூமியின் பூங்குழலி🔱

By Sakthriyan

8.6K 1.4K 1.1K

இயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕 More

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8
பாகம் 9
பாகம் 10
பாகம் 12
பாகம் 13
பாகம் 14
பாகம் 15
பாகம் 16
பாகம் 17
பாகம் 18
பாகம் 19
பாகம் 20
பாகம் 21
பாகம் 22
பாகம் 23
பாகம் 24
பாகம் 25
பாகம் 26
பாகம் 27
பாகம் 28
பாகம் 29
பாகம் 30
பாகம் 31
பாகம் 32
பாகம் 33
பாகம் 34
பாகம் 35
பாகம் 36
பாகம் 37
பாகம் 38
பாகம் 39
பாகம் 40
பாகம் 41
பாகம் 42
பாகம் 43
பாகம் 44
பாகம் 45
P❤️R❤️O♥️M❤️O
பாகம் 46
பாகம் 47
பாகம் 48
பாகம் 49
பாகம் 50

பாகம் 11

179 28 27
By Sakthriyan

அப்பா அது குழலி உடைய வண்டி தானே... ஏன் அவ வண்டி இங்கே நிக்குது

என்று சொன்னபடி பூமி காரை விட்டு கீழே இறங்க......

அய்யய்யோ இது சூர்யா தங்கி இருக்கிற வீடாச்சே......

என்று சந்திரன் திருதிருவென்று முழிக்க.... இவர்கள் காரை தொடர்ந்து வந்து கொண்டிருந்த ராஜனும் அந்த இடத்தில் சரியாக வந்து சேர....பூமி காரை விட்டு கீழே இறங்கியவன் வீட்டிற்குள் போக முயன்றவன் சட்டென்று அதே இடத்தில் நின்று விட... ராஜனும் சந்திரனும் கேள்வி நிறைந்த முகத்துடன் அவனை பார்க்க...

actually இன்னைக்கு registration இருக்குன்னு குழலிக்கு தெரியும் இல்ல... அப்படி தெரிந்தும் அவ வரலைனா கண்டிப்பா அதுக்கு ஒரு reason இருக்கும் தானே... இப்போ நான் போய் அவ ஏன் இங்க இருக்கானு பாத்தா அது நான் என் குழலியை தர்மசங்கடத்துக்கு ஆளாக்குற மாதிரி அவ feel பண்ணாவா...... so என்னால அத தாங்கிக்க முடியாது.... வேணா அப்பா வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்...

என்று சொன்னபடி பூமி அவன் முன் வைத்த காலை பின் எடுத்தவன் காரை நோக்கி செல்ல.... ராஜன் பெருமூச்சு விட்டவன்... சந்திரனின் அருகில் சென்று அவன் கரங்களை பற்றியவன்

டேய் உன்னை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன் என் மருமகனை இங்க இருந்து கூட்டிட்டு போயிடு.... அவர் மட்டும் சூர்யாவை பார்த்தா அப்புறம் யாரு என்னனு கேள்வி கேப்பாரு... pls டா அவரை உன் வீட்டுக்கு அழைச்சுட்டு போ

என்று ராஜன் கலவரமான முகத்துடன் சொன்னதும் சந்திரன் சூழ்நிலை சரியில்லை என்று உணர்ந்தவர் பூமியை அவரின் வீட்டை நோக்கி காரை விரட்டும் ப்படி சொல்ல

ஏன் பா ராஜன் அப்பா வரலையா...

என்று பூமி கேட்டதும் சந்திரன் சமாளிக்கும் படியாக அவனிடம் கனிவான குரலில்

இல்ல பா அவனுக்கு பக்கத்துல ஏதோ வேலை இருக்காம் அவன் அந்த வேலையை முடிச்சுட்டு அவுங்க வீட்டுக்கு போயிடுவான்

என்று சந்திரன் சொல்ல... சட்டென்று பூமி அவரை தன் காரின் வலது பக்க சிறு கண்ணாடியில் இருந்து பார்த்தவன் அவரின் முகம் பதற்றதுடன் இருப்பதை பார்த்து காரில் இருந்து கீழே இறங்கி அவர் அருகில் சென்று அவர் கரங்களை கனிவாக பற்றியவன்...

ஏன் அப்பா இவ்வளவு tencsion... pls நீங்க இதுக்கெல்லாம் react பண்ணாதீங்க ok வா... நீங்க கிளம்புங்க...அப்புறம்...எனக்காக நீங்க நம்ம குழலிக்கிட்ட இதெல்லாம் கேட்டு அவளை கஷ்ட்ட படுத்த கூடாது ok வா...

என்று அவன் சொன்னதும் தன் கண்கள் கலங்கிய நிலையில்

இல்ல மாப்பிள்ள நான் எதுவும் கேட்கல்...ஆனா நீங்க என் மகள

என்று ராஜன் மீண்டும் கண்கள் கலங்கி வார்த்தை தடுமாற

டேய் டேய் over ஆக்ட்டிங் உடம்புக்கு ஆகாது.. ஒழுங்கா நீ வீட்டுக்கு கிளம்பு.... பூமி இவனை தனியா விட்டா இவன் எதாவது கேனை மாதிரி பண்ணுவான்.. அதனால நான் இவன் கூட போறேன்... நீ நம்ம வீட்டுக்கு கார்ல போயிடு பா

என்று இவர்களை நோக்கி வந்த சந்திரன் சொல்ல... பூமியும் அதே சரி என்று எண்ணியவன் தன் காரை அவன் வீட்டை நோக்கி விரட்ட....பூமியின் கார் தொலைதூரம் சென்றதை ஊர்ஜிதபடுத்தி கொண்ட ராஜன் கோவமாக சூர்யாவின் வீட்டுக்குள் போக முயன்றவனை தடுத்து நிறுத்திய சந்திரன்...

டேய் நீ என்ன பையித்தியமா..இப்போ எங்க போற..

என்று கோவமாக சந்திரன் கேட்க... கண்கள் இரண்டும் சிவந்தப்படி பற்களை கடித்தவன்

இருடா இன்னைக்கு நானா இல்ல அந்த சூர்யாவான்னு பாத்துடலாம்.. இனி என் பெண் வாழ்க்கையில இந்த சூர்யா தலையிடாத அளவுக்கு ரெண்டுல ஒன்னு பண்றேன் பாரு...

என்று கத்திய ராஜன் கோவமாக அந்த வீட்டிற்குள் போக.... சந்திரன் அவரை பின் தொடர...
சூர்யா தங்கி இருக்கும் வீடு ஒரு hall மற்றும் இரண்டு ரூம்...அதன் அருகில் சின்னதாக ஒரு சமையல் அறையும் இருந்தது..அந்த சமையல் அறையில் வயதான அம்மா ஒருவள் பாத்திரம் துளக்கி கொண்டு இருக்க.. அவளை பார்த்ததும் ராஜன் கண்கள் சிவந்தப்படி கோவமாக உள்ளே போக.... அந்த அம்மாவோ ராஜனை முறைத்தபடி நிற்க்க.... ராஜன் அந்த அம்மாவை கண்டுகொள்ளாமல்

ஏய் சூர்யா..... உன்னை தான்.... எங்க இருக்க வெளியே வா...... எங்க என் மகள்.... பூங்குழலி எங்க இருக்க நீ..... வெளிய வான்னு சொல்றேன் இல்ல...

என்று ராஜன் கோவமாக கத்த....ஒரு அறைக்குள் இருந்து நான்கு சக்கர வண்டியில் வெளியே வந்த முதியவர் ராஜனை பார்த்ததும் கண்கள் கலங்கி...

தேவராஜ் - வாப்பா ஏன் வந்ததும் வராதுமா   இவ்வளவு கோவப்படுற... சரி எப்படி இருக்குற..

ராஜன் - நான் உங்ககிட்ட பேச தயாரா இல்ல... எங்க என் மக...

தேவராஜ் - சித்ரா..சூர்யாவை பாக்க ஹாஸ்பிடல்க்கு போய் இருக்கா

சந்திரன் - என்ன அப்பா சொல்றிங்க.... சூர்யாக்கு என்னாச்சு

தேவராஜ் - நேத்து சூர்யாக்கு fix வந்துடுது பா...எனக்கு என்ன பண்றதுனே தெரியல... நான் உடனே சித்ராக்கு தான் call பண்ணேன்... ஆனா சித்ராவோட போனை உன் மகன் பூமி தான் எடுத்தாரு போல.... அவர்கிட்ட நான் எதாவது உளறி வச்சிட போறேன்னு தான் போனை cut பண்ணிட்டேன்

சந்திரன் - ஐயோ இப்போ சூர்யா எங்க...

தேவராஜ் - பக்கத்துல இருக்குற கிளிங்க்ல தான் சேர்த்து இருக்கோம்... சூர்யா விழுந்த வேகத்துல பின் தலையில வேற அடி பட்டு ரொம்ப ரத்தம் போயிடுது.... சூர்யாக்கும் சித்ராகும் ஒரே blood குருப் தானே அதான் நேத்து நான் சித்ராக்கு call பண்ணேன்

சந்திரன் - என்ன அப்பா நீங்க... உங்களுக்கு எதாவது problem னா எனக்கு call பண்ணலாம் இல்ல.... நானும் உங்க மகன் மாதிரி இல்லையா..

தேவராஜ் - நான் பெத்த மகனே இதோ மூணாவது மனுஷன் மாதிரி எட்டி நிக்குறான்... இதுல அவனோட நண்பன் நீ.. உன்னை எப்படி பா நான் தொல்லை தர முடியும்...

சந்திரன் - இப்போ பூங்குழலி.. சூர்யாவை பார்க்க தான் போய் இருக்காளா...

தேவராஜ் - ஆமா பா.... பக்கத்து தெருவுல தான் கிளினிக்... முதல்ல இந்த வீட்டுக்கு வந்துட்டு அப்புறம் சூர்யாக்கு fix வந்துடுதுன்னு கேள்வி பட்டு தான் சித்ரா பதறி அடிச்சிட்டு ஓடி இருக்குறா

சந்திரன் - சரி பா நானும் இதோ உடனே போய் சூர்யாவை பாக்குறேன்...

ராஜன் - டேய் நீ என்னடா வந்த வேலைய விட்டுட்டு தேவை இல்லாத விஷயத்தை எல்லாம் பேசிகிட்டு இருக்குற... இங்க பாருங்க இனிமே என் மகளை நீங்க தொந்தரவு பண்ணாதீங்க....அவளுக்கு நீங்க இனிமே போன் பண்ணக்கூடாது....நாங்க தான் உங்க ஒட்டும் வேணா உறவும் வேணான்னு ஒதுங்கி போய்ட்டோம் இல்ல... எங்களை விட்டுடுங்க....

தேவராஜ் - ஏன்டா இப்படி பேசுற... பெற்ற அம்மா அப்பான்னு நாங்க ரெண்டு பேர் உயிரோட இருக்குற நினைப்பே உனக்கு இல்லையா....சரி நீ தான் எங்கள வெறுக்குற... ஆனா என் பேத்தியை கூட எங்கிட்ட ஒட்ட விட மாட்டுரியே இதுல என்னடா நியாயம் இருக்கு

ராஜன் - போதும் நிறுத்துங்க... என்னை பொறுத்தவரை எங்களுக்கு யாருமே இல்ல..என் மகளுக்கு நான் மட்டும் போதும்.....அவளுக்கு இப்போ தான் ஒரு நல்ல வாழ்க்கை அமைய போகுது உங்கள எல்லாம் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன் என் மக வாழ்க்கையை அழிச்சிடாதீங்க...

தேவராஜ் - டேய் ராஜா.... நாங்க ஏன் டா சித்ரா வாழ்க்கையை அழிக்க நினைக்க போறோம்....

ராஜன் - போதும் நீங்க எதுவும் என்கிட்ட பேச வேணா... என்னை பொறுத்த வரை நீங்க எல்லாம் என்னைக்கோ செத்....

ராஜனின் வார்த்தைகள் முழுமை அடையும் முன் அவர் கன்னத்தில் பளார் என்று அடி விழுந்த சத்தம் கேட்டு சந்திரன் அதிர்ந்து போக.. ராஜன் கலங்கிய கண்களுடன் தன்னை அறைந்த தன் தாயின் முகத்தை பார்த்தவன் கரங்கள் அவன் கன்னத்தை தாங்கி இருக்க...

என்னடா டா தலைக்கு மேல உசந்த பிள்ளையாச்சே கை வச்சா நல்லா இருக்காதுன்னு நானும் எதையும் கண்டுக்காம விட்டா ரொம்ப அதிகமா பேசுற.... துளைச்சிடுவேன் சொல்லிட்டேன்... உனக்கு சித்ரா மகள் என்றால் எங்களுக்கு அவ பேத்தி.... அவ எங்களை பார்க்க இங்க வருவா தான்.... உன்னால அத பொறுத்துக்க முடியலைன்னா நீ போய் எங்காவது சுவத்துல தலையை முட்டிக்கோ... அதை விட்டுட்டு என் புருஷன் எதிர்ல குரலை எல்லாம் உசத்தி பேசுற வேல வேணா சொல்லிட்டேன்....

என்று ராஜனின் அம்மா தேவி கோவமாக பேச...

சந்திரன் - என்ன மா நீங்க ஏன் இப்படி கோவப்படுறீங்க

தேவி - பின்ன என்ன சந்திரா...சூர்யா யாரு இவனுக்கு... தன்னோட தங்கச்சி பிள்ளை தானே... ஆனா இவன் என்னமோ சூர்யா பேச்சை எடுத்தாலே கொலை குற்றவாளியை பாக்குற மாதிரி நடந்துக்குறான்....இதோ பாரு டா... சூர்யா திறமைக்கு டெல்லி high கோர்ட்ல வாதட எல்லாம் வாய்ப்பு கிடைச்சுது ஆனா உன் மக சூர்யா இல்லைனா கிறுக்கா மாறிடுவான்னு தான் நாங்க எங்கேயும் போகாம இங்க இருக்குறோம்.... ஆனா நீ இதை எதுவும் புரிஞ்சிக்காம காட்டு கத்து கத்துற....

உங்க கரிசனதுக்கு ரொம்ப நன்றி...தயவு செய்து நீங்க எங்கேயாவது போயிடுங்க...ஏன் இந்த ஊருலேயே இருந்து எங்க உசுரை எடுக்குறீங்க

என்று ராஜன் அவர் பங்குக்கு மீண்டும் வார்த்தைகளால் அனல் வீச பேசிக்கொண்டு இருக்க... மீண்டும் ராஜனை நோக்கி கை ஓங்கிய அவனின் அம்மா தேவியை தடுத்த சந்திரன்..

ஏன் மா நீங்களும் பதிலுக்கு பதில் கோவப்படுறீங்க.... இவன் தான் ஏதோ விளங்காதவன்... புரியாம பண்ணுறான்... விடுங்க அம்மா நான் தான் இருக்கேன் இல்ல...

என்று சந்திரன் சமாதானம் செய்ய... தேவராஜூம் தேவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருந்த சமயம் ராஜன் மீண்டும் கோவமாக

டேய் சந்திரா நீ வாடா இவுங்கள சொல்லி குத்தம் இல்ல... நான் பெத்த பொண்ணு எனக்கு சரியில்ல... அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி இந்த குடும்பமே வேண்டாம்ன்னு சொன்னேன் கேக்காம என் மகளை இவுங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் அவ வாழ்க்கையையே அழிச்சிட்டாங்க

என்று ராஜன் மீண்டும் கோவமாக பேச.. தேவி தன் மகன் ராஜன் அருகில் வந்தவள் அவனை பார்த்து முறைத்தப்படி

என்ன சொன்ன உன் மக வாழ்க்கை அழிஞ்சுடுதா..... அப்போ சூர்யா.... சொல்லு டா அப்போ சூர்யா வாழ்க்கையும் தானே அழிஞ்சிடுது.... சூர்யாவை விட உன் மக ஐந்து வயது இளையவள் தானே.. ஆனா உன் மகளுக்கு இதோ நீ உன் நண்பனின் மகனை கட்டி வைக்க போற... ஆனா சூர்யாவுக்கு வலிப்பு இருக்குற காரணத்தால் கல்யாண பேச்சை எடுத்தாலே வீட்ல பிரேச்சனை தான் வருது..... நீ சொல்லு... சூர்யாக்கு வலிப்பு வர யாரு காரணம்..... சொல்லு டா உன் மகள் சித்ரா தானே காரணம்... ஆனா உனக்கு அந்த குற்ற உணர்ச்சியே இல்லையே

என்று தேவி கண்களில் கண்ணீருடன் ராஜனை கேள்வி கேட்க.... ராஜன் தன் அம்மா என்று கூட பார்க்காமல்

எனக்கு எந்த உணர்ச்சியும் இல்ல....எனக்கு என் மக நல்லா வாழனும்.... என்னால என் மக வாழ்க்கையை விட்டு தர முடியாது.... இனி என் மகளை யாரும் தொந்தரவு பண்ணாதீங்க...

என்று சொன்ன ராஜன் வேகமாக கீழே இறங்கி போக.....

அம்மா நீங்க கவலை படாதீங்க...ராஜன்க்கு இப்போ எல்லாம் தேவை இல்லாத பயம் அதிகமா இருக்கு... எல்லாம் சீக்கிரம் மாறும்... நான் ஒரு நாள் உங்க பேத்தி சித்ரா கூட வந்து சூர்யாவை பாக்குறேன்.... இப்போ நான் கிளம்புறேன்.... சூர்யா வந்தா கேட்டேன்னு சொல்லுங்க...

என்று சொன்ன சந்திரன் வேகமாக கீழே இறங்கி செல்ல... ராஜனோ இன்று தன் மகள் பூங்குழலி கன்னத்தில் நாலு அறை விட வேண்டும் என்ற எண்ணத்தில் சூர்யாவின் வீட்டு வாசலில் நின்று இருக்க...மறுபக்கம் பூமிநாதன் தன் காரை அவன் வீட்டை நோக்கி விரட்டியவனின் கார் எதிரில் ஒரு bike வந்து மோதியதும் தன் சிந்தையில் இருந்த பூங்குழலி கலைந்து இவன் கண் எதிரில் ஒருவர் ஹெல்மெட் உடன் கீழே விழுந்து கிடக்க....

ஐயையோ sir என்னாச்சு... sorry நான் கவனிக்கல...

என்று பதறியப்படி பூமி தன் காரில் இருந்து கீழே இறங்கியவன் அந்த நபரை நோக்கி விரைந்து செல்ல....

its ok sir its my fault... நான் தான் signal போட்டதை கவனிக்லல

என்று சொன்னவன் தன் தலை கவசத்தை கழட்டியவன் பூமியை பார்த்து .......

நீங்க..... நீ..... டேய் நீ பூமிநாதன் தானே.....
என்று ஆச்சிரியமாக பூமியை கேட்க...

நீங்க.... நீ கார்த்திக் தானே....

என்று அவனை அடையாளம் கண்டு கொண்ட பூமி கார்த்திக்கை நோக்கி தன் கைகளை நீட்ட...

(( கார்த்திக் இந்த கதையில் இந்த பகுதிக்கு மட்டுமே தேவை படும் நபர் என்பதால்.. அவரை பற்றி நிறைய விளக்கங்கள் தேவையற்ற நிலையில்... நம் கதையின் நாயகன் பூமியின் உயர் நிலை பள்ளியில் கார்த்திக்கும் பயின்றதால் இவர்கள் நட்பின் அடிப்படையில் இன்று பேசும் காட்சி...))

கார்த்தி - எப்படி நாதன் இருக்குற... போன மாசம் கூட நான் உன் அப்பாவை அவர் friend கூட பாத்தேன்.... நீ துபாய்ல இருந்து வர போறேன்னு சொன்னார்.... எப்ப வந்த

பூமி - நான் வந்து five days இருக்கும்... சரி நீ எப்படி இருக்க.... life எப்படி போகுது.... என்ன ரொம்ப வேகமா போற போல

கார்த்திக் - ஆமா நாதன் என் owner மேல பொது நல வழக்கு போட்டு இருக்காங்க... அதுக்காக அவரோட வக்கீல் சில detials எல்லாம் கேட்டு இருந்தாரு அதை தான் எடுத்துட்டு போறேன்....

பூமி - பொது நல வழக்கா

கார்த்தி - ம் ஆமா.... என் owner காலாவதியான மருந்தை எல்லாம் date change பண்ணி sales பண்ணுறாரு SO அவர் மேல நம்ம SJ கேஸ் போட்டு இருக்கான்..

பூமி - நம்ம SJ வா அது யாரு

கார்த்தி - hei நம்ம சூர்யா... SJ சூர்யதேவ் நியாபகம் இல்லையா

பூமி - நம்ம சூர்யாவா.... ஏய் கார்த்தி நான் என்னை கட்டிக்க போற பொண்ணுகிட்ட கூட ஜஸ்ட் two days before நம்ம சூர்யாவை பற்றி பேசினேன்....

கார்த்தி - அப்டியா....சூப்பர்....

பூமி - இப்போ சூர்யா என்ன பண்ணுறான்

கார்த்தி - அவரை இப்போ SJ ன்னு சொன்னா தான் எல்லோருக்கும் தெரியும்.. அவர் இப்போ பெரிய வக்கீல்...

பூமி - really சூப்பர்..... நான் கூட என் marrigae க்கு உங்க எல்லோரையும் invite பண்ணனும்னு நினைத்தேன்.. உன் card இருந்தா குடு நான் உன்னை உன் வீட்டுக்கு வருவதற்கு முன்னாடி contact பண்றேன்

கார்த்தி - இந்தா இது என்னோட card.... and இந்தா இது SJ.சூர்யதேவ்வோட card... நீ call பண்ணி பேசு அவன் கண்டிப்பா சந்தோஷப்படுவான்

பூமி - SJ க்கு... imean சூர்யாக்கு கல்யாணம் ஆகிடுத்தா

கார்த்தி - இல்ல... அவன் family ல என்னமோ ப்ரோப்லேம் போல.... but துறை சின்னதுல இருந்து அவன் மாமன் மகளை love பண்றாரு ... one side love.... எப்பாவது நாங்க meet பண்ணும் போது அந்த பெண்ணை பற்றி வர்ணிச்சுகிட்டே இருப்பான்...

பூமி - ஒ.... சூப்பர்..... சரி உனக்கு marriage

கார்த்தி - கல்யாணமும் ஆச்சு... விவாகரத்தும் ஆச்சு...

பூமி - sorry டா..

கார்த்தி - நீ ஏன் டா sorry கேக்குற... அந்த பொண்ணுக்கு என்னை பிடிக்கல போல... பெரியவுங்க வற்புறுதல்ல கல்யாணம் பண்ணிகிட்டா....but எவ்வளவு நாள் ஆகியும் என்னை அவளால ஏற்றுக் முடியல so நானே divorce தந்துட்டேன்

என்று கார்த்தி சலித்து கொண்டே சொன்னவனின் கைபேசியின் அழைப்பு இசை ஒலிக்கும் சத்தம் கேட்டவன்

கார்த்தி - சரி நாதா நம்ம இன்னோர் நாள் மீட் பண்ணலாம் bye

என்று சொன்ன கார்த்திக் மின்னல் வேகத்தில் பைக்கில் பறந்து விட... பூமி அவன் காரில் ஏறி அமர்ந்தவன் கண் எதிரில்...ஒரு கிளினிக்கின் வாசலில் இருந்து பூங்குழலி வெளியே வருவதை பார்த்தவன் இதழில் புன்னகை மலர்ந்தப்படி காரில் இருந்து இறங்கியவன் பூங்குழலியை நோக்கி ஓடி போய் அவள் எதிரில் நின்றவனை பார்த்து,வார்த்தை வெளி வராமல் பூங்குழலி விழிகள் பிதுங்கி நின்று இருக்க...

என்ன குழலி நீ எப்படி இங்க..குழலி உன்னை தான்....

என்று பூமி கேள்வி கேட்பதையும் கூட காதில் வாங்காமல் பூங்குழலி,பூமிநாதனையே பார்த்துக் கொண்டிருந்த வேளையில் பூங்குழலியை நோக்கி  வந்த nurse ஒருவர்....

சிஸ்டர் இந்தாங்க உங்க hand bag.... என்ன நீங்க உங்க பையை விட்டுட்டு போறது கூட தெரியாம என்ன யோசனையில் இருக்கீங்க..... அதுவும் இல்லாம ரத்தம் கொடுத்துட்டு உடனே எல்லாம் வீட்டுக்கு கிளம்பாதீங்க உள்ள வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போங்க

என்று சொன்னபடி அந்த நர்ஸ் பூங்குழலியை நோக்கி வர...

என்ன குழலி ரத்தம் கொடுத்தியா ஏதாவது எமர்ஜென்சியா ஏய் உன்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்

என்று பூமி அவள் தோள் மீது கை வைத்து இயல்பாக பேச.... சட்டென்று சுய நினைவுக்கு வந்த பூங்குழலி

அது.......இல்ல.... ரத்தம் கொடுக்க நான்......என் பிரண்டு.....

எனப் பூங்குழலியில் பேச்சில் உள்ள தடுமாற்றத்தை விளங்காதவனாக பூமிநாதன் அவள் சொற்களை காது கொடுத்து கேட்க...

சிஸ்டர் யாரு இவரு ரொம்ப உரிமையா பேசுறாரு எனக்கு இண்ட்ரடியூஸ் பண்ண மாட்டீங்களா...

என அந்த நர்ஸ் கேட்டதும்..பூங்குழலி பூமி நாதனை மலர்ந்த முகத்துடன் பார்த்தபடி இவரு நான் கல்யாணம் பண்ணிக்க போறவர்...

என்று பூமிநாதனை பார்த்து பூங்குழலி சொன்னதும் பூமியின் இதழ்களும் புன்னகையால் மலர..

உண்மையாவா... சூப்பர் சிஸ்டர்..உங்க ரெண்டு பேருடைய ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு...கல்யாணத்துக்கு என்னை எல்லாம் இன்வைட் பண்ணுவீங்க தானே......கண்டிப்பா பண்ணனும்....சரி இந்தாங்க உங்க பேக்....சார் உங்க ஆளு ரத்தம் கொடுத்து இருக்காங்க... அதனால அவங்கள கொஞ்சம் பார்த்து அழைச்சிட்டு போங்க..நம்ப உங்க கல்யாணத்துல மீட் பண்ணலாம்

என்று சிரித்த முகத்துடன் சொன்ன அந்த நர்ஸ் ஹாஸ்பிடலுக்குள் நுழைய..

என்ன குழலி...என்ன ஆச்சு... ஒன்னும் பிரச்சனை இல்லையே

என்று தன் மீது உள்ள அக்கறையால் சற்று பதட்டமான குரலில் கேட்ட பூமி நாதனின் விழிகளை நோக்கியவள்

இல்ல பூமி....ஒரு பிரெண்டுக்கு தலையில அடிபட்டு இருக்கு...நேத்து அதுக்காக தான் உங்களுக்கு போன் பண்ணி இருக்காங்க.. அவங்க அதுக்குள்ள வேற இடத்துல பிளட் அரேஞ்ச் பண்ணிட்டாங்க...இருந்தாலும் எப்பயும் ஹாஸ்பிடல்ல ஒரு யூனிட் ஸ்டாக் இருக்கிறது இயல்பு தானே...அதான் நான் பிளட் கொடுத்துட்டு வந்தேன்...

என்று பூங்குழலி சொன்னதும்... அவளை பெருமிதமாக பார்த்தவன்

ஓ அப்படியா சரி வா வா நம்ம கார்ல உட்காரு நம்ம வீட்டுக்கு போகலாம்...

என்று அவளை தாங்கும் விதத்தில் பூமி கேட்க....

பூங்குழலி - இல்ல பூமி என்னோட வண்டி பக்கத்து தெருவுல இருக்கு.....

பூமி - அதானே உன் வண்டிய நான் அங்க பார்த்தேனே....ஏன் நீ வண்டியை அங்க விட்டுட்டு வந்த....

என்று அவன் கேள்வி கேட்டதும்...இவனிடம் எந்த உண்மையையும் சொல்லக்கூடாது என்று தன் தந்தை போட்ட கட்டளையை மீறாத படி இவள் விழித்திருந்த சமயம்

ஒ இங்கே டிராபிக் அதிகம் இல்ல....வண்டி பார்க் பண்ண இடம் இருக்காது.. அதனால தான் அங்க park பண்ணிட்டியா

என்று அவனே அவளின் சஞ்சலத்தை போக்கும் நிலையில் பதில் கூற.. அவளும் ஆம் என்று தலை அசைக்க...

சரி வா குழலி நம்ம கார்ல போய் உன் வண்டியை எடுத்துக்கலாம்...

என்று சொன்னவன் அவள் பதிலை எதிர் பார்க்காமல் அவள் தோள் மீது கை போட்டு அவளை அரவணைத்தபடி காருக்கு அழைத்து போக....

பூமி - உக்காரு குழலி.... இரு நான் சீட் பெல்ட் போட்டு விடுறேன்...

பூங்குழலி - இருங்க பூமி first off all நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்

பூமி - எதுக்கு

பூங்குழலி - நான் blood தந்துட்டு registeration ஆபீஸ்க்கு வர try பண்ணேன் but

பூமி - குழலி pls... இனிமே நீ இப்படி எல்லாம் பண்ணாத

என்று அவன் சற்று காட்டமான குரலில் சொல்ல..... பூங்குழலி அவனை தயக்கமாக பார்க்க

பின்ன என்ன... ஏன் இப்போ இந்த விளக்கம் எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க... நான் உன்கிட்ட எதுவுமே கேக்கலையே... இன்னைக்குனு இல்ல குழலி....என்னைக்குமே நான் உங்கிட்ட எதுவும் கேக்க மாட்டேன்.... உனக்கா என்கிட்ட எதாவது சொல்லணும்ன்னு தோணுச்சுனா நீ தாராளமா ஒரு நண்பனா நினைத்து எங்கிட்ட சொல்லலாம்...

என்று பூமி சொன்னதும்... பூங்குழலியின் விழிகள் கலங்க..... இதை எதிர் பார்க்காத பூமி அவளின் கண்ணீருக்கு காரணம் தெரியாமல் அவளையே உத்து பார்த்த சமயம்... பூங்குழலி அவன் கரங்களை தன் இருக்கைகளால் பற்றியவள்

நீங்க என்னைக்குமே எனக்கு நண்பனா மட்டுமே இருப்பிங்கனா... நான் சாகும் வரை உங்களுக்கு கடமை பட்டவளா இருப்பேன்..

என்று பூங்குழலி சொன்ன சொல்லின் முழு அர்த்ததை உணராத பூமி அதை காதல் வார்த்தை என்று எண்ணியவன் அவள் விழிகளில் வழிந்த கண்ணீரை தன் விரல் கொண்டு துடைத்தவன்

இப்போ ஏன் அழற ... pls நீ அழாத.... எனக்கு என் அம்மா நினைவு வருது....அவுங்க கூட எப்பாவது இப்படி கண் கலங்குவாங்க... என்ன காரணம் எல்லாம் எனக்கு தெரியாது... ஆன்னா அவுங்க அழுதா எனக்கும் அழுக வரும்... pls நீ அழுதாலும் எனக்கு அப்படி தான் இருக்கு so அழாத குழலி....

என்று சொன்னவனின் கண்களும் கலங்கியப்படி அவளின் கைகளில் தன் முகத்தை பதிக்க .... அதை பார்த்ததும் பூங்குழலியின் கரங்கள் அவன் கைகளின் இடுக்கில் இருப்பதை உணர்ந்தவள் சட்டென்று அவளின் கைகளை அவன் பிடியில் இருந்து விடுவிக்க.... தன் நிலை உணர்ந்தவன்..

பூமி - சாரி குழலி..... அம்மா நியாபகம் வந்துடுது.....

பூங்குழலி - பரவாயில்ல... but சாரி எல்லாம் இனி கேக்காதீங்க

பூமி - ம்....இனி கேக்கல..... ok போலாமா..

என்று அவன் கேட்டதும் பூங்குழலி "ம்" என்று தலை அசைத்தவள் அவனையே பார்த்து கொண்டு வந்தவளின் மனதில் பூமி பட்டா போட்டு இடம் பிடித்தவனாக மாறி கொண்டு இருப்பதை உணர்ந்தவள்....இனி வரும் நாட்களில் அவனின் தொடுதலை முகம் சுலிக்காமல் ஏற்று கொள்ளும் மனநிலைக்கு தன்னை மாற்றி கொள்ள முயல வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவனுடன் காரில்  பயணிக்க.... பூமி விரட்டிய கார் பக்கத்து தெருவில் இருக்கும் சூர்யாவின் வீட்டு வாசலில் போய் நிற்க...பூங்குழலி பூமியின் காரில் இருந்து இறங்குவதை பார்க்காத ராஜன்... சூர்யாவின் வீட்டு அருகில் சந்திரனுடன் கோவமாக பேசிக்கொண்டு நிற்க்க...... பூங்குழலி அவள் வண்டியை நோக்கி வந்தவளை பார்த்ததும் ராஜன் கோவமாக அவளை நெருங்கியவன்..என்ன ஏது என்று விசாரிக்காமல் பூங்குழலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட...

பூங்குழலி - அம்மா.....

என்று கத்தியவள் அதே இடத்தில் மயங்கி விழ போனவளை ஒருவின் காதல் இதயம் தாங்கி பிடிக்க.....

🙏விரைவில் சந்திப்போம்🔱

Continue Reading

You'll Also Like

135K 8.8K 61
இரு வேறு துருவங்கள் சங்கமிக்கும் புள்ளி காதல் ..another km story ,
22.7K 806 9
காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, ந...
20.6K 827 23
தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???
46.7K 1K 20
பணக்காரன் மனதை வெல்லும் நாயகி❣️❣️