🔱பூமியின் பூங்குழலி🔱

By Sakthriyan

8.7K 1.4K 1.1K

இயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕 More

பாகம் 1
பாகம் 2
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8
பாகம் 9
பாகம் 10
பாகம் 11
பாகம் 12
பாகம் 13
பாகம் 14
பாகம் 15
பாகம் 16
பாகம் 17
பாகம் 18
பாகம் 19
பாகம் 20
பாகம் 21
பாகம் 22
பாகம் 23
பாகம் 24
பாகம் 25
பாகம் 26
பாகம் 27
பாகம் 28
பாகம் 29
பாகம் 30
பாகம் 31
பாகம் 32
பாகம் 33
பாகம் 34
பாகம் 35
பாகம் 36
பாகம் 37
பாகம் 38
பாகம் 39
பாகம் 40
பாகம் 41
பாகம் 42
பாகம் 43
பாகம் 44
பாகம் 45
P❤️R❤️O♥️M❤️O
பாகம் 46
பாகம் 47
பாகம் 48
பாகம் 49
பாகம் 50

பாகம் 3

309 37 37
By Sakthriyan

பூமி - என்ன கேள்வி கேட்கணும் கேளு

பூங்குழலி - நீங்க யாரையாவது லவ் பண்ணி இருக்கீங்களா

பூமி - கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் பொண்டாட்டிய தான் காதலிக்கணும்ன்னு நான் எனக்குள்ளே ஒரு தீர்க்கமான முடிவோட தான் இருக்கேன்

பூங்குழலி - அப்போ இதுதான் என் ரெண்டாவது கேள்வி கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க மறுபடியும் வெளிநாட்டுக்கு போவீங்களா

பூமி - இல்ல கடைசி காலத்துல அப்பா கூட சந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்பட்டு தான் அங்க இருந்த என் அக்ரீமெண்ட் எல்லாம் கேன்சல் பண்ணிட்டு இங்கே வந்து இருக்கேன்

பூங்குழலி - என்னுடைய மூணாவது கேள்வி ஒருவேளை உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ண விருப்பம் இருந்தா கல்யாணத்துக்கு அப்புறம் நான் எங்க அப்பா கிட்ட பாசமா இருக்கிறத பார்த்து நீங்க என்கிட்ட சண்டை போடுவீங்களா

பூமி - 🙄

பூங்குழலி - ஏன்னா என் அப்பாவுக்கு நான் மட்டும்தான்...என் அம்மா மறைவுக்குப் பிறகு அவர் எனக்கு அம்மாவாக இருந்ததை காட்டிலும் நான் அவருக்கு தாயாக இருக்கணும்னு ஆசைப்பட்டேன்..அதனால கல்யாணம் கூட பண்ணிக்க வேணான்னு தான் நினைச்சேன்..ஆனா நான் அப்படி பண்ணா என் அப்பாவுக்கு அது மன நிம்மதியே கொடுக்காது..அவர் முதல் முதலில் சந்திரன் மாமாவுடைய மகனை நீ கட்டிக்கிட்டா எங்களுடைய நட்பும் வழுமையடையும்.. நானும் உன்னை ஒரு நல்ல குடும்பத்தில் கல்யாணம் பண்ணி கொடுத்தேன் என்ற சந்தோஷத்துல நிம்மதியா என் கடைசி காலத்தை கழிச்சிடுவேன்னு சொன்னதால தான் நான் மறுப்பு எதுவும் பேசாமல் இப்போ உங்க முன்னாடி நிக்கிறேன்....உங்களுக்கு என்னை பிடிச்சிருந்தா நீங்க உங்க பதிலை சொல்லலாம்...

பூமிநாதன் அவன் பதிலை சொல்லும் முன் கார் மேகம் சுழ்ந்து மழை துளிகள் இவர்கள் மேல் பட்டதும்

பூங்குழலி - ஐயோ நீங்க இப்படி மறைவா நில்லுங்க நான் இதோ வநறேன்

என்று சொன்ன பூங்குழலி முந்தானையைக் கொண்டு தன் தலையை மூடியப்படி துளசி மாடத்திலிருந்த விளக்கை குளிர வைத்தவள்..அருகில் இருந்த தார்பாயை எடுத்து புறா கூண்டின் மேல் போர்த்துவிட்டு மொட்டை மாடியில் சிறிய மின் விளக்கை ஒளிர விட்டவள்...அடை மழைக்கு முன் தப்பித்து கீழே ஓடி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு வேகமாக பூமியின் அருகில் வர...

பூங்குழலி - கீழ போய் பேசலாமா

என்று சொன்னபடி கையில் காபி கோப்பையுடன் இறங்க...பூமிநாதன் அவளை பின்தொடர..இவர்கள் இருவரும் வரும் ஜோடி பொருத்தத்தை பார்த்து நண்பர்கள் இருவரும் தனக்கே உரிய பாஷையில் கண்களால் பேசிக்கொள்ள....

சந்திரன் - என்னமா என்ன சொல்றான் என் மகன்

என்று சந்திரன் கேட்க...பூங்குழலியின் புன்னகை மட்டுமே அவனுக்கு பதிலாய் கிடைத்தது

ராஜன் - என்ன மாப்ள என் பொண்ண உங்களுக்கு பிடிச்சிருக்கா

பூங்குழலி பூமியின் பதிலுக்காக தன் செவியை கூர்மையாக தீட்டி வைத்திருந்தாள்..

பூமி - எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் அப்பா....... அவுங்களுக்கு சம்மதமான்னு கேட்டுக்கோங்க

சந்திரன் - டேய் நான் இங்க இருக்கேன் டா நீ யாரை பார்த்து அப்பான்னு பதில் சொல்ற

பூமி - இல்லப்பா நான் இவரையும் என்னுடைய இன்னொரு அப்பாவா ஏத்துக்கிட்டதால இவரைப் பார்த்து தான்.. "அப்பா எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்னு சொன்னேன்"

என்று பூமிநாதன் சொன்ன அந்த பதிலில்.. பூங்குழலி தன் தந்தையையும் பூமி அவன் தந்தையாக ஏற்றுக் கொண்டதை நினைத்து பெரு மகிழ்ச்சி அடைய

சந்திரன் - ஓ புரியுது புரியுது என்ன என் மருமகள் உனக்கும் அவளுக்கும் கல்யாணம் முடிந்த பிறகும் என் நண்பனை நீ பாத்துக்கணும்னு சொன்னாளா

பூமி - இல்ல...எங்களுக்கு கல்யாணம் முடிந்த பிறகு அவங்க அவங்க அப்பாவை பார்த்துட்டுக்கிட்டா நம்ம ஏதாச்சும் சொல்வோமா என்ற கேள்விக் குண்டான பதில் தான் இது

ராஜன் - என்னம்மா நீ..நான் என்ன சின்ன குழந்தையா என்னையேன் நீங்க பாத்துக்கணும்..இன்னும் கேட்டா நீ சந்திரன் வீட்டுக்கு மருமகளா போனா எனக்கு அதைவிட ஒரு சந்தோஷம் இந்த உலகத்துல வேற என்ன இருக்க போகுது

சந்திரன் - இங்க பாருமா பூ....
நீ என் மகனை கட்டிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்ததும் நான் என் மூட்டை முடிச்சியை எல்லாம் கட்டிக்கிட்டு ராஜன் வீட்டுக்கு வந்துடுவேன்....நாங்க படிக்கிற காலத்துல இருந்தே ஒண்ணா சாப்பிட்டு ஒண்ணா வளர்ந்தவங்க தான்..ஆனா ஒண்ணா இருக்க தான் வாய்ப்பு கிடைக்கல இந்த வாய்ப்ப நாங்க பயன்படுத்திக்கிறோம்

ராஜன் - அப்போ மாப்பிள்ளைக்கு என் பெண்ணை பிடிச்சிருச்சு

சந்திரன் - மருமகளே உனக்கு என் பையன பிடிச்சிருக்கா

பூங்குழலியின் பதிலுக்காக அவன் விழிகள் அவள் இதழ்களை உன்னிப்பாக கவனிக்க... பவள வாய் அழகில் அந்த சொற்கள் இனிமையாக அவன் செவியில் ஒலித்தது...

பூங்குழலி - உங்க மகனை எனக்கு பிடிச்சிருக்கு மாமா

என்று சொன்னபடி அந்த இடத்தை விட்டு சிரித்துக் கொண்டே சமையலறைக்குள் செல்ல.....ராஜனும் சந்திரனும் சந்தோஷத்தில் மகிழ்ந்திருக்க...இவர்கள் இருவரும் கட்டி தழுவி நட்பை பாராட்ட.. பூமிக்கு மீண்டும் பூங்குழலியின் தரிசனம் கிடைக்குமா என்று அவன் விழிகள் சமையலறையை எதிர்நோக்கி இருக்க

சந்திரன் - சரிடா ரொம்ப சந்தோஷம் அப்போ ஐயர பார்த்து நிச்சயத்துக்கு நாள் குறிச்சிடுவோம்

ராஜன் - நீ ஏன் கவலைப்படுற நாளைக்கு முதல் வேலையா ஐயர் வீட்டுக்கு பால்காரன் போறாரோ இல்லையோ நான் போயிடுவேன்

சந்திரன் - ரொம்ப சந்தோஷம் டா என் மகன்.. பூவை பார்த்ததும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பான்னு எனக்கு முன்னாடியே தெரியும் அதனால தான் நான் இன்னைக்கே என் மகன இங்க அழச்சிகிட்டு வந்தேன்

ராஜன் - எனக்கும் ரொம்ப சந்தோஷம்டா எப்படியோ இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சா நம்பளும் காசி ராமேஸ்வரம்னு கிளம்பனும்

சந்திரன் - ஏய் டூட்....நம்ம என்ன காசி ராமேஸ்வரம் கிளம்ப வயசானவங்களா...நம்ப கோவாவுக்கு போகலாம்.

என்று சொன்னபடி சந்திரன் ராஜனை கட்டி கொள்ள...... பூமிநாதன் தன் அப்பாவை பார்த்து மலர்ந்த முகத்துடன்

பூமி - அப்பா என்ன இது

சந்திரன் - ஆமாடா ஏன் வயசானா நாங்க காசி ராமேஸ்வரம் தான் போகணுமா அதெல்லாம் முடியாது உங்க அம்மாங்க இருக்கும்போது எங்களை ஒரு கல்யாணம் காட்சிக்கு கூட அனுப்ப மாட்டாங்க

பூமி - ஏன்பா

சந்திரன் - வேற என்ன எங்க அழகுல வேற பொண்ணுங்க சொக்கி போயிடும்ன்னு தான்

பூமி - அப்பா இதெல்லாம் ரொம்ப ஓவர்.. உங்களுக்கு கோவாவுக்கு போக ஆசையா இருந்தா சொல்லுங்க என் ரெண்டு அப்பாவுக்கும் சேர்த்து நானே டிக்கெட் போடுறேன்... அதுக்காக அழகு அது இதெல்லாம் பொய் சொல்லாதீங்க

சந்திரன் - டேய் அப்ப நான் அழகா இல்லைன்னு சொல்றியா எங்க என் மருமகள்..மருமகளே இங்கே வா

சந்திரன் அழைத்ததும் அவள் வருகைக்காக பூமிநாதனும் காத்திருக்க...பூங்குழலி இவர்களின் அரட்டையை காதில் வாங்கியப்படி புன்னகை மலர்ந்த முகத்துடன் இவர்களை நெருங்கி வர

சந்திரன் - உட்காருமா

பூங்குழலி - இல்ல மாமா பரவால்ல

சந்திரன் - அட உட்காருமா

பூங்குழலி தன் தந்தையின் பக்கத்தில் அமர்ந்தவளின் பார்வை பூமிநாதன் மீது படர்ந்த சமயம் அவனின் விழிகளும் இவளை உள் வாங்கி இருக்க

சந்திரன் - நீ சொல்லு மா மருமகளே நான் அழகா இருக்கிறேனா இல்லையா.... அட சொல்லுமா நான் அழகு இல்லன்னு நீ கட்டிக்க போற உன் புருஷன் சொல்றான் நீ சொல்லு நான் அழகா இருக்கேனா இல்லையா...

என்று சந்திரன் கேட்க..... சிரித்த முகத்துடன் அவள் பூமியை பார்த்தவள் சட்டென்று தன் விழிகளை அவன் பக்கம் இருந்து நகற்றி சந்திரணை பார்த்தப்படி.

பூங்குழலி - மாமா நீங்க அப்படியே உங்க பையன் மாதிரி இருக்கீங்க..

என்று பூங்குழலி சொன்னதும்... பூமியின் இதழ்கள் புன்னகையால் மலர..

சந்திரன் - போட்டா பாரு என் மருமக ஒரு போடு.....பாத்தியாடா இப்ப சொல்லு நான் அழகா இருக்கேனா இல்லையா

சந்திரன் கேட்ட கேள்விக்கு பூமிநாதன் பூங்குழலியை பார்த்து பதில் சொல்ல

பூமி - அப்பா இந்த நொடி வரை இந்த உலகத்திலேயே நீங்கதான் அழகு

சந்திரன் - அப்படி வாடா வலிக்கு...

பூங்குழலியின் சிறு புன்னகையை காலம் எல்லாம் கண்டு மகிழ பூமி நாதன் ஆசை கொள்ள...

ராஜன் - இதெல்லாம் கனவா நினைவான்னு தெரியல நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்

பூங்குழலி - அப்பா என்ன ஆச்சு

ராஜன் - இல்லம்மா நீ பேசிக்கிட்டு இரு நான் வந்துடறேன்

ராஜன் வேகமாக அவர் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொள்ள

பூமிநாதன் - என்னப்பா என்ன ஆச்சு

சந்திரன் - இல்லடா அவனுக்கு சந்தோஷமோ துக்கமோ எல்லாத்தையும் அவனுடைய மனைவி ராஜியிடம் தான் அவன் சொல்லுவான்...

பூமி - அவங்க

சந்திரன் - நம்ப அம்மா மாறி தான் பா.. புகைப்படத்தில் இருந்தாலும் அவங்க நம்ம கூட இருக்கிறதா தானே நம்ம நம்புகிறோம்.. அதே மாதிரி தான் அவனும் தன் பொஞ்சாதியிடம் இங்கு நடந்த எல்லா சந்தோஷத்தையும் சொல்லி கொஞ்ச நேரம் ஆசுவாச பட்டுட்டு வருவான்

ராஜனின் செயலைக் கண்டதும் பூமிநாதனுக்கும்..தன் அப்பாவும் இதே போல தானே தன் அம்மாவை பிரிந்து இந்த ஐந்து வருடமும் கஷ்டப்பட்டு இருப்பார்... ராஜனுக்காவது ஆறுதல் சொல்ல அவரின் மகள் பூங்குழலி அவர் அருகில் இருந்தாள்...ஆனால் நம் அப்பாவிற்கு நானும் அவருடன் இல்லையே என்ற வேதனையையும் அந்த தருணத்தில் தோன்றியது...

சந்திரன் - சரி நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருங்க..அவன் விட்டா இன்னைக்கு ஃபுல்லா அவன் பொண்டாட்டியோட போட்டோவ மடியில வச்சுக்கிட்டு தூங்கிடுவான் நான் போய் அவனை அழைச்சிட்டு வரேன்

என்று சொன்னபடி நாசுக்காக இவர்கள் இருவருக்கும் மேலும் தனிமையை உருவாக்கி கொடுத்த சந்திரன் அந்த இடத்தை விட்டு கழுவற மீனில் நழுவுற மீனாக நகர்ந்து செல்ல... மீண்டும் சில நொடி அமைதியில் சுவற்றில் உள்ள கடிரத்தின் முள் நகரும் சத்தமும் இசையாக கேட்க.......தன்னிடம் மேலும் அவள் ஏதேனும் கேள்விகளை கேட்பாளா என்று காத்து இருந்தவனுக்கு நொடிகளும் யுகங்களாக நகர..... அவனே மீண்டும் அவளிடம் பேச்சை ஆரம்பிக்க..

பூமிநாதன் - நீ வண்டிலாம் ஓட்டுவியா

பூங்குழலி - ம் ஓட்டுவேன்.... அப்பா போன வருஷம் தான் கார் கூட கத்துக்க சொன்னாரு

பூமி - அப்போ காரும் ஓட்டுவியா?

பூங்குழலி - ம் காரும் ஓட்டுவேன்

பூமி - ஸ்கூட்டி இருக்கா

பூங்குழலி - ஆங் இருக்கு பின்பக்கம் தோட்டத்துல நிறுத்தி வச்சிருக்கேன்

பூமி - ஓ சூப்பர்..வேலைக்கு எதுல போவ

பூங்குழலி - ஒரு சில நாள் அப்பா அழிச்சிட்டு போவாரு...ஒரு சில நாள் ஆட்டோ ல போவேன்.. சில நாள் ஸ்கூட்டில போவேன்

பூமி - அப்புறம் உனக்கு பிரண்ட்ஸ் எல்லாம்...

பூங்குழலி - இல்ல என் உலகம் ரொம்ப சின்னது....நான் யாருகிட்டயும் அவ்வளவா நட்பு பாராட்ட மாட்டேன்

பூமி - ஏன்

பூங்குழலி - தெரியல.. வீடு வேலை இந்த தெருவுல இருக்கிற குட்டி குட்டி பசங்க அவ்வளவுதான் என் உலகம்... அப்புறம் சந்திரன் மாமா வரும் போது எல்லாம் ரொம்ப ஜாலியா பேசுவாரு.. அப்பாவுக்கு அவர்னா ரொம்ப பிடிக்கும்..நானும் அவரை என் இன்னொரு அப்பாவா தான் நினைப்பேன்....அதனால இந்த உலகம் மட்டும் தான் என்னுடையது

பூமி - ஓ..... அப்போ உன்னுடைய அந்த சின்ன உலகத்துல இந்த நொடி நான் இருக்கிறேனா......

இந்த முறை பூமிநாதனின் கேள்வியாக அந்த சொற்கள் இல்லாமல்... அவன் ஏக்கமாக அவன் குரலின் ஓசை அவள் பதிலை கேட்க காத்து இருக்க

பூங்குழலி - எப்ப நான் உங்களை பிடிச்சிருக்குன்னு சொன்னேனோ அந்த நொடியில் இருந்து நான் இந்த பூமிக்குள் மறைய போகும் கடைசி நொடி வரை என் பூமிநாதன் நீங்கள் தான் இந்த பூங்குழலியின் சின்ன உலகத்தின் அரசன்...

என்று பூங்குழலி சொன்னதும் பூமிநாதன் புன்னகை மலர்ந்த முகத்துடன் அவளை பார்த்து ரசித்தவன்...

பூமி - நான் இன்னைக்கு தான் ஊருக்கு வந்ததால இன்னும் சிம் கார்டு வாங்கல so நாளைக்கு கண்டிப்பா போன் நம்பர் கிடைத்துடும் நான் நம்பர் வாங்கியதும் உனக்கு போன் பண்ணலாமா

பூங்குழலி - தாராளமா பண்ணுங்க ஆனா நான் வேலையில் இருந்தா போன் எடுக்க முடியாது

பூமி - இல்ல நான் மிஸ் கால் கொடுக்கிறேன் அதுக்கப்புறம் நீ ஃப்ரீயா இருக்கும்போது கூப்பிடு

பூங்குழலி - நீங்க நாளைக்கு நைட்டு 7:00 மணிக்கு கூப்பிடுங்க நான் ஆறு மணிக்கு டூட்டி முடிச்சிடுவேன்

பூமி - சரி உன்னுடைய போன் நம்பர் சொல்லு....

பூங்குழலி அவளின் கைபேசி எண்ணை உச்சரிக்க......இவன் தன் பாக்கெட்டில் இருந்த கை குறிப்பில் அவளின் கைபேசி எண்ணை எழுதியவன் "குழலி"என்ற பெயரில் எழுதி வைத்தப்படி தன் பேனா மூடியை மூடி தன் பாக்கெட்டில் வைத்தவன் அவள் கண்களைப் பார்க்க...

பூமி - ஓகே குழலி......கண்டிப்பா நாளைக்கு 7:00 மணிக்கு நான் உனக்கு போன் பண்றேன்...

என்று அவன் சொன்னதும் பூங்குழலியின் கண்களில் இருந்த கண்ணீர் துளிகளை அவள் இவன் பார்க்கும் முன் துடைத்தவளை பார்த்த பூமிநாதனுக்கு அவளின் கண்ணீருக்கு காரணம் அறியாமல் கேள்வியுடன் அவளை எதிர் நோக்க...

பூங்குழலியின் கண்ணீருக்கு காரணம் என்னவென்று அடுத்த பாகத்தில் நாமும் அறிந்து கொள்வோம்....

நன்றி 🙏

Continue Reading

You'll Also Like

22.7K 806 9
காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, ந...
28.2K 921 45
hi guys idhu enoda new story.... jaya paraksh than namma hero... awana JP nu solwam friends and awanoda amma elarum apdi than koopduwanga awan amm...
6.3K 472 30
ÜÑÇÕÑDÏTĪØÑÁL LØVÊ STØRY 😍