43(நிறைவுப்பகுதி)

1.8K 75 157
                                    

இருளையே வெறித்து வெறித்து வெறுத்துப் போனவன், கண்களை மூடினான்... ஒருவேளை கண்ணீர் இருக்குமாயின் கடைவிழி வழி படர்ந்தொழுகி அவனது கல்லறை முழுவதும் இந்நேரம் அது படர்ந்திருக்கும்....
அதற்கும் வழியன்றி கனத்துப்போன மனதோடு கண்மூடிப்படுத்திருந்தவனின் காதில் ஒருகுரல் கேட்டது...

"மன்னவனே அழலாமா?
கண்ணீரை விடலாமா?
உன்னுயிராய் நானிருக்க...
என்னுயிராய் நீயிருக்க...
கண்ணை விட்டுப் போனாலும்
கருத்தை விட்டுப் போகவில்லை...
மண்ணை விட்டுப் போனாலும்
உன்னை விட்டுப் போகவில்லை... "
                  
                    என்று பாடியது அந்தக்குரல்.

திகைத்துப்போய் எழுந்தமர்ந்தவனின் முன்னால் "ஹாய் மிஸ்டர் கோஸ்ட்..."
என்று குதூகலமாகக் கையசைத்தபடி நின்றாள் அவனது அமிழ்தா.

தான் காண்பது கனவா நனவா என்றிருந்தது அவனுக்கு...
ஆனால் அவனுக்கு எப்படி கனவு வரும்? கற்பனையில் வாழுமளவுக்கும் அவன் இன்னமும் ஸ்திரமற்றுப் போகவில்லை... ஆனால் இவளுக்கு எப்படி நினைவு வந்தது? அவன் அவள் மேல் செலுத்திய சக்தி சாதாராணமானதல்லவே...
ஆயுளுக்கும் அவளுக்கு அவனது நினைவு வராதபடிதானே செலுத்தினான்...
எண்ணமிட்டுக்கொண்டே போனவன் திகைத்தான்...
ஆயுளுக்கும்...
அப்படியென்றால்?

அதிர்ச்சியோடு அவளை நோக்க,
"என்ன மிஸ்டர் கோஸ்ட் அப்படி பார்க்கறீங்க? பாட்டுப் பாடுறேன்னா? சினிமாலலாம் பேய்ன்னா பாட்டுப்பாடும்ன்னு சொல்லிட்டாங்களா? ஆனா அதுல வர்ற பேய்ங்களை மாதிரி எனக்குத் தானா கவிதை எழுதி கம்போஸ் பண்ணில்லாம் பாடத் தெரியாததனால அவங்க எழுதி வச்சுருக்கறதையே பாடிட்டு இருக்கேன்..." என்றபடியே அமிழ்தா அவனது அருகில் வந்தாள்.

"அமி..."

"என்னடா நொமி..." கன்னத்தில் அறையொன்று விழுந்தது...

"ஆ..."

"என்ன வலிக்குதா? பேய்க்குப் பேய் உணர முடியுமாம்...
வர்ற வழியில நீ என்னை இரண்டு வருஷத்துக்கு முன்னாடி வச்சுப் பயமுறுத்தினியே ஒரு அக்கா... அவங்கக்கிட்ட விசாரிச்சுட்டுத்தான் வந்தேன்...
ஏன்டா உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லாம என்னோட மெமரிஸ்க்கு டெலிட் பட்டன் கொடுத்துட்டுப் போயிருப்ப?
இவர் பெரிய தியாகச்செம்மலு... எங்கிருந்தாலும் வாழ்கன்னு சோககீதம் வாசிச்சுட்டுப் போயிருவாரு...
நாங்க மட்டும் எல்லாத்தையும் மறந்துட்டு எவனையோ கல்யாணம் பண்ணிட்டுக் குடித்தனம் நடத்தணுமா?"

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now