26

1K 80 63
                                    

சுடுகாட்டில் தென்றல் வீசினால்--26


(

தன் அருணா ஒருவேளை தவறானவர் இல்லையோ என்னும் நப்பாசையில் சேகரிக்க ஆரம்பித்தது...

அவனது ஆசையில் பாறாங்கற்களாய்த் தொடர்ந்து விழ, அவற்றையெல்லாம் பொறுக்கி வைத்த கற்குவியல்கள் இவை... அவருடைய குவாரிகளில் இருந்த கற்களை விட அதிகமாகவே இருந்தது...

ஒருவர் இருவர் என்றால் தேடிப்போய் ஏதாவது பிராயச்சித்தமாவது செய்யலாம்...

ஆனால் இங்கோ மடிக்கணினியில் இவன் பக்கத்தை உருட்ட உருட்ட அது உருண்டு கொண்டே இருந்தது...

அவை மெல்ல மெல்ல அவனுடைய உணர்வுகளைத் துடைக்கத் தொடங்க, அருணாவின் மகன் அருளரசனாகச் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, ஆட்சியர் அருளாளனாகச் சிந்திக்க ஆரம்பித்தான் அவன்.

அதன் விளைவு....   அடுத்த வாரம் அவனுடைய அலுவலக வாயிலில் வந்து நின்றது...)

தன் முன்னால் வந்து நின்ற பிரதாப்பை நிமிர்ந்து பார்த்தான் அருளாளன்...

“என்ன சார்? எதுவும் விவகாரமா?”

தன் வாய்திறந்து சொல்லும் முன்னே சரியாகக் கண்டறிந்தவனைக் கண்டு மனதுள் ஆச்சரியம் நிறைந்தது அவருக்கு... இத்தனை வருட அனுபவத்தில் அவர் நன்றாகக் கற்று வைத்திருந்த ஒரு விஷயம் மனதில் நினைப்பதை முகத்தில் காட்டாமல் இருப்பதுதான்...

அது இல்லையென்றால் அவரால் இத்தனை வகைப்பட்ட மனிதர்களுடன் பணியாற்றி இருக்க முடியாது...

எதையும் காட்டாத தன் முகபாவத்திலிருந்தே இவன் எல்லாவற்றையும் கண்டு பிடிக்கிறான் என்றால் ' இளம்வயதினன், விளையாட்டுக் குணம் நிறைந்தவன்' என்று தாம் எண்ணியதையெல்லாம் மறுபரீசீலனை செய்ய வேண்டும் போல என்று மனதுள் நினைத்தவர்  “ஆமாம் சார்..” என்றார்.

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now