12

1.1K 88 53
                                    

சுடுகாட்டில் தென்றல் வீசினால்-12

(“ஏய் நான் ஒண்ணும் உன்னைப் பார்க்குறதுக்காக ஓடோடி வரலை...சொல்லப்போனா உன்னைப் பார்க்கவே வரக்கூடாதுன்னுதான் நினைச்சேன்.இப்ப நீ பண்ணி வச்சுருக்கக் காரியத்துனால தான் இங்க வந்து நின்னுட்டு இருக்கேன்.பண்றதையும் பண்ணிட்டு பெரிய இவ மாதிரி பேசிட்டு இருக்க...” அவனுடைய குரலே  அவன் எக்குத்தப்பான  கோபத்தில் இருப்பதை உணர்த்தியது.

அவனை ஆழமாகப் பார்த்து “நான் அப்படி என்ன பண்ணேன் மிஸ்டர் கோஸ்ட்...ஸாரி,ஸாரி....மிஸ்டர் அருளாளன்” என்றாள் அவள்.)

அவளை ஆழ நோக்கிய அருளாளனின்  குரல் புயலுக்கு முந்தைய  கடலின் அமைதியோடு  வந்தது.
“என்னைக் கோபப்படுத்தாத...அது உனக்கு நல்லதில்ல...நான் எதைப் பத்திப் பேசுறேன்னு உனக்கு நல்லாவே தெரியும்.”

ஆம்.அவன் எதைப் பற்றிப் பேசுகிறான் என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது...

“  “குட் மார்னிங் மேடம்... பிளீஸ் பீ சீட்டட்...”   அமிழ்தாவிற்கு வணக்கம் தெரிவித்து அமரும்படி வேண்டினார் அந்த கமிஷனர்.

"குட்மார்னிங் சார்."

"சொல்லுங்க மேடம்,ஆபிஸ் வரை வந்திருக்கீங்க எனிதிங் சீரியஸ்? "

"நத்திங் சார்.பட் எனக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கு...அதை நீங்க தான் கிளியர் பண்ணனும்..."

"என்ன சந்தேகம் மேடம்?
இந்த ஊருல  இறந்துபோனகலெக்டர்  மிஸ்டர். அருளாளன் ஐ.ஏ.எஸ்,அம் ஐ கரெக்ட்?"

"எஸ் மேடம்."

"நீங்க 4வருசமா இந்த ஊருல போஸ்டிங்கில் இருந்துருக்கீங்க...அப்பவுமே அருளாளனுடைய கேஸை விசாரிக்கலையே, நான் உங்களுடைய வேலைகளில் தலையிடுறேன்னு நினைக்காதீங்க, அஸ் அ கலெக்டர் மக்கள் கிட்ட இருக்குற தேவையற்ற பீதியைப் போக்குறது என் பொறுப்பு.
அதுக்காகத்தான் கேக்குறேன். கலெக்டர் அருளாளனுடைய மரணம்  ஏன் சரியா விசாரிக்கப்படல்ல...”

"விசாரிக்கப்படல்லன்னுலாம் சொல்ல முடியாது மேடம்,அதுல விசாரிக்கறதுக்கு ஒண்ணுமில்ல,அது ஒரு விபத்து...கலெக்டர் அருளாளன் அன்னைக்கு ராத்திரி  வேகமா தன்னுடைய இருசக்கரவண்டியை ஓட்டிட்டுப் போயிருக்காரு. அவர் மிகுந்த போதையில இருந்ததனால கவனம் தவறி மரத்தில மோதி அருகில இருந்த பள்ளத்துல விழுந்துருக்காரு, அது பாறைகள் நிறைஞ்ச இடம்ங்கறதால, தலையில அடிபட்டு இறந்துருக்காரு. அதோட விபத்துல தீப்பிடிச்ச அவருடைய வண்டியும் அவர் மேலேயே விழுந்து எரிய ஆரம்பிச்சுருக்கு, மிதமிஞ்சுன போதையில இருந்ததால அவரால எழுந்திருக்கமுடியல. அவருடைய உடலே கருகிய நிலையில்தான் கண்டெடுக்கப்பட்டிருக்கு”

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now