42

885 49 8
                                    

  சுடுகாட்டில் தென்றல் வீசினால்- 42

இரண்டு வருடத்திற்குப்பின், வேறொரு மாவட்டத்தின் கலெக்டர் குவார்ட்டஸில்...

சோபாவில் போனைக் காதில் வைத்து அமர்ந்திருந்தாள் அமிழ்தா....
அவளிடம் “அக்கா... நீ இன்னமும் அந்த அருளாளனை மறக்கலயா?” எதிர்முனையில் சந்தனா கேட்டாள்.

அமிழ்தாவின் பதில் நிதானமாக வந்தது...

“யாரந்த அருளாளன்?”

“அக்கா? என்னக்கா இப்படி சொல்ற? உன்னோட லவ்வர்... நாலு வருஷத்துக்கு முன்னாடி இறந்துகூட போயிட்டாங்களே...”

“சந்தனா என்ன உளறிட்டு இருக்க? நாலு வருஷத்துக்கு முன்னாடி நான் காதலிச்சனா? எனக்குக் காதலிக்கல்லாம் எந்தக்காலத்துலயும் நேரமிருந்ததில்ல... பேசாம போனை வச்சுட்டுப் போய்த் தூங்கு போ...”

சந்தனாவிற்கு என்ன இவள் இப்படி சொல்கிறாள் என்று இருந்தது. ஆனால் அவளே மறந்தது போல பேசுவதைத் தான் தூண்டிவிட வேண்டாம் என்று நினைத்தவள், வேறு பேச்சிற்கு மாறிவிட்டு போனைக் கட்செய்தாள்.

அமிழ்தா அலுவலக விஷயமாக தனக்கு வந்திருந்த மெயில்களையும் மெசேஜ்களையும் செக் செய்து கொண்டிருந்தாள். மீண்டும் அழைப்பு இடையிட்டது... இம்முறை எண்ணைப் பார்த்தவள் உற்சாகத்துடன் எடுத்துக்காதில் வைத்தாள்.

"என்ன புதுப்பொண்ணு எப்படி இருக்கீங்க?"

"சூப்பரா இருக்கேன் அம்மு... அத்தையும் மாமாவும் என்னை அவங்க பொண்ணு மாதிரியே பார்த்துக்கிறாங்க தெரியுமா?"

"சந்தோஷம்... பத்மினி ஆன்ட்டி பத்தி தெரியும் ஆனா பரவால, அருணாச்சலம் இப்படி மாறுவார்ன்னு நான் எதிர்ப்பார்க்கல..."

"ஏன் அவருக்கென்ன? சொல்லப்போனா அவர் எனக்கு அப்பாதான்... இடையில இவராலதான் முறை குழம்பிருச்சு... " என்று காலடியில் அமர்ந்திருந்த சக்தியின் தலையில் தட்டினாள் மேகலை...
"அதுசரி..மகள்ன்னா என்ன? மருமகள்ன்னா என்ன? நீ எப்படி இருக்க அம்மு? "

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Où les histoires vivent. Découvrez maintenant