24

1.1K 86 178
                                    

("நான் வச்ச சீலை நானே உடைச்சுத் தரணும்ன்னு ஆசைப்பட்டிங்கள்ல சார்... வாங்க சார்... நான் ஆர்டரைக் கேன்சல் பண்ணாலும் இன்னும் அது செயல்பாட்டிற்கு வரலை போலயே... அதுக்காகத்தான் சார் இங்கையே வாங்க...நானே என்கையால அந்த சீலை உடைச்சுத் தரேன். மறக்காம எம்.எல்.ஏ சாரையும் கூட்டிட்டு வாங்க..." என்றாள்.

"சரிம்மா" என்று போனை வைத்தவர் கிளம்பப்போக,

அவரது கையைப் பிடித்துத் தடுத்த நாகாபரணம்

"அண்ணே கொஞ்சம் நேரம் காத்திருக்கட்டும்ண்ணே... இவளை மாதிரி ஆளுங்களையெல்லாம் காத்திருக்க வச்சு காத்திருக்க வச்சு எலும்புத்துண்டைத் தூக்கிப்போட்டாத்தான் நன்றியோடு இருப்பாங்க..."

அருணாச்சலம் யோசித்தாலும் அமர்ந்துவிட, அரைமணிநேரம் கழித்து நிதானமாக வந்து சேர்ந்த பொழுது....

அவர்கள் கண்ணெதிரே,

இரண்டு புல்டோசர்கள் முட்டித்தள்ள, அப்படியே சரிந்து விழுந்து கொண்டிருந்தது,

ஆற்றை ஆக்கிரமித்து அவர்கள் கட்டியிருந்த அந்த  ஐந்து மாடிக்கட்டிடம்...

அதைத்  தன்னுடைய காரின் மீது ஸ்டைலாக சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு கூலாக  வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தாள் அமிழ்தா...

அமிழ்தா  ஞானசேகரன் ஐ. ஏ. எஸ்... )

நாகாபரணம் அந்தக் கட்டிடம் இடிந்து விழுவதை ஆற்றாமையுடன் பார்த்துக்கொண்டிருக்க, அருணாச்சலத்தின் பார்வையோ அதில் ஒருகணம் படிந்து விட்டு அங்கு அலட்சியமாக நின்றிருந்த அமிழ்தாவின் மேல் நிலைத்தது.

அவள் நின்றிருந்த தோரணை வேறு ஒருவனை நினைவூட்ட... கண்ணில் கனல் பறக்க, காரிலிருந்து இறங்கி அவளை நோக்கிச்சென்றார் அவர்.

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now