21

1.1K 75 156
                                    

"சக்தி...அம்மு... சக்தியரசன்... "

"ஸாரி எனக்கு அப்படி யாரையும் ஞாபகம் இல்ல..." என்று விட்டுப் போனைக் கட் செய்தாள்.

இவ்வளவு நேரம் ஒதுக்கி வைத்திருந்த கோபம் உலைக்களனாய் வெளிப்பட அது அவளது முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. அது புரிந்தவனாய் அருளாளன் அமைதி காக்க, மீண்டும் அலைபேசி அழைத்தது.

அதை யாரென்று பார்க்காமல் எடுத்தவள்  "மகனே நீ மட்டும் என்கையில கிடைச்ச செத்துருவ..."என்றாள்.

எதிர்ப்புறத்தில் ‘ஏன்மா’ என்று அருணாச்சலத்தின் குரல் கேட்கநழுவ முயன்ற போனை அவளது கை இறுகப்பிடித்தது.

                   

  அவளுக்கு அது அருணாச்சலத்தின் குரல் என்று தெரியவில்லை.

சக்தியின் குரலுக்குப் பதிலாக வேறு ஏதோ சற்று வயதில் மூத்த ஆண்குரல் கேட்கவும் பதறிப்போய் அந்த எண்ணைப் பார்த்தாள்.

அது முன்னால் அழைத்த சக்தியின் எண்ணுக்குப் பதிலாக வேறொன்றாக இருக்க, வேறு யாரையோ திட்டிவிட்டோமே என மனதில் நொந்துகொண்டே, ‘ஸாரி... ஹலோ...’ என்றாள்.

"இது கலெக்டர் அமிழ்தா ஞானசேகரன் நம்பர்தான?" 

"ஆமாம் அமிழ்தாதான் பேசுறேன்... நீங்க..."

"என்னம்மா ஒரு கலெக்டரா இருந்துட்டு இவ்வளவு கீழ இறங்கி பேசற..."

"ஏன் சார் கலெக்டரா இருந்தா அவங்களுக்கு நெருக்கமானவங்கட்ட சகஜமா பேச மாட்டாங்களா? நான் பிரெண்டுட்ட பேசிட்டு இருந்தேன். நீங்க கூப்பிடவும் என்பிரெண்டுன்னு நினைச்சு அப்படி பேசிட்டேன்.... ஸாரி சார்... நீங்க யாரு பேசறீங்க... அதை முதல்ல சொல்லுங்க..."

"நான் அருணாச்சலம் பேசறேன்..."

"ஆங்...சொல்லுங்க என்ன விஷயம்? " குரலில் வயதில் மூத்தவரைத் திட்டிவிட்டோமே என்ற குற்றஉணர்வு போய் அலட்சியம் தொற்றியது.

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now