20

1.2K 85 148
                                    

(“ அருணாச்சலத்தோட பையன் இங்க இருக்கானான்னு தெரியலை... ஆனா உன்தங்கச்சி இப்ப இங்க தான் இருக்கா” என்று எதிர்ப்புறம் கைகாட்டினான் அருளாளன்.

அங்கே சந்தனா தான் வந்துகொண்டிருந்தாள். பக்கத்தில் இன்னொரு இளைஞன்.

அந்த இளைஞனை அமிழ்தாவின் கண்கள் கேள்வியோடும் அருளாளனின் கண்கள் யோசனையுடனும்   அளவிட ஆரம்பித்தன.)

    

அந்த இளைஞன் நடக்கவே மிகவும் சிரமப்பட்ட மாதிரி இருந்தது. அவனைத் தோள் கொடுத்துக் கைத்தாங்கலாகச் சந்தனா பிடித்திருந்தாள். அவர்கள் இருவரும் இவர்களை நோக்கி வராமல் அருகிலிருந்த ஒரு கட்டடத்துள் நுழைந்தனர். அந்தக் கட்டடத்தின் வாயிலில் இருந்த பெயர்ப்பலகை அது ஒரு மருத்துவமனை என அறிவித்தது. இதைக் கண்ட அமிழ்தா சாலையைக் கடந்து எதிர்ப்புறம் இருந்த அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தாள். அருளாளனும் தான்.

அந்த இளைஞன் அங்கு காலைத் தாங்கியபடி காத்திருப்போருக்கான நாற்காலியில் அமர்ந்திருக்க, சந்தனா ரிசப்ஷனில் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தாள்.

அவளது தோளைத் தட்டி இங்க என்ன பண்ற சந்தனா என அமிழ்தா வினவவும், திடீரென அவளைக் கண்டதாலும் அவளது குரலில் இருந்த அழுத்தத்தாலும் ஒருகணம் தடுமாறி முகம் வெளிறிய சந்தனா "அக்கா அது வந்து பிரெண்டுக்கா... பஸ் படிக்கட்டுல இருந்து விழுந்துட்டான்க்கா நல்ல அடி...”

அமிழ்தா அப்பொழுதுதான் வாயிலில் நின்றிருந்த அவர்களது கல்லூரி பேருந்தைப் பார்த்தாள்.

“பஸ் படிக்கட்டுல இருந்தா...” அமிழ்தா கேட்டுக்கொண்டிருக்க, சந்தனாவின் பின்னால் அவளது ஆசிரியையின் செருமல் கேட்டது.
அது கேட்டு திரும்பியவளை அவர் கண்கள் எச்சரித்தன.
அவை கொடுத்த குறிப்பில் மிரண்டு அவள் வாயை மூடிவிட, “நீ போய் விவேகனுக்குத் துணைக்கு இரும்மா” என்று அவளை அனுப்பியவர்
அமிழ்தாவிடம் திரும்பி, “அது ஒண்ணுமில்ல மேடம் சின்ன ஆக்ஸிடன்ட்.” என்றார் அவர்.

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Donde viven las historias. Descúbrelo ahora