37

1K 76 217
                                    

சுடுகாட்டில் தென்றல் வீசினால்- 37

("அதெல்லாம் நினைக்காம இல்ல சந்தனா... ஆனா என்னால எங்கண்ணன் சாவுக்கு நான்தான் காரணம்ங்கற குற்றஉணர்ச்சியைத் தடுக்கவே முடியல..."

"என்ன? நீ உங்கண்ணன் கூட பேசாம இருந்த அவ்வளவுதான... அதுக்கும் அவர் மர்டர்ல இறந்ததுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?")

"அது... அது வந்து..."

"எதுன்னாலும் சொல்லு விவேகன்..."
இப்பொழுது அமிழ்தா கேட்டாள்.

"அண்ணன் இறந்துபோறதுக்கு ரெண்டு மாசம் முன்னாடி ஒரு சின்னப்பொண்ணும் அவளோட பாட்டியும் எங்க வீட்டுக்கு வந்து அவன் தங்க வைக்கச்சொல்லி அனுப்புனதா சொன்னாங்க... அந்தப்பொண்ணு வந்து மேகலாவைத்தான் கேட்டுச்சு..
ஆனா அவங்க வந்தப்ப வீட்ல நான் மட்டும்தான் இருந்தேன்...
அவங்க அப்படி சொல்லவும் எனக்கு ரொம்ப கோபம் வந்துருச்சு...
கண்டவங்க பேச்சைக் கேட்டுக் கண்டவங்களுக்கெல்லாம் இடம் கொடுக்கமுடியாது கிளம்புங்கன்னு விரட்டிவிட்டுட்டேன்...
அந்தப்பொண்ணு என்னவோ சொல்ல வந்துச்சு...
ஆனா அவங்க பாட்டி மரியாதை இல்லாத இடத்துல இருக்க நாம ஒண்ணும் மானங்கெட்டவங்க இல்ல...
நம்ம ஊருக்கே போய்ச் செத்தாலும் சாகலாம் இங்க இருக்கக் கூடாதுன்னு சொல்லி இழுத்துட்டுப் போயிட்டாங்க... அவங்க அப்படி சொன்னப்ப ஒரு மாதிரி இருந்தது...
ஆனா கொஞ்சநேரம் கழிச்சு சரியாகிருச்சு... சாயங்காலம் வீட்டுக்கு வந்த அப்பா, அம்மா மேகலா எல்லாருமே யாராவது வந்தாங்களான்னு கேட்டாங்க...
நான் இல்லன்னு சொல்லிட்டேன்... அண்ணன் நைட்டு கேட்டப்ப அவங்க இல்லன்னு சொல்லிட்டாங்க...
பிரச்சனை தீர்ந்துருச்சுன்னு நினைச்சு நான் விட்டுட்டேன்...
ஆனா பிரச்சினை அங்கதான் ஆரம்பிச்சிருக்குன்னு எனக்குத் தெரியல... ரெண்டு வாரம் கழிச்சு அண்ணன் ஊருக்கு வந்தான்...
நுழைஞ்சவுடனே அவன் என்னைத் தேடிதான் வந்தான்...
இதைக் கேட்டான்...
முதல்ல இல்லன்னுதான் சொன்னேன்... உண்மையைச்சொல்லு விவான்னு அதட்டுனான்...
அதுல எனக்குக் கோபம் வந்துருச்சு... அதட்டுற வேலையெல்லாம் வச்சுக்க வேண்டாம்ன்னு சொல்லுக்கா...
ஆமா விரட்டிவிட்டேன் இப்ப என்ன அதுக்குன்னு கேட்டு முடிக்குறதுக்குள்ள... அவன் அறைஞ்ச அறைல மயங்கி மாடிப்படில நின்னுட்டு இருந்தவன் உருண்டு கீழே வந்து விழுந்துட்டேன்... போதாக்குறைக்குக் காதுல இருந்து ரத்தம் வேற வந்துருச்சு...
வந்ததும் வராததுமா அவ்வளவு கோபத்தோட வந்தான்ங்கறதனால பின்னாடியே வந்த அப்பா அம்மா கண்ணுல கரெக்டா அவன் அறைஞ்சதுதான் பட்டது... அப்போதைக்கு எனக்கு வைத்தியம் பார்க்கறதுல்ல கவனம் செலுத்திட்டாலும் சரியாகிருச்சுன்னு வீட்டுக்கு வந்தவுடனே அண்ணனை அப்பாவும் அம்மாவும் ரொம்பப்பேசிட்டாங்க..."

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now