10

1.1K 83 24
                                    


(அவள் ஓடுவதைப் புன்னகையுடன் பார்த்திருந்த அருளாளனின் மனதில், 'இவளைத் தான் உயிரோடு இருக்கும்போது பார்த்திருக்கலாமே' என்றொரு எண்ணம் வர ,அதை உணர்ந்தவன், திகைத்துப் போய்ச் சிலையாகச் சமைந்தான்...)

தனக்குள் ஓடிய எண்ணத்தை மீண்டும் ஒரு முறை நிதானமாக நினைத்துப் பார்த்தான் அருளாளன்.
இதன் பொருள்தான் என்ன???
அவளைத் தான் உயிரோடிருக்கும் போது பார்த்திருந்தால் என்ன செய்திருப்பான்?
திருமணமா?
இந்த எண்ணம் அவனுக்கு மேலும்  திகைப்பூட்டியது...

அவன் உயிரோடிருந்த இருபத்தேழு வயது வரை எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான்.
ஆளை அசத்தும் அழகுடையவர்களும் அளவில்லாத திறமையுடையவர்களும் மெத்தப்படித்தவர்களும் கலகலவென கவரும்படி பேசுபவர்களும் அதில் அடக்கம்.

ஆனால் அவர்களையெல்லாம் பார்க்கும் போது நட்பும் மதிப்பும் சிலரிடம் வெறுப்பும் தோன்றியதே தவிர இதுபோன்றதொரு உணர்வு தோன்றியதில்லை...
யாரிடமும்  தோன்றாத உணர்வு இவளிடம் மட்டும் தோன்றியதேன்?
அதுவும் இறந்துபோய் பேயாக அலையும்போது?

அவனுடைய மனதில் கேள்விகள் புற்றீசலாகக் கிளம்பி வர, கடைசியாகத் தோன்றிய கேள்வி அவனுடைய எண்ணவோட்டத்திற்கு அணைபோட்டது.
'ஆம். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவன் இறந்து விட்டான். '
அதுதான் நிதர்சனமான உண்மை. அவனுடைய மனதில் வெறுமை படர்ந்தது...
'நல்லவேளை அவளை நான் உயிரோடிருக்கும் போது பார்க்கவில்லை... அப்படி பார்த்திருந்தால் நிச்சயம் அவளைக் காதலோ திருமணமோ புரிந்திருப்பேன்...
ஒருவேளை அப்படி எதுவும்   நடந்திருந்தால் இப்போது நான் இறந்த பிறகு அவளது கதி...??? '
அவனுடைய மனம் கூற,

'ஏன் நீ நினைத்திருந்தால் உன்னால் உன்னுடைய இறப்பைத் தடுத்திருக்க முடியாதா? '

அவனுடைய மனதின் மற்றொரு மூலையில் இன்னொரு கேள்வி தோன்றியது.

இரண்டுக்கும் இடையில் அலைபட மனமின்றி, தன்னிடம் இது போன்ற கேள்விகளுக்கு மட்டுமல்ல,எந்தவித உணர்வுகளுக்கும் இடமில்லை, இனிமேல் அமிழ்தா முன் தோன்றக்கூடாது என உறுதியாய் முடிவெடுத்தவனாய் காற்றில் கரைந்து மறைந்தான் அவன்...

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now