27

1.1K 88 200
                                    

(எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அருணாச்சலத்தை,
"அண்ணா என்னண்ணா பண்றீங்க? என்னன்னு கேளுங்கண்ணா..." எனத் தூண்டிவிட்டார்.

ஆனால் அவர் கேட்டதில் இவர் நொந்து போனார்.

"நீ என்னோட பையன் அரசுதான?"

வேறு எதையோ எதிர்ப்பார்த்திருந்த அருளாளனும் இதைக்கேட்டு ஸ்தம்பித்தான்.)

ஒருகணம் திகைத்தாலும் பின்சுதாரித்தவன் "என்ன?" என்றான்.
அந்தக் குரலின் அழுத்தமும் அவனது கூரிய பார்வையும் அருணாச்சலத்தையும் ஒரு கணம் தயங்க வைத்தது.

"இல்ல என்பையன் சின்ன வயசுல தொலைஞ்சு போயிட்டான். பேரும் அருள்தான்... அருளரசன்... வயசும் உன்...உங்க வயசுதான் இருக்கும்.அதுதான் கேட்டேன். "

"வயசுல பெரியவங்க நீங்க...
ஒருமையிலேயே கூப்புடலாம்... ஆனால் ஸாரி என்னோட பேரு அருளரசன் இல்ல... அருளாளன்."
டென்த் சர்ட்டிபிகேட்டில் கவனக்குறைவாக பேரை மாற்றி எழுதித்தொலைத்திருந்த ஆசிரியருக்கு இப்பொழுது மானசீகமாக நன்றி சொல்லிய படி சொன்னான் அவன்.

( ஆசிரியர் குறிப்பு : சகோக்களே,
உடனே விவேகன் பெயரை மாத்திச் சொன்னதாகச் சொன்னானேன்னு கேட்கப்படாது. அதுக்குரிய விளக்கம் பின்னால் வரும்.)

"உன் குடும்பம்... "அப்பொழுதும் விடாமல் இழுத்தார் அவர்.

"எங்கப்பா பேரு வெற்றி, எங்கம்மா பேரு வாணி, எனக்கு மேகலை,விவேகன்னு ஒரு தங்கச்சியும் தம்பியும் இருக்காங்க..." என்றவன் நாகாபரணத்திடம் நீங்க கொடுத்ததா சொல்லச்சொல்லிருக்க பஃண்ட் இங்க நிஜமாகவே வந்தாகணும். இல்லன்னா பின்விளைவு எப்படி இருக்கும்ன்னு தெரியாது. இப்ப நீங்க கிளம்பலாம் எனக்கு வேற வேலையிருக்கு." அவன் வாயிலைக் காட்ட, நாகாபரணம் எரிச்சலுடனும் அருணாச்சலம் யோசனையுடனும் வெளியேறினர்.

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now