8

1.1K 81 39
                                    

             (  மருத்துவமனையில் கர்ம சிரத்தையாக சாத்துக்குடிப்பழத்தைச் சாறெடுத்துக் கொண்டிருந்த அருணாச்சலத்தை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தன பத்மினியின் கண்கள்.
கூடவே கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த சக்தியைக் கூர்மையுடனும்.
  
      "என்னங்க... " பத்மினி ஏதோ சொல்லவர,
  'டக்...டக்...'  அறையின் கதவு தட்டப்பட்டது.)

                                 அமிழ்தாதான்...
இப்பொழுது பத்மினியின் கண்கள் இவளைக் கேள்வியாக நோக்கின.
“வாங்க கலெக்டர் மேடம்.உங்களுக்கும் என் பையனுக்கும் என்ன சம்பந்தம்?” அருணாச்சலமும் கேள்வியைத் தொடுத்தார்.

           “உங்க பையனா? யார்??? யார் உங்கப்பையன்?” அமிழ்தாவின் குரல் குழப்பத்தைப் பிரதிபலித்தது.

“இதோ இங்க இருக்கானே அரசு இவன்தான் என் பையன் இவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?” கட்டிலில் படுத்திருந்த சக்தியைக் கைகாட்டிட, “இது அரசன்,சக்தியரசன்...என் பிரெண்ட்.இவனையா நீங்க உங்கப்பையன்னு சொல்றீங்க? ”ஆச்சரியமாய் எதிர்க்கேள்வி கேட்டாள்.

“ஆமாம் ஏன் என்பையனை நான் என்பையன்னு சொல்லக்கூடாதா?” அழுத்தமாய் மற்றொரு எதிர்க்கேள்வி வந்து விழுந்தது.

“இ...இ...ல்ல..., ஆனா இவனோட...வந்து இவனுக்கு அப்பா அம்மா கிடையாது. ஆசிரமத்துல தான் வளர்ந்தான்.நீங்க தப்பா புரிஞ்சுருக்கீங்கன்னு நினைக்கிறேன். இவனை எனக்குச் சின்ன வயசுல இருந்து நல்லாத்தெரியும்.”

"சின்ன வயசுன்னா? எத்தன வயசு?"

" பத்து வயசுல இருந்து ."

அருணாச்சலத்தின் உதடுகள் அலட்சியமாகப் புன்னகையில் வளைந்தன.

"பத்து வயசுல நேரா வானத்துல இருந்து குதிச்சுட்டானா? அதுக்கு முன்னாடி பத்து வருசமா அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை இருந்துருக்கும்ல...அதப்பத்தி உனக்குத் தெரியாதுதான?”

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now