9

1.2K 93 85
                                    


(தன்னுடைய சட்டையைக் கழற்றியவனின் தோளில் காணப்பட்ட தழும்பைப் பார்த்த பத்மினியின் கண்கள் அதிர்ச்சியை உள்வாங்கின. கண்கள் கலங்க அதை மெல்ல வருடியவர் மேலே கழுத்தோரத்தில் இருந்த மச்சத்தையும் சேர்த்தே வருடியவாறு அருணாச்சலத்தைப் பார்க்க, அவருடைய கண்களும் கலங்கிதான் இருந்தது. கைகளைப் பின்னால் கட்டியவாறு மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்தவர் பத்மினியைப் பார்த்துப் பார்த்து வருத்தமான புன்னகை ஒன்றைச் சிந்தினார்.அது இத்தனை வருட வலியையும் இந்தக் கணத்தின் மகிழ்ச்சியையும் இணைத்துப் பிரதிபலித்தது.பத்மினியின் முகமும் அதையே பிரதிபலிக்க சக்தியை உச்சிமுகர்ந்து நெற்றியில் முத்தமிட்டார். இருவரையும் இணைத்து அணைத்த அருணாச்சலத்தின் பெருமூச்சு அவருடைய நிம்மதியைக் காட்டியது.

வெளியே அருணாச்சலத்தால் தள்ளப்பட்ட அமிழ்தா தடுமாறி விழப்போக, அவளை இருகரங்கள் விழாமல் தாங்கியிருந்தன...)

தடுமாறியவளைப் தாங்கிப்பிடித்த கரங்களுக்குச் சொந்தக்காரனைப் பார்த்ததும் அமிழ்தாவின் இதழ்கள் தானாய் உச்சரித்தன.
"மிஸ்டர் கோஸ்ட்..."

அவளைத் தாங்கி நிமிர்த்திய அருளாளன், "என்ன? மேடம் ஹாஸ்பிட்டல்ல ஸ்கேட்டிங் பழகிட்டு இருக்கீங்க" என்றான் கிண்டலாக.

அவனை ஒருமுறை முறைத்தவள், "ம்ப்ச் நானே குழப்பத்துல்ல இருக்கேன் நீங்க வேற..." என்றபடி நடக்கத் தொடங்கினாள்.

அவளோடு நடந்தவன் "என்ன குழப்பம் அமிழ்தா" என்றான் தன்மையாக.

சக்தி இருந்த அறையை ஒருவித இயலாமையோடு நோக்கியவள் அவனுடைய அமைதியான குரலுக்கு ஆட்பட்டவளாக "அது வந்து...சக்தி... திடீர்ன்னு எங்கூட.." .எனத் தொடங்கியவள் சட்டென சுதாரித்து "ஒண்ணுமில்ல" என்றபடி நடைவேகத்தைக் கூட்டினாள்.

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now