14

1.1K 83 72
                                    

(“அப்ப என்ன தண்டனை வாங்கிக்கொடுக்கணும்ன்னு சொல்றீங்க” அமிழ்தா புரியாமல் கேட்க, அவனுடைய முகத்தில் ஒரு மர்மப்புன்னகை பரவியது. “ஒவ்வொருத்தருக்குமே ஒவ்வொரு பலம் பலவீனம் இருக்கும். ஒருசிலருக்குத்தான் அவங்களோட பலமே பலவீனமாவும் இருக்கும். அந்த பலவீனத்தைப் பார்த்து அடிச்சா எழுந்திரிச்சு நிக்கிறதுக்கான பலம் கூட அவங்ககிட்ட இருக்காது.” முகம் புன்னகையில் இருந்தாலும் குரல் அதற்கு மாறான நிலையில் வெளிப்பட்டது.

அமிழ்தா இன்னும் குழப்பத்திலேயே இருக்க, “உன்னோட பிரெண்ட் அந்த அரசனா அமைச்சரா...ஆங்...சக்தி...சக்தியரசன்...அவனைப் பத்திரமா இருக்கச்சொல்லு... அதைவிட உயிரோட இருக்கணும்ன்னு ஆசையிருந்தா இந்த ஊரைவிட்டே போகச்சொல்லு. இல்லன்னா இந்த உலகத்தை விட்டே போயிருவான், என்னை மாதிரி...” என்று விட்டுச் சென்றான் அதே இறுகிய குரலில்.

ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவள் அவன் கடைசியாகக் கூறிச்சென்ற வார்த்தைகளில் திக்பிரமைப்பிடித்துப்போனவளாய்  நின்றாள்...)

“மேடம்...மேடம்....அமிழ்தா மேடம்...”  ஏற்கனவே கதவருகே நின்று அனுமதி கேட்டுக் கேட்டுப் பதில் வராமல் போனதில் பதறியடித்து உள்ளே நுழைந்திருந்த பிரதாப் பலமுறை அழைத்தும் பதிலளிக்காமல் அமிழ்தா பேயடித்தாற்போலவே (பேய்தானே அரட்டிவிட்டுச் சென்றிருக்கிறது.) அரண்டு நிற்க, மெல்ல அவளது கையைத் தட்டினார்.

“உன்னோட பிரெண்ட் அந்த அரசனா அமைச்சனா...ஆங்...சக்தி...சக்தியரசன்...அவனைப் பத்திரமா இருக்கச்சொல்லு... அதைவிட உயிரோட இருக்கணும்ன்னு ஆசையிருந்தா இந்த ஊரைவிட்டே போகச்சொல்லு. இல்லன்னா இந்த உலகத்தை விட்டே போயிருவான், என்னை மாதிரி...” அருளாளனின் சொற்கள் மீண்டும் மீண்டும் காதுகளில் எதிரொலிக்க, வெளியுலகத் தொடர்பைத் துண்டித்து விட்டு மனம் அதையே மீண்டும் மீண்டும் உருப்போட்டுக் கொண்டிருந்தது.

ப்ரதாப் கையைத் தட்டியதும் தொடர்பு எல்லைக்குள் வந்தவளுக்கு உடனே சக்தியைத் தொடர்புகொள்ள வேண்டும் எனத் தோன்ற, சக்தியின் எண்ணிற்கு முயற்சி செய்தாள்.
அது எந்தவித பதிலையும் அளிக்காமல் இருக்க, ‘ஒருவருசமா எடுக்காதவன் இப்பவா எடுத்துரப்போறான் நான் ஒருத்தி,’ எனத் தலையிலடித்தவாறு ‘நேரிலேயே போய்ப் பார்த்து விடலாம்’என்று கிளம்பினாள்.

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now