2

1.8K 98 90
                                    

"என்னங்க... "

குரல் கேட்டுத் திரும்பினார் அருணாச்சலம்.

"என்னம்மா..." சட்டையின் கையை மடித்து விட்டபடி மனைவியை ஏறிட்டார்.

"அஅஅ.....அது... அது வ... அது வந்து..." தயங்கித் திக்கிய பத்மினிக்குள் கேட்பதா வேண்டாமா என ஒரு மனப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

"என்ன வந்து? " ஊடுருவும் பார்வையோடு கேட்ட அழுத்தமான குரலில், இருந்த கொஞ்சநஞ்ச தைரியமும் இருந்த இடம் தெரியாமல் போனது.

"ஒண்ணுமில்லைங்க... மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வர்றீங்களா இல்லையான்னு கேட்கத்...தான் வந்தேன். " பத்மினி சொல்லிக் கொண்டிருக்கையிலேயே நிமிர்ந்து பார்த்த அருணாச்சலத்தின் பார்வை அவர் அதனை நம்பவில்லை என்பதனைப் பறைசாற்றியது.

"மதியச்சாப்பாடெல்லாம் இருக்கட்டும். முதல்ல போய்க் காலைச்சாப்பாட எடுத்து வை...போ... "

கட்டளைக்குத் தலையசைவால் பணிந்த பத்மினி உணவை எடுத்து வைக்கத் தொடங்கினார். " ஆகெல்லா அல்லாரீ நானு ஹேளுவதன்னா கேளி, சரிசரி.நிம்மாத்ரா நேரவாகி மாத்தாடு பேக்கு. சமயா சிக்குவாகா நம் ஜாகக்கே பண்ணி... " போனில் பேசியபடி வந்த அருணாச்சலம் தொடர்பைத் துண்டித்து விட்டு உண்ணலானார்.

சில நிமிடங்கள் மௌனமாகக் கழிய, "சரி சொல்லு" என்றார் இட்டிலியைப் பிய்த்து சட்டினியில் தோய்த்தபடி.

"என்னங்க சொல்ல"

"அப்ப சொல்ல வந்தத சொல்லு. "

"அதான் சொன்னேனேங்க. மதியச்சாப்பா... "

கையசைவால் நிறுத்தியவர் " உனக்குப் பொய் சொல்ல வராதுன்னு எனக்குத் தெரியுங்கறது உனக்கும் தெரியும்... அப்படியும் சொல்ற... சரி விடு, நான் மதியச் சாப்பாட்டுக்கு வர்றனா இல்லையான்னு தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப்போற? அன்னைக்கு எனக்குத் தெரியாம எவனுக்கோ சோறு போட்டுக்கிட்டு இருந்தியே.அந்த மாதிரி எதுவும் பண்ணப் போறியா?" அமைதியாக ஆரம்பித்து சீறலில் முடிந்திருந்தது அருணாச்சலத்தின் குரல்.

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now