38

857 44 10
                                    

சுடுகாட்டில் தென்றல் வீசினால்-38

“சாரி மிஸ்டர் கோஸ்ட்... மணி பார்த்தேன்... கரெக்டா 12.01... அப்ப இன்னைக்கு... இந்த ரோஸஸ்ல ரெண்டு எடுத்துக்கட்டுமா?”

“ம்ம்...”

அவற்றை எடுத்தவள் ஒன்றை, “ஹேப்பி டெத் டே மிஸ்டர் கோஸ்ட”; என்று அவனிடம் நீட்டினாள்... புன்னகையுடன் அதை வாங்கியவன் “தேங்க் யூ” என்றான்...

மற்றொன்றையும் அவனிடம் நீட்ட “:ஹேப்பி பெர்த் டே” என்று சொல்லப்போகிறாள் என்று எதிர்பார்த்தபடி புன்னகையுடன் கைநீட்டினான்...

ஆனால் அவளுடைய இதழ்கள் “ஐ லவ் யூ மிஸ்டர் கோஸ்ட்” என்று உச்சரித்தன...

இதமான தென்றல் அங்கு வீச, வழக்கம்போல அவள் தனது கிளட்சில் அடக்கியிருந்த அவளது முடி அழகாய் அலைபாய்ந்தது...
அழகான கருப்பு நிறச்சுடிதாரில் தேவதையாய் அமர்ந்திருந்தவள், கண்ணும் இதழும் புன்னகையில் மின்ன, அந்த ஆரஞ்சு வண்ண ரோஜாவை அவனை நோக்கி நீட்டினாள்.
அவள் பிறந்தநாள் வாழ்த்து சொல்லப்போகிறாள் என்று கைநீட்டியவனின் கையில் ஏற்கனவே அவள் கொடுத்த மலர் இருந்தது...
இளம் தென்றலின் இதமான தென்றலின் வருடலில் அவர்கள் கையிலிருந்த ரோஜாக்கள் இரண்டும் அழகாய் இதழசைக்க,
“அருள் இங்க பாருங்களேன்... இந்தப் பூ ரெண்டும் எவ்வளவு அழகா அசையுதுன்னு... தென்றலோட தீண்டலுக்கு வெட்கப்பட்டு சிணுங்குற மாதிரி இருக்குல்ல... சோ க்யூட்...” என்று காட்டினாள்.

அவன் பார்த்தபொழுதும் அந்த மலர்கள் இரண்டும் அசைந்து காட்டின மீண்டும்... அழகாகத்தான் இருந்தன... ஆனால் அவளளவு அல்ல...
அவன் தன்னை மறந்து அவளை ரசித்துக்கொண்டிருக்கும்போதே அவனது கையிலிருந்த மலரையும் அவள் வாங்கினாள்.
அவன் கேள்வியாகப் பார்க்க,
“இது ரெண்டையும் எனக்கு ரொம்பப்பிடிச்சுருச்சு மிஸ்டர்கோஸ்ட் நான் இதைப் பத்திரமா வச்சுக்கப்போறேன்...” என்றபடி மீண்டும் இரண்டையும் கையில் வைத்து ரசிக்க ஆரம்பித்தாள்.

“ஆனா இதை எப்படி பத்திரமா வச்சுப்ப? வாடி போயிருச்சு...”

“மிஸ்டர் கோஸ்ட்... வாடிப்போன பூவைத்தான் பத்திரமா வச்சுக்க முடியும்... இதை அப்படியேவோ இல்ல இதழ்களை மட்டுமோ நோட்புக் எதுக்குள்ளயாவது வச்சா எவ்வளவுநல்லா இருக்கும் தெரியுமா?”

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now