35

953 69 59
                                    

சுடுகாட்டில் தென்றல் வீசினால் - 35

(“என்னடா? ஆட்டோ ஸ்டாண்டைத் தாண்டிப் போற?”
“ஆட்டோ ஸ்டாண்ட் என்ன? ஆபிஸ்லயே இறக்கி விடுறேன் வா...”

“பாருடா... சாருக்கு அவ்வளவு தைரியம் வந்துருச்சா... அருணாச்சலத்தோட ஆளுங்க யாராவது பார்த்தா என்ன செய்வ?”

“அருணாச்சலமே பார்த்தாலும் கவலையில்ல...” அவன்சொல்ல... அவளுக்கு ஏதோ இடித்தது... இருந்தாலும் சொல்பவன் சக்தி என்பதால் அமைதிகாத்தாள்...

ஆனால் அந்த அமைதி அவளது அலுவலகத்திற்குப் பதிலாக அருணாச்சலத்தின் கோட்டைப் போன்ற வீட்டிற்குள் அவனது வண்டி நுழைந்த போது பறந்தது.)

அமிழ்தாவிற்குப் பொதுவாகப் பயணங்களின் போது கவனம் அதிகமாகவே இருக்கும்...
அவள் தன்னை மறந்து வருவது அவளுடைய தந்தையுடன் செல்லும்போதுமட்டும்தான்...
ஏதாவது வளவளத்தபடியே வருவாள்... அவருக்கடுத்து சக்தியுடன் செல்லும்போதுதான் வெளியுலக கவனமின்றி இருப்பாள்...
அதிலும் இன்று விவேகனது இந்தத் திடீர் முடிவிற்குக் காரணம் என்ன என்று குழப்பத்தில் உழன்று கொண்டிருந்த அவளது மனம் அலுவலகப்பாதை மாறிச்செல்வதைக் கூடக் கவனிக்க மறந்தது.
அவன் வண்டியை நிறுத்திய பின்னரே சுற்றுப்புறத்தில் இருந்த வேறுபாட்டைக் கவனித்தாள் அவள்..
. ஏற்கனவே இருந்த குழப்பத்தில் இவன் எங்கோ கூட்டி வந்திருக்கிறானே என்னு அவளுக்கு எரிச்சல் மண்டியது...
அதை குரலில் அப்படியே வெளிப்படுத்திக் கேட்டாள்...

“சக்தி இது என்ன இடம்? எங்கே கூட்டிட்டுப் போகச் சொன்னா எங்கே கூட்டிட்டு வந்துருக்க?”

“இறங்கு அம்மு சொல்றேன்...”

“டேய் ...இது எனக்கு டூட்டி டைம்... முக்கியமான வேலை இருக்குடா...ஆபிஸ்க்கு வண்டியைத் திருப்பு...”

“இதுவும் ரொம்ப முக்கியமான வேலைதான் அம்மு... இறங்கு...”
எரிச்சலுடன் இறங்கியவள் கேட்டாள்...

“அப்படி என்ன தலைபோகிற விஷயம்?”

“உள்ளே வா சொல்றேன்...” அவளது கையைப் பிடித்துக் கிட்டத்தட்ட இழுத்துச்சென்றான்.

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now