33

951 74 97
                                    

சுடுகாட்டில் தென்றல் வீசினால்- 33

(“அது சரி...ஆனா அவர் இருந்தும் எப்படி இந்த நாகாபரணம் எம்எல்ஏ ஆனாரு?”

“இந்த ஊர்ல பணம்ங்கறத தாண்டி அருணாச்சலம் சொல்றத கண்மூடித்தனமா கேக்கற நிறையபேர் இருக்காங்க மேடம்... அதுவுமில்லாம ஆயிரம் ரெண்டாயிரம் ஐயாயிரம்ன்னு கொஞ்சம்கொஞ்சமா கொடுத்து மக்களை வாங்குறதை விட, அதே காசை லட்சலட்சமா கொடுத்து எதிர்ல நிக்கறவங்களை மொத்தமா வாங்கறது ஈஸியில்லயா மேடம்;...”

“ஆமாம் மேடம்... ஈஸிதான்... அதுவும் எனக்கு ரொம்பவே ஈஸி...” என்றபடி அனுமதி கேட்காமலேயே உள்ளே நுழைந்தார் அருணாச்சலம்...

அவரை ஏறிட்ட அமிழ்தாவின் முகத்தில் அவ்வளவு நேரம் அழகாய் நிறைந்திருந்த புன்னகை மறைந்தது...)

சற்றும் யோசிக்காமல் சட்டென தன்முன்னாலிருந்த டேபிள் வெயிட்டை எடுத்து அவரது காலருகில் எறிந்தாள்.

தன்னிச்சையாக அருணாச்சலம் நகர்ந்து விட அது அவரைத் தொடர்ந்து உள்ளே வந்து நாகாபரணத்தின் காலில் விழுந்தது.

“அய்யோ பட்ட காலிலேயே படுதே” முன்தினம் பூட்டு விழுந்த காலைப் பிடித்தபடி வலியில் முனகினார் அவர்

“அய்யோ ஸாரி சார் ஸாரி நான் கூட பெர்மிஷன் கேட்காம வரவும் ஏதோ திறந்த வீட்டுல நுழையும்ன்னு சொல்வாங்களே அது மாதிரி எதுவும் நுழைஞ்சுருச்சோன்னு நினைச்சு விரட்டுறதுக்காக டேபிள் வெயிட்டை வீசிட்டேன் ஸாரி சார்...” என்றபடி எழுந்து வந்தாள் அமிழ்தா.

“ஏய் என்னடி பண்றதையும் பண்ணிட்டு நாய்ன்னு வேற சொல்றியா?”

“நான் அப்படில்லாம் எதுவும் சொல்லலையே சார்... அது சரி... உங்களுக்கு கை எப்படி இருக்கு...” அவள் குறிப்பாகக் கேட்க அவள்முன் மானம் போகக்கூடாதென்பதற்காக, போட்டிருந்த கட்டை அவிழ்த்துவிட்டு வந்திருந்த கையைப் பார்த்தவர் வாயை மூடினார்.

அந்த டேபிள் வெயிட்டை எடுத்து அவளது கையில் கொடுத்த அருணாச்சலம் “கேட்காம வந்தது தப்புதான்மா... வேணும்ன்னா போய்க் கதவைத் தட்டிட்டு வரவா மேடம்” என்று சாந்த சொரூபராகக் கேட்டார்.

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now