5

1.4K 96 128
                                    

சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த காரினுள் அமர்ந்திருந்த அமிழ்தாவின் கண்கள் வழக்கம் போல அந்த நகரை அளவெடுத்துக் கொண்டிருந்தன.

சுவரெங்கும் போஸ்டர்களையும் தெருவெங்கும் ஆளுயர பேனர்களையும் கண்டவள் முன் சீட்டில் அமர்ந்திருந்த தன் உதவியாளரிடம் 'மிஸ்டர். பிரதாப் என்னதிது சிட்டிக்குள்ள இவ்ளோ பேனர்ஸ் ? இது ஆபத்தானதுன்னு தெரியல... இன்னைக்கு ஈவ்னிங்குள்ள எல்லா பேனர்ஸையும் அகற்றச் சொல்லுங்க' எனக் கட்டளையிட்டாள்.

ஒரு நிமிடம் தயங்கிய பிரதாப்,அவள் கேள்வியாக நோக்க ,' அது அருணாச்சலம் சார் சம்பந்தமான பேனர்ஸ் மேடம்... ' என்றார்.

அவளுடைய நினைவில் "அந்த அருணாச்சலம் இருக்கும் வரை உங்க கடமைய உங்களால ஒழுங்கா செய்ய முடியாது" என்றவனின் முகம் வந்து போனது...

"இருந்தா என்ன? ரூல்ஸ மீறி எந்த பேனர்ஸ் ம் இன்னைக்கு சாயங்காலம் நான் பாக்குறப்ப இருக்கக் கூடாது. அதுக்கான வேலையைப் பாருங்க... " கட்டளையிட்டுவிட்டு, மீண்டும் ஜன்னல் புறம் தன் பார்வையைச் செலுத்தினாள் .

மறுத்துப் பேச முடியாத அந்தக் குரலில் சில நொடிகள் செய்வதறியாது அவளது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த பிரதாப் திரும்பி அமர்ந்தார்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் மனதிலோ நேற்றைய இரவின் நினைவுகள் வந்து மண்டின.

கலெக்டர் மனைக்குப் போக வேண்டும் எனக் கூறியவுடன் அந்த ஆட்டோக்காரனும் முந்தைய ஆட்டோக்காரர்களைப் போலவே பேய்விழி விழித்து விட்டு வண்டியை அதிவேகத்தில் கிளப்பிச் செல்ல,

"சை... இதோட மூணாவது... இப்படியே எல்லாரும் போய்கிட்டுக் கிடந்தா நான் எப்ப போய்ச்சேர்றது? " வாய்விட்டுப் புலம்பியவள் ,
"விடிஞ்சிரும்" என்றொரு ஏளனக்குரல் கேட்கப் படாரெனத் திரும்பினாள்.

அங்கே ஒருவன் நின்றிருந்தான். கண்களில் தெரிந்த ஏளனம் அந்த ஏளனக்குரலுக்குச் சொந்தக்காரன் என்பதை முரசம் இல்லாமல் அறிவித்தது.
ஆனால் அவனுடைய முகத்தில் ஏதோவொரு ஒளி...இல்லை...பிரகாசம்...இல்லை...தேஜஸ்...
ஏதோவொன்று...
வித்தியாசமானதாகத் தெரிந்தது.

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now