19

1.5K 94 141
                                    


அப்படி என்னதான்யா பண்ணனும்? அதை முதல்ல சொல்லித்தொலை... பைத்தியம் மாதிரி மாறிமாறி பேசிட்டுக் கிடக்க? செத்துமா உனக்கு இன்னும் தெளியல...”

அவன் முறைக்கவும்தான் தான் என்ன சொன்னோம் என்பதை உணர்ந்தாள்.

“ஐயோ அமி, சும்மாவே ஆடுற பேய் கொட்டுக்கண்டா விடுமா? அவன் வேற மனசுக்குள்ள நினைச்சாலே கேக்கும்ங்கறான்... நீ வாயைத் தொறந்தே இப்படி பேசி வச்சுகிட்டு இருக்க...நீ பேயடிச்சுதான் சாகப்போற...” அவள் மனதுள் புலம்ப,

“என்னது?” என்றான் அவன் வந்த சிரிப்பை மறைத்துக்கொண்டு.
அவள் இடவலமாக, பின் வலஇடமாகத் தலையசைத்துவிட்டு "அப்படி என்னதான் பண்ணனும் பேய்சார்" என்றாள்.

அவன்  சொல்ல வரும்போது சந்தனா அலறும் சத்தம் கேட்டது.
ஓடிப்போய்ப் பார்த்தால், தூக்கத்தில் எதையோ அனத்தியபடி புரண்டுக் கொண்டிருந்தாள்.

அவள் அருகில் அமர்ந்து “சந்தனா... சந்தனா... என்னடா” அவளைத் தட்டி எழுப்ப, அவளோ எழாமல் அமிழ்தாவின் கைகளை இறுகப்பிடித்துக்கொண்டு அவள் மடியிலேயே படுத்து என்னவோ அரற்றினாள். அவள் என்ன சொல்கிறாள் என்பது தெளிவாகக் கேட்கவில்லை.

அருகில் நின்று இதனைப் பார்த்துக்கொண்டிருந்தவனை இவன் எதுவும் பண்ணிருப்பானோ என்கிற ரீதியில் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்த்தபடி அவள் மடியில் உருண்டுகொண்டிருந்தவளைப் பிடித்து சந்தனா ஏய் சந்தனா என உலுக்கினாள்.

அவள் உலுக்கிய உலுக்கலில் படாரெனக் கண்திறந்து அதே வேகத்தில் எழுந்தமர்ந்தவள், அமிழ்தாவைப் பார்த்து, "அக்கா நீதான் செத்துட்டல... இப்ப எப்படி திரும்பி வந்த?" என்றாள்.

"நான் செத்துட்டனா? எனக்குத்தெரியாம நான் எப்போடி செத்தேன். நீ வேற ஏன்டி இப்படி சாவடிக்கிற..."

"நான் இல்லைக்கா, அந்த செத்துப்போனவர் தான்... அந்த வீடியோல இருந்தார்ல... அவர்தான்கா பேயா வந்து உன்னைக் கொன்னுட்டாரு... "

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now