1

3.8K 123 151
                                    

சுடுகாட்டில் தென்றல் வீசினால்
                          - வாசகி  Rea_der_7800

தடக்... தடக்... தடக்...

நள்ளிரவின் அமைதியைத் தன்னுடைய தடக்...தடக்... இசையால் தட்டி எழுப்பியபடி சென்று கொண்டிருந்தது அந்த இரயில்...

அதனுடைய நூற்றுக்கணக்கான படுக்கைகளுள் ஒரு மிடில் பெர்த்தில், 'தையதையதையா... தக்கத்தய்யதய்ய தையா...' பாடலை ஹெட்செட்டின் வழியே காதுகளுக்குள் பாய்ச்சியவாறு கண்மூடிப் படுத்திருந்தாள் அவள்...

இரயில் பயணத்தின்போது கேட்க அந்தப் பாடல் அவளுக்கு மிகவும் பிடித்தமானது... பாடலின் துள்ளலான இசையும் இரயிலின் சீரான குலுங்கலும் இணைந்து இரயிலும் தன்னோடு தாளமிடுவது போல் தோன்றும்... அருமையான வரிகள் அந்தப் பொழுதிற்கு மேலும் அழகூட்ட, எத்தனையாவது முறை கேட்கிறோம் என்று தெரியாமல் அதனை சுகமாக ரசித்துக் கொண்டிருந்தாள் அவள்... பாடகரின் இதமான ஆழ்ந்த குரல் அவளது விழிகளை உறக்கத்தில் ஆழ்த்த முயன்று கொண்டிருந்தது...

"என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்...
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்...

மழை பூமிக்கு வரும் முன்னே மறைந்ததைப் போல் அந்த மாயமகன் இங்கு மறைந்து விட்டான்...

நான் பார்த்து விட்டால் ஒரு வீழ்ச்சி வரும்...
நீ பார்த்து விட்டால் ஒரு மோட்சம் வரும்...
நீ பார்த்து விட்டால் ஒரு மோட்சம் வரும்...
எந்தன் முதலும் முதலும் நீ...
முடிவும் முடிவும் நீ... "

விழிகள் உறக்கத்தில் சொக்கிய நொடி, செவியருகில் கேட்ட பேரிரைச்சலில் அதிர்ந்து விழித்தாள்...

ஏதோ சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் போலும்... அதிவேகத்தில் அருகிலிருந்த தண்டவாளத்தை அதிர வைத்தபடி கடந்து கொண்டிருந்தது...
அவள் எழுந்து அமரவும் அது சென்று முடிக்கவும் சரியாக இருந்தது...

காதுகளில் இன்னமும் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
"முதலும் முதலும் நீ... முடிவும் முடிவும் நீ..." அதனை நிறுத்தி ஹெட்செட்டைக் கழற்றியவாறே வெளியே பார்த்தாள்...

சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)Where stories live. Discover now