பாகம் 50

Start from the beginning
                                    

இன்று பூமிநாதனின் வீட்டில் இருந்து எந்த உறவும் வேண்டாம் என்று மனம் நோந்த பூங்குழலி கடைசியாக வந்து சரண் அடைந்தது சாந்தி அஷ்ரமத்தில் தான்....

மாரியம்மாள் - அம்மாடி சித்ரா நீ என்ன சொல்ற... எனக்கு ஒன்னும் புரியல.... நீ உங்க அப்பாவின் நண்பன் சந்திரனின் மகனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கன்னு தானே நாங்க எல்லாம் நினைத்தோம்....

"அப்படி தான் அம்மா நாங்களும் நினைத்து இருந்தோம்"..

என்று சொன்னப்படி SJ இந்த ஆஸ்ரமத்துக்குள் 

நுழைய....

மாரியம்மாள் - வாங்க தம்பி... என்னாச்சு... ஏன் சித்ரா என்னன்னமோ பேசுறா....

SJ - என்ன சொல்ல சொல்றிங்க அம்மா.. இவுங்க அப்பா சித்ரா life ல நடந்த விஷயத்தை எல்லாம் மறைத்து என் நண்பன் பூமிக்கு இவள கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு.... அந்த பூமி என்னனா சூர்யாவும் SJ வும் ஒன்னு... சூர்ய பூங்குழலியும் சித்ர பூங்குழலியும் ஒன்னுனு நினைத்து... சித்ரா எனக்கு தங்கை முறை என்று அறியாமல் என் மாமன் மகள் என்று அவன் தப்பா நினைத்து ஏகப்பட்ட குழப்பம்.... நானும் சூர்யாவும் போய் எங்க உறவை பற்றி சொல்லி பூமிக்கு புரிய வைப்பதற்குள் சித்ரா அவளுக்கு நடந்த கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் சொல்லி அந்த வீட்டை விட்டு இங்க வந்துட்டா.... ஏன் சித்து எப்படி பண்ணுற

பூங்குழலி - என்னை வேற என்ன பண்ண சொல்றிங்க..... எனக்கு வாழவே பிடிக்கல... என் தரப்பு நியாயத்தை நான் சொல்ல கூட எனக்கு தகுதி இல்லாம போச்சு

SJ - என்ன உளறுற... உனக்கு தகுதி இல்லைனு யாரு சொன்னது.... முதல்ல நீ என்ன தப்பு பண்ண.....

பூங்குழலி - நான் பூமி கிட்ட எல்லா உண்மையையும் சொல்லி இருக்கனும்...

SJ - சொல்ல வேண்டியது தானே

பூங்குழலி - ஆனா அப்பா தான் பயந்து 

SJ - பொய் சொல்லாத சித்ரா..உன் அப்பா மட்டும் இல்ல....நீயும் தான் பயந்த... எங்க பூமிக்கு உண்மை தெரிந்தால் அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு நீயும் தானே பயந்த

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now