பாகம் 49

Start from the beginning
                                    

என்று சூர்ய பூங்குழலி கேட்டு கொண்டதால் காவலரும் சற்று மனம் இறங்கி வந்தவர்... சித்ர பூங்குழலியை SJ மற்றும் சூர்ய பூங்குழலி உடன் வர சம்மதிக்க..... காவலர் மாரியம்மாளையும் பிரகாஷய்யும் தனது வாகனத்தில் ஏற்றுக்கொண்டு காவல் நிலையத்திற்குச் செல்ல..மனோகரின் சடலம் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு post மடம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் முழுவதும் சித்திரப் பூங்குழலி காவல் நிலையத்தின் சிறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை உணர்ந்த ராஜன் கலங்கிய இதயத்தோடு காவல் நிலையத்திற்கு வந்தவர்

ராஜன் - அய்யோ என் மகள் என் மகளுக்கு என்ன ஆச்சி... படுபாவிகளாக எல்லாரும் சேர்ந்து அவ வாழ்க்கையையே அழித்து விட்டீங்களே

சூர்யா - மாமா இப்போ எதுக்கு இப்படி கத்திக் கூப்பாடு போடுறீங்க... சித்ராவுக்கு ஒன்னும் ஆகல...அவ நல்லா இருக்கா..கொலையை நேர்ல பார்த்ததனால அவளுக்கு பிரமை பிடித்தது போல ஆகிவிட்டது அவ்வளவுதான்

ராஜன் - என்னது அவ்வளவுதானா...ஏய் நீ எல்லாம் என்ன பொண்ணுடி..உங்க சவகாசமே வேண்டான்னு தானே நான் ஒதுங்கி இருந்தேன்..இப்படி என் மகள உங்க ஊருக்கு வர வச்சு அவளுக்கு கொலைகாரி பட்டம் வாங்கி கொடுத்துட்டீங்களே நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா

சூர்யா - மாமா சித்ரா கொலைகாரின்னு யாரு சொன்னது..வாய்க்கு வந்தபடி எல்லாம் உளறாதீங்க

ராஜன் - இதோ இப்படி ஜெயில்ல இருக்காளே என் மகள் இவளை யார் இனிமே கல்யாணம் பண்ணிப்பாங்க....ஐயோ என் மகளுடைய வாழ்க்கை போயிடுச்சு...என் மகள் வாழ்க்கை போயிடுச்சு

SJ - என்ன நீங்க பைத்தியக்காரன் மாதிரி பேசுறீங்க

ராஜன் - ஆமா நான் பைத்தியம் தான்... உங்களை நம்பி என் மகளை விட்டுட்டு வந்தேனே நான் பைத்தியம் தான் ஐயோ என் மகள்...

காவலர் - இங்க பாருங்க இங்க இருந்துகிட்டு இந்த மாதிரி எல்லாம் கூப்பாடு போட்டுக்கிட்டு இருக்க கூடாது... யாரு அங்க முதல்ல இவரை வெளியே அனுப்புங்க

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now