பாகம் 47

Start from the beginning
                                    

பூமி - இவுங்க பண்ணது எதுவுமே தெரியாம பண்ணல.... தெரிந்து தான் பண்ணிருக்காங்க... அதனால இனி இவுங்க பேசுறத எதையும் நான் நம்புறதா இல்ல.... நீங்க சொல்லுங்க...ஏன் இங்க இவ்வளவு குழப்பம்... என் குழலி life ல என்ன தான் நடந்துச்சு...

சூர்ய பூங்குழலி - Iam really Proud of you
Mr. பூமி...என் Name சூர்ய பூங்குழலி.... என்னை சிலர் பூங்குழலின்னு கூப்பிடுவாங்க.. பலர் சூர்யான்னு கூப்பிடுவாங்க.....
என்னோட தாய் மாமன் தான்
Mr. ராஜன்..... எங்க அம்மாவும் இவரும் இதோ தேவி பாட்டிக்கும் தேவராஜ் தாத்தாவுக்கும் பிறந்த பிள்ளைங்க...

எங்க அம்மா எனக்கு விவரம் தெரிந்ததில்
இருந்தே உடம்புக்கு முடியாம தான் இருந்தாங்க.... என்னை பெற்றவன் பெயர் ரங்கநாதன்.......உலக மகா ஐயோக்கியன்..... என் தாத்தா பாட்டி என் அம்மாவுக்கு பண்ண எல்லா சீரையும் விற்று குடிச்சு அழிச்ச இந்நாட்டின் கேடுகெட்ட குடிமகன்....

எப்போவும் வருஷத்துல ஒரு முற எங்க அம்மாவை பார்க்க தாத்தா பாட்டி வருவாங்க..... அப்போ எல்லாம் எங்க வீட்ல ஒரே சண்டை தான் நடக்கும்....

என் அம்மாவை அந்த ரங்கநாதன் கண்டமேனிக்கு அடிச்சாலும் ஏன்னு எங்க தாத்தா பாட்டியால கூட கேக்க முடியாது...

என்னை மட்டுமாவது அவுங்க leave kku அவுங்க கூட வந்து தங்க சொல்லுவாங்க.... ஆனா அந்த நாதாரியை நம்பி என் அம்மாவை நான் தனியா விட்டு போக மாட்டேன்...

இப்படி இருக்கும் போது தான் இதோ என் மாமா ராஜனுக்கு வேற ஊருல வேலை கிடைச்சு இருக்குன்னு சொல்லி தாய் இல்லாத அவர் மகள் சித்ர பூங்குழலியை என் பாட்டி வீட்ல விட்டுட்டு அவர் வேற ஊருக்கு வேலைக்கு சென்றாரு ....

வருடத்தில் ரெண்டு முறை ராஜன் மாமா சித்ராவை வந்து பார்த்திட்டு போனாரு... ராஜன் மாமாவுக்கு என் அம்மா ரங்க நாதனை காதலிச்சு திருமணம் பண்ணதால எங்க அம்மா மேல அவருக்கு ஒரு பெரிய வருத்தம் இருந்தது... அந்த வருத்தம் என் மேலேயும் இருந்ததால எங்க குடும்பத்து கூட அவர் ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் தள்ளி நின்னு தான் இருந்தாரு..

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now