பாகம் 44

Start from the beginning
                                    

காதலா.. இது எப்பொழுதில் இருந்து

இப்போ தான் கொஞ்ச நாளா

கொஞ்ச நாளானா ஓ அப்போ முன்னாடி எல்லாம் இல்லையா

ஹ்ம் ஹ்ம் நான் உங்களை என் அப்பா மாமா சொன்னனால தான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்... ஆனா போக போக நான் உங்கள அளவுக்கு அதிகமா விரும்ப ஆரம்பிச்சிட்டேன் பூமி

பாருடா ஹ்ம் அப்போ குழலி இந்த அம்மாஞ்சியை காதலிக்கிறீங்க அப்படி தானே

நீங்க ஒன்னும் அம்மாஞ்சி இல்ல... நீங்க இந்த பூங்குழலியின் பூமி நாதன்...

என்று சொன்ன பூங்குழலி தன்னவனை உரிமையோடு கட்டி அணைத்து அவன் கன்னத்தில் தன் இதழ் பதிக்க

பரவயில்ல குழலி நீ ரொம்ப மாறிட்ட

அப்படியா.. but மாற்றம் நல்லது தானே

ம் அதுக்குன்னு இப்படி ஒரே அடியா மாறினா நாங்கெல்லாம் பாவம் இல்ல...

நாங்க என்னா யாரு

நாங்க என்னா என்னோட கன்னம் என்னோட வாய் இதெல்லாம் தான்

எப்பா ரொம்ப வாய் தான் உங்களுக்கு சரி கிளம்பலாமா

ம் வா போகலாம்

என்று சொன்ன பூமி தன் காதல் மனைவி பூங்குழலியுடன் அவன் அறையில் இருந்து வெளியே வர...... இவர்கள் இருவரின் பொருத்தத்தை பார்த்து ராஜனின் கண்கள் இயல்புக்கு மாறாக மகிழ்ச்சியில் மிளிர...

சந்திரன் - என்னடா பேய் அரைந்தது போல நிக்குற

ராஜன் - அங்க பாரு டா உன் மருமகளையும் என் மருமகனையும்...இவுங்க ஜோடி பொருத்தத்தை பார்த்தா என் கண்ணே பட்டுடும் போல டா

சந்திரன் - என் மருமக அழகுக்கு முன்னாடி உன் மருமகன் டம்மி பிஸ் டா

ராஜன் - போதும் நிறுத்து...

பூமி - என்ன அப்பா நண்பர்கள் இரண்டு பேரும் எதை பற்றி discuss பண்றீங்க

சந்திரன் - எல்லாம் உங்க ஜோடி பொருத்தத்தை பற்றி தான்

பூங்குழலி - ஏன் மாமா எங்க பொருத்தம் நல்லா இல்லையா

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now