பாகம் 38

Start from the beginning
                                    

ராஜன் - என்ன மா நீ ஏன் மா இப்படி எல்லாம் பேசுற...இப்போ என்னடா ஆச்சு

பூங்குழலி - நேத்து அந்த ஆனந்த் என்னை இங்க எல்லாம் தொட்டு ...ஐயோ ஏன் அவன் என் மேல கை வச்சான்..

ராஜன் - இல்ல மா இல்ல...இனிமே அப்படி எல்லாம் நடக்காது டா

பூங்குழலி - உண்மையாவா

ராஜன் - ஆமா மா

பூங்குழலி - அப்போ இனிமே என்னை யாரும் தொட கூடாது

ராஜன் - இல்ல மா இனிமே நடக்காது டா

பூங்குழலி - மறுபடியும் என்னை யாராவது தொட்டா நான் அவுங்கள கொலை பண்ணிடுவேன்

ராஜன் - இல்ல மா இனிமே அப்டி எல்லாம் நடக்காது டா நீ எழுந்தது வா வந்து படு மா...

பூங்குழலி  - நம்ம பேசாம அவனை கொன்னுடலாமா ...நான் சூர்யாகிட்ட போய் சொல்லவா... சூர்யா வந்து அந்த ஆளை குத்தி குத்தி குத்தி

ராஜன் - ஐயோ பூங்குழலி கொஞ்சம் சும்மா இரு மா.....இங்க பாரு நீ வா வந்து தூங்கு வா..

என்று ராஜன் சொன்னவர் பூங்குழலியை அழைத்து கொண்டு அவள் அறையில் சென்று படுக்க வைக்க....பூங்குழலி புலம்பி கொண்டே தன்னை மீறி கண்ணுறங்க....ராஜனின் மனதில் மீண்டும் பயத்துடன் சேர்ந்த குழப்பம் ஏற்பட்ட நிலையில் நீண்ட நேரம் யோசித்தவர் இரவு பதினோரு மணிக்கு தன் அம்மா தேவியை நீண்ட வருடத்திற்கு பின்பு கைபேசி மூலம் அழைக்க ....தேவி தூக்க கலக்கத்தில் கைபேசி அணைப்புக்கு பதில் தந்தவர்

தேவி - ஹலோ யாருங்க பேசுறீங்க

ராஜன் -😢

தேவி - ஹலோ யாரு பேசுறீங்க

ராஜன் - நான் தான்

தேவி - நான் தானா

ராஜன் - நான் தான் ராஜன்

தேவி - ராஜனா....என்னப்பா என்ன இந்த நேரத்தில...சித்ராவுக்கு எதாவது பிரச்சனையா

ராஜன்  - ம் பிரச்சனை தான்

தேவி - என்ன பிரச்சனை....

ராஜன் -😢

தேவி - டேய் என்னாச்சு டா சொல்லு

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now