பாகம் 35

Start from the beginning
                                    

பூங்குழலி - ம் பாவம் தான்

பூமி - என்ன சொன்ன

பூங்குழலி - இல்ல நீங்க சொன்னதுக்கு நானும் ஆமான்னு சொன்னேன்...

பூமி - சரி சரி நானும் பாவம்தான்

பூங்குழலி - என்ன சொன்னீங்க

பூமி - பசிக்குதுமா வா சாப்பிடலாம்

பூங்குழலி - ம் வாங்க

என்று குழலி சொன்னவள் மனதில் SJசூர்யாவை பற்றிய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க....மேசை மேல் அனைவரும் இரவு உணவிற்காக காத்துக் கொண்டு இருந்த சமயம் சந்திரன் அவர்கள் அவர் அறையில் கையில் கைபேசியை வைத்து உற்று உற்றுப் பார்த்து இருந்தவரை பூமிநாதன் அழைக்க....

பூமி - அப்பா வாங்கப்பா,பசிக்குது பா, இன்னும் என்னப்பா பண்றீங்க

சந்திரன் - டேய் இருடா போன்ல சார்ஜ் இருக்கான்னு பார்க்கிறேன்

பூமி - அப்பா நீங்க அதை ஆன் பண்ணி ஆன் பண்ணி பார்க்கிறதிலேயே அந்த போன் உடைய சார்ஜர் போயிடும் போல....

ராஜன் - இப்போ போன்ல சார்ஜ் இல்லன்னா என்ன வந்துச்சு

சந்திரன் - டேய் போனும் சரி
நானும் சரி எப்பவும் ஃபுல் சார்ஜ்ல்ல இருக்கணும்....அப்பதான் எப்பவும் ஆக்டிவா இருப்போம் புரியுதா...

பூமி - புரியுதுப்பா புரியுது... இத்தனை நாள் அந்த போனை நீங்க சீண்டவே இல்ல... இன்னைக்கு இந்திரா அம்மா உங்களுக்கு எங்க போன் பண்ணிட போறாங்கன்னு நீங்க போனையே பார்த்துக்கிட்டு இருக்கீங்களா..

சந்திரன் - டேய் தெரியுது இல்ல... தெரிஞ்சே நீயும் மடப்பையன் மாதிரி கேள்வி கேட்காத நீ உக்காந்து சாப்பிடு நான் இதோ வரேன்

ஆனந்த் - என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க யாரு இந்திரா...

சந்திரன் - டேய் பேர் எல்லாம் சொல்லி கூப்பிட்ட வாய ஒடச்சிடுவேன்...அவங்கள மரியாதையா கூப்பிடனும்

ஆனந்த் - யாருன்னு தெரியாதவங்கள நான் எப்படி சித்தப்பா மரியாதையா கூப்பிடுறது

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now