பாகம் 34

Start from the beginning
                                    

சந்திரன் - இப்ப என் வயசு எல்லாம் உன்னை யாராவது இங்கே ரெஜிஸ்டர் பண்ண சொன்னாங்களா...

இந்திரா - ஏன் ராஜன் சொல்றதுல்ல என்ன தப்பு இருக்கு உனக்கும் கண்டிப்பா கல்யாணம் ஆகி பேரன் பேத்தியே பிறந்திருக்குமே

சந்திரன் - இல்ல எனக்கு கல்யாணம் எல்லாம் ஆகல நான் இன்னமும் என்னுடைய காதலியுடைய நினைப்பிலேயே தான் இருக்கிறேன்

ராஜன் - அடப்பாவி முழு பூசணிக்காவ சோத்துல அமுக்குவாங்க... நீ என்னடா ஒரு சோத்துல ஒரு பூசணிக்காவ அமுக்குற

சந்திரன் - இப்போ உன் வாய்ல எதாவது அமுக்க போறேன் பாரு....கொஞ்ச நேரம் நீ அமைதியா இருக்கியா

இந்திரா - ஹேய் சந்திரா...சும்மா எல்லாம் சொல்லாதீங்க... எனக்கு தெரியும் உங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான்னு கேள்விப்பட்டேன்

சந்திரன் - உன்கிட்ட யாரோ பொய் சொல்லி இருக்காங்க இந்து darling....எனக்கு கல்யாணம் எல்லாம் ஆகல....என்ன பாத்தா கல்யாணமான அங்கிள் மாதிரியா இருக்கு

இந்திரா - oho..... but பார்த்தா அப்படி தெரியல

ராஜன் - ஆமா இவன் கொள்ளு பேரனே எடுத்த மாதிரி இருக்கிறான் அப்படித்தானே இந்து சொல்ற

இந்திரா - No No நான் அப்படியெல்லாம் சொல்ல வரல...சந்திரு இன்னுமும் பார்க்க இளைய திலகம் சிவாஜி கணேசனுடைய மகன் பிரபு மாதிரி தான் இருக்காரு

சந்திரன் - பாத்தியாடா ஆயிரம் பேர் இருந்தாலும்...நம்ம காதலிச்ச ஒரு பொண்ணு வாயால நம்மள புகழ்ந்து பேசுற வார்த்தையை கேட்கிறதே ஒரு தனி கிக் தாண்டா

ராஜன் - டேய் பொறுமையா பேசு அவங்க காதுல விழுந்தது...உன்னை தொலைச்சிடுவாங்க

சந்திரன் - அவ தொலைச்சு நான் தொலைந்து மறுபடியும் அவகிட்ட கிடைக்கிறதுல தானடா காதல் இருக்கு

ராஜன் - அய்யய்யோ நீ சரி வர மாட்ட அங்க பாரு உன் பையன் வரான்

சந்திரன் - இவன் எதுக்குடா இங்க வரான் அம்மாஞ்சி பையன்...

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now