பாகம் 26

Start from the beginning
                                    

ஐயர் - பொன்னாண்டாவும் பிள்ளையாண்டாவும் தகப்பனார் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க

என்று ஐயர் சொல்ல..... மணமக்கள் இருவரும் சந்திரன் காலில் விழ போக

சந்திரன் - டேய் டேய் முதல்ல ராஜன் கால்ல விழுங்க.. இந்த கல்யாணம் இவ்வளவு சீக்கிரம் நடக்க காரணமே ராஜன் தான்

என்று சந்திரன் சொன்னதும் பூமியும் பூங்குழலியும் ராஜனின் காலில் விழ போக.....

ராஜன் - இருங்கப்பா இருமா முதல்ல வயசுல பெரியவங்க அம்மா அப்பா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க

என்று ராஜன் சொன்னதும் பூமியும் பூங்குழலியும் ராஜனின் அப்பா அம்மா தேவி மற்றும் தேவராஜின் பாதங்களை தொட்டு வணங்க
தேவியின் கண்களில் பெருகிய ஆனந்த கண்ணீரும் இவர்களுக்கு அட்சதையாக அந்த இடத்தில் மாறிய தருணம் தேவராஜ் தான் கையில் இருந்த தங்க சங்கிலியை பூமிநாதனின் கழுத்தில் அணிவிக்க...
தேவி தான் எடுத்து வந்த தங்க வளைவியை பூங்குழலியின் கையில் அணிவிக்க...

பூமி - பாட்டி என்ன இதெல்லாம் உங்களுடைய ஆசிர்வாதம் மட்டும் எங்களுக்கு போதும் இந்த பரிசு எல்லாம் எங்களுக்கு வேண்டாம் இந்தாங்க தாத்தா இத நீங்களே வச்சுக்கோங்க pls கோச்சுக்காதீங்க
குழலி அதை தாத்தா கிட்டயே கொடுத்துடு

தேவி - இருப்பா இருப்பா அந்த மாதிரி எல்லாம் பண்ணக்கூடாது.. அன்ப வெளிப்படுத்துற விதமா தான் அன்பளிப்பு கொடுக்கிறோமே தவிர நம்மளுடைய தகுதியை காட்டிக்கிறதுக்காக எல்லாம் இல்லை..

பூமி - ஐயோ பாட்டி நான் அப்படி சொல்ல வரல..

தேவராஜ் - இருப்பா... முன்பு எல்லாம் என் பேரன் மாதிரி தான் உன்னை நான் நினைச்சேன்...ஆனா இப்போ நீ என் சொந்த பேரனாகவே மாறிட்ட அதனால தான் உனக்கும் சித்ராவுக்கும் எங்களால முடிஞ்ச ஒரு சின்ன அன்பளிப்பு.....எங்க ஞாபகமா இதை நீங்க போட்டுக்கணும்

பூமி - பாட்டி இதெல்லாம் போட்டுக்கிட்டா தான் உங்க ஞாபகம் எங்களுக்கு இருக்குமா என்ன

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now