பாகம் 8

Start from the beginning
                                    

சந்திரன் - என்னம்மா எந்திரிச்சிட்டானா உன் பூமிநாதன்.....என்னடா என் மருமகள் வீட்டுக்கு வந்தது கூட தெரியாம இப்படியா இழுத்து போத்திக்கிட்டு தூங்குவ

ராஜன் - எப்படி மாப்பிள்ளை இருக்கீங்க

பூமி - வாங்க அப்பா உட்காருங்க

ராஜன் - நல்லா தூங்குனீங்களா

சந்திரன் - எங்க...நைட் எல்லாம் குழலி ஞாபகத்திலேயே துரை தூங்கல அதான் காலையில இவ்வளவு நேரம் தூங்கி இருக்காரு...

ராஜன் - என்னமா நீ எழுப்பிட்டியா

பூங்குழலி - ஐயோ இல்லப்பா நான் அந்த ரூம் பக்கமே போகல அவரா தான் எழுந்து வந்தாரு.....மாமா என்னை நம்புங்க

சந்திரன் - சரி சரி நாங்க நம்புறோம்

பூங்குழலி - மாமா காப்பி எடுத்துட்டு வரட்டா

சந்திரன் - இல்லடா ம்மா காலையிலேயே நான் குடிச்சிட்டேன்....என்னடா அப்படி பாத்துக்கிட்டு இருக்க

பூமி - ஒன்னும் இல்லப்பா... இவங்க எப்ப வந்தாங்க

சந்திரன் - அரை மணி நேரத்துக்கு முன்னாடி தாண்டா வந்தாங்க..இன்னைக்கு என் மருமக வேலையை லீவு போட்டுட்டு உனக்காக வந்து இருக்கா

பூமி - எனக்காகவா

சந்திரன் - என்னடா கேள்வி இது?என் மருமக உன்னக்காக தான் வந்து இருக்கா

ராஜன் - சரி டா சந்திரா வா நம்ம கிளம்பலாம்

பூமி - அப்பா எங்க கிளம்புறீங்க

சந்திரன் - அடுத்த வாரம் உங்களுக்கு நிச்சயதார்த்தம்...இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு புடவை துணிமணி எல்லாம் வாங்க வேணாமா

பூமி - நிச்சியத்துக்கு யாரை எல்லாம் கூப்பிடனும்....

சந்திரன் - ஊரைக் கூட்டிலாம் நிச்சயம் பண்ணல நம்ப அக்கம் பக்கம் இருக்குறவுங்கள மட்டும் தான் கூப்பிட்டு இருக்கோம் அதனால பூங்குழலி வீட்டிலேயே நிச்சயத்தை வச்சுக்கலாம் ஓகேவா

பூமி - அப்பா நான் ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே

சந்திரன் - என்னப்பா சொல்லு

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now