பாகம் 2

Start from the beginning
                                    

ராஜன் சிரித்தபடி வலது பக்கம் தான் மாப்பிள்ளை படிக்கட்டு இருக்கு என்று சொன்னதும் பொறுமையாக வீட்டை மீண்டும் நோட்டமிட்டபடி பூமிநாதன் மாடிக்கு ஏறி செல்ல....

இவன் மாடிக்கு சென்றதும்.. அங்கே அழகான மொட்டை மாடியின் நடுவில் துளசி செடியும் அந்த மாடத்தில் ஒரு விளக்க்கும் ஏற்றப்பட்டு இருந்தது.....மொட்டை மாடியின் மதில் மேல் முழுவதும் நிறைய தாவரங்கள் இவன் கண்ணுக்கு தென்பட்டது.....
புறா கூண்டு திறக்கப்பட்ட நிலையில் இருந்தது......அதில் சில புறாக்கள் தன் ஜோடிகளுடன் விளையாடிக் கொண்டும் இருந்தது....இன்னொரு புறம் தென்ன மர கீற்றின் அசைவில் சங்கீதம் ஒலிக்க..அந்த காற்றோடு கலந்து சலங்கை சத்தமும் இவன் செவியில் ஒலித்தது......இவன் விழிகள் அவளுக்காக காத்திருந்தது...மீண்டும் அவளின் சலங்கையின் சத்தம் இவனை நெருங்கும் படி கேட்டு பூமியின் விழிகள் அவளை காண திரும்ப... கையில் இரண்டு கோப்பையுடன் பூங்குழலி பூமிநாதனை நெருங்கி வந்தவள் அவன் முன் தட்டை நீட்டினாள்....அவன் மீண்டும் கேள்வியோடு அவள் விழிகளை நோக்க...

மென்மையான குரலில் அமைதியாக...
மாமா நீங்க டீ காபி இரண்டும் குடிப்பீங்கன்னு சொன்னாங்க...ஆனா இப்போ உங்களின் தேவை என்னன்னு எனக்கு தெரியல.. அதான் இரண்டையும் எடுத்துட்டு வந்தேன்...

என்று அவள் சொன்னதும் இவன் புன்னகையை சிதறவிட்ட படி அவளைப் பார்த்தவன்...

இப்போ எனக்கு காபி பிடிக்கும்னா அப்ப இந்த டீ வேஸ்ட் ஆயிடும் இல்லையா...

என்று அவன் அவளைப் பார்த்து முதலில் ஒரு கேள்வி எழுப்ப.... அவளும் பதிலுக்கு சிறு புன்னகையை உதிர்த்த படி....

எனக்கு டீ காபி ரெண்டுமே பிடிக்கும்...நீங்க எதை எடுத்துக்கிட்டாலும் மீதம் இருக்கிறத நான் எடுத்துப்பேன்...

என்று அவள் சொன்ன பதில் அவனுக்கு அவளை அதிகமாக பிடித்துப் போக காரணமாக இருந்தது....

இப்ப நான் காப்பி எடுத்துக்கணுமா டீ எடுத்துக்கணுமா என்று பூமிநாதன் பூங்குழலியை பார்த்து கேள்வி கேட்க

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now