என்ன சொல்ல போகிறாய்..

By hassyiniyaval

319K 11.2K 977

ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்ற... More

அத்தியாயம்-01
அத்தியாயம்-02
அத்தியாயம்-03
அத்தியாயம்-04
அத்தியாயம்-05
அத்தியாயம்-06
அத்தியாயம்-07
அத்தியாயம்-08
அத்தியாயம்-09
அத்தியாயம்-10
அத்தியாயம்-11
அத்தியாயம்-12
அத்தியாயம்-13
அத்தியாயம்-14
அத்தியாயம்-15
அத்தியாயம்-16
அத்தியாயம்-17
அத்தியாயம் -18
அத்தியாயம் -19
அத்தியாயம்-20
அத்தியாயம்-21
அத்தியாயம்-22
அத்தியாயம்-23
அத்தியாயம்-24
அத்தியாயம்-25
அத்தியாயம்-26
அத்தியாயம்-28
அத்தியாயம்-29
அத்தியாயம்-30
அத்தியாயம்-31
அத்தியாயம்-32
அத்தியாயம்-33
அத்தியாயம்-34
அத்தியாயம்-35
அத்தியாயம்-36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் -39
அத்தியாயம் - 40
மீண்டும் நான்...

அத்தியாயம்-27

7.6K 285 17
By hassyiniyaval

என் மனசோர்
நாய்க்குட்டியாய்
உன்னோடலைய..
விழியாலே எலும்பெறிந்து
என் பசி தீர்க்கும் விசித்திர முதலாளி நீ..!

அ..அத்தான்..இளா திக்கினாள்.
ம்ம்??..அவன் மெதுவாய் கேட்டான் மூச்சு முட்ட்டுது..ஹேய் என்ன..ஏன்..அவன் பதற்றமாக இவ்ளோ நெருங்கிப் படுத்தா மூச்சு முட்டுது...வேர்த்து கொட்டுது..அவள் முணுமுணுத்தாள்..அவன் நகர யத்தணிக்க சட்டென அவன் கைகளைப் பற்றி ம்ஹும்..மறுப்பாய் தலையசைத்தாள்..எ..என்ன..
இப்போது அவன் திக்கினான் நகராதீங்க..அவள் கிசுகிசுத்தாள். மூச்சு முட்டுதுன்னு சொன்ன அவனும் அவள் காதோரமாய் இரகசியம் பேச புடிச்ச்சிருக்கு..என்றாள். கொஞ்ச நேரம் அவனிடம் அசைவில்லை.

எது...எது புடிச்சிருக்கு..அவன் இன்னும் அவளை ஒன்றினான்
அவன் கைகளை இழுத்து வயிற்றோடு அணைத்துக் கொண்டவள்..உங்களை உங்க சிரிப்பை பார்வையை பேச்சை.. எல்லாமே புடிச்சிருக்கு..அவன் புறமாய் திரும்பி அவன் கண்களுக்குள் பார்வையை கலக்க விட்டாள்...கண்களை அகற்றாது அவனும் அவளையே பார்த்திருந்தான்..இதோ இந்த கண்களை..அந்த கண்களில் நிறைஞ்சிருக்கிற காதலை புடிச்சிருக்கு..அதைக் காட்டிக்காம மறைக்கிறது புடிச்சிருக்கு..அவள் குரலில் மென்மை குழைந்திருந்தது.

தேவா...அவளின் அழைப்பு ஆத்மார்த்தமாய் இருந்தது..அவள் இதழ்களின் மேல் விரல் வைத்து உஷ்ஷ்ஷ்...என்றான் கேள்வியாய் நோக்கியவளிடம் அவன் கண்களால் மதுவை காட்ட திரும்பிப் பார்த்தாள் தூக்கத்தில் ஏதோ கதைத்தபடி புன்னகைத்து புரண்ட மது மீண்டும் உறங்கிப் போனாள்..சிரிப்புடன் திரும்பியவள் இதழ் மேல் வைத்திருந்த அவன் விரலில் முத்தமிட்டாள் அவன் சட்டென கையை எடுக்க அவன் கைகளில் நறுக்கெனக் கிள்ளினாள்.
ஸ்ஸ்ஸ்ஸ்...ஹேய்..கையை உதறியபடி வியப்பாய் பார்க்க மது மாதிரி நானும் ஒரு அழகான கனவுலதான் இருக்கேனா இல்லை நிஜம்ம்ம்மானு செக் பண்ணேன்..அவள் சிரித்தாள்.

உன்னை...அவன் அவளை கிள்ளுவதற்காக நெருங்க எழுந்து ஓடப் பார்த்தவள் அவன் கைகளைப் பற்றி இழுத்ததில் சரிந்து அவன் மேலேயே விழுந்தாள்.

கத்துவதற்காய் அவள் வாய் திறக்க கைகளால் வாயை மூடி எல்லாருமே தூங்குறாங்க..கிசுகிசுத்தான். அவனது மூடிய கையில் மீண்டும் முத்தமிட்டவள் அவன் கைகளை எடுக்க முதல் பலமாய் கடிக்க எ..எ..ஏய்ய்ய்ய்..என்னடீ கடிக்குற ராட்சஷி..அவன் மேல் படுத்திருந்தவாறு அவள் சிரிக்க உன்னை என்ன பண்றேன் பாரு...உருண்டு அவளை கீழே தள்ளி அவன் மேலேறி கடிக்கறியா நீ..கழுத்தை நெரிச்சி கொல்றேன் பாரு..அவள் கழுத்தை நெரிப்பதற்காய் கழுத்தருகே கையை கொண்டு சென்றவனின்  கைகள் அவளின் கிறக்கமான பார்வையில் தயங்கி ஒரு கையால் அவள் முகவடிவை அளந்தன.

அவள் கண்மூடி அவன் அண்மையை அனுபவிக்க கண் மூக்கென இறங்கிய விரல்கள் அவள் இதழ்களில் தங்கி மென்மையாய் தடவியது
அவள் மெதுவாய் கண்களை திறந்தாள் உடல் சில்லென்றிருக்க அவள் இதழ்களை மடித்து விழுங்கி வறண்ட தொண்டையை நனைக்க முயல சட்டெனக் குனிந்து அவள் உதடுகளை அவன் இதழ்களால் மூடிக் கொண்டான்..அவனின் நெருக்கத்தினையே புதிதாய் உணர்ந்தவள் விழிகள் அவனின் அவசர முத்தத்தில் சிறு அதிர்வோடு
விரிந்து பின் இன்னும் இறுக்கமாய் மூடிக் கொண்டன.

மீண்டும் மீண்டும் அவனின் பசித்த உதடுகள் அவள் இதழ்களை சுவைக்க அவள் கரங்கள் உயர்ந்து அவன் முடிகளை கற்றையாய் இறுகப் பற்றியது. இன்னும் எவ்வளவு நேரம் முத்தம் நீண்டிருக்குமோ மதுவின் அலறலில் இருவரும் சுதாகரித்து பட்டென விலக மதுவோ அழுதபடி அரற்றினாள்.ஏதோ கெட்ட கனவு கண்டிருக்கிறாள் என்பது புரிய இருவருமாய் சேர்ந்து அவளை சமாதானப்படுத்தி தூங்க வைத்த பின் இளா ருத்ராவைப் பார்த்தாள் அவன் அவள் கண்களை பார்க்க மறுத்து மறுபுறமாய் திரும்பி தூங்குவதாய் பாவனை செய்தான்.

லேசான புன்னகையுடன் தேவா என்றழைத்தாள்..எதுவுமே பேசாது அவன் படுத்திருக்க நீங்க தூங்கலைனு தெரியும் குட்நைட் சொல்லத்தான் கூப்டேன்..குட்நைட் என்றவள் கண்களை மூடிக் கொண்டாள்.ஆனால் அன்றைய இரவு இருவரும் தூங்க முடியாமல் தவிப்பாய் படுத்திருந்தனர்.
முதல் முத்த தித்திப்பில் உடல் நடுக்கத்தில் எதிர்பாரா இதழிணைவில் அவள் தவித்திருக்க..அவனோ தன் நம்ப இயலா திடீர் மாற்றத்தில் அதிர்வாய் தவித்திருந்தான்.

ஏய்... எல்லாரும் ரெடி ஆயாச்சு இன்னிக்கு இந்த ஊர் மார்கட் போறதா ப்ளான் பண்ணோம் நினைவிருக்கா விக்கி ரெடியாய்ட்டிருக்கான் எழில் சார் இளா ரெடியாய்ட்டாளான்னு ரெண்டு வாட்டி கேட்டாச்சு..எழுந்திருடீ..
கடந்த ஒருமணி நேரமாய் ராதா இளாவை தூக்கத்திலிருந்து எழுப்ப கெஞ்சிக் கொண்டிருந்தாள்

ஒரு அஞ்சு நிமிஷம் தூங்கறேனே...ப்ளீளீளீஸ்ஸ்..
முருகா இப்டியே நாப்பத்தஞ்சு நிமிஷமா சொல்லிட்டிருக்காளே..எழும்பித் தொலையேண்டீ..பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து ஒரு அடி விட்டாள் மேகா. மனமே இல்லாது ஒரு பெரிய கொட்டாவியோடு எழுந்தமர்ந்தவள் கைகளை உயர்த்தி சோம்பல் முறிக்க...எழுந்திரு குய்க்.. டென் மினிட்ஸ்ல குளிச்சிட்டோடிவா..கெளம்பியாகனும் மேகா அவசரப்படுத்த கட்டாயம் குளிக்கனுமா...என்று இழுத்தவளை அடக் கருமமே குளிக்காமலா வரப் போறே..ராதாவின் கேவல லுக்கால் வேறு வழியின்றி இளா குளிக்கப் போனாள்.

லோகுவின் வீடு தாமரைக்கேணி முடிவில் இருந்ததால் ஊரின் நடுப்பகுதியில் இருந்த சந்தைக்கு செல்வது சிரமமே..ராசு அவனது சிறிய டிராக்டரில் அவர்களை ஏற்றிச் செல்ல டிராக்டரின் டுக்..டுக்..தாளத்தோடு பயணிப்பது அழகிய அனுபவமாய் இருந்தது. மதுவை வெயிலில் கொண்டு செல்ல வேண்டாமென சரோஜாவோடு விட்டு வந்திருந்தனர்.

எழிலும் ருத்ராவும் ஏதோ பிஸ்னஸ் விஷயம் பேசிக் கொண்டுவர விக்கி காமிராவில் வீடியோ எடுத்துக் கொண்டு வந்தான். மற்றப் பெண்களோ சாப்பாடு ஊர் சுற்றல் என கதை பேச இளா செல் போனுடன் ராசு அருகில் சென்றாள். ராசுண்ணா கொஞ்சமா இந்தப் பக்கம் திரும்புங்க..நோ..நோ..இந்த சைட்..யாஹ்..ரைட்..எங்க சிரிங்க..க்ளிக்க்..ராசுவோடு இணைந்து செல்பி எடுத்தவள் செல்பி வித் ராசுண்ணா..ஸ்டேடஸை அப்லோட் செய்துவிட்டு ஏண்ணா இந்த ஏரியால பஸ்லாம் வராதா..வரும்மா பகல் நேரத்துல ஒன்னரை மட்டுல ஊருக்குள்ளே ஒன்னு போவும் ஊர் சனத்துக்கு எங்கிட்டும் போற சோலி இருந்துதுன்னா அதுலதான் போவோம் அப்றம் அஞ்சரை கிட்டே ஒன்னு வரும்.

ராசு சொன்னதை கேட்ட எழில் ஹேய்.. இன்னைக்கு பஸ்ல போலாமா எல்லாரும்..உற்சாகமாய் கேட்க எல்லோரும் சந்தோசமாய் ஒத்துக் கொண்டனர். ஐயோ கூட்டமா இருக்கும்களே..ராசு தயங்க..அட பரவால்லைண்ணா சில சொகுசு ஆசாமிங்களை இன்னிக்கு பஸ்ல ஏத்திதான் பாப்போமே..ஹேய் நான் முன்னாடிலாம் ப்ரெண்ட்ஸோட பஸ்லதான் போவேன்..எழில் முறைக்க..ஐயே எலிக்கு விரிச்ச வலைல எருமை எதுக்கு சிக்குது நான் அங்க சொன்னேன்..இளா கண்களால் ருத்ராவை காண்பித்தாள் எல்லோரும் அவனை பார்த்து சிரிக்க அவனோ எழிலை பார்த்து சிரித்தான்.

அத்தான் நீங்க எதுக்கு எழிலை பார்த்து சிரிக்கறீங்க இளா உங்களைத் தானே சொன்னா..கேட்ட யசோவிடம் கேப்ல எழில் எருமையானதை யாரும் கவனிக்கலை போல..ருத்ரா சொல்லிச் சிரிக்க இப்போது எல்லோரும் எழிலை பார்த்து சிரித்தனர். கொய்யால உன்னை...எழில் விரட்ட இளா டிராக்டருக்குள்ளேயே ஓட ஒரு குலுக்கலில் வேகமாய் வந்து ருத்ரா மீது விழுந்தாள்..ஹேய்..பார்த்து வரக்கூடாது..அவளைப் பிடித்து அருகில் அமரவைத்தான் அவன்.

இரவு அந்த நெருக்கத்தின் பின் இளா முகத்தையே பார்க்காது நழுவிக் கொண்டிருந்த ருத்ரா அவள் விழுந்த பதட்டத்தில் பேச அவள் சரிந்து அவன் காதோரமாய் பார்த்ததுனாலேதான் விழுந்தேன்..என்று குறும்பாய் சிரித்தாள்.

Continue Reading

You'll Also Like

14.8K 472 23
🤭Bet டில் ஆரம்பித்து Bed இல் முடிந்தது 🤗
7.1K 1.1K 36
😁என்ன சொல்ல.....??? 😁சொல்ற மாதிரி எதாவது இருந்தா தானே சொல்ல.... 😁சரி தெரிஞ்சதை சொல்லி வைப்போம்.. 😁இந்த storyil... ஒரு பெண் குட்டி ஒரு பையனை சின்ச...
142K 6.8K 48
ஒரு பெண்ணின் மனது... (ஒரு வித்தியாசமான முயற்சி)
42.4K 1.2K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r