அத்தியாயம்-06

6.5K 247 23
                                    

உன் நினைவுகளில் அமிழ்த்தியெடுத்த
என் மனசுத் துளிகளின்
ஒழுகல் ஒவ்வொன்றிலும்
புதிதாய் ஒரு காதலின் பிரசவம்...

கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்திருந்தவனை கண்டதும் இந்த தோரணைக்கொன்னும் குறைச்சல் இல்லை..என எண்ணியவாறே எதுவுமே பேசாது பக்கத்தில் போய் நின்றாள். ஆனால் அவனோ கண்டுகொள்ளாது பேஸ்புக்கில் ஏதோ கமன்ட் செய்து கொண்டிருந்தான். ம்ஹ்ஹ்ம்ம்..தொண்டையைச் செருமினாள் நிமிர்ந்து அமர்ந்தவன் போனை வைத்துவிட்டு மரியாதைலாம் மனசுல இருந்தா போதும் உட்காரு..என்றான்.கொழுப்பை பாரு..பல்லைக் கடித்தாள். அவள் பேசாமல் அமரவும் அப்றம் எவ்ளோ நாளைக்கு மேடம் இப்டியே இருக்க போறீங்க எத்தனை வாட்டி சாரி சொல்றது..இப்ப எதுக்கு உம்முன்னு அலையுற.

நான் எப்டி அலைஞ்சாதான் இவனுக்கென்ன பேசினா ஏன் வளவளன்னு பேசி உயிரை வாங்குரேன்னு திட்டுவான்..இப்போ பேசலைனாலும் திட்றான்..பேச முடியாது போடா..வெளியே பேசாது அமைதி காத்த போதும் மனதுக்குள் புலம்பிக் கொண்டுதானிருந்தாள்..அப்போ பேச மாட்ட..பாக்குறேன் எவ்ளோ நாளைக்குன்னு..எழில் எங்கே..தெரியாது என்றாள் கறாராய். ஹேய் நகரு நகரு கீழே முத்து சிதறுது பார் உன் வாயிலருந்து..அவன் படபடப்பாய் சொல்லவும் துள்ளி விலகியவள் அவனின் நக்கல் உணர்ந்து முறைத்தாள். சரீ நான் கெளம்பறேன்..நமுட்டுச் சிரிப்புடன் அவன் வெளியேற இப்போ எலி எதுக்கு எக்கனாமிக் கிளாஸ் போகுதுன்னு தெரிலையே..இவன் எதுக்கு பேசு பேசுனு காலேஜ் பையனாட்டம் அலையறான்..யோசனையுடன் தன் கேபின் நோக்கி நடந்தாள்.

ஆளரவமற்ற அந்த குறுக்கு சந்தில் யசோவின் ஸ்கூட்டி சென்று கொண்டிருந்தது. திரும்ப திரும்ப அவனின் குரலே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது..ஹேய் அவளை எப்டி மீட் பன்றது எனக்கு ஒரு மாதிரி இருக்கு..நீயும் வாயேன் ப்ளீஸ்..கெஞ்சிய எழிலிடம் என்னாது உனக்கொரு மாதிரி இருக்கா..மவனே கொல்லப்போறேன் உன்னை டீனேஜ் பையன் மாதிரி வெட்கப்படுற ஏழு கழுதை வயசாறது...கஷ்டப்பட்டு இயல்புக் குரலில் பேசினாள். அவனும் சந்தியாவும் நாளை முதல் முதலாக மீட் பண்ணப் போகிறார்களாம் அதற்கு துணையாக இவளை வருமாறு கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.போனில் இரு முறை பேசிய போதும் இருவருமே சரியாக பேசிக் கொள்ளவில்லையாம். தயக்கமாய் இருக்கவே யசோவை அழைத்தான்.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now