அத்தியாயம்-35

7.4K 294 27
                                    

ரணமாகிப்போன என்
ராத்திரிகளின்
சுகராகமாய்..
இதயத்துள்
இசை மீட்டும் நீ..

இதைப் பாருங்க..இது புராதன கோயில் பத்தி ராதாவும் விக்கியும் சேர்ந்து பண்ண கான்டன்ட்..எடிடிங் வேலைலாம் முடிச்சாச்சு நீங்க பார்த்து ஓகே பண்றதுதான் பாக்கி..அங்க இருக்கிற வயசான பூசாரிக்கிட்டதான் டீடெல்ய்ஸ் கலெக்ட் பண்ணோம் சோ ஓரமா அவர் போட்டோ கூட ஒன்னு...பேசிக் கொண்டே இருந்தவள் நிமிர்ந்து எழிலை பார்த்துவிட்டு பேச்சை நிறுத்தினாள்.

எடிட்டர் சார்...ஹலோ..உங்களைத்தான்..அவள் முன் அமர்ந்தவாறு ஜன்னலை வெறித்திருந்தவன் அவளின் எந்த அழைப்பிற்கும் திரும்பவில்லை.
என்ன இந்த மனுஷன் முளிச்சிட்டே தூங்கறானா..அருகே சென்று முகத்திற்கு முன்னால் சொடக்குப் போட்டாள்..திடுக்கிட்டு திரும்பியவன் என்ன..என்றான்.
கரெக்ஷன் பாத்து கொடுங்கனு கேட்டேனே..எதை??..அவன் விழிக்க சரியாப் போச்சு போ அரை மணி நேரமா தொண்டை தண்ணீர் வத்தறளவு பேசிட்டிருந்தேனே ஒன்னு கூடவா காதுல விழலை.
சாரி..என்றவன் முடியலை இளா ரொம்ப கஷ்டமாருக்கு..அவளை எப்டியாச்சும் என் கூட அனுப்பி வச்சிடேன் ஓய்ந்து போய் அமர்ந்திருந்த எழிலை பார்க்க அவளுக்கு பாவமாய் இருந்தது.

அத்தான் காலைல வந்து அவ்ளோ கூப்டீங்களே அவ வாயை தொறந்து எதுனாச்சும் பேசினாளா..கொஞ்ச நாளைக்கு அவ போக்குல விடுங்க
தானா சரியாயிடும்...கொஞ்ச நாள்னா எவ்ளோ நாள் இளா..நான் அவளை ரொம்ப காயப் படுத்திட்டேன் அவ வரமாட்டா..அவன் முகத்தில் தெரிந்த வலியில் அவன் வேதனை புரிந்தது. அவன் கை மேல் தன் கையை வைத்தவள் ஆறுதலான அழுத்தலுடன் வெளியேறினாள்.

வெளியே வந்து தன் இருக்கையில்  அமர்ந்தவள்  அக்காவும் அத்தானும் ஆளுக்கொரு பக்கமாய்  இப்படியே இருக்க விடக் கூடாது.  என்ன செய்யலாம் என யோசனையாய் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினாள். இந்தாடி மீசை எனக்கு  போன் பண்ணி உங்கிட்ட கொடுக்க சொல்லுது..ரகசியமாய் சொன்னவாறே ராதா நீட்டிய செல்லை வாங்கி காதுக்கு கொடுத்தாள்.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now