அத்தியாயம்-10

6.4K 259 31
                                    

உன் விழி வழி வழியும்
காதல் பருகவென்றே
என் கனவுக் கோப்பைகளை காலியாய் ஏந்தியிருக்கிறேன்
உன் பார்வை படாதா- ஓர் உயிர்த்துளி விழாதா..

இருள் போர்த்தி வானம் சுருண்டு கொள்ள முகிலிழுத்து நிலா தன்னை மூடிக் கொண்டிருந்தது.
கால்களை மடித்து கைகளால் வளைத்து முழங்காலில் முகம் பதித்து இருள் வானின் மங்கிய நிலவொளியை ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தாள் யசோதா.

இரு தென்னை மரங்கள் அவ்வப்போது தழுவித் தழுவி தென்றல் மொழி பேசிக்கொள்ள எழில் ஆர்வமாய் பார்த்தான்..ஹவ் நைஸ்..இந்த மொட்டைமாடி இரவு சுகமே தனிதான்..எத்தனை ஏஸீ போட்டாலும் இந்த குளுமை வருமா..யசோதா ஆமோதிப்பாய் தலையசைத்தாள்..ஆமா எழில் எனக்கு வைரமுத்துவோட கவி வரிகள் சில நியாபகம் வருது...அந்த கவிதை என்னனு நான் சொல்லட்டுமா..அவன் கேட்டான்.எங்கே சொல்லு பார்க்கலாம்...

நிலா ஒழுகும் இரவு
திசை தொலைத்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை
இதுபோதும் எனக்கு..

மரங்கள் நடுங்கும் மார்கழி
ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்
இதுபோதும் எனக்கு..

நிலாத் தட்டு
நட்சத்திரச் சோறு
கைகழுவக் கடல்
கைதுடைக்க மேகம்
கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ
இதுபோதும் எனக்கு..

தபோவனக் குடில்
தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ
இதுபோதும் எனக்கு..

அவன் குரலின் ஆழமும் அழுத்தமும் கவி வரிகளும்...என்ன ஒரு படைப்பு இந்த கவிதை. அவள் மெலிதாக கைதட்டினாள் எக்ஸலண்ட்...உன் வாய்ஸ்ல அந்த கவிதைக்கு புதுசா ஒரு உயிர்ப்பே வர்ரது..

மேகங்கள் மெது மெதுவாய் நகர்ந்து நிலவின் முகம் காட்ட அதன் குளுமையான ஒளியில் அத்தென்னோலைகள் சிலிர்த்தடங்கின..

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now