அத்தியாயம்-25

7K 284 19
                                    

உன்னாலே உயிர்நோக
உருவான மலர் நான்
என் ஏக்கம்..
தீர்க்காமல் தேக்கும்
என் வண்டு நீ...!

இருட்சேலையில் ஆங்காங்கே நட்சத்திரப்பூக்களின் சிதறலோடு நிலா சிரிப்பும் இணைந்து மௌனமாய் இரவு தொடங்கியிருக்க ஒரு தலையணையை போட்டு தளர்வாய் எழில் சாய்ந்திருந்தான் அருகே வந்து அமர்ந்தாள் யசோதா.

எழில்ல்...எழில்...அவன் பேசாமல் படுத்திருக்க உன்னைத்தான்..அதெல்லாம் காது கேட்குது சொல்லு..அதான் சாரி சொல்லிட்டேன்ல வேணும்னா தோப்புகரணம் போடட்டுமா..இப்போ யார் கேட்டா உன் தோப்புகரணத்தை அவன் முகம் திருப்ப என் செல்லம்ல என் கண்ணுல்ல..உன் கண்ணம்மா பாவம்தானே பேசேன்..ப்ளீஸ்..ப்ளீஸ்..

அடாடடடா இதென்னடா உங்களோட பெரிய ரோதனையாய்ப் போச்சு..நானும் எவ்வளவு நேரம்தான் காது கேட்காதமாதிரி ஆக்டிங் பண்றது..நம்ம கூட ஒரு வயசுப் பையன் இருக்கானே பார்த்து சூதானமா நடந்துக்குவமேன்னு இல்ல...ப்ளடி பகர்ஸ்..தலையணையுடன் விக்கி வெளியே தாழ்வாரம் நோக்கி நடந்தான்.யசோ நாக்கை கடித்து ஐயய்யோ இவனிருந்ததை மறந்துட்டேனே..என்றவுடன் எழில் பொங்கிச் சிரித்தான்.சிரிக்காதே எல்லாம் உன்னாலதான்..செல்லமாய் அவன் தோளில் குத்தினாள்.

இலுக்கு குடிசையின் வெளியே தாழ்வாரத்தில் மதுவை மடியில் வைத்துக் கொண்டு இளா அமர்ந்திருக்க ராதா ஏதோ வளவளக்க மேகாவும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள்..கொஞ்சமாய் தள்ளி ருத்ரா சிகரட் பிடித்துக் கொண்டிருந்தான்.

வெளியே வந்த விக்கியை பார்த்து என்னடா விக்கி தூங்கப் போறேன் காலைல சன்ரைஸ கேப்ச்சர் பண்ணனும்னுட்டு போன இப்போ என்னடான்னா பில்லோவ பா(f)லோ பண்ணிட்டு வந்திருக்க...இளா கேட்க பில்லோ.. பாலோ..ஆஸம் ஆஸம் ராதா சிலாகிக்க மேகா சிரித்தாள். அவளை முறைத்த விக்கி அத ஏன் கேக்குறே..உள்ளே ஓடுற றொமான்ஸ் பில்ம் தாங்க முடியாம நான் வெளியே ஓடி வந்துட்டேன்..ஹாஹா..உனக்கு பொறாமை..ஆமா ஆமா பொறாமைதான் யார் இல்லைனு சொன்னது..இந்த ராஜாவோட ராணிக்குதான் ஒன்னுமே புரியமாட்டேங்குதே..அவன் மேகாவை பார்த்து சொல்ல அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்..இங்க மட்டும் என்ன வாழுதாம் அதே கதை உல்ட்டாவா நடக்குது...முகம் கை கால் கழுவி வந்து கொண்டிருந்த ருத்ராவை பார்த்து இளா முணுமுணுத்தாள்.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now