அத்தியாயம்-11

6.5K 266 22
                                    

விரும்பி தோற்றிடும்
விசித்திர எதிர்வாதி நான்..
நம் காதல் வழக்குகளில்
மட்டும்...

நகத்தை டென்ஷனாய் கடித்து துப்பிக் கொண்டிருந்தாள் இளா.
அவளின் பதிலுக்காக வாண்டு நண்பர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். பொறுமை இழந்த ரினுவோ என்ன இளா இவ்ளோ யோசிக்கிற நாங்களே ஸ்கூல் ஐ கட் அடிச்சிட்டு வர்ரோம். யசோக்கா மேரேஜ்ஜை சாக்கு சொல்லி கொஞ்ச நாளாய் மேட்ச்சுக்கும் நீ வர்ரதில்லை. வெளில எங்க டீம்கு கோச் நீதான்னு வேற சொல்லி வச்சிருக்கோம் இப்போ எங்க மேட்ச் பார்க்க நீயே வரலைனா எப்டீ..ஆமா இளா ப்ளீஸ்...ஏகோபித்து கெஞ்சிய சிறுவர் கூட்டத்தை பார்த்தவள் ஒரு முடிவுடன் வர்ரேன்டா நீங்க பாலன்ஸ் மேட்டர்ஸ்ஸை ப்ளான் பண்ணுங்க நான் இதோ வந்துடறேன் செல்லை எடுத்தவாறு அகன்றாள்.

ஸ்க்ரெப்பை முகத்தில் பாதி அப்ளை செய்து கொண்டிருந்த ராதாவின் செல் வைப்ரேட்டில் கிர்ரியது..ஆன்சர் செய்து லவுட் மோடில் போட்டுவிட்டு என்னடீ ஒன் ப்ராப்ளம் என்றாள் கடுப்பாய். ஒரு ஸ்க்ரப்பை முழுசா போட விட்ரியா..அவள் எரிந்து விழ நான் மேகாக்குதாண்டி எடுத்தேன் அந்த கழுதை நோ ஆன்சர் அதுதான் உனக்கே திரும்பவும் எடுத்தேன்.சரி சொல்லி தொலை.. அதான்டி பக்கத்து வில்லேஜ்கு எங்க டீம் மேட்ச்கு போகுது எர்லீமார்னிங் பைவ் தர்ட்டிக்கு போனா வர்ரத்துக்கு நைட் எய்ட் ஆகும் அதுவரை வெளியே இருக்க ஐடியா கொடுடீ...உண்மையை சொன்னா மீச தய்யதக்கானு குதிப்பாண்டீ..ப்ளீஸ் எங்கம்மாவும் ஜால்ரா போடும்..

மவளே நீ உதை படப் போற உனக்கு பொய் சொல்ல கசக்குமா நீயே யோஸ்ச்சு சொல்லிக்கோ..ஏழு கழுத வயசுல சிறுசுங்ககூட சேர்ந்துட்டு கிரிக்கட்...கொய்யால இனி ஒரு தடவை கால் பண்ணி ஐடியா மணி வேலை பார்க்க சொன்ன...உன் புருஷனுக்கு கால் பண்ணி நானே போட்டு கொடுத்துடுவேன்.

போனை கட் செய்தவள் அடியேய் ராதா..உன்னை..சட்டென ஒரு ஐடியா தோன்ற மாமாவிடம் ஓடினாள். அதன் பிறகு மாமாவின் சிபாரிசில் மீசையின் பர்மிஷன் கிடைத்து வீட்டை விட்டு வெளியேறி ரிட்டையர்ட் ஆர்மி அங்கிளின் மினி பஸ்ஸில் வாண்டுகளுடன் ஜாலியாய் கூத்தடித்து பக்கத்து ஊருடன் விளையாடி கப் ஜெயித்தது வரை ப்ளான் சொதப்பலின்றியே போனது.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now